Page 66 of 129 FirstFirst ... 16 56 62 63 64 65 66 67 68 69 70 76 116 ... LastLast
Results 781 to 792 of 1538

Thread: கவிச்சமர் - களம்

                  
   
   
  1. #781
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் பூமகள்'s Avatar
    Join Date
    10 Aug 2007
    Location
    பூக்கள் நடுவில்
    Posts
    6,617
    Post Thanks / Like
    iCash Credits
    72,958
    Downloads
    89
    Uploads
    1
    மடியில்
    வீழ்ந்து கொண்டிருக்கும்
    பூக்கள் மணக்கவில்லை..

    உன் ஒரு வார்த்தை
    உளியால்
    சற்று முன் மரணித்த
    மனதின் மேல்
    அஞ்சலிக்காக தூவப்பட்டது
    தென்றலால் அவை..
    -- பூமகள்.

    "விண்தாண்டும் வேலையின் கடிது - உன்
    உளக்கண் தாண்டும் வேலை..!!"


    பூமகள் படைப்புகள்


  2. #782
    புதியவர் பண்பட்டவர் ஷாஜஹான்'s Avatar
    Join Date
    26 Feb 2010
    Posts
    21
    Post Thanks / Like
    iCash Credits
    14,087
    Downloads
    7
    Uploads
    0
    தென்றலால் அவை
    மிதந்து வந்து என் நாசியில் நுழைந்த அது
    உனதில்லை என்றாலும்
    நம்பவேயில்லை என் மனம்.
    உன் மேனியில் பவுடரின் மணம்

  3. #783
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் யவனிகா's Avatar
    Join Date
    22 Sep 2007
    Location
    கோவை
    Posts
    2,233
    Post Thanks / Like
    iCash Credits
    35,848
    Downloads
    29
    Uploads
    0
    பவுடரின் மணமா?
    கதக்கிய பாலில் மணமா?
    பேபி லோசனின் மணமா?
    மஞ்சள்பூலாங்கிழங்கின் மணமா?
    சாம்பிராணி மணமா?
    எல்லாமும் சேர்ந்ததொரு
    குட்டிச்சட்டையொன்றை
    கைப்பையில் பத்திரமாய்...

    அடுத்த விடுமுறையில்
    பல்லு மொளைச்சிருக்கும்...
    பேசத் தொடங்கிருக்கும்...

    அப்பான்னு கூப்பிடுமா?
    அங்கிள்னு கூப்பிடுமா?
    அவன் பெத்த பிள்ள?
    அதுவரைக்கும்
    அத்தனை முத்தமும்....
    அந்த சட்டைக்குத்தான்.
    சாகும்வரை தமிழ் பயின்று சாக வேண்டும் − என்
    சாம்பலிலும் தமிழ் மணந்து வேக வேண்டும்.

  4. #784
    புதியவர் பண்பட்டவர் ஷாஜஹான்'s Avatar
    Join Date
    26 Feb 2010
    Posts
    21
    Post Thanks / Like
    iCash Credits
    14,087
    Downloads
    7
    Uploads
    0
    அந்த சட்டைக்குத்தான்
    சாயமில்லை.
    பொத்தான் பாதியில்லை .
    அக்குளில் கிழிசல்கள்.
    தாயின் கண்ணீரை மட்டும் நிறைக்கும் சட்டைபைகள்.

    சட்டையோ பட்டுதுணிகளின் இடுக்கில் .
    உரியவனோ மண்ணுக்கடியில்
    Last edited by ஷாஜஹான்; 01-11-2010 at 12:00 PM.

  5. #785
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    மண்ணுக்கடியில் கிடக்கும்
    கிடைக்க மறுக்கும்
    நீர் புதையலின் கரங்கள் நீள்கின்றன
    புறக்கணிக்கப்பட்ட
    குழந்தையின் சிரிப்பை ஏந்த.

  6. #786
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அனுராகவன்'s Avatar
    Join Date
    24 Jan 2008
    Location
    சிங்கப்பூர்
    Posts
    5,009
    Post Thanks / Like
    iCash Credits
    34,753
    Downloads
    25
    Uploads
    3
    குழந்தையின் சிரிப்பை ஏந்த
    ஒரு அன்னையின்
    அரவனைப்பு அதில் சேர;
    அர்ச்சனை போட்டால்
    கையில் திறுநீரு;
    வேலை செய்தால்
    வாயில் சுடு சோறு;.......
    என்றும் அன்புடன்
    அச்சலா

    ..................................................................................
    வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
    திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே

    ..................................................................................

  7. #787
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    சுடுசோறும் சுண்டைக்காய் குழம்பும்
    ஆவி பறக்க தட்டிலிட்டுப் பிசைந்து
    கவளமொன்றைக் கையிலே அள்ளி
    நீட்டுகிறாள் அம்மா!
    ஆவென்று வாய்பிளந்து ஏற்ற அடுத்தநொடி...
    ஆ.... உறைக்கிறதே என்றலற...
    அத்தனைக்கனவும் கலைய....
    அப்போதுதான் உண்மையில் உறைக்கிறது...
    அங்கே சுடு சோறுமில்லை,
    ஊட்ட அன்புத் தாயுமில்லை என்பது!

  8. #788
    புதியவர் பண்பட்டவர் ஷாஜஹான்'s Avatar
    Join Date
    26 Feb 2010
    Posts
    21
    Post Thanks / Like
    iCash Credits
    14,087
    Downloads
    7
    Uploads
    0
    தாயுமில்லை என்பது
    தெரியவில்லை மாலை ஆறு வரை...
    செய்திதாள் இலவச இணைப்பு (புத்தகம்)
    ஞாயிறுகளில் தந்தை...
    மூட்டு வலியும் டிவி சீரியலும் பாகம் கேட்க,
    பாட்டி தாத்தாவும் பந்தமில்லை.
    மதியம் இரண்டு முதல் ஐந்து வரை
    தூக்கம் கூட துணையில்லை.
    எத்தனை நாள் சிரிக்கும் குழந்தை..?
    அசையும் பொம்மையை பார்த்து...!!!
    Last edited by ஷாஜஹான்; 07-11-2010 at 09:54 AM. Reason: spelling mistakes

  9. #789
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    பொம்மையை பார்த்து,
    பொறாமைப்பட்டேன்,
    அழகாக இருக்கிறாயே
    என்றல்ல,
    என்னை விட அதிகமாக
    என்னவள் மடியில்
    இருக்கிறாயே என...!!

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  10. #790
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    இருக்கிறாயே என நினைத்து
    விலகிப் போகிறேன்
    உன்னருகில் என்னை விட்டுவிட்டு...

    என்னை உடைத்து வரும்
    ஏதேதோ நினைவுகளைத் திரட்டியொரு
    போராய்தம் செய்கிறாய்..

    திரும்பி நின்று
    சுவடுகளைச் சுரண்டி எடுத்து
    போர்க்கோலம் எய்துகிறாய்..

    முதுகைத் தட்டும்
    மணத்தின் கழுத்தை நெரித்து
    போர் முழக்கம் எய்கிறாய்.

    மௌனம் தரித்தவனாய்
    எதிர்கொள்கிறேன்
    நீ பெய்யும் சரமாரியை..

    வெறுமை ஏந்தும் என் விழிகளில்
    காணாமல் நீ போகிறாய் ..

    பட்டுத் தெறித்த
    சரத்துளிகள் பட்டுச் சரியுமவள்
    தவிர்க்கிறாள் சாய்வை..

    இப்போது நீ
    விலகிப் போகிறாய்
    என்னை விட்டு!

  11. #791
    இனியவர் பண்பட்டவர் வசீகரன்'s Avatar
    Join Date
    05 Jun 2007
    Location
    சென்னை
    Posts
    688
    Post Thanks / Like
    iCash Credits
    23,167
    Downloads
    15
    Uploads
    0
    மணத்தின் போக்கில்
    மனம் போய்க்கொண்டே
    இருக்கிறது
    இன்றும் ஒருமுறை!

    உணர்வுகள் மலர
    மலர்வனமாக
    ஆகிறது
    மீண்டும் ஒருமுறை!

    அந்த பாதையில்
    நான் அவளை
    தொடர்ந்து தொடர்கிறேன்...!

    தொடர்ந்துகொண்டே இருக்கிறேன்...!

    எப்போதுமே பார்வை திருப்பாமல்
    சென்று கொண்டிருக்கிறாள்
    உடன் தொடர்கிறது மணமும்...

    என்றோ ஒருநாள்
    பார்வை திருப்ப போகிறாள்
    என் மனமும் மணம் பரப்ப
    காத்திருக்கிறது...!
    துன்பங்களை தரும் கஷ்டங்கள் மட்டும் இல்லையென்றால்...
    மனிதனுக்கு வாழ்க்கையில் போராடும் எண்ணமே இல்லாமல் போய்விடும்!

  12. #792
    இளையவர் பண்பட்டவர்
    Join Date
    04 Jul 2010
    Posts
    92
    Post Thanks / Like
    iCash Credits
    9,077
    Downloads
    0
    Uploads
    0
    உணர்வுகளில் உனது பெயர்
    ஒட்டிக்கொண்டது
    அந்த மயக்கத்திலே எனது மனம்
    தத்தளிக்குது
    Last edited by வல்லம் தமிழ்; 11-11-2010 at 02:21 PM. Reason: to delete

Page 66 of 129 FirstFirst ... 16 56 62 63 64 65 66 67 68 69 70 76 116 ... LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •