Page 1 of 3 1 2 3 LastLast
Results 1 to 12 of 28

Thread: தலைவராகும் தகுதி ரஜினிக்கு உண்டா?

                  
   
   

Hybrid View

Previous Post Previous Post   Next Post Next Post
  1. #1
    Awaiting பண்பட்டவர்
    Join Date
    02 Aug 2008
    Posts
    182
    Post Thanks / Like
    iCash Credits
    12,812
    Downloads
    1
    Uploads
    0

    தலைவராகும் தகுதி ரஜினிக்கு உண்டா?

    தமிழகம் மிக ஆவலுடன் எதிர்பார்க்கும் ஒரு விஷயம் ரஜினி அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்பது தான். ஒருவேளை அவர் அரசியலுக்கு வந்தால் தனிக்கட்சி, கொடி என்று தமிழகமே களை கட்டத் தொடங்கிவிடும்.

    பி.எம்.கே ( பாரத முன்னேற்ற கழகம்) எனும் புதுக்கட்சிக்கு ரஜினி தலைவராகி, மஞ்சள் கறுப்பு எனும் கொடியின் மத்தியில் ரஜினி அமர்ந்திருப்பது போல் கொடி தயாரிக்கப்பட்டு பட்டி தொட்டியெல்லாம் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் தலைப்பு செய்திகளில் இடம் பெறக்கூடும்.

    உலகத் தொலைக்காட்சிகள் போட்டி போட்டுக்கொண்டு தமிழகம் நோக்கி படை எடுப்பார்கள்.ஜப்பானில் வெடிச்சத்தம் முழங்க ஊர்வலம் துவங்கி தமிழகம் நோக்கி வரலாம்.

    மத்தியிலுள்ள ஆளும் கட்சி ப.சிதம்பரத்தையும் பி.ஜே.பி துக்ளக் ஆசிரியர் சோவையும் தூதனுப்பி கூட்டணி வைத்துக்கொள்ள ரஜினியின் ஒரு குரலுக்கு காத்திருப்பார்கள்.

    வசை பாடியபடியே ஜெயலலிதாவும், ஸ்டாலினும், விஜயகாந்தும், ராமதாசும் தோல்வி பீதியில் நெளிய ஆரம்பிப்பார்கள். அனைத்து கட்சியிலிருந்தும் சிலர் கழண்டு ரஜினி கட்சியில் சேர்வார்கள்.

    தேர்தல் நேரத்தில் ரஜினி இமயமலைக்குச் சென்றால் கூட முன்பு புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் படுத்துக்கொண்டே ஜெயிப்பார் என்று பிரச்சாரம் செய்ததுபோல் ரஜினி இமயமலையில் இருந்தாலும் ஜெயிப்பார் என்ற பிரச்சாரம் தமிழகமெங்கும் ஒலிக்கும்.

    தமிழக ரஜினி ரசிகர்களுக்கு ரஜினி அரசியலுக்கு வந்ததே ஒரு மாபெரும் இனிப்பு செய்தி என்ற குதூகலத்தில் இருப்பார்கள். இதற்கு முன்பு வரை தி.மு.க, ஆ.தி.மு.க ஆண்ட காலங்களில் மக்களுக்கு அதிருப்தி ஏற்ப்பட்டு தமிழகத்தை தலைநிமிர்த்த எம்.ஜி.ஆரைப்போல ஒரு தலைவர் தமிழகத்துக்கு தேவை என்று அடையாளப்பட்டவர் தான் ரஜினி

    தனது ஸ்டையில் மூலம் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை, ஏழைகள் முதல் பணக்காரர்கள் வரை தன்வசப்படுத்தி இந்தியாவிலேயே அதிக ரசிகர்களையும் அதிக சம்பளம் வாங்கும் நடிகராகவும் வலம் வருபவர் ரஜினி.

    ரஜினி தமிழகத்தை ஆண்டால் ஏழை எளிய மக்கள் பயன் அடையக்கூடிய வகையில் எம்.ஜி.ஆரைப்போல நல்ல பல திட்டங்களை அறிமுகப்படுத்தி ஏழை மக்களின் வாழ்வு வளம் பெற ரஜினி எதையாவது செய்வார் என்று கனவு கண்டனர் அவரது ரசிகர்கள்.

    ஆனால் ரஜினியோ அரசியல் சாக்கடையில் விழுந்தால் தான் ஒருவன் மட்டும் நல்லவனாக இருந்தாலும் தன் கட்சியிலுள்ளவர்கள் லஞ்சம், ஊழல், அதிகார துஸ்பிரயோகம் என்று சிக்கிகொள்ளும்போது தனது பெயரும் அடிபட்டு இதுவரை ரசிகர்களிடமிருந்த அன்பும் ஆதரவும் பறிபோய்விடுமோ என்ற தயக்கத்தில் கட்சி என்ற விசயத்தில் மௌனமே பதிலாக இருந்தது


    தமிழகத்தில் ரஜினிக்கு தலைவராகும் தகுதி உண்டா என்று அப்பொழுது ஒரு ரகசிய சர்வே நடத்தப்பட்டது. அந்த சர்வேயில் ரஜினி ஒரு சிறந்த நடிகர் அவர் அரசியலில் விழுந்து தனது செல்வாக்கை இழக்கப் போகிறார் அவருக்கு அரசியல்வாதிகளைப்போல பொய், பித்தலாட்டம், வாக்குறுதி தந்து ஏமாற்றுவது, அந்தர் பல்டி அடிப்பது இது எதுவுமே ரஜினிக்கு தெரியாது, அவர் ஒரு சொக்கத்தங்கம் அவருக்கு அரசியலில் தலைவராகும் தகுதி இல்லை என்றே அடித்து கூறியது

    ரஜினியும் இதுதான் உண்மை என்று நம்பி அரசியல் ஆருடம் கணிக்கும் போதெல்லாம் இமயமலைக்குச் சென்று அமைதி காண்பார். காலம் உருண்டோடினாலும் தமிழக ரசிகர்கள் அவரை விடுவதாக இல்லை.எப்படியாவது அரசியல் சாக்கடையில் அவரை தள்ளி விடவே காத்திருந்தனர்.
    அந்த எண்ணம் தற்பொழுது ரஜினிக்கு கை கூடி வந்திருக்கிறது.

    தற்பொழுது எடுத்த ரகசிய சர்வேயில் ரஜினிக்கு தலைவராகும் தகுதி உண்டா என்ற கேள்விக்கு நூற்றுக்கு எண்பது சதவிகிதம் பேர் ரஜினிக்கு தலைவர் ஆகும் முழுத் தகுதி உண்டு என்று அடித்துச் சொல்கிறார்கள்

    அரசியல் நடத்த அடிக்கடி பொய் மூட்டைகளை அள்ளி விட வேண்டும், முரண்பாடுகளின் மூட்டையாக வாய்க்கு வந்தபடி எதையாவது உளற வேண்டும், ஒரு தடவை சொன்ன விசயத்தை திருப்பி கேட்டால் நான் அந்த அர்த்தத்துல சொல்லல என்று அந்தர் பல்டி அடிக்கவேண்டும்.

    வாக்குறுதிகளை அள்ளி வீச வேண்டும் அதை நிறைவேற்ற தருணம் வரும்பொழுது நான் எப்போ சொன்னேன் என்று திருப்பி கேட்க வேண்டும். தெளிவற்ற பேச்சும் கொள்கையில் உறுதியும் இல்லாமலிருக்க வேன்டும். இதுதான் ஒரு அரசியல்வாதியின் இன்றைய முகம்.

    இவை அனைத்தும் தற்பொழுது ரஜினியிடம் அமைந்துள்ளது. எனவே அரசியலில் தலைவராகும் தகுதி ரஜினிக்கு கட்டாயம் உண்டு. இதற்கு சமீபத்தில் அவர் அடித்த அந்தர் பல்டிகள் உதாரணமாக உள்ளது.

    ஓக்கேனக்கல் பிரச்சனையில் ரஜினி பேசிய வார்த்தையால் தமிழர்கள் ஒவ்வொருவரின் இதயங்களும் குளிர்ந்தது ஆனால் குசேலன் திரைப்படத்தை கர்நாடகாவில் திரையிட வேண்டி அவர் பேசிய வார்த்தைகளுக்காக பகிரங்கமாக மன்னிப்பு கேட்டு நீண்ட ஒரு கடிதத்தை கர்நாடகாவுக்கு அனுப்பி வைத்தார் இப்படி அந்தர் பல்டி அடித்ததால் அரசியலுக்கு தகுதியானவர் என்ற பட்டம் அவரை போய் சேர்கிறது

    நான் எப்ப வருவேன் எப்பிடி வருவேன்னு யாருக்கும் தெரியாது ஆனா வரவேண்டிய நேரத்துல கரெக்டா வருவேன் என்று ஒரு திரைபடத்தில் வசனம் பேசினார். ரஜினி ரசிகர்களும் அதை உண்மை யென்று நம்பி இத்தனை வருடம் காத்திருந்தனர்.

    சமீபத்திய குசேலன் திரைப்படத்தில் அது யாரோ ஒரு ரைட்டர் எழுதிய வசனம் அதை நான் பேசி இருக்கேன் அதை உண்மையின்னு நீங்க எடுத்துகிட்டா நான் என்ன செய்யறது என்ற பதில் மூலம் ஒரு உண்மையான அரசியல்வாதியின் முகம் அவரிடம் பளிச்சிட்டது. இப்படி முன்னுக்கு பின் முரணாக பேசியதால் தலைவராகும் தகுதி அவரிடம் ஒட்டிக்கொண்டுவிட்டது

    அரசியல் கட்சி தலைவர்கள் தவறாக எதையாவது பேசினால் தயங்காமல் மன்னிப்பு கேட்கவேண்டும் மக்கள் குளிர்ந்து போவார்கள் அந்த வகையில் ஒகேனக்கல் பிரச்சனையில் கர்நாடகத்திடமும், குசேலன் படத்தில் பேசிய வசனத்திற்க்காக ரசிகர்களிடமும் மன்னிப்பு கேட்டிருக்கிறார் ரஜினி. இப்படி எதற்க்கெடுத்தாலும் மன்னிப்பு கேட்க தயாராகிறார் என்றால் அவர் தலைவர் தானே.

    முன்பு ஜெயலலிதா மீதான் கோபத்தில் மீண்டும் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தை ஆண்டவனால் கூட காப்பாத்த முடியாது என்று அவர் விட்ட அறிக்கை ஒரு மாபெரும் மாற்றத்தை தமிழகத்தில் ஏற்படுத்தியது

    பின்பு அதே ஜெயலலிதா பங்கேற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு ஜெயலலிதாவை பாராட்டி பேசினார். இப்படி திட்டுவதும் பிறகு பாராட்டுவதும் அரசியல்வாதிகளுக்கு கை வந்த கலை. அந்த கலை தற்பொழுது ரஜினிக்கு நன்றாகவே ஒர்க் அவுட் ஆகிறது.

    காவிரி நதி நீர் பிரச்சனை வரும்போதெல்லாம் இதற்கு ஒரே தீர்வு தேசிய நதி நீர் திட்டம் தான் என்றும் அதற்கு நான் ஐந்து லட்சம் தரத் தயார் என்று அறிக்கை விட்டதோடு சரி, அதற்கென்று ஒரு பைசா செலவளித்துள்ளாரா என்றால் அது தான் இல்லை.

    ஆக ரஜினிக்கு அரசியல் தலைவர் ஆகும் தகுதி நிச்சயம் உண்டு.தமிழக மக்கள்தான் பாவம், ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளாகிப்போன பிறகு ராமன் ஆண்டாலென்ன ராவணன் ஆண்டாலென்ன, ஏழைகள் பாடு எப்பொழுதும் திண்டாட்டம் தான்.

    குமரியிலிருந்து வெளிவரும் குமரிகடல் மாதம் இருமுறை இதழில் வெளிவந்தது

  2. #2
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    06 Apr 2007
    Posts
    129
    Post Thanks / Like
    iCash Credits
    10,375
    Downloads
    21
    Uploads
    0
    ரஜினிக்கு வேண்டுமானால் தலைவராகும் தகுதி இப்பொழுது வந்து இருக்கலாம்,

    ஆனால் தமிழக மக்கள் அந்த அளவுக்கு ஒன்றும் புத்தி கெட்டு போய் விட மாட்டார்கள் என்று நம்புகிறேன்.

    ஏனெனில் குசேலன் படத்துக்கு மக்கள் கொடுத்த ஆதரவே அதற்கு சாட்சி.

  3. #3
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    Quote Originally Posted by sakthim View Post
    ரஜினிக்கு வேண்டுமானால் தலைவராகும் தகுதி இப்பொழுது வந்து இருக்கலாம்,
    ஆனால் தமிழக மக்கள் அந்த அளவுக்கு ஒன்றும் புத்தி கெட்டு போய் விட மாட்டார்கள் என்று நம்புகிறேன்.
    ஏனெனில் குசேலன் படத்துக்கு மக்கள் கொடுத்த ஆதரவே அதற்கு சாட்சி.
    வாங்க சக்தி..
    சில கணினித் திரிகளிலும் ரஜினி தொடர்பான திரிகளிலும் பதிவுகள் தரும் நீங்கள் உறுப்பினர் அறிமுகப்பகுதியில் உங்களை அறிமுகஞ் செய்து கொள்ளலாமே..

  4. #4
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    06 Apr 2007
    Posts
    129
    Post Thanks / Like
    iCash Credits
    10,375
    Downloads
    21
    Uploads
    0
    Quote Originally Posted by அமரன் View Post
    வாங்க சக்தி..
    சில கணினித் திரிகளிலும் ரஜினி தொடர்பான திரிகளிலும் பதிவுகள் தரும் நீங்கள் உறுப்பினர் அறிமுகப்பகுதியில் உங்களை அறிமுகஞ் செய்து கொள்ளலாமே..
    கண்டிப்பாக அமரன்,நேரம் இன்மை காரணமாக பதிக்க இயல் வில்லை,விரைவில் பதிக்கிறேன்,நன்றி.

  5. #5
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சுகந்தப்ரீதன்'s Avatar
    Join Date
    23 Jun 2007
    Posts
    3,869
    Post Thanks / Like
    iCash Credits
    237,295
    Downloads
    69
    Uploads
    1
    ஆரியக்கூத்து ஆடினாலும் காரியத்துல கண்ணா இருக்கிறவங்க அப்பு இவுங்களெல்லாம்...!!

    சட்டி சுட்டதடா.. கைவிட்டதடா...
    புத்தி கெட்டதடா.. நெஞ்சை சுட்டதடா.. ன்னு
    தமிழக மக்கள் தற்போது பாடிக்கொண்டிருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன..!!
    ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
    வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
    உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
    பழுதுண்டு வேறோர் பணிக்கு.
    -நல்வழி

  6. #6
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    03 Feb 2007
    Location
    அப்பிடீன்னா?
    Posts
    4,596
    Post Thanks / Like
    iCash Credits
    60,222
    Downloads
    84
    Uploads
    0
    எந்த இதழில் எப்படி வெளிவந்தால் என்ன?
    இந்தியாவில் ஜனநாயக ஆட்சிதானே நடக்கிறது.
    உங்களனைவரின் ஓட்டுத்தானே தீர்மானிக்கப்போகிறது யார் தலைவன் என்பதை. அது ரஜினியாக இருந்தால் என்ன? வேறு யாராக இருந்தால்த்தான் என்ன?
    தேர்ந்தெடுக்கப்போவது, நீங்கள் எல்லோருமாக சேர்ந்துதானே....
    அப்படி ரஜினியும் ஓர் தெரிவாக இருக்கும் பட்சத்தில் உங்கள் சரியான தேர்வை தெரியுங்கள்.
    வீணாக அந்த செய்தியில் வந்தது, இந்தச் செய்தியில் வந்தது என்று கற்பனைக் கட்டுரைகளை பரப்பி ரஜினி இரசிகர்கள் மத்தியில், உங்களுக்கு நீங்களும் மன்றத்திற்கும் ஏன் அவப்பெயரை தேடுகிறீர்கள்.

  7. #7
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஓவியா's Avatar
    Join Date
    27 Apr 2006
    Location
    LONDON
    Posts
    8,998
    Post Thanks / Like
    iCash Credits
    41,530
    Downloads
    5
    Uploads
    0
    Quote Originally Posted by விராடன் View Post
    எந்த இதழில் எப்படி வெளிவந்தால் என்ன?
    இந்தியாவில் ஜனநாயக ஆட்சிதானே நடக்கிறது.
    உங்களனைவரின் ஓட்டுத்தானே தீர்மானிக்கப்போகிறது யார் தலைவன் என்பதை. அது ரஜினியாக இருந்தால் என்ன? வேறு யாராக இருந்தால்த்தான் என்ன?
    தேர்ந்தெடுக்கப்போவது, நீங்கள் எல்லோருமாக சேர்ந்துதானே....
    அப்படி ரஜினியும் ஓர் தெரிவாக இருக்கும் பட்சத்தில் உங்கள் சரியான தேர்வை தெரியுங்கள்.


    வீணாக அந்த செய்தியில் வந்தது, இந்தச் செய்தியில் வந்தது என்று கற்பனைக் கட்டுரைகளை பரப்பி ரஜினி இரசிகர்கள் மத்தியில், உங்களுக்கு நீங்களும் மன்றத்திற்கும் ஏன் அவப்பெயரை தேடுகிறீர்கள்.

    விராடா,
    நேற்று ஒரு அழகிய மாலைப்பொழுதில் இந்த விசயத்திற்க்காக 2நண்பர்களுக்குள் வாக்குவாதம் முற்றி பின் கண்ணீரில் முடிந்தது!!!!

    - ஃவெரி டேஞ்சரஸ் டோஃபிக்.
    தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
    வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்

  8. #8
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் lolluvathiyar's Avatar
    Join Date
    27 Feb 2007
    Location
    Coimbatore
    Posts
    3,823
    Post Thanks / Like
    iCash Credits
    99,361
    Downloads
    10
    Uploads
    0
    ஜாதிவெறியை மொழிவெறியை மதவெறியை தூன்டி விட்டு குளிர்காயும் பல தலைவர்கள் இருக்கும் போது, மக்களால் தேர்ந்தெடுக்கபடாமலெ பலர் மந்திரி ஆகும் போது, கிரிமினல் வழக்கில் சிக்கியவர்கள் கூட தலைவர் ஆகும் போது தீவரவாத இயங்கங்களுக்கு ஆதரவு தெரிவிப்பவர்களும் தலைவராகும் போது தனது நடிப்பின் மூலம் பல ரசிகர்களை கவர்ந்த இதுவரை நாட்டுக்கு ஒரு கெடுதலும் செய்யாத ரஜனிக்கு தலைவராகும் தகுதி நிச்சயம் உன்டு

    Quote Originally Posted by விராடன் View Post
    இந்தியாவில் ஜனநாயக ஆட்சிதானே நடக்கிறது. உங்களனைவரின் ஓட்டுத்தானே தீர்மானிக்கப்போகிறது யார் தலைவன் என்பதை.
    இந்தியாவின் ஜன நாயக தற்போதைய நிலைபடி பெரும்பான்மை மக்கள் விருப்பாதவர்கள் கூட தலைவர் (எம்பி, எம்எல்ஏ ஆக முடியும்)

    ஏகா : ஒரு தொகுதியில் 5 பேர் நிற்கிறார்கள். அதில் 3 பேர் 20 சதவீதம் வாக்கு பெருகிறார்கள். 1 நபர் 19 சதவீதம் வாக்கு பெறுகிறார். ஒரு நபர் 21 சதவீதம் வாக்கு பெறுகிறார். இப்ப 21 சதவீதம் பெற்றவர் ஜெயித்தவர். ரிவர்சாக யோசித்து பார்க்கும் போது 80 சதவீத மக்கள் இவரை வேண்டாம் என்று கருதி அடுத்தவர்களுக்கு வாக்களித்திருந்தாலும் இவர் தலைவர் ஆக முடியும்.

    அடுத்தது மக்களால் தேர்ந்தெடுக்கபடாமலே அன்டர்ஸ்டான்டிங் மூலம் ராஜியசபா உருப்பினர் ஆகாமுடியும். மக்களுக்கு முற்றிலும் அறிமுகமில்லாத இவர் மந்திரிகூட ஆக முடியும்.

    அடுத்தது மக்களால் விரும்பாதவர்கள் கூட அரசு அமைக்க முடியும் பிரதமர் முதல்வர் கூட ஆக முடியும். ஓரளவுக்கு மக்களால் தேர்ந்தெடுக்க பட்ட கட்சியை ஆள விடாமல் செய்யவும் முடியும். அது தேர்தலுக்கு பிறகு கூட்டனி ஆட்சி மற்றும் கட்சி தாவல் மூலம் செயல்படுத்த முடியும்.

    சட்டபடி ஆட்சி அமைக்க 50 சதவீத சீட்டு தான் தேவை (நாட்டு மக்கள் வாக்கு சதவீதம் அல்ல)
    ஒரே ஒரு கட்சி மட்டும் 40 சதவீதம் தான் வாங்கியது மீதி கட்சிகள் அனைத்தும் 20 30 சதவீதம் தான் வாங்கியது. இந்த இடத்தில் பெரும்பான்மை இல்லாவிட்டாலும் ஓரளவுக்கு மக்கள் ஒரு குறிப்பிட்ட கட்சியை தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள் என்று வைத்து கொள்வோம்.(ஆனால் தொங்கு பார்லிமென்ட்தான்)

    இங்கு ஒரு சித்து வேலை செய்ய முடியும் அதாவது வெறும் 10 சதவீதம் சீட்டு வாங்கிய ஐந்து கட்சிகள் ஒன்று சேர்ந்தால் ஆட்சி அமைக்க முடியும். இதுதான் தற்பொதைய நிலை. (90 சதவீத மக்களையும் முட்டாளாக்க முடியும்)

    நான் எந்த கட்சியையும் ஆட்சியையும் குறிப்பிடவில்லை பொதுவான கருத்தை தான் குறிப்பிட்டேன். மக்கள் தீர்மானிக்காதவர்கள் கூட தலைவனாகி ஆட்சி அமைக்க முடியும் என்பதற்க்கு எடுத்து காட்டினேன். இ ந்த விவாதத்துக்கு கட்சி சாயம் பூச வேன்டாம் என்று கேட்டு கொள்கிறேன்.
    லொள்ளுவாத்தியார் ஆனால் நல்லவாத்தியார்
    என் படைப்புகள்
    என் கவிதைகள்

  9. #9
    இனியவர் பண்பட்டவர் உதயசூரியன்'s Avatar
    Join Date
    20 Feb 2007
    Posts
    786
    Post Thanks / Like
    iCash Credits
    13,558
    Downloads
    1
    Uploads
    0
    வாத்தியாரே இந்த கணக்கு கூட தெரியாதா என்ன....?? இது இங்கு மட்டும் அல்ல உலக்மெங்கும் இருக்கும் அரசியல் கணக்கு தானே....???(ஒரு சில இடங்கள் தவிர...)



    Quote Originally Posted by lolluvathiyar View Post
    தனது நடிப்பின் மூலம் பல ரசிகர்களை கவர்ந்த இதுவரை நாட்டுக்கு ஒரு கெடுதலும் செய்யாத ரஜனிக்கு தலைவராகும் தகுதி நிச்சயம் உன்டு
    இப்படி ஒரு சுத்தமான, சத்தியமான கருத்து இருக்கும் போது..!!!!!!!??
    ஒரு நடிகர் ரசிகர்களை உருவாக்கியதையும்.. அதுவும் இதுவரை கெடுதல்(?????????) எதையும் செய்யாததாலும்.. இனி வரும் காலங்களில் கெடுதல் செய்யவும்.. இதுவரை.. கொஞ்சமாவது நல்லது செய்தவர்களை தூர எறியலாம்..

    இதே கருத்து ரஜினிக்கு மற்றும் சொந்தமில்லை..
    ஒரு கெடுதலும் செய்யாத(????)
    கார்த்திக்
    விஜயகாந்த்
    சரத்
    டி.ஆர்
    போன்றோரும் அதற்கு தானே வந்துள்ளனர்...

    ஒரு கெடுதலும் செய்யாத(????)
    குஷ்பு
    சுகாசினி
    ஷகீலா(இவருக்கு ரஜினியை விட ரசிகர்கள் அதிகம் என்பது தெரியுமா??)

    விஜய்
    சிம்பு
    அஜித்
    பிரபு
    தனுஷ்
    விஷால்
    கமல்
    விக்ரம்
    சூர்யா
    பிரசாந்த்
    னமிதா
    அசின்
    சிம்ரன்
    னயன்
    திரிஷா
    சினேகா....

    இவர்களை போன்று..
    மானாட மயிலாட நடத்தி ரசிகர்களை பெற்று எந்த கெடுதலும்.. செய்யாத.. கலா மாஸ்டர்
    ரம்பா
    இவர்களுக்கும் தலைவராகும் தகுதி உண்டு அல்லவா..
    (என்ன கொடுமைங்க??)

    ஆமாம் என்றால்.. தமிழர்களின் பரம்பரியத்தை கிண்டல் செய்யும் வட இந்தியர்களும் மற்றவர்களும்.. சொல்லுவதில் தப்பே இல்லை..

    அவர்கள் முகத்தில் முழிக்க வெட்க பட வைக்க..
    மேலுள்ளவர்கள் மட்டுமே.. மக்களின் தலைவர்கள்.. என்று தெரிவு செய்யுங்கள்..

    ம்ம்ம்
    இதில் அந்த காலத்து ஆளுங்களை மட்டும் குறை சொன்னர் சிலர்.. அப்போ எல்லாம்.. சினிமாவை நிஜம் என்று அதில் இருந்து மக்கள் பிரதினிதியை தேர்ந்தெடுத்தனர்.. தற்போது படித்தவர் செய்யும் தவறுகளுக்கு.. அந்த காலமே தேவலை..

    வாழ்த்துக்கள்
    வாழ்க தமிழ்
    சொன்னதை செய்வோம்! செய்வதை சொல்வோம்!!
    மனிதனாக இருப்போம்...!! மதத்தை புறந்தள்ளுவோம்
    !!!


    நல்ல சினிமாவை பார்க்கணுமா...???

  10. #10
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் lolluvathiyar's Avatar
    Join Date
    27 Feb 2007
    Location
    Coimbatore
    Posts
    3,823
    Post Thanks / Like
    iCash Credits
    99,361
    Downloads
    10
    Uploads
    0
    Quote Originally Posted by உதயசூரியன் View Post
    அதுவும் இதுவரை கெடுதல்(?????????) எதையும் செய்யாததாலும்.. இனி வரும் காலங்களில் கெடுதல் செய்யவும்.. இதுவரை.. கொஞ்சமாவது நல்லது செய்தவர்களை தூர எறியலாம்..
    அரசியலுக்கு வ ந்தவர்கள் எல்லாம் கெடுதல் செய்யதான் என்று ஒத்துகொண்டீர்கள்.



    Quote Originally Posted by உதயசூரியன் View Post
    ஒரு கெடுதலும் செய்யாத(????)
    ஷகீலா(இவருக்கு ரஜினியை விட ரசிகர்கள் அதிகம் என்பது தெரியுமா??)
    இவர்களுக்கும் தலைவராகும் தகுதி உண்டு அல்லவா..
    தாரளமாக உன்டு இன்றைய தலைவர்களை ஒப்பிடும் போது ஷகீலா எவ்வளவோ பரவாயில்லை என்றே கருதுகிறேன்.

    Quote Originally Posted by உதயசூரியன் View Post
    ஆமாம் என்றால்.. தமிழர்களின் பரம்பரியத்தை கிண்டல் செய்யும் வட இந்தியர்களும் மற்றவர்களும்.. சொல்லுவதில் தப்பே இல்லை..
    அதென்ன தமிழர் பாரம்பரியம் இந்தியா முழுவது குறிப்பாக தென்இந்தியா அரசியலில் சினமா ஆதிக்கம் காலம் காலமாக இருந்து வருகிறது. அவர்கள் கின்டல் செய்கிறார்களா என்பதற்காக நம் மக்கள் மாறுவார்கள் என்று நினைகிறீர்களா?
    லொள்ளுவாத்தியார் ஆனால் நல்லவாத்தியார்
    என் படைப்புகள்
    என் கவிதைகள்

  11. #11
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மதுரை மைந்தன்'s Avatar
    Join Date
    17 Jun 2008
    Location
    Melbourne, Australia
    Posts
    2,291
    Post Thanks / Like
    iCash Credits
    51,788
    Downloads
    1
    Uploads
    0
    தலைவர் ஒரு வருக்கு திடமாக முடிவு எடுக்கும் திறன் வேண்டும். சுயமாக சிந்தித்து நல்லதோ கெட்டதோ தனது தீர்மானங்களில் நிலையாக இருக்க வேண்டும். (கலைஞர் கருணாநிதி போல).
    தலைவருக்கு ஒரு முக வசீகரம் வேண்டும். (எம்ஜி.ஆர் போல). தலைவருக்கு உலக நடப்புகள் நன்கு அறிந்திருக்க வேண்டும். தலைவர் உணர்ச்சி வசப்படக்கூடாது. எதிராளிகளை நேர் கொண்டு போராட வேண்டும். இமய மலைக்கு ஓடி விடக் கூடாது.

    ரஜனி அவர்களுக்கு மேற் சொன்ன எந்த லட்சணமும் கிடையாது தலைவராவதற்கு.

    போர் செய்ய புது ஆயுதமும்
    ஆள் கொல்ல தினமோர் சதியும்
    நின்றே கொல்லும் தெய்வங்களும்
    நின்றே கொல்லும் மத பூசல்களும்
    நன்றே மாறிடும் நிலை வருமா?



    விஞ்ஞானி-தொடர்கதை (பாகம் 3) (இணைப்பு)
    http://www.tamilmantram.com/vb/showthread.php?t=16872

  12. #12
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
    Join Date
    28 Apr 2003
    Location
    அமெரிக்கா
    Posts
    16,348
    Post Thanks / Like
    iCash Credits
    39,997
    Downloads
    15
    Uploads
    4
    ரஜினி ஒரு நல்ல நடிகர்...

    தலைவரென்று சொல்ல பல தகுதிகள் வேண்டும்.. அது அவரிடம் இருக்கிறதா என்பதை சரியாக யாராலும் கணிக்க இயலாது...

    மேலும் 1996ல் அவர் அரசியலில் இறங்கியிருந்தால்.... சில மாற்றங்களை ஏற்படுத்தியிருப்பார்.

    இனி அரசியலில் அவர் ஈடுபடப்போவதில்லை....
    --------------
    இங்கு எந்த வாதமாக இருந்தாலும்... மென்மையாக.. யாரையும் தாக்காமல் பதிவோம்.

Page 1 of 3 1 2 3 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •