Results 1 to 6 of 6

Thread: காதல்..காதல்..

                  
   
   
  1. #1
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    01 Apr 2003
    Location
    பூந்தோட்டம்
    Posts
    6,697
    Post Thanks / Like
    iCash Credits
    21,958
    Downloads
    38
    Uploads
    0

    காதல்..காதல்..

    நானும் நீயும் இணையாய்
    இணைந்தெடுத்த நிழற்படங்கள்
    எல்லாம் நிஜமானவைகளாய்..
    உயிரில்லா அந்த உருவப்படங்கள்
    உயிரோட்டத்தை உணர்த்தும்
    உன்னத உணர்வை இன்றுவரை
    இரவு உணவருந்துகையில்
    அசைபோடும் அழகு.. அடடா அருமை!!

    கடுஞ்சொல் என்ற கசப்பை
    நம் அகராதியிலிருந்து
    நீக்கிய நாள்- நீண்ட பயணம்
    தொடங்கிய அந்த நிம்மதி பெருநாள்..
    மகிழ்ந்த மணநாள்.. இன்று நினைத்தாலும்
    இனிக்கிறது..

    கணவன் - மனைவியென்ற
    ஒரு பட்டம்தான் கொடுக்கப்பட்டது..
    தோழன் - தோழி..
    காதலன் - காதலி.. என பல பட்டங்களை
    பலரால் சொல்லவைத்த பெருமை
    யாரைச்சேரும்?!!

    இத்தனை நாளும் இணைபிரியாதிருந்தோம்
    இறப்பிலும் இணையத்தான் போகிறோம்..
    உடலைவிட்டு உயிர் போனபின்
    இருந்தென்ன பயன்?!!..

    ஆமாம் நம்மில்
    உடல் யார்...
    உயிர் யார்??!!
    Last edited by பூமகள்; 21-07-2008 at 08:22 AM. Reason: யுனிக்கோடாக்கம் - பூமகள்

  2. #2
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    நம்மில் உடல் யார் உயிர் யார்
    உண்மை அன்பு கலந்தபின்னே மழை யார் நிலம் யார்
    ஜீவன்களின் இழை பின்னி சிட்டு தந்த பட்டுத்துணி...
    அழகு அருமை ..
    Last edited by பூமகள்; 21-07-2008 at 08:23 AM. Reason: யுனிக்கோடாக்கம் - பூமகள்
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  3. #3
    அனைவரின் நண்பர் rambal's Avatar
    Join Date
    30 Mar 2003
    Location
    அன்பால் ஆன உலகம்
    Posts
    1,112
    Post Thanks / Like
    iCash Credits
    14,506
    Downloads
    0
    Uploads
    0
    செம்புல கலந்த நீர் போல் இருக்கையில்
    எப்படி பிரித்துக் காண்பது?
    உடல் வேறு உயிர் வேறு என்பது எல்லாம் கடினம்..
    பாராட்டுக்கள் காதல் கவியே..
    Last edited by பூமகள்; 21-07-2008 at 08:23 AM. Reason: யுனிக்கோடாக்கம் - பூமகள்

  4. #4
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் Nanban's Avatar
    Join Date
    05 Apr 2003
    Location
    துபாய்
    Posts
    3,203
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    47
    Uploads
    0

    Re: காதல்..காதல்..

    கணவன் - மனைவியென்ற
    ஒரு பட்டம்தான் கொடுக்கப்பட்டது..
    தோழன் - தோழி..
    காதலன் - காதலி.. என பல பட்டங்களை
    பலரால் சொல்லவைத்த பெருமை
    யாரைச்சேரும்?!!

    கணவன், மனைவி என்ற
    பந்தத்தினுள்
    எல்லாமே அடக்கம்.....

    காதலன், காதலி
    தோழன், தோழி
    என்ற ஆண், பெண்
    இணை உறவுகளெல்லாம்
    அதனுள்ளே தான் அடக்கம்.

    தோழன், தோழி - முதல் நிலை
    காதலன், காதலி - இடை நிலை
    கணவன், மனைவி - முதுநிலை

    Last edited by பூமகள்; 21-07-2008 at 08:25 AM. Reason: யுனிக்கோடாக்கம் - பூமகள்

  5. #5
    இளம் புயல்
    Join Date
    01 Apr 2003
    Posts
    267
    Post Thanks / Like
    iCash Credits
    8,940
    Downloads
    0
    Uploads
    0
    அருமையான கவிதை... உடல் யார் உயிர் யார் என முடித்திருக்கும் விதம்
    கவிதைக்கு அழகூட்டுகிறது
    Last edited by பூமகள்; 21-07-2008 at 08:25 AM. Reason: யுனிக்கோடாக்கம் - பூமகள்

  6. #6
    மன்ற ஆலோசகர் பண்பட்டவர் kavitha's Avatar
    Join Date
    09 Dec 2003
    Posts
    4,291
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    23
    Uploads
    0
    கொடுத்துவைத்தவளின் கொடுத்துவைத்தவர்!
    Last edited by பூமகள்; 21-07-2008 at 08:26 AM. Reason: யுனிக்கோடாக்கம் - பூமகள்
    கற்க கசடறக் கற்றவை கற்றபின்
    நிற்க அதற்குத் தக

    என்றும் நட்புடன்,
    கவிதா

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •