Page 1 of 5 1 2 3 4 5 LastLast
Results 1 to 12 of 53

Thread: கோப்புகளை மறைப்பது எப்படி?

  1. #1
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2003
    Posts
    7,901
    Post Thanks / Like
    iCash Credits
    20,940
    Downloads
    62
    Uploads
    3

    Thumbs up கோப்புகளை மறைப்பது எப்படி?

    எந்த ஒரு மென்பொருளையும் நிறுவாமலேயே உங்கள் கணினியில் உங்களது கோப்புகளை யாரும் அறியாமல் மறைத்து வைக்க முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா?

    கீழே தரப்பட்டுள்ள வாக்கியங்களை நோட்பேட்(Notepad)-ஐத் திறந்து அதில் சேமிக்கவும். அந்த வாக்கியங்களில் இருக்கும் "type your password here" என்ற வார்த்தைகளை நீக்கி விட்டு உங்களுக்குத் தேவையான கடவுச்சொல்லை தாருங்கள் (மேற்கோள்கள் இன்றி தரவும்). இதை எந்தக்காரணம் கொண்டும் மறக்க வேண்டாம். அந்த கோப்பை ஏதாவது ஒரு பெயர் கொடுத்து *.bat கோப்பாக சேமிக்கவும். உதாரணமாக hide.bat என கோப்பின் பெயரைக்கொடுத்து சேமிக்கவும்.

    ----------------------------------------------------------
    cls
    @ECHO OFF
    title Folder Locker
    if EXIST "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}" goto UNLOCK
    if NOT EXIST Locker goto MDLOCKER
    :CONFIRM
    echo Are you sure u want to Lock the folder(Y/N)
    set/p "cho=>"
    if %cho%==Y goto LOCK
    if %cho%==y goto LOCK
    if %cho%==n goto END
    if %cho%==N goto END
    echo Invalid choice.
    goto CONFIRM
    :LOCK
    ren Locker "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}"
    attrib +h +s "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}"
    echo Folder locked
    goto End
    :UNLOCK
    echo Enter password to Unlock folder
    set/p "pass=>"
    if NOT %pass%=="type your password here" goto FAIL
    attrib -h -s "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}"
    ren "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}" Locker
    echo Folder Unlocked successfully
    goto End
    :FAIL
    echo Invalid password
    goto end
    :MDLOCKER
    md Locker
    echo Locker created successfully
    goto End
    :End
    -------------------------------------------------------------

    நீங்கள் சேமித்த hide.bat கோப்பை இரண்டு முறை சொடுக்கினால் Locker என்ற ஃபோல்டர் உங்கள் கண்களுக்குத் தென்படும். நீங்கள் மறைக்க விரும்பும் கோப்புகள் எல்லாவற்றையும் அந்த ஃபோல்டருக்குள் சேமியுங்கள்.

    இப்போது மீண்டும் hide.bat கோப்பினை இரண்டு முறை சொடுக்குங்கள். 'கோப்பினைப் பூட்டிவிடவா' என செய்தி வரும் MSDOS செய்திப்பெட்டியில் y என தட்டச்சினால் Locker மறைந்து விடும்.

    மறைந்த Locker-ஐ காண விரும்பினால் மீண்டும் hide.bat-கோப்பை இரண்டு முறை சொடுக்குங்கள். கடவுச்சொல்லைத் தரும்படி கேட்கும் செய்திப்பெட்டியில் உங்கள் கடவுச்சொல்லை தாருங்கள். Locker உங்கள் கண்முன்பு வரும்.

    குறிப்பு:
    கூடுதல் பாதுகாப்பு தேவை என கருதினால் hide.bat கோப்பினை வேறொரு இடத்தில் பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள். அல்லது வேறொரு வட்டில் சேமித்துக்கொண்டு, இந்தக்கோப்பை நீக்கி விடுங்கள்.

    நண்பர்கள் யாருக்கேனும் இந்தத்தகவல் பயன்பட்டால் மகிழ்வேன்.

    தகவலை மின்னஞ்சலில் அனுப்பிய நண்பருக்கு நன்றி.

  2. #2
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் praveen's Avatar
    Join Date
    05 Oct 2006
    Posts
    1,771
    Post Thanks / Like
    iCash Credits
    60,428
    Downloads
    51
    Uploads
    112
    நல்ல தகவல் இதோ அந்த தகவலுக்கான வீடியோ

    [media]http://www.metacafe.com/watch/765129/lock_folder_without_any_software_password_systeam/[/media]
    இறைவன் நம்மை படைத்ததே, நமக்குள் ஒருவருக்கு ஒருவர் சேவை செய்வதற்கே.

  3. #3
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2003
    Posts
    7,901
    Post Thanks / Like
    iCash Credits
    20,940
    Downloads
    62
    Uploads
    3
    எளிதாக காண்பதற்கு வழி காட்டிய பிரவீணுக்கு நன்றி.

  4. #4
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஷீ-நிசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Location
    சென்னை
    Posts
    4,771
    Post Thanks / Like
    iCash Credits
    37,742
    Downloads
    26
    Uploads
    1
    நல்ல தகவல்....

    எந்த பிரச்சனையுமில்லை... நன்றி பாரதி அவர்களே!
    Email: arpudam79@gmail.com
    Web: www.nisiyas.blogspot.com
    Web: www.shenisi.blogspot.com

    கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
    __________________________________________________

    என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி

  5. #5
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    இது எனக்கு புதிது... நன்றி அண்ணா...

    =============

    எனக்கு தெரிந்த ஒரு வழி...
    ---

    இன்னொரு எனக்கு தெரிந்த வழி இது...

    command prompt ஐ திறந்து எந்த கோப்பை மறைக்கவிருக்கிறீர்களோ அது உள்ள drive or folder ற்கு செல்லுங்கள் ஏதுவாக்குங்கள். சாதாரணமாக C:\Documents and Settings\Administrator> இவ்வாறு இருக்கும். உதாரணமாக நீங்கள் D Drive > barathi என்ற folder ற்கு செல்லவேண்டும் எனின்

    cd\ என அழுத்தினால் அது C:\> என வரும். இல்லாவிட்டால் d: enter தட்டினால் d:\> என வந்திடும். பின்னர் cd barathi என தட்டினால் C:\barathi> இவ்வாறு வந்திடும்...

    பின்னர் D:/barathi>attrib +h +s என தட்டிவிடுங்கள். barathi என்ன folder ற்குள் உள்ள அனைத்து கோப்புக்களும் மறைந்திடும். பின்னர் தெரியவைக்க D:/barathi>attrib -h -s என தட்டினால் வந்திடும்.

    நீங்கள் கடவுச்சொல்லாக நினைக்கும் சொல்லை கோப்பாக போட்டுவிட்டு மறைக்கலாம். இல்லாவிட்டால் இந்த வழிமுறை தெரிந்தவர்கள் நீக்கிவிடுவார்கள்...

    இவ்வாறு மறைக்கும் கோப்புக்களை வேறு எந்த வகையிலும் கண்டுபிடிக்க இயலாது. (show hidden files or Advance search)

    முயன்று பாருங்கள்... ஏற்கனவே தெரிந்தால் மன்னிக்க...
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  6. #6
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2003
    Posts
    7,901
    Post Thanks / Like
    iCash Credits
    20,940
    Downloads
    62
    Uploads
    3

    Exclamation

    Quote Originally Posted by அன்புரசிகன் View Post
    .............................

    பின்னர் D:/barathi>attrib +h +s என தட்டிவிடுங்கள். barathi என்ன folder ற்குள் உள்ள அனைத்து கோப்புக்களும் மறைந்திடும். பின்னர் தெரியவைக்க D:/barathi>attrib -h -s என தட்டினால் வந்திடும்.

    நீங்கள் கடவுச்சொல்லாக நினைக்கும் சொல்லை கோப்பாக போட்டுவிட்டு மறைக்கலாம். இல்லாவிட்டால் இந்த வழிமுறை தெரிந்தவர்கள் நீக்கிவிடுவார்கள்...

    இவ்வாறு மறைக்கும் கோப்புக்களை வேறு எந்த வகையிலும் கண்டுபிடிக்க இயலாது. (show hidden files or Advance search)

    முயன்று பாருங்கள்...
    அன்பு,

    இதை விண்டோஸ் எக்ஸ்புளோரர் - டூல்ஸ் - ஃபோல்டர் ஆப்ஷன்ஸ் - வியூ - ஹிடன் ஃபைல்ஸ் அண்ட் ஃபோல்டர்ஸ் - ஷோ ஹிடன் ஃபைல்ஸ் அண்ட் ஃபோல்டர்ஸ் (Windows explorer - Tools - Folder options - View - Hidden files and folders - Show hidden files and folders ) என்பதை தேர்வு செய்வதன் மூலம் கண்டுபிடிக்க முடியும் அல்லவா?

  7. #7
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    Quote Originally Posted by பாரதி View Post

    முடியாது அண்ணா....

    செய்து பாருங்களேன்...
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  8. #8
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2003
    Posts
    7,901
    Post Thanks / Like
    iCash Credits
    20,940
    Downloads
    62
    Uploads
    3
    அன்பு, நீங்கள் கூறிய வழிமுறையில் ஒரு ஃபோல்டரை உருவாக்கி, ஒரு கோப்பை அதனுள் வைத்தேன். MSDOS முறையில் மட்டும்தான் அந்த கோப்பு மறைக்கப்படுகிறது. நான் முன்பு கூறிய முறையில் அந்த கோப்பு தெரிகிறதே..!

  9. #9
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    நீங்கள் சொன்ன முறையில் நான் இன்னமும் செய்துபார்க்கவில்லை. நீங்கள் சொல்லும் முறையில் நாம் command prompt ல் செய்வதை அந்த கட்டளையை bat கோப்பாக்கி செய்கிறோம். நான் விபரித்த முறையில் செய்தால் command prompt மூலம் மட்டுமே செய்யமுடியும். வேறு வகையில் மீள கண்டுபிடிக்க இயலாது என எண்ணுகிறேன். நீங்கள் சொன்ன முறையில் செய்து பின்னர் show hidden files கொடுத்ததும் தெரிந்தால் பலனில்லை. காரணம் தற்போதய இயங்கு தளங்களி்ல் status bar லேயே எத்தனை கோப்புக்கள் மறைக்கப்பட்டுள்ளன என்ற விபரங்கள் தெரிகிறது.
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  10. #10
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    ரொம்ப நன்றி பாரதி. மிகவும் உபயோகமாக உள்ளது.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  11. #11
    இளையவர் பண்பட்டவர் பாபு's Avatar
    Join Date
    03 Jan 2008
    Location
    Hong Kong
    Posts
    79
    Post Thanks / Like
    iCash Credits
    8,962
    Downloads
    0
    Uploads
    0
    நன்றி பாரதி.
    குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயில் குமிண் சிரிப்பும்
    பனித்த சடையும் பவளம் போல் மேனியில் பால் வெண்ணீறும்
    இனித்தமுடன் எடுத்த பொற்பாதமும் காணப்பெற்றால்
    மனித்தப்பிறவியும் வேண்டுவதே இம்மாநிலத்தே !

  12. #12
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2003
    Posts
    7,901
    Post Thanks / Like
    iCash Credits
    20,940
    Downloads
    62
    Uploads
    3
    அன்பு,

    Quote Originally Posted by பாரதி View Post
    எந்த ஒரு மென்பொருளையும் நிறுவாமலேயே உங்கள் கணினியில் உங்களது கோப்புகளை யாரும் அறியாமல் மறைத்து வைக்க ...................................
    ...................................

    நீங்கள் சேமித்த hide.bat கோப்பை இரண்டு முறை சொடுக்கினால் Locker என்ற ஃபோல்டர் உங்கள் கண்களுக்குத் தென்படும். நீங்கள் மறைக்க விரும்பும் கோப்புகள் எல்லாவற்றையும் அந்த ஃபோல்டருக்குள் சேமியுங்கள்.

    இப்போது மீண்டும் hide.bat கோப்பினை இரண்டு முறை சொடுக்குங்கள். 'கோப்பினைப் பூட்டிவிடவா' என செய்தி வரும் MSDOS செய்திப்பெட்டியில் y என தட்டச்சினால் Locker மறைந்து விடும்.

    மறைந்த Locker-ஐ காண விரும்பினால் மீண்டும் hide.bat-கோப்பை இரண்டு முறை சொடுக்குங்கள். கடவுச்சொல்லைத் தரும்படி கேட்கும் செய்திப்பெட்டியில் உங்கள் கடவுச்சொல்லை தாருங்கள். Locker உங்கள் கண்முன்பு வரும்.
    இந்த முறையில் செய்தால், locker-ஐ மூடிய பின்னர், அதனுள் வைக்கப்பட்டிருக்கும் எந்த கோப்பையும், ஏன் locker-யும் கூட காண முடிவதில்லை. விண்டோஸில் இருக்கும் search-ல் மறைக்கப்பட்ட கோப்பின் சரியான பெயரைக்கொடுத்து தேடினாலும் அது காணக்கிடைக்காது.

    குறிப்பிட்ட *.bat கோப்பின் மூலம் சரியான கடவுச்சொல்லை தந்தால் மட்டுமே locker கோப்பகம் கண்ணுக்கு தென்படுகிறது.

    இம்முறையில் மறைக்கப்பட்ட கோப்பை வேறு யாராலும் கண்டுபிடிக்க முடிகிறதா என கூறுங்கள் நண்பர்களே.

    Quote Originally Posted by அன்புரசிகன் View Post

    command prompt ஐ திறந்து ...................................................

    பின்னர் D:/barathi>attrib +h +s என தட்டிவிடுங்கள். barathi என்ன folder ற்குள் உள்ள அனைத்து கோப்புக்களும் மறைந்திடும். பின்னர் தெரியவைக்க D:/barathi>attrib -h -s என தட்டினால் வந்திடும்.

    நீங்கள் கடவுச்சொல்லாக நினைக்கும் சொல்லை கோப்பாக போட்டுவிட்டு மறைக்கலாம்.

    இவ்வாறு மறைக்கும் கோப்புக்களை வேறு எந்த வகையிலும் கண்டுபிடிக்க இயலாது. (show hidden files or Advance search)
    அன்பு கூறிய இந்த முறையில் செய்து மறைத்த கோப்புகளை

    1. MSDOS முறையில் காண இயலாது.
    2. விண்டோஸின் search முறையில் தேடினாலும் காண இயலாது.

    ஆனால் கீழ்க்கண்ட முறையில் தேடினால் காணக்கிடைக்கும்.

    Quote Originally Posted by பாரதி View Post
    இதை விண்டோஸ் எக்ஸ்புளோரர் - டூல்ஸ் - ஃபோல்டர் ஆப்ஷன்ஸ் - வியூ - ஹிடன் ஃபைல்ஸ் அண்ட் ஃபோல்டர்ஸ் - ஷோ ஹிடன் ஃபைல்ஸ் அண்ட் ஃபோல்டர்ஸ் (Windows explorer - Tools - Folder options - View - Hidden files and folders - Show hidden files and folders ) என்பதை தேர்வு செய்வதன் மூலம் கண்டுபிடிக்க முடியும்

Page 1 of 5 1 2 3 4 5 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •