Page 1 of 3 1 2 3 LastLast
Results 1 to 12 of 30

Thread: பெண்வண்டுகள்- லேடி பீட்டில்ஸ்

                  
   
   
  1. #1
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் mukilan's Avatar
    Join Date
    27 Jul 2005
    Location
    கனடா
    Posts
    1,999
    Post Thanks / Like
    iCash Credits
    32,969
    Downloads
    53
    Uploads
    5

    பெண்வண்டுகள்- லேடி பீட்டில்ஸ்

    பெண் வண்டுகள்- லேடி பேர்ட் பீட்டில்ஸ்

    சில வாரங்களுக்கு முன் தென்றல் நம் மன்றத்திற்காகச் சுவரொட்டி வரைந்து இ-காசு பெற்றார் நினைவிருக்கிறது அல்லவா! இ-காசு கொடுத்தவர்கள் மறந்திருக்க மாட்டீர்கள். இ-காசு கொடுக்காத புத்திசாலிகள் சீக்கிரம் ஏமாறக்கடவது.

    சரி அது அல்ல விசயம்! அப்பொழுது அதில் சில வண்டுகளையும் வரைந்திருந்தார். நான் அவற்றை மன்றத்தின் நிர்வாகக் குழுவோடு ஒப்பிட்டிருந்தேன். அவ்வண்டுகள் பயிர்களை அழிக்கும் பூச்சிகளை உண்டு பயிர்களைக் காக்கின்றன என்று. பென்ஸீம் சில விவரங்கள் கேட்டிருந்தார். அத்தகைய வண்டுகள் பற்றியும் பொதுவாக பூச்சிகள் பற்றியும் இப்பகுதியில் காண்போமா?

    பொதுவாக தாவர வளர்ச்சிக்கு தடையாக உயிருள்ள(Biotic) மற்றும் உயிரற்ற (abiotic) காரணிகள் உள்ளன. உயிரற்ற வற்றில், தட்பவெப்பம், ஈரப்பதம், வறட்சி, களர் உவர் நிலத் தன்மை, மண்ணின் அமில-காரத் தன்மை போன்றன அடங்கும்.

    உயிருள்ள தடைக்காரணிகளுல் பூச்சிகள் (Insect Pests), பூஞ்சை, பாக்டீரியா போன்ற நோய்க்கிருமிகள் (Pathogens), எலி, குருவி போன்ற விலங்குகள், மைட்ஸ் (Mites) எனப்படும் மற்ற உயிரினங்கள் அடங்கும். இத்தடைக்காரணிகள் அனைத்துமே அந்தந்த சூழ்நிலைக்குத்தக்க காணப்படும். கனடா போன்ற குளிர்நாடுகளில் பூச்சிகளால் விவசாயத்திற்கு ஏற்படும் நஷ்டம், இந்தியா போன்ற வெதுப்புநாடுகளை விடக் குறைவுதான். ஆனால் கனடாவில் நோய்க்கிருமிகளின் தாக்கம் இந்தியாவை விட அதிகம்.

    சரி விஷயத்திற்கு வருவோம். பூச்சிகள் வெவ்வேறு பருவ நிலைகளில் வளர்ச்சி அடைவதால் அவற்றால் ஒவ்வொரு பருவத்திலும் ஒரு உணவு வகையை உண்ண முடியும். சிறுவயதில் படித்திருப்போமே, முட்டை- புழு- கூட்டுப்புழு- வளர்ச்சிபெற்ற பூச்சி என பூச்சியினங்கள் பல வளர்ச்சி நிலைகளை அடைகின்றன என்று. இதில் புழுப்பருவம்தான் தாவரங்களை அழிக்கும் பருவம். அழகாக பறக்கும் வண்ணத்துப் பூச்சி, தான் புழுவாக இருக்கும் பொழுது தாவரங்களை அழித்துத்தான் வளர்கிறது. பயிர்களுக்கு அதிகம் சேதம் விளைவிக்கும் Order( தமிழில் பெருங்குடும்பம் எனச் சொல்லலாமா?) வண்ணத்துப் பூச்சியின் Lepidoptera (லெப்பிடாப்டீரா) தான்.

    பூச்சியினங்களின் வகைப்பாட்டியல் (Taxonomy) சுவாரசியமாக இருக்கும். பூச்சியினங்களின் Orderகளின் பெயர் அவற்றின் இறக்கை அமைப்பை வைத்தே இருக்கும். “ptera” – என்றால் கிரேக்க மொழியில் இறகு என்று பொருள். “Lepido” என்றால் “செதில்” என்று பொருள். வண்ணத்துப் பூச்சியின் இறகுகளை உற்றுக் கவனித்தால் அந்த வண்ணப் பூச்சுகள் எல்லாம் செதில்கள் என்பது புரியும்.அதே போல நமது வீட்டில் இருக்கும் ஈ, இரண்டு இறகுகள் மட்டும் உள்ளதால் Diptera (Di- இரண்டு). தேனீக்கள் Hymenoptera எனப்படும் வேறு order (Hymen- தோல்). மே ஃபிளைஸ் –Mayflies, Ephemroptera எனப்படும் order(Ephemeros- குறுகிய ஆயுள்; Ephemeralன் எதிர்ப்பதம் Eternal(நீண்ட).

    நமது கதாநாயகி பெண்வண்டு Coleoptera எனப்படும் பெருங்குடும்பத்தைச் சார்ந்தவள். Coleo என்றால் மூடப்பட்ட என்று பொருள். நன்கு கவனித்துப் பாருங்கள் பெண்வண்டுகளின் கடினமான இறகுகளின் கீழ் மெல்லிய இறக்கைகளும் காணப்படும். இந்தப் பெருங்குடும்பத்தில் உள்ள சிற்றினங்களின் (Species) எண்ணிக்கை தெரியுமா? அதிகமில்லை 350,000 தான். இன்னமும் புதிது புதிதாகக் கண்டுபிடித்துக் கொண்டே இருக்கிறார்கள். இந்தப் பெருங்குடும்பத்தைச் சேர்ந்த பூச்சிகளை பீட்டில்(beetles) என்றுதான் அழைக்க வேண்டும். Bug –பக் எனப்படுபவை, Hemiptera எனப்படும் வேறு பெருங்குடும்பத்தைச் சார்ந்தவை.

    இந்தப் பெருங்குடும்பத்தில் நல்லவர்களும் உண்டு தீயவர்களும் உண்டு. ஆனால் நமக்கு கதாநாயகி ஆன பெண்வண்டு நல்லவள். பெண்வண்டுகள் புழுப்பருவத்தில் பயிர்களின் சாறு உறிஞ்சும் அசுவினிப் பூச்சிகளை அப்படியே சாப்பிடும். பெண்வண்டுகள் அனைத்துமே மாமிசப் பட்சினிகள்தான். அதனால்தான் அவை தாவரத்தை உண்பதில்லை. அதிலும் யாரோ சிலர் காதல் மணம் புரிந்து கொண்ட அசைவாள் வேறு ஆகிவிட்டனர் (Colarodo potato beetle, Mexican bean beetle).

    பெண்வண்டுகள் நிறைய முட்டையிடும். பெண்வண்டுகளின் முட்டைகள் நேர்த்தியாக இடப்பட்டு சூரியஒளியினால் பொறிக்கப் படும்.



    குஞ்சுகள் அசுவினிப் பூச்சிகள், மாவுப்பூச்சிகள், தத்துப்பூச்சிகள், போன்ற சாறுண்ணிகளை மட்டுமே சாப்பிடுவேன் என அடம்பிடிக்கும்.


    அசுவினிப் பூச்சியை உண்ணும் பெண்வண்டின் புழு




    பெண்வண்டு புழுவிடம் மாட்டிக் கொண்ட ஈ.


    பின்னர் கூட்டுப் புழு பருவத்தில் மோன நிலையெய்தி, முழு வளர்ச்சி பெற்ற பெண்வண்டாக வெளிவந்து மறுபடியும் சில பல பூச்சிகளை உள்ளே தள்ளிவிட்டு தன் பரம்பரையை நிலை நாட்ட முட்டைகளை இட்டு மடிந்து விடும்.


    கூட்டுப்புழுவில் இருந்து வெளிவரும் வளர்ச்சி பெற்ற பெண்வண்டு




    வளர்ந்த நிலையில் உள்ள பெண்வண்டு அசுவினிப் பூச்சியை அப்படியே சாப்பிடும் காட்சி.

    ஆனால் பூச்சிக்கொல்லி மருந்து தெளிப்பினால், குறிப்பிட்ட அளவிற்கு மேல் போகும்பொழுது, நன்மை தரக்கூடிய பெண்வண்டுகளும் அழிந்து போகின்றன. இது நேரடி விளைவு என்றால் மறைமுக விளைவானது பெண்வண்டுகளின் உணவுப் பற்றாக்குறையால் வருவது. பெண்வண்டுகளின் உணவான மற்ற பூச்சிகள், பூச்சிக் கொல்லியால் அழிந்து போவதால் பெண்வண்டுகளுக்கு உணவு கிடைப்பதில்லை. பயிர்களைப் பூஞ்சைகள் அழிப்பது போல இந்தப் பெண்வண்டுகளையும் பூஞ்சைகள் தாக்குகின்றன. இதனால் தான் நன்மைதரக்கூடிய பூச்சிகள் எண்ணிக்கை குறைவாகக் காணப்படுகின்றது.

    சில சுவாரஸ்யமான தகவல்கள்:

    பூச்சிகளைப் பற்றிப் படிப்பதற்கு Entomology என்று பெயர். Entomo- என்றால் வெட்டப்பட்ட உடலமைப்பு கொண்ட (பூச்சிகள் அவ்வாறு இருப்பதால்)- Logy என்றால் கற்றல்.

    பூச்சிகள் Hexapoda (Hexa- ஆறு; Poda- கால்கள்) என்ற Phylum- ஃபைலத்தைச் சார்ந்தன. ஆறுகால்கள் கொண்டால் மட்டுமே அது பூச்சி. அதனால்தான் சிலந்திக்கு எட்டுக்கால் பூச்சி என்ற பெயர். சிலந்தி பூச்சியினத்தைச் சார்ந்தது அல்ல.

    நன்மை செய்யும் சில பெண்வண்டு இனங்கள்- ஆசியாவில் இருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்பட்டன.

    1999ம் ஆண்டு NASA வால் விண்வெளிக்கு 4 பெண்வண்டுகள் எடுத்துச் செல்லப்பட்டன. அவை புவியீர்ப்பு விசையில்லாத நிலையிலும் அசுவினிப்பூச்சிகளை அழிக்கின்றனவா என்று சோதனையிட.

    பெண்வண்டுகளும்- பொன்வண்டுகளும் (jewelbeetle) ஒன்றல்ல.

    பூச்சிகளின் உடம்பில் இரத்தச் சுற்று மண்டலம் எனத் தனியாக இல்லை. பூச்சிகளின் இரத்தத்தில் சிவப்பு நிறக்காரணியான ஹீமோகுளோபின் (Haemoglobin) இல்லை. ஆனால் பூச்சிகளுக்கும் இரத்தம் உண்டு.

    Cicadas எனப்படும் சில்வண்டுகளில் ஆண் வண்டுகள் மட்டுமே சத்தமிடும். உலகிலேயே அமைதியான எதிர்த்துப் பேசாத மனைவியரைக் கொண்ட ஒரே விலங்கு சில்வண்டாகத்தான் இருக்க முடியும்.

    சிறுவயதில் பிடித்து விளையாடுவோமே தட்டான் பூச்சிகள் அவை நீரில்தான் முட்டையிடும். அந்தப் பூச்சிகளின் புழுக்கள் நீரில் உள்ள கொசுக்களின் புழுக்களை அழித்து விடும்.

    உங்களைக் கடிக்கும் கொசு பெண் கொசுதான். ஆண் கொசுவால், பாவம் கடிக்க முடியாது.
    Last edited by mukilan; 24-08-2008 at 01:42 AM.
    உன் வீட்டுக்கண்ணாடி ஆனாலும் கூட முன் வந்து நின்றால்தான் முகம் காட்டும் இங்கே!

  2. #2
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    உவ்வே பதிவுகளுக்குப் பின் எனக்கும் பூச்சி இனங்களுடன் ஒரு காதல்..!!
    உங்கள் பதிவினைக் கண்டதும், ஓடோடி வந்து பார்த்தேன்...
    பெண் வண்டுகளைப் பற்றியும், பூச்சிகளைப் பற்றியும் இத்தனை தகவல்களா...??
    மிக்க நன்றி முகிலன்!!

    முகில் ஜி, தொடர்ந்தும் விவசாயிகளுக்கு உயிரியல் ரீதியில் உதவி புரிந்து வரும் நல்ல பூச்சி இனங்களைப் பற்றி சுவை பட எழுதலாமே..??

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  3. #3
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் mukilan's Avatar
    Join Date
    27 Jul 2005
    Location
    கனடா
    Posts
    1,999
    Post Thanks / Like
    iCash Credits
    32,969
    Downloads
    53
    Uploads
    5
    தங்கள் ஆதரவிற்கு நன்றி ஓவியன். பார்த்து பூச்சிகளைக் காதலிக்கிறேன் பேர்வழி என்று சொல்வதை வீட்டில் யாரேனும் வேறுவிதமாகப் போட்டுக் கொடுத்து விடப் போகிறார்கள்.

    தொடர்ந்து எழுத முயற்சிக்கிறேன் ஓவியன்.
    உன் வீட்டுக்கண்ணாடி ஆனாலும் கூட முன் வந்து நின்றால்தான் முகம் காட்டும் இங்கே!

  4. #4
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    Quote Originally Posted by mukilan View Post
    பூச்சிகளைக் காதலிக்கிறேன் பேர்வழி என்று சொல்வதை வீட்டில் யாரேனும் வேறுவிதமாகப் போட்டுக் கொடுத்து விடப் போகிறார்கள்.
    ஹீ, ஹீ..!!

    அதுக்கு முன்னர் நாமளே வீட்டில சொல்லிட்டமிலே..!!

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  5. #5
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    11 Oct 2004
    Location
    தமிழ்மன்றம்
    Posts
    4,511
    Post Thanks / Like
    iCash Credits
    203,440
    Downloads
    104
    Uploads
    1
    பெண்வண்டுகளை பற்றிய முதல் ஆசிரியர் என் சகோதரியின் குழந்தைகள்... அவர்கள் தோட்டத்தில் இருக்கும் இந்த பெண்வண்டுகளை மகிழ்ச்சியுடம் பார்த்தபோது அவர்கள் அதன் பலனை பற்றி கூற.... முதல் ஆர்வம்...
    நேரமின்மை கழுத்தை நேருக்கும் இந்த நாட்க்களில் அதை தேடிப்ப்படிக்க மறந்துபோக....

    ஆசை இங்கு தேவைக்கு அதிகமாகவே நிறைவேறப்பட்டு....

    எனக்கு சையத் அலி என்று ஒரு ஆசிரியர் உண்டு.. பொறியியலை பொரிக்கடலை போல ருசியாக ரசிக்க சொல்லி கொடுத்தவர் அவர்...
    இன்று தாவரவியலை.. நீங்களும்...
    பென்ஸ்

    என் பதிவில் உள்ள எழுத்து பிழையை சகிக்கவும்... அதை சுட்டி காட்டுபவர்களுடன் நான் சன்டையாக்கும்...

  6. #6
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    பொன்வண்டுகளைப் பார்த்திருக்கிறேன். பிடித்து வைத்து தீப்பேட்டி வீட்டுக்குள் வளர்த்தும் இருக்கிறேன். ஆனால், பெண் வண்டுகளைப் பற்றி இத்தனை விவரங்கள்...வாவ்...அழகுதமிழில் முகிலனின் வரிகள் சுவாரசியக் குவியல். தாவரங்களின் நன்பர்கள் உணவின்றி எண்ணிக்கை குறைந்து வருவதுதான் வருத்தமாக இருக்கிறது. மனம் நிறைந்த பாராட்டுகள் முகிலன்.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  7. #7
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2003
    Posts
    7,901
    Post Thanks / Like
    iCash Credits
    20,940
    Downloads
    62
    Uploads
    3
    படிப்பதற்கு மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது முகிலன். இயற்கையிலேயே உயிரினங்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த முடிந்திருக்கும் போலிருக்கிறது!

    கற்றவற்றை கற்றுத்தரும் அன்பிற்கு நன்றி முகிலன்.

  8. #8
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    03 Feb 2007
    Location
    அப்பிடீன்னா?
    Posts
    4,596
    Post Thanks / Like
    iCash Credits
    60,222
    Downloads
    84
    Uploads
    0
    பூச்சியினங்களைப் பற்றியும் பொன், பெண் வண்டுகளைப் பற்றியும் பல விடயங்கள் அற்றிய முடிந்தது.
    விலங்கியலில் பல "லொயி"க்கள் கேள்விப்பட்டிருக்கிறேன். இன்றுதான் அதற்குண்டான விளக்கத்தை அறிந்திருக்கிறேன். அந்தக்காலத்தில் என்ன என்று தெரியாமலேயே ஒப்புவித்திருந்தேன்.
    ----------------------
    ஆண் நுளம்பு கடிப்பதில்லை என்று சொல்லியிருந்தீர்கள் முகிலன். ஏன்? அவற்றிற்கு பல்லுக்கிடையாதா?

  9. #9
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் மன்மதன்'s Avatar
    Join Date
    29 Nov 2003
    Posts
    11,633
    Post Thanks / Like
    iCash Credits
    30,747
    Downloads
    17
    Uploads
    0
    சுவாரஷ்யமான கட்டுரை..

    பத்திரிக்கைகளில் வரும் கட்டுரைகளுக்கு
    இது சவால் விடுகிறது..

    அருமை முகில்ஜி..

  10. #10
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    Quote Originally Posted by விராடன் View Post
    ஆண் நுளம்பு கடிப்பதில்லை என்று சொல்லியிருந்தீர்கள் முகிலன். ஏன்? அவற்றிற்கு பல்லுக்கிடையாதா?
    பல்லிருந்தால் தான் கடி, இல்லைனா அது மொக்கை...
    மேலதிக விளக்கங்களுக்கு ‘நாயும் வாயும்' திரியைப் பாருங்க..!!

    ஆகவே, ஆண் நுளம்புகளுக்கு பல்லுக் கிடையாது..!!

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  11. #11
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்தந்தே... நண்பனே.. நண்பனே..
    கிளாஸ்களை கட்டடிக்காது படிச்ச காலத்துல கூட இந்தளவுக்கு சுவாரசியமாக இருந்ததில்லை. (அதுசரி.. கட்டடிக்காவிட்டால் எப்படி சுவாரஸ்யம் இருக்கும்) அருமையான தரமான எல்லாராலும் புரிந்துகொள்ளக்க் கூடிய வகையில் அமைந்த கட்டுரை. பாராட்டுகள் முகிலன்.

    ஆண் நுளம்பு தாவச்சாறுகளை அருந்தி வாழ்கின்றன என்றுபடித்த ஞாபகம்.. பாதுகாப்பான பசித்தேடல்...

  12. #12
    இனியவர் பண்பட்டவர் poornima's Avatar
    Join Date
    13 Mar 2008
    Posts
    808
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    3
    Uploads
    0
    அழகிய கட்டுரை.. நன்றி முகிலன்..

    சின்ன வயதில் பொன் வண்டு பிடித்து சின்ன டப்பாவில் இலைகளுடன் அடைத்து வைத்து வண்ண வண்ண முட்டைகள் இடுவதை விழி விரிய பார்த்து இரசித்து..

    அந்த நாள் ஞாபகத்தில்... நன்றி நன்றி





    பூர்ணிமா
    ==================
    தேமதுரத் தமிழோசை உலகெல்லாம்
    ஒலிக்கச் செய்வோம்....

Page 1 of 3 1 2 3 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •