Results 1 to 4 of 4

Thread: முற்பகல் செய்யின்!!!??..

                  
   
   
  1. #1
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    01 Apr 2003
    Location
    பூந்தோட்டம்
    Posts
    6,697
    Post Thanks / Like
    iCash Credits
    21,958
    Downloads
    38
    Uploads
    0

    முற்பகல் செய்யின்!!!??..

    எப்படி அழித்தும்
    மறைய மறுக்கிறது மனதில் பதிந்த
    மாசு நிறைந்த கோலம்..

    அரைகுறை ஆடையுடுத்தி
    அங்கங்களை வனப்பாக்கி
    அதரங்கள் குலுங்க
    எவர்கண் படினும் கவிழ்ந்திட
    கவர்ச்சி உடையில்
    கல்லூரி போர்வையில்
    காளையர்களின் கனவுக்கன்னியாய்
    வலம் வரத் துடித்தது..

    கன்னிதான் நான்..
    கற்பழித்துப் போ கண்களால் மட்டுமென
    கட்டுக்கடங்காமல்
    நாகரீக மோகத்தால்
    நகர்வலம் வந்த நாட்கள்...

    அன்று நான் போட்ட கோலங்கள்
    மாசு படிந்தவைகளென மனம் உணர்த்தவில்லை..

    அனைத்து கொட்டங்களையும்
    கொட்டிலில் அடைத்து
    கட்டிலில் மணவாளனிடம் சரணடைந்தேன்...

    பலனாக பதினெட்டான பருவப்பெண்..

    காலைவேளையில்
    கட்டுடல் காட்டி
    இறுக்கமான கால்சட்டையில்
    அந்தரங்ககளை அப்பட்டமாய் ஆட்டி ஓடும்
    என் செல்லப் பெண்ணைப் பார்க்கையில்
    மனதில் குற்ற உணர்ச்சிகள்
    குத்தூசிகளாய்..

    எப்படி முயன்றும் அழிக்கமுடியவில்லை..
    அன்று நான் போட்ட மா(சு)க்கோலத்தை!!!
    Last edited by பூமகள்; 17-07-2008 at 07:02 PM. Reason: யுனிக்கோடாக்கம் - பூமகள்

  2. #2
    இனியவர்
    Join Date
    31 Mar 2003
    Location
    Ũ !
    Posts
    669
    Post Thanks / Like
    iCash Credits
    8,940
    Downloads
    0
    Uploads
    0
    அருமையான கேள்வி !!...
    ஒரு துணைக் கேள்னி... ஒரு ஆண் எப்போதாவது தன் மகன் தன்னைப் போல் இளமையில் ஆடுவதைக் கண்டு மனம் வருந்துவதுண்டா?
    Last edited by பூமகள்; 17-07-2008 at 07:03 PM. Reason: யுனிக்கோடாக்கம் - பூமகள்

  3. #3
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    உயிரியல் உடலியல் உளவியல் ரீதியாக
    சிட்டுவின் கவிதைத்தாய் கேட்ட முதல் கேள்விக்கும் மதுரைக்குமரன் கேட்ட துணைக் கேள்விக்கும் விடை இருக்கலாம்....

    ஆண்- பெண் (எல்லாவற்றிலும்) சமமா.. என்ற அடிப்படைக்கேள்விக்கே
    நம்மை அழைத்துச்செல்லும் கேள்விகள்...........................................................!
    Last edited by பூமகள்; 17-07-2008 at 07:04 PM. Reason: யுனிக்கோடாக்கம் - பூமகள்
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  4. #4
    மன்ற ஆலோசகர் பண்பட்டவர் kavitha's Avatar
    Join Date
    09 Dec 2003
    Posts
    4,291
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    23
    Uploads
    0
    கன்னிதான் நான்..
    கற்பழித்துப் போ கண்களால் மட்டுமென
    பூ வின் கவிதை அருமை. கல்லூரி கன்னிகளுக்கு கன்னத்தில் நல்ல அறை!

    ம.கு அவர்களே,
    எப்படி ஐயா, உமக்கு மட்டும் இப்படி தோன்றுகிறது?
    பூச்சி மாதிரி இருக்கிற அப்பாவிற்கு, அப்படி ஒரு மகன் வாய்த்தால் அப்பா கேட்கமாட்டார். ஆனால் ஊர் கேட்கும்.
    Last edited by பூமகள்; 17-07-2008 at 07:05 PM. Reason: யுனிக்கோடாக்கம் - பூமகள்
    கற்க கசடறக் கற்றவை கற்றபின்
    நிற்க அதற்குத் தக

    என்றும் நட்புடன்,
    கவிதா

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •