Page 1 of 4 1 2 3 4 LastLast
Results 1 to 12 of 40

Thread: எச்சரிக்கைப் புள்ளிகள், உறுப்பினர் தடை - புதிய ஏற்பாடுகள்

                  
   
   
  1. #1
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0

    எச்சரிக்கைப் புள்ளிகள், உறுப்பினர் தடை - புதிய ஏற்பாடுகள்

    அன்பு நண்பர்களே,

    நம் மன்றத்தின் மென்பொருளில் அவ்வபோது நல்மாற்றங்களை
    நம் நிர்வாகிகள் செய்துவருகின்றனர்.

    பதிவேற்ற, பயனாளும் வசதிகள், மன்ற மேலாண்மை - இவற்றைச்
    செம்மைப்படுத்த நாளும் ஆலோசித்து, தக்க மாற்றங்கள்/ ஏற்றங்களை
    செயல்படுத்தும் இப்பணியில் ----

    தற்போது ஏற்படுத்தப்பட்டிருக்கும் சில புதியன --

    http://www.tamilmantram.com/vb/announcement.php?f=39
    நம் தமிழ்மன்ற விதிகளை மீறிப் பதிவுகள் வரும்போது,
    சக உறுப்பினர்கள், நிர்வாகக் குழுவினரால் நட்புடன் எடுத்துக்கூறுவதே
    இங்கே நாம் காணும் முதல் செயல்.

    அதை மீறியும் தவறுகள்/தப்புகள் நிகழும்போது, நிர்வாகக்குழுவினர்
    அப்பதிவருக்கு எச்சரிக்கைப் புள்ளிகள் வழங்குவர்.

    இந்த எச்சரிக்கைப் புள்ளிகள் கொடுக்கும் முறையில் புதிய மாறுதல்கள் செய்யப்பட்டு, உடன் நடைமுறைக்கு வந்துள்ளது.

    முன்பு எச்சரிக்கைப் புள்ளிகள் அளவு ஒவ்வொன்றாக கூடியது. இப்பொழுது ஒரு எச்சரிக்கைக்கு 5 புள்ளிகள் என்று திருத்தப்பட்டுள்ளது.

    ஒரு முறை அந்த புள்ளிகள் பெற்றால், தண்டனை கிடையாது. இரண்டாம் முறை எச்சரிக்கைப் புள்ளிகள் பெறும்போதும் தண்டனை கிடையாது. (மொத்தம் 10 புள்ளிகள்).

    மூன்றாவது முறை (அதாவது 15 புள்ளிகள்) பெறும்போது ஒருவர் 5 நாட்களுக்கு "மென் தடை" (Soft Ban) செய்யப்படுவார்.

    20 புள்ளிகள் பெற்றால் 10 நாட்கள் மென் தடை.
    25 புள்ளிகள் பெற்றால் 2 வாரங்கள் மென் தடை.
    50 புள்ளிகள் பெற்றால் 1 மாதம் மென் தடை.

    இந்த "மென் தடை" என்னும் பதம், புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஒரு திட்டம்.

    சில சமயங்களில் சிலரை நமது மன்றத்தை பார்க்க முடியாமல் நிரந்தரமாக தடை செய்வதனால், தவறான செய்திகள் பரப்பப் படுகின்றன..
    நம் மன்றத்தைத தவறாக புரிந்துகொள்ள வாய்ப்பு ஏற்படுகிறது..

    தொடர்புகள் இல்லையானால், புரிந்துணர்வும் இல்லாது போகும்.

    . அதனால், அவர்களை சில காலம் பங்கேற்க மட்டும் அனுமதிக்காமல் படிக்க மட்டுமே அனுமதிக்கப்படும் ஒரு திட்டம். இவர்களுக்கு வாக்களிக்கும் உரிமையும், ''ரேட்டிங்'' உரிமையும் உண்டு. பண்பட்டவர் அனுமதி கிடையாது



    ''தண்டனையும்'' மென்மையாக இருக்க, தவறு செய்தவர்கள் திருத்திக்கொண்டு, மீண்டும் கலந்துலவச் செய்யும் நோக்கமுள்ள திட்டம்.

    செவிலி தலைவியை மல்லிகைப்பந்து சுற்றிய கம்பால் அடிக்கும் பாவனை சொல்லும் சங்கப்பாடலின் சாயல் உள்ள திட்டம்.

    யாரையும் விலக்கவேண்டும் என்பதல்ல மன்றத்தின் எண்ணவோட்டம்.

    எல்லாரையும் அரவணைத்து, ஆக்கபூர்வ சிந்தனைகள், படைப்புகள் நம் உடைமைகளாக
    நாம் அனைவரும் இணைந்து இணையக் கடலில் தமிழ்ப்படகில் பயணிக்கவேண்டும் என்பதே
    இம்மன்றத்தின் தலையாய நோக்கம்.

    அனைவரின் புரிதல், ஒத்துழைப்பை வேண்டுகிறோம். நன்றி!

    -- தமிழ்மன்றம்
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  2. #2
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
    Join Date
    28 Apr 2003
    Location
    அமெரிக்கா
    Posts
    16,348
    Post Thanks / Like
    iCash Credits
    39,997
    Downloads
    15
    Uploads
    4
    யாருக்கும் எச்சரிக்கை புள்ளி கொடுக்கவேண்டும் என்பது எம் விருப்பமல்ல. ஆனால் மன்றத்தில் அனைவரும் நல்ல உறவுடன் உலாவர.. இது அவசியம் ஆகிறது.

  3. #3
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் தீபன்'s Avatar
    Join Date
    18 Aug 2005
    Location
    யாழ்ப்பாணம்
    Posts
    1,135
    Post Thanks / Like
    iCash Credits
    33,859
    Downloads
    4
    Uploads
    0
    நல்ல முயற்சி. தவறு செய்தவர்கள் என்ற பதத்தை பிரயோகிக்காமல் மன்ற விதிமுறைகளை மீறி நடந்தவர்கள் என பிரயோகிப்பது நலமென எண்ணுகிறேன்.
    என்றென்றும் நட்புடன்
    உங்கள் தீபன்.

  4. #4
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் தீபா's Avatar
    Join Date
    24 Apr 2007
    Location
    கோவை
    Posts
    1,033
    Post Thanks / Like
    iCash Credits
    20,623
    Downloads
    1
    Uploads
    0
    சரியான முடிவு..

    ஒத்துழைப்புடன் இயங்குகிறேன்.

    அன்புடன்
    தென்றல்

  5. #5
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    Singapore
    Posts
    12,060
    Post Thanks / Like
    iCash Credits
    71,111
    Downloads
    18
    Uploads
    2
    இது நல்ல ஐடியாதான். இதனால் தப்பு செய்தவர்களுக்கும் திருந்த ஒரு சந்தர்பம் கிடைக்கிறது.

    நான் இனிமேல் ஒழுங்காக நடந்துகொள்கிறேன்.

  6. #6
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    05 Feb 2008
    Location
    அருகில்..
    Posts
    194
    Post Thanks / Like
    iCash Credits
    11,912
    Downloads
    4
    Uploads
    0
    விதிகளை மீறித் தவறிழைக்கும் நண்பர்களை பட்டினி போடாமல் விரதமிருக்கும் விதத்தில் அமைந்த புதிய நடைமுறையை மகிழ்வுடன் வரவேற்கிறேன்.

  7. #7
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் mukilan's Avatar
    Join Date
    27 Jul 2005
    Location
    கனடா
    Posts
    1,999
    Post Thanks / Like
    iCash Credits
    32,969
    Downloads
    53
    Uploads
    5
    குழந்தைகளை பழந்தமிழர்கள் சாம, பேத, தான, தண்ட என்ற வரிசையில் தண்டிப்பார்களாம். அது போல எடுத்துரைத்தல், அறிவுரைத்தல், கண்டித்தல், தண்டித்தல் என மன்றத்தில். நல்ல ஆரோக்கியமான அணுகுமுறை. இதை ஒட்டி வைக்கிறேன்.
    உன் வீட்டுக்கண்ணாடி ஆனாலும் கூட முன் வந்து நின்றால்தான் முகம் காட்டும் இங்கே!

  8. #8
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    விதிகள் எப்போதும், எதனையும் விறு விறுப்பாக்கித் தரத்தினையும் பேணும்...

    அந்த வகையில் இந்த நடைமுறையும் நம் மன்றத்தின் மேன்மைக்கு வழி சமைக்கட்டும்....

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  9. #9
    இனியவர் பண்பட்டவர் வெற்றி's Avatar
    Join Date
    03 Mar 2007
    Location
    இரும்பூர்
    Posts
    701
    Post Thanks / Like
    iCash Credits
    12,009
    Downloads
    33
    Uploads
    2
    மிக நல்ல வரவேற்க்கதக்க முடிவு தான்...
    ஜெயிப்பது நிஜம்

  10. #10
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    மன்றத்தை ஒரு ஒழுங்குமுறையிற் கொண்டு செல்ல,
    அவசியமான, மென்மையான கட்டுப்பாடு.

    Quote Originally Posted by தீபன் View Post
    நல்ல முயற்சி. தவறு செய்தவர்கள் என்ற பதத்தை பிரயோகிக்காமல் மன்ற விதிமுறைகளை மீறி நடந்தவர்கள் என பிரயோகிப்பது நலமென எண்ணுகிறேன்.
    மன்ற விதியை மீறுவதே, தவறுதானே தீபன்...

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

  11. #11
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் தீபன்'s Avatar
    Join Date
    18 Aug 2005
    Location
    யாழ்ப்பாணம்
    Posts
    1,135
    Post Thanks / Like
    iCash Credits
    33,859
    Downloads
    4
    Uploads
    0
    Quote Originally Posted by அக்னி View Post
    மன்றத்தை ஒரு ஒழுங்குமுறையிற் கொண்டு செல்ல,
    அவசியமான, மென்மையான கட்டுப்பாடு.


    மன்ற விதியை மீறுவதே, தவறுதானே தீபன்...
    இலக்கணப்படி எல்லாம் சரிதான். ஆனால், பொதுவாக தவறு செய்தவர்களென சொன்னால் அது குறித்த நபரை அவமரியாதை செய்வதுபோல் எனக்கு பட்டது. அதானால் அது எந்த்வகையான தவறென்பதையும் சேர்த்தே குறிப்பிடலாமென சொன்னேன். அதாவது மன்ற விதிமுறைகளி மீறியவரென்ற பதத்தை பிரயோகிக்கலாமென்றேன். என் கருத்தை சொன்னேன். இதுவும் தவறா...
    என்றென்றும் நட்புடன்
    உங்கள் தீபன்.

  12. #12
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    மன்ற விதிகளை மீறி மன்றத்தை அவமரியாதை செய்யும் விதிமீறல் செய்பவர்களின் தவறைத் திருத்தும் நோக்கில் அமைந்த மாற்றத்தைக் கொண்டுவந்தமைக்கு நன்றியும் பாராட்டும்.

Page 1 of 4 1 2 3 4 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •