Results 1 to 10 of 10

Thread: கிரெடிட் கார்டு !

                  
   
   
  1. #1
    இளையவர் பண்பட்டவர் பாபு's Avatar
    Join Date
    03 Jan 2008
    Location
    Hong Kong
    Posts
    79
    Post Thanks / Like
    iCash Credits
    8,962
    Downloads
    0
    Uploads
    0

    Cool கிரெடிட் கார்டு !

    கிரெடிட் கார்டு

    னந்தராமனுக்காக
    அவன் ஆபிஸ் வாசலில் காத்திருந்தேன். பத்து நிமிடம் கழித்து அவன் வந்தான்.
    "டேய்.. எப்படிடா இருக்கே?", அவன் தூரத்திலிருந்து கேட்டுக்கொண்டே
    வந்தான். சிறு வயதிலிருந்து நாங்கள் பால்ய சினேகிதர்கள்.

    "நல்லா இருக்கேன்டா, நீ எப்படி இருக்கே?"

    "நல்லா இருக்கேன். Wife சீக்கிரம் வரச்சொன்னா. வெளில போகிறோம். என்ன விஷயம் சொல்லு", அவசர அவசரமாக கேட்டான்.

    "ஒண்ணுமில்லடா. இந்த மாசம் கொஞ்சம் பணக்கஷ்டம்டா..அதான் உங்கிட்டே கொஞ்சம் ஐயாயிரம் ரூபா ...." என்று இழுத்தேன்.

    "அடடா..சாரிடா..இப்போ
    என்கிட்ட அவ்வளவு பணமில்லட..மாமனார் மெடிக்கல் செலவு ஜாஸ்தியாயிட்டதனால
    நானே சிரமப்பட்டுகிட்டு இருக்கேன்டா, என்னை மன்னிச்சுக்கடா"

    "பரவாயில்லடா..நோ
    ப்ராப்ளம்", சொல்லிவிட்டு எதிரில் உள்ள வங்கி ATM கௌண்டரை நோக்கி
    நடந்தேன். கையில் இன்னொரு நண்பன் கடனாய் கொடுத்த அவனது கிரெடிட் கார்டு
    இருந்தது, வட்டியோடு திரும்பக் கேட்டிருந்தான்.

    கிரெடிட் கார்டை செருகி ரூபாய் ஐயாயிரம் என்று அழுத்தினேன்.

    ஐயாயிரம் ரூபாய் வந்து விழுந்தது

    அதே
    வங்கியின் பின்புறத்திலிருந்து அனந்தராமன் தன்னுடைய சேமிப்புக்கணக்கில்
    கட்டிய அதே ஐயாயிரம் ரூபாய் என்று இருவருக்கும் தெரிந்திருக்க நியாயமில்லை !!
    குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயில் குமிண் சிரிப்பும்
    பனித்த சடையும் பவளம் போல் மேனியில் பால் வெண்ணீறும்
    இனித்தமுடன் எடுத்த பொற்பாதமும் காணப்பெற்றால்
    மனித்தப்பிறவியும் வேண்டுவதே இம்மாநிலத்தே !

  2. #2
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    அனந்தராமன் சேமிப்பிலிட்ட பணத்தைப் போல சில விடயங்கள் பலருக்கும் தெரியாமல் இருப்பது ஒரு விதத்தில் நல்லதுதான்...

    இல்லையென்றால் நல்ல உறவுகளாக நாம் நினைக்கும் பல வெளுத்து போய்,
    பூலோகம் நரகமாகி விடும்...!!

    கடுகு சிறிதென்றாலும் காரம் அதிகமென உணர்த்திய கதை, மனதார்ந்த வாழ்த்துக்கள் பாபு..!!

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  3. #3
    இனியவர் பண்பட்டவர் poornima's Avatar
    Join Date
    13 Mar 2008
    Posts
    808
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    3
    Uploads
    0
    பாபு பாராட்டுகள் நன்றாக எழுதுகிறீர்கள்..

    சேமிப்பு கணக்கில் கட்டிய பணம் உடனே தானியங்கி பணம் தரும் இயந்திரத்துக்கு
    வந்து விடுமா என்ன? :-)

    சும்மா அறியாப் பொண்ணு லாஜிக் பார்க்குது.. கண்டுக்காதீங்க பாபு :-)

    நிறைய எழுதுங்க வாழ்த்துகள்.





    பூர்ணிமா
    ==================
    தேமதுரத் தமிழோசை உலகெல்லாம்
    ஒலிக்கச் செய்வோம்....

  4. #4
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    பணத்தை வைப்பு செய்யும் தானியங்கி இயந்திரங்களும் இருக்கின்றனவே பூர்ணிமா.....??

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  5. #5
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் கண்மணி's Avatar
    Join Date
    02 Sep 2006
    Posts
    1,493
    Post Thanks / Like
    iCash Credits
    9,014
    Downloads
    3
    Uploads
    0
    கிரெடிட் கார்டு என்றாலே கடன்தான். கடனட்டையையே கடன் கொடுப்பதா? அந்த நண்பரை நமக்கெல்லாம் அறிமுகம் செய்யாம விட்டுட்டாரே கதாசிரியர்.

    ATM கார்டு, கிரெடிட் கார்டு இதையெல்லாம் கடனாக் குடுக்கக் கூடாதுங்க. ஏன்னா பணம் எடுக்க, ரகசிய எண்ணையும் கொடுக்க வேண்டியது வரும்.. அதெல்லாம் சரிப்படாது.வேணும்னா பணம் எடுத்துக் கொடுக்கலாம். இல்லைன்னா அவரோட போய் அவருக்கு வேண்டியதை வாங்கித் தரலாம்.

    இல்லைன்னா கார்டைக் கொடுத்துட்டுக் காணாமப் போயிடுச்சின்னு உடனே கம்ப்ளெயிண்ட் பண்ணிரலாம்.

    ஆனால் மாமனாருக்கு மருத்துவச் செலவு செய்யற அனந்தராமன் பாராட்டப்படவேண்டியவர். இந்தக் காலத்தில யார்தான் மனைவியோட பெத்தவங்களைக் கண்ணும் கருத்துமா பார்த்துக்கறாங்க.?

  6. #6
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2003
    Posts
    7,901
    Post Thanks / Like
    iCash Credits
    20,940
    Downloads
    62
    Uploads
    3
    நல்ல முயற்சி பாபு.
    இன்னும் எழுதுங்கள்.
    இனிய பாராட்டு.

  7. #7
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் மன்மதன்'s Avatar
    Join Date
    29 Nov 2003
    Posts
    11,633
    Post Thanks / Like
    iCash Credits
    30,747
    Downloads
    17
    Uploads
    0
    தொடர்ந்து எழுதுங்க பாபு..

  8. #8
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சுகந்தப்ரீதன்'s Avatar
    Join Date
    23 Jun 2007
    Posts
    3,869
    Post Thanks / Like
    iCash Credits
    237,295
    Downloads
    69
    Uploads
    1
    கதை நன்று.. இன்னும் கொஞ்சம் முயலுங்கள் ..!!
    வாழ்த்துக்கள்... தொடர்ந்து எழுதுங்கள் பாபு..!!

    Quote Originally Posted by கண்மணி View Post
    இந்தக் காலத்தில யார்தான் மனைவியோட பெத்தவங்களைக் கண்ணும் கருத்துமா பார்த்துக்கறாங்க.?
    அப்ப அந்த காலத்துல கண்ணும் கருத்துமா பாத்துக்கிட்டாங்களா கண்மணி..??
    ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
    வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
    உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
    பழுதுண்டு வேறோர் பணிக்கு.
    -நல்வழி

  9. #9
    புதியவர்
    Join Date
    25 Jan 2006
    Posts
    12
    Post Thanks / Like
    iCash Credits
    8,947
    Downloads
    0
    Uploads
    0
    மிக அருமை நண்பரே

  10. #10
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    கதையைப் படித்து முடித்ததும் வட்டிக்கு ஆசைப்பட்டு நட்பு உடைந்து விடக்கூடாதென்ற நினைவு வந்தது.
    பாராட்டுகள் பாபு

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •