Page 101 of 129 FirstFirst ... 51 91 97 98 99 100 101 102 103 104 105 111 ... LastLast
Results 1,201 to 1,212 of 1538

Thread: கவிச்சமர் - களம்

                  
   
   
  1. #1201
    Banned
    Join Date
    28 Jan 2012
    Posts
    652
    Post Thanks / Like
    iCash Credits
    16,789
    Downloads
    0
    Uploads
    0
    நாற்காலியில் நிலைக்க கால்பிடிப்பது
    இழிவென கருதினால், தன் குடும்பம்
    தம் மனைவி , தம் பிள்ளை பிழைப்பதெப்படி
    என தகும் காரணம் கருதி கால்பிடிப்போரை
    கண்டும் காணாமல் விட்டுவிட்டு ,
    அரசியல் நாற்காலியை பிடிக்க
    வீதி வீதியாய் வந்து, சேரும் சகதியும் பாராது
    கால்பிடிக்கும் கயவர்களை இனம்காண்போம்.

  2. #1202
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    காண்போம் நல்தேசமாய் நம் தேசத்தை
    நம் காலத்திலேயே நடத்திவிடுவோம்
    வருங்கால சந்ததிகளுக்கு
    நல் சிந்தையைக் கடத்திவிடுவோம்
    தனிமனித ஒழுக்கத்தில் தலைசிறந்தால்
    தறுதலைத் தலைவனும் தலைகுனிவான்
    தவறுகளைச் சுட்டிக்காட்ட
    சுட்டுவிரலுக்கு தகுதி கூடும்
    எட்டிப் பிடித்துவிடலாம்....
    எல்லாவற்றிலும் சிறந்த
    எம் தேசத்தை....!!!
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  3. #1203
    Banned
    Join Date
    28 Jan 2012
    Posts
    652
    Post Thanks / Like
    iCash Credits
    16,789
    Downloads
    0
    Uploads
    0
    எம் தேசத்தை ,
    சீனாவையே பின்னுக்கு தள்ளி
    பொருளாதாரத்தில் உலகின்
    முதல்தேசமாய் கொண்டுவந்திட
    முடியுமென முடிவாய் சொல்கின்றனர்.
    என் தேசத்தலைவர்களின் வெளிநாட்டு
    வங்கி கருப்பை களில் கருப்பு பணமாய்
    முடிங்கி கிடக்கும் பல்லாயிரம் கோடிகளை
    மொத்தமாய் வெளிகொண்டுவந்தால் .....

  4. #1204
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    வெளிக்கொண்டு வந்தால் வீழ்ந்துவிடுவாய்
    உன் முகமூடிக்குப் பின்னிருக்கும்
    உள் முகத்தை, உண்மை சொரூபத்தை
    உள்ளத்தின் கள்ளத்தை...வெளிக்கொண்டுவந்தால்.....
    என் மருமகன்....எனது இன்னொரு மகன்
    என ஆனந்தப்படும் என் பெற்றோரின்
    ஆனந்தத்தை அறுக்க நினைக்காததால்
    உன்னை சகித்துக்கொள்கிறேன்...
    என்னை அழவைக்கும் என் கணவனே.....
    பிழைத்துப்போ....!!
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  5. #1205
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    பிழைத்துப்போ என்று
    வீடு தேடிவந்த பாம்பையும் தேளையும்
    விடுவிக்கிறாயாம் பெருந்தன்மையுடன்.
    பாவம், அவர்களுக்குத் தெரியவில்லை,
    விடுவிக்குமுன்...
    பாம்புக்குப் பல்லையும்,
    தேளுக்கு வாலையும்
    நீக்கிவிடும் உன் செய்கைகள்.
    தற்காக்கும் திறனற்று
    வெறுங்கூடாய் வாழ்வதினும்
    சாக்காடு மேலாம் பல தருணங்களில்.

  6. #1206
    Banned
    Join Date
    28 Jan 2012
    Posts
    652
    Post Thanks / Like
    iCash Credits
    16,789
    Downloads
    0
    Uploads
    0
    பல தருணங்களில்
    கொளுத்தும் கோடையில் வெளுத்து வாங்கும்
    வெப்பத்தின் தாக்கத்தையும் புறந்தள்ளிவிடும்
    நெருப்பாய் தகித்தபடி எனக்குள் இருக்கும்
    கவிதை கனல்களின் தாக்கம் .
    தகிக்கும் தகிப்பினை தணிக்கும் விதமாய்
    தரமாய், அரும்பெரும் வரமாய், வரிகளை
    தரத்தான், தந்து பெறத்தான் தவிக்கின்றேன்.
    தகிக்கும் தணலின் தாக்கம் அணைத்திட
    நினைத்தே, பதிக்கின்றேன் பதிப்புகளை
    அப்படி பதிக்கும் பதிப்புக்கள் அனைத்திலும்
    மட்டுமின்றி அணைப்பிலும் நிறைந்திருப்பது நீ ......

  7. #1207
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    நீ...நிறைந்திருக்கிறாய் என்னுள் என்பதை
    எங்கெல்லாமோ.....எப்படியெல்லாமோ தெரிவித்தாய்
    காலைச்சூரியனின் கதிரில் முகமாய்,
    காலைச்சிற்றுண்டியில் காரச்சட்டினியாய்
    மதிய உணவின் சுவையாய்
    மாலைத் தென்றலின் சுகமாய்
    இரவுக்கனவின் அங்கமாய்.....
    அத்தனையிலும் நீயிருந்து
    பித்தனாய் எனையாக்கினாய்...
    பிறிதொருவனைக் கைப்பிடித்து எனை
    பித்தனாய் நிலையாக்கினாய்...!!!
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  8. #1208
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    நிலையாக்கினாய்...
    சந்தோஷித்தேன்,
    மனவாசலோடு
    நிரந்தரமாய்
    நிறுத்திவிடுவாய்
    எனத் தெரியாமலே...

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

  9. #1209
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    தெரியாமலேயே என்னுள் புகுந்தாய்! புகுந்தபின்
    அறியாமலேயே அரித்தாய்! என்னை அழிப்பதிலேயே
    குறியாக இருந்தாய்! குஞ்சரம்போல் இருந்த என்னை
    நரியாக ஆக்கினையே! நீ வாட்டும் துன்பத்தில்
    பொரியாகிப் போனேனே! போக்கிடம் அறியேனே!
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

  10. #1210
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் நாகரா's Avatar
    Join Date
    23 Jan 2008
    Location
    தில்லைகங்கா நகர், சென்னை
    Age
    63
    Posts
    2,883
    Post Thanks / Like
    iCash Credits
    31,357
    Downloads
    2
    Uploads
    0
    Quote Originally Posted by கீதம் View Post
    நேர்மையாயிருத்தலில் நட்டமிருக்கிறதென்பதை
    நேற்றுவரை அவன் நம்பவில்லை.

    பொய்க்கணக்கெழுத உடன்படா மனத்துடன்
    கைநிறைய வருமானம் வந்த வேலையை
    சட்டென உதறிவந்து நிற்பவனை...

    பிழைக்கத் தெரியாதவன் என்று பெற்றோர் பேச,
    சாமர்த்தியமில்லாதவன் என்று சகோதரன் ஏச,
    கையாலாகாதவன் என்று கட்டியவள் பொரும,
    குற்றவாளிபோலெண்ணி குழந்தைகளும் ஒதுங்க...

    நேர்மைக்குக் கிடைத்தப் பரிசிலை எண்ணி,
    நெக்குருகி நிற்கிறான், நேற்றுவரை
    நேர்மையின் பிரதிநிதியனெத் தன்னைப்
    பிரகடனம் செய்திருந்தவன்,

    நெருங்கிவரும் அழுத்தங்களின் ஆதிக்கத்தால்
    நேர்மையின் கழுத்தை நெறித்துக்கொன்று,
    நாளை மறுபடி சென்று கால்பிடிக்கக்கூடும்
    நேற்று உதறிவந்த நாற்காலியில் நிலைக்க.
    நிலைக்க மெய்யிருந்தும்
    நிலைமையுணரா மனத்தின் மாயை
    நிலையாமை பின்ன வந்த அவல நிலை மாய
    நிலை பிளந்து பாரீர் நில் "ஐ"
    (ஐ = தனித் தலைமைப் பரம்ம்பொருள்)
    உங்களன்பன்
    நான் நாகரா(ந.நாகராஜன்)
    பராபர வெளியும் பராபரை ஒளியும்
    பரம்பர அளியும் வாசி
    மாயா மெய்ந்நிலை இற(ர)ங்கும் நவயுக உதயம் - வள்ளலாரின் புதிய ஏற்பாடு

  11. #1211
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    நாகரா ஐயா மன்னிக்கவும்....தொடரும் கவிகளென்பதால்...கடைசிக்கவிதையின் கடை வரிகளை எடுத்தாள வேண்டியதாய் உள்ளதால்...ஜகதீசன் ஐயாவின் கடைசி வரியைக் கையாள்கிறேன்.

    அறியேனே....ஏதும் அறியேனே
    அறிஞர்கள் ஆய்வு செய்து
    அகிலத்துக்குணர்த்திய எதையும் அறியேனே
    அகம் சொல்லும் உண்மைகளை
    அவன் சொன்னதாய் ஏற்றுக்கொண்டு
    அன்றாட வாழ்வை
    அவன் வசம் ஒப்படைத்து
    அவனியில் வாழ்கிறேன்.....இதையன்றி வேறெதுவும்
    அறியேனே ஆண்டவா!!!
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  12. #1212
    Banned
    Join Date
    28 Jan 2012
    Posts
    652
    Post Thanks / Like
    iCash Credits
    16,789
    Downloads
    0
    Uploads
    0
    ஆண்டவா !
    இது என்னடா புது குழப்பம்
    என் திகைத்து தவித்து கிடக்கையில்
    ஒரு வழியாய் வந்து குழப்பத்திற்க்கு
    முற்றுபுள்ளி வைத்தமைக்கு மனமார்ந்த
    வாழ்த்துக்கள் வாசி வாசி வாசி ....

Page 101 of 129 FirstFirst ... 51 91 97 98 99 100 101 102 103 104 105 111 ... LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •