Results 1 to 5 of 5

Thread: ஐசிஐசிஐ ப்ரூடென்சியல் திவால்???

                  
   
   
  1. #1
    இளையவர் பண்பட்டவர்
    Join Date
    15 Jun 2008
    Posts
    92
    Post Thanks / Like
    iCash Credits
    8,959
    Downloads
    35
    Uploads
    0

    ஐசிஐசிஐ ப்ரூடென்சியல் திவால்???

    ஐசிஐசிஐ வங்கியும் லண்டனை தலைமையாகமாக கொண்டு இயங்குவரும் ப்ரூடென்சியல் நிறுவனமும் இணைந்து இந்தியாவில் காப்பீட்டு நிறுவனங்களை நடத்தி வருகின்றன. இக்காப்பீட்டு நிறுவனத்தில் ஐசிஐசிஐ வங்கி 74% மும், ப்ரூடென்சியல் நிறுவனமும் 26% முதலீடு செய்துள்ளன. இவை இந்தியா முழுவதும் 2000 கிளைகளையும், 2 லட்சத்திற்கு மேலான அட்வைசர்களையும் கொண்டு இயங்கிவருகிறது.

    அமெரிக்காவில் பெருகிவரும் பொருளாதார நிதி நெருக்கடியால் உலகம் முழுவதும் மந்த நிலை நிலவி வருகிறது. அதொடு அமெரிக்காவில் நாள்தோறும் திவால் ஆகும் நிறுவனங்களும் பெருகிவருகிறது.

    தற்போது அந்த வரிசையில் ஐசிஐசிஐ ப்ரூடென்சியல் நிறுவனமும் திவாலாகிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதோடு ஐசிஐசிஐ ப்ரூடென்சியல் தங்கள் திவால் நோட்டீசை ஐஆர்டீஏவிடம் சமர்பித்துவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இது குறித்து ஐசிஐசிஐ வங்கி வட்டாரத்தில் விசாரித்தபோது ஐசிஐசிஐ- ப்ரூடென்சியில் நிறுவனத்தில் ப்ரூடென்சியல் கொண்டுள்ள 26% பங்குகளை இந்தியாவின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி வாங்கவுள்ளதாக தெரிவித்தனர். அதோடு இந்த நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளவர்களுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாது என்று தெரிவித்தனர்.
    இதுபற்றிய* அதிகாரப்பூர்வ* செய்திக*ள் இன்னும் வெளியாக*வில்லை என்ப*து குறிப்பிட*த்த*க்க*து.

  2. #2
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    Singapore
    Posts
    12,060
    Post Thanks / Like
    iCash Credits
    71,111
    Downloads
    18
    Uploads
    2
    இது வெறும் ஆரம்பம் மட்டுமே. இன்னும் இருக்கிறது. என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

  3. #3
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    நீடூழி வாழ்க!

    ( நிறுவனமும், வாடிக்கையாளர்களும்..)
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  4. #4
    Awaiting பண்பட்டவர்
    Join Date
    14 Jun 2008
    Location
    தமிழ்நாடு, இந்தியா
    Posts
    164
    Post Thanks / Like
    iCash Credits
    14,054
    Downloads
    40
    Uploads
    0
    வாழ்க வாழ்க

  5. #5
    புதியவர்
    Join Date
    02 Apr 2007
    Posts
    2
    Post Thanks / Like
    iCash Credits
    8,940
    Downloads
    0
    Uploads
    0
    பயம் தேவையில்லை என்றே நினைக்கிறேன்.
    அமெரிக்க பொருளாதார சிக்கல் இந்தியாவில் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தாலும்
    மூழ்கும் அளவுக்கு போகவில்லை. போகாது.
    இதற்கு காரணம் அந்நிய முதலீடுகளுக்கு கட்டுப்பாடும் குறைந்த அளவே அனுமதித்ததும்தான்.
    ஐ.சி.ஐசி.-யைப் பற்றி பல புரளிகள் கிளம்பியுள்ளது.
    ஆனால் அவர்களிடம் முதலீடு அதிகம் இருப்பதால் சமாளித்துவிடுவார்கள்.
    பங்குசந்தையும் சரிவிலிருந்து மீள ஆரம்பித்திருக்கிறது. இதுவும் ஒரு நல்ல அறிகுறிதான். கவலை வேண்டாம்.

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •