Results 1 to 4 of 4

Thread: நடிகன்

                  
   
   
 1. #1
  இளம் புயல் பண்பட்டவர்
  Join Date
  05 Feb 2008
  Location
  அருகில்..
  Posts
  194
  Post Thanks / Like
  iCash Credits
  8,002
  Downloads
  4
  Uploads
  0

  நடிகன்

  தினசரி செய்திகள் தரும் பரபரப்பை விஞ்சிய பரபரப்பை அந்த வார இதழ் ஏற்படுத்தி இருந்தது.
  "அவரா சொன்னார்.. இருக்காது"
  "சொன்னாலும் சொல்லி இருப்பார்.. வேசம் போடுவது அவருக்கு கைவந்த கலையாச்சே"
  "சே.. மனிதாபிமானம் மிக்கவர். இளகிய மனம் பொருந்தியவர் எங்கிற நினைப்பை இப்படிச் சுக்கு நூறாக்கி விட்டாரே"
  "என்ன மனுசரப்பா.. உண்மை என்னென்னு தெரிஞ்சுக்காமல் கண்டபடி பேசுறாங்களே"
  "நிச்சயம் அவர் உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்துக்க மாட்டேன்னு சொல்லி இருக்க மாட்டார்.. அவருக்கு வேண்டாதவங்க யாரோ கிளப்பி விட்ட புரளி இது"
  இப்படி ஆளாளுக்கு டீக்கடைகளிலும் தெருவோரங்களும் எங்கெல்லாம் கூடிப் பேசுவார்களோ அங்கெல்லாமுமாக உணர்ச்சிகளை தூவிக்கொண்டிருந்தார்கள்.

  ந்த வாராந்தரியின் அலுவலகத்தில் இணையத்தில் பரவலாகப் பேசப்படும் விடயமாக அதுவும் தலைப்புச் செய்தியாக இடம்பிடித்த விடயமாக தமது தினசரியில் வெளியான செய்தி செய்த சாதனை பருகியபடி களிப்பில் இருந்தார் அந்த நிருபர். எதையோ சாதித்து விட்ட நினைப்பில் மிதந்தபடி இருந்தவரை கைதட்டிக் கூப்பிட்டது அலைபேசி. காதில் பொருத்திக் கொண்டார்.

  " என்னா சார் இப்புடிப் பண்ணிட்டீங்க. யாரோ எதையோ சொன்னால் அதை அப்படியே போட்டுடிவீங்களா. என்னை ஒரு வார்த்தை கேட்டிருக்கலாமே. வீட்டுக்கு வாங்க. பேசுவோம்"

  தொடர்பு துண்டிக்கப்பட்டதும் தான் பேட்டிக்காக அனுமதி கேட்டு தர மறுத்த அந்த நடிகரின் வீட்டுக்கு மோட்டார் பைக்கை தட்டினார் நிருபர்.

 2. #2
  மன்றத்தின் தூண் பண்பட்டவர் ரங்கராஜன்'s Avatar
  Join Date
  22 Oct 2008
  Location
  சென்னை
  Posts
  2,064
  Post Thanks / Like
  iCash Credits
  19,485
  Downloads
  34
  Uploads
  6
  நல்ல முய்ற்சி வாழ்த்துக்கள்
  மிருகம் கொன்று மிருகம் கொன்று கடவுள் வளர்க்கப் பார்க்கின்றேன்........ ஆனால் கடவுள் கொன்று உணவாய் தின்று மிருகம் மட்டும் வளர்கிறதே.......

 3. #3
  நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
  Join Date
  23 May 2007
  Location
  வளைகுடா நாடுகள்
  Posts
  15,360
  Post Thanks / Like
  iCash Credits
  173,726
  Downloads
  39
  Uploads
  0
  சமீபத்திய அஜீத், அர்ஜுனின் அறிக்கைகளை வைத்து எழுதப்பட்டக் கதை. அதன் பின்னனியில் இருக்கும் காரணத்தை நன்றாகவே கற்பனை செய்திருக்கிறீர்கள் ரவுத்திரன். அது உண்மையாகக்கூட இருக்க வாய்ப்பிருக்கிறது.

  சின்ன செய்தியைக் கதையாக்கிய திறமைக்குப் பாராட்டுக்கள்.
  அன்புடன் சிவா
  என்றென்றும் மன்றத்துடன்
  கவலை என்பது கைக்குழந்தையல்ல
  எல்லா நேரமும் தோளில் சுமக்க
  கவலை ஒரு கட்டுச் சோறு
  தின்று தீர்க்க வேண்டும் அல்லது
  பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

 4. #4
  மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
  Join Date
  31 Mar 2003
  Posts
  15,683
  Post Thanks / Like
  iCash Credits
  118,744
  Downloads
  4
  Uploads
  0
  வாளைவிட எழுதுகோல் வலியதே...

  எவர் கையில் இருப்பினும்!

  நச் சிறுகதைக்குப் பாராட்டுகள் ரவுத்திரனுக்கு!
  எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
  எத்தனை உலகங்கள் இதயத்திலே...

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •