Page 5 of 6 FirstFirst 1 2 3 4 5 6 LastLast
Results 49 to 60 of 61

Thread: தியாகப் பயணம் - திலீபனின் சத்தியவேள்வி

                  
   
   
  1. #49

    Join Date
    13 Feb 2007
    Posts
    0
    Post Thanks / Like
    iCash Credits
    8,940
    Downloads
    0
    Uploads
    0

    நன்றி

    மீண்டும் 87 இற்கு கொண்டு சென்ற மறத்தமிழனுக்கு நன்றி
    எனது இந்த முதல்பதிவினுாடாக திலீபனின் தியாகத்ததுக்கு வணக்கம் தெரிவிக்கின்றேன்

  2. #50
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் தீபன்'s Avatar
    Join Date
    18 Aug 2005
    Location
    யாழ்ப்பாணம்
    Posts
    1,135
    Post Thanks / Like
    iCash Credits
    33,859
    Downloads
    4
    Uploads
    0
    Quote Originally Posted by thavaonline View Post
    மீண்டும் 87 இற்கு கொண்டு சென்ற மறத்தமிழனுக்கு நன்றி
    எனது இந்த முதல்பதிவினுாடாக திலீபனின் தியாகத்ததுக்கு வணக்கம் தெரிவிக்கின்றேன்
    வணக்கம் நண்பரே, 2007 ஆரம்பத்திலேயே மன்றில் இணைந்த நீங்கள் இன்றுதான் உங்கள் முதல் பதிவை அஞ்சலியுடன் ஆரம்பிக்கிறீர்கள். ஆனாலும் 1 பதிவு இடப்பட்டபின்னும் உங்கள் பதிவெண்ணிக்கை 0 என்றே இருக்கிறதே....
    உங்களைப் பற்றிய சிறு அறிமுகத்தை அறிமுகதிரியில் இடலாமே..!
    என்றென்றும் நட்புடன்
    உங்கள் தீபன்.

  3. #51
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    12 Aug 2007
    Posts
    175
    Post Thanks / Like
    iCash Credits
    12,380
    Downloads
    0
    Uploads
    0
    தீலீபனின் தியாகப்பயனத்தினை காணொளியில் காண இங்கே அழுத்துங்கள்

    http://www.tamilntt.com/

  4. #52
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    17 Jun 2008
    Posts
    119
    Post Thanks / Like
    iCash Credits
    8,974
    Downloads
    2
    Uploads
    0
    தியாகப்பயணத்தில் என்னோடு இணைந்து வந்து, கருத்துக்களை பரிமாறிக்கொண்ட அனைவருக்கும் வணக்கமும் நன்றியும். ஆனால் குறிப்பிட்ட ஒரு சிலரைத்தவிர மற்றோர் ஒதுங்கிக்கொண்டனர். இது முன்னர் வெளிவந்த நூலின் மறுபதிப்புத்தான் இங்கே. இது படித்ததில் பிடித்தது பகுதியில்தான் உள்ளது. இதில் வருகை தந்து கருத்துக்களை பதியாமல் விட்டது ஏன் என்பது அவர்களுக்கே வெளிச்சம். எல்லோரும் அந்த புனித வீரனை அகத்திருத்தி அகவணக்கம் செய்வார்கள் என்பது திண்ணம். ஏனெனில் அவர்கள் எல்லோரும் மான, மறத்தமிழர். காயங்களை மறக்கமாட்டார்கள்.

    நன்றி கம்பன். நானும் அதை கவனித்தேன். பதிய முனையும் போது உங்கள் பதிவை கண்டேன். நன்றி. திலீபன் பற்றி அதிகம் அறியாதவர்கள், தெரியாதவர்கள் இந்த தொடுப்பை பார்க்க வேண்டும். திலீபனின் திடம், தீர்க்கதரிசனம் என்பவற்றைப் பார்க்கலாம். நன்றி அன்பான தமிழ் உறவுகளே.
    மறத்தமிழன்
    _____________________________________
    ஆண்ட தமிழினம் மீண்டுமொருமுறை
    ஆள நினைப்பதில் என்ன பிழை...!
    www.enrenrumthamil.blogspot.com

  5. #53
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஓவியா's Avatar
    Join Date
    27 Apr 2006
    Location
    LONDON
    Posts
    8,998
    Post Thanks / Like
    iCash Credits
    41,530
    Downloads
    5
    Uploads
    0
    பதிவிற்க்கு நன்றி.

    வீரன் திலீபனுக்கு என் நெஞ்சார்ந்த வீரவணக்கம்.




    Quote Originally Posted by மறத்தமிழன் View Post
    ஆனால் குறிப்பிட்ட ஒரு சிலரைத்தவிர மற்றோர் ஒதுங்கிக்கொண்டனர். .
    வேறு ஒன்றுமில்லை, முகம் தெரியவில்லையென்பதால் ஒரு சிலர் வீசும் தட்டச்சு வாள்வீச்சை சகிக்காமல், பட்ட காயங்களை தடவிபார்த்துதான் ஒதுங்கிச்செல்கின்றனர்.
    Last edited by ஓவியா; 28-09-2008 at 04:17 PM.
    தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
    வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்

  6. #54
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    02 May 2006
    Posts
    132
    Post Thanks / Like
    iCash Credits
    22,995
    Downloads
    113
    Uploads
    0

    என்றும் உன் நினைவுகளுடன்... அண்ணா திலீபா...

    "உலகில் மனித தர்மமே செத்துவிட்டதா? காந்தி இறந்ததற்காகக் கண்ணீர் வடிக்கும் இந்த உலகம், காந்தீயத்தின் காலடியில் சிறிது சிறிதாக எரிந்து கொண்டிருக்கும் திலீபன் என்ற மெழுகுவர்த்தியைக் காணவில்லையா?
    அல்லது கண்டும் காணாமலும் போய்விட்டதா…?"
    ------------------------------
    திலீபன் அடிக்கடி கூறிய வார்த்தைகள் எனக்கு நினைவுக்கு வருகின்றன.
    'வாஞ்சி அண்ணை! எனக்கு என்ன நடந்தாலும் நீங்கள் ஒரு சொட்டுத் தண்ணீர்கூட பலவந்தமாகவோ, சுய நினைவற்ற நிலையிலோ தர முயற்சிக்கக்கூடாது. அப்படி என் கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால் நான் இறக்குமட்டும் எனக்கு எந்தவிதமான சிகிச்சையும் அளிக்கக் கூடாது. சுயநினைவோடு என்றாலும் சரி.சுய நினைவில்லை என்றாலும் சரி. இதுக்குச் சம்பதிக்கிறனெண்டு சத்தியம் செய்து தாருங்கோ'
    என்று விடாப்பிடியாக நின்று என்னிடம் சத்தியம் வாங்கிய பிறகுதான் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தார் அவர்.
    ------------------------------------
    திலீபனின் தியாகப் பயணத்தில் 12 நாட்கள் அவரின் கூட இருந்து, அவரின் போராட்டத்தில் பங்குபற்றி, வேதனையின் எல்லைக்கே சென்றுவந்த எனக்கு, இந்த அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்கு இன்னும் எத்தனை நாட்கள் தேவையோ நானறியேன். ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்! திலீபனின் உயிர் அநியாயமாகப் போகவில்லை அதற்குப் பதிலாக அவர் ஒரு படிப்பினையை எமக்குக் கற்பித்து விட்டுப் போயுள்ளார்? அகிம்சைப் போராட்டம் என்பது மனித நேயமும், உயர் பண்பும் மிக்கவர்களிடம்தான் நல்ல விளைவுகளை ஏற்படுத்தும். ஆயுதங்கள் தான் எமது தமிழீழப் போராட்டத்தைப் பொறுத்தவரை சரியான பதில் தரமுடியும் என்பதையும், திலீபன் மறைமுகமாக உணர்த்திவிட்டுப் போயிருக்கிறார் என்பதே எமது கணிப்பு. அந்தத் தியாக தீபத்தின் இலட்சியங்கள் நிறைவேற, எம்மை நாம் அர்ப்பணிப்போமாக!
    -------------------------------------------

    முகமூடித் திரைக்குள் அரக்க முகங்கள். இன்றும் எமக்காய்க் களத்தில் புயல்கள். நாம் மட்டும்....

    ---------

  7. #55
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சுகந்தப்ரீதன்'s Avatar
    Join Date
    23 Jun 2007
    Posts
    3,869
    Post Thanks / Like
    iCash Credits
    237,295
    Downloads
    69
    Uploads
    1
    ஒரு தியாகதீபத்தை அறிய உதவிய மறத்தமிழன் அண்ணாவுக்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்..!!

    இறுதிநாள் பதிவில் நீங்களே பாருங்கள்.. சத்தியவேள்வியை சந்தேகித்தவர்கள் ஈழத்திலும் இருந்திருக்கிறார்கள் என்று அறியமுடிகிறது..!! அதேநிலைதான் எங்களுக்கும்..ஈழத்தமிழர்களுக்கு இரங்குபவர்கள் இந்தியாவுக்கு எதிரானவர்கள் என்பதைப்போல சித்தரிப்பவர்களும் இருக்கிறார்கள்..!! மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் அடி என்பதைப் போலத்தான் தமிழக மக்களின்நிலை உள்ளது..!!அதனால்தான் அமைதி காக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது மன்றத்தில்..!! மொத்தத்தில் தமிழக மக்கள் கண்ணீரை கட்டுப்படுத்த கற்றுக்கொண்டனரே ஒழிய.. அவர்கள் கண்ணீரே சிந்தவில்லை என்றெல்லாம் அர்த்தமல்ல அண்ணா..!!

    பேசும் வார்த்தைப்போல மௌனம் புரியாது என்பது உங்களுக்கு தெரியாததா அண்ணா..??
    ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
    வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
    உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
    பழுதுண்டு வேறோர் பணிக்கு.
    -நல்வழி

  8. #56
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    05 Feb 2008
    Location
    அருகில்..
    Posts
    194
    Post Thanks / Like
    iCash Credits
    11,912
    Downloads
    4
    Uploads
    0
    தியாக தீபத்தின் வெளிச்சத்தை பார்த்தவர்களில் நானும் ஒருவன். அவனுக்கு செலுத்த வேண்டிய மரியாதை மௌனாஞ்சலி.. அதைச் செய்தேன்.. பதிவிடாதவர்களும் அப்படித்தான்..

  9. #57
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    பகிர்ந்தமைக்கு நன்றி மறத்தமிழன்..

    அஹிம்சையோ, போராட்டமோ..
    உண்மையான பிறர்நலம், இன உயர்வுக்காக நிகழும்போது
    அது கல்வெட்டாகிறது..
    சந்ததி மனதில் காவியமாகிறது!

    திலீபன் என்ற தியாகச்சுடரின் ஒளி -
    இங்கு கனன்ற பதிவுகளில் இன்னும் இருக்கிறது பத்திரமாக!

    என் நினைவாஞ்சலிகளையும் சமர்ப்பிக்கிறேன்.
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  10. #58
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    03 Feb 2007
    Location
    அப்பிடீன்னா?
    Posts
    4,596
    Post Thanks / Like
    iCash Credits
    60,222
    Downloads
    84
    Uploads
    0
    தியாக திலீபனின் அகிம்சைப் போரின்போது எடுக்கப்பட்ட காணொளியினை இங்கே காணலாம்

  11. #59
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    தியாக தீபம் திலீபன்...
    மரணத்தின் நிழலில், உயிர் பெற்றவன்.
    இன்றும் என்றும்
    எம்மத்தியில்
    உணர்வுடன்... உயிர்ப்புடன்...

    தியாகச் செம்மலுக்கு, வீர வணக்கங்கள்...

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

  12. #60
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    Quote Originally Posted by தீபன் View Post
    வணக்கம் நண்பரே, 2007 ஆரம்பத்திலேயே மன்றில் இணைந்த நீங்கள் இன்றுதான் உங்கள் முதல் பதிவை அஞ்சலியுடன் ஆரம்பிக்கிறீர்கள். ஆனாலும் 1 பதிவு இடப்பட்டபின்னும் உங்கள் பதிவெண்ணிக்கை 0 என்றே இருக்கிறதே....
    உங்களைப் பற்றிய சிறு அறிமுகத்தை அறிமுகதிரியில் இடலாமே..!
    படித்ததில் பிடித்தது பகுதியில் பதிவாகும் பதிவுகள்,
    எண்ணிக்கையில் சேர்த்துக்கொள்ளப்படமாட்டாது...

    Quote Originally Posted by மறத்தமிழன் View Post
    ஆனால் குறிப்பிட்ட ஒரு சிலரைத்தவிர மற்றோர் ஒதுங்கிக்கொண்டனர்.
    ஒதுங்கிக் கொள்ளவில்லை...
    இந்த தியாகப் பயணத்தில் (ஏற்கனவே பலமுறை படித்திருந்தும்) தினமும் பங்குகொண்டேன்.
    முடிவடைந்த பின்னரே, எனது அகவணக்கத்தைச் செலுத்துவதாக இருந்தேன்.

    ஆனால், அது உங்களது சுட்டிக்காட்டலின் பின்னர் இடம்பெற்றது, எனது துரதிஸ்டமே...
    Last edited by அக்னி; 28-09-2008 at 03:14 PM.

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

Page 5 of 6 FirstFirst 1 2 3 4 5 6 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •