Page 124 of 129 FirstFirst ... 24 74 114 120 121 122 123 124 125 126 127 128 ... LastLast
Results 1,477 to 1,488 of 1538

Thread: கவிச்சமர் - களம்

                  
   
   
  1. #1477
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் Ravee's Avatar
    Join Date
    25 Apr 2009
    Location
    மதுரை, தமிழ்நாடு
    Posts
    1,833
    Post Thanks / Like
    iCash Credits
    23,808
    Downloads
    25
    Uploads
    0
    இருவேறு பாதைகளில் பயணப்பட்ட போதுகூட
    இணைந்தோம் ஒரு புள்ளியில் ....
    ஆனால் இணைந்தே பயணப்படும் போது
    இணையவில்லையே மனது ....
    ந.இரவீந்திரன்
    வாழ்க்கை எப்போதும் இனிமையானது ?

  2. Likes கீதம், prakash01 liked this post
  3. #1478
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் பூமகள்'s Avatar
    Join Date
    10 Aug 2007
    Location
    பூக்கள் நடுவில்
    Posts
    6,617
    Post Thanks / Like
    iCash Credits
    72,958
    Downloads
    89
    Uploads
    1
    மனது தன் அறைகள்
    ஒவ்வொன்றையும் ரகசியபூட்டுகளால் மூடிவைக்கும்..


    திறக்க வரும் ஒவ்வொருவருக்கும்
    ஏமாற்றமோ வியப்போ புதையலோ
    நிச்சயம் காத்திருக்கும்..


    விரைந்து வந்து பூட்டுடைப்பவர்
    வெளியேற்றப்படுவதும்..
    சாவியாகி துவாரம் நிரப்புபவர்
    அங்கீகரிக்கப்படுவதும்..
    அகதியானவர் வெறுக்கப்படுவதும்..
    வெளியேறியவர் விருந்தினராவதும்..


    மனக்கிடங்கில் கொட்டிக்கிடக்கும் அம்மானுசம்..


    இப்படியான உள்வெளியறிவதில்
    தோற்றுத் தோற்றே வென்று கொண்டிருக்கிறது
    அறிவான அன்பு..!!
    -- பூமகள்.

    "விண்தாண்டும் வேலையின் கடிது - உன்
    உளக்கண் தாண்டும் வேலை..!!"


    பூமகள் படைப்புகள்


  4. Likes கீதம் liked this post
  5. #1479
    இனியவர் பண்பட்டவர் கும்பகோணத்துப்பிள்ளை's Avatar
    Join Date
    12 Sep 2012
    Location
    துபாய்
    Posts
    646
    Post Thanks / Like
    iCash Credits
    18,567
    Downloads
    28
    Uploads
    0
    தோற்ற மனம்
    வெல்லுமன்பினாலே!
    வென்றமனம் தோறக்கும்
    நல்ல பன்பின் முன்னாலே!
    வெற்றிகொண்ட மனிதருக்கே
    நல்ல பெண்மை இருக்கும் பின்னாலே!
    என்றென்றும் நட்புடன்!

  6. Likes prakash01 liked this post
  7. #1480
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    பின்னாலே...எல்லோர் முதுகுக்கும் பின்னாலே
    யாரோ ஒருவர் எப்போதுமிருக்கிறார்
    உற்சாகப்படுத்தி உந்தித்தள்ளவும்
    கொஞ்சம் ஏமாந்தால் குப்புறத்தள்ளவும்
    இணைந்துகொள்ள விரும்பாமல்
    பின் தங்கியவரும்...
    இணைந்துகொள்ள முடியாமல்
    பின்னடைந்தவரும்...
    என எப்போதும் யாரோ ஒருவர்
    முதுக்குப் பின்னால் இருந்துகொண்டே இருக்கிறார்கள்.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  8. #1481
    இனியவர் பண்பட்டவர் கும்பகோணத்துப்பிள்ளை's Avatar
    Join Date
    12 Sep 2012
    Location
    துபாய்
    Posts
    646
    Post Thanks / Like
    iCash Credits
    18,567
    Downloads
    28
    Uploads
    0
    இருந்துகொண்டே இருப்பதென்ன வாழ்க்கை!
    நாலும் தெரிந்து கொண்ட பின்னே!
    நானிலம் பயனுர நடவாமல்
    நான்மட்டும் பயனுற்றால் போதுமென
    இருப்போர் மத்தியிலே
    இருந்துகொண்டே இருப்பதென்ன வாழ்க்கை!
    விருந்தும் உன்னாமலே
    விருந்தினருக்கும் உணவே இடாமலே
    மருந்தையே விருந்தாக்கும் மனிதரிடையே
    காசும் பணமும்
    இருந்துகொண்டே இருப்பதென்ன வாழ்க்கை!
    மானம் இல்லாமலே மற்றோர் மனமும் புரியாமலே
    இருப்போர் மத்தியிலே
    இருந்துகொண்டே இருப்பதென்ன வாழ்க்கை!
    ஒரு கொள்கை இல்லாமலே
    ஊரார் கூடி வாழாமலே
    உலாவுவோர் மத்தியிலே
    இருந்துகொண்டே இருப்பதென்ன வாழ்க்கை!
    தானும் வாழாமலே
    தள்ளியும் படுக்காமலே
    அடுத்தவர் சுகத்தையே
    கெடுக்க நினைப்பவர் மத்தியிலே
    இருந்துகொண்டே இருப்பதென்ன வாழ்க்கை!
    என்றென்றும் நட்புடன்!

  9. #1482
    இனியவர் பண்பட்டவர் கும்பகோணத்துப்பிள்ளை's Avatar
    Join Date
    12 Sep 2012
    Location
    துபாய்
    Posts
    646
    Post Thanks / Like
    iCash Credits
    18,567
    Downloads
    28
    Uploads
    0
    வாழ்கைமுழுமையும் வசந்தங்கள் வீசட்டும்!
    வருந்நாளெலாம் திருநாளாய் திகழட்டும்!
    இரும்நாளெலாம் இன்பங்கள் பரவட்டும்!
    தரும்நாளெலாம் தமிழ் படைப்பால் நிறையட்டும் இனி
    வரும் தமிழாண்டெல்லாம் வளமாய் பெருகட்டும்!
    சித்திரை திங்களொளி இத்தரைமீதெங்கும் தவழட்டும்!
    சித்திரை நிலவே! சிரித்தமுகமேவென தமிழ்பாடி
    தமிழர் நெஞ்சம் மகிழட்டும் இப்புத்தாண்டில்!
    என்றென்றும் நட்புடன்!

  10. Likes prakash01 liked this post
  11. #1483
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    புத்தாண்டு சபதங்களில் ஒன்றாய்
    வருடந்தோறும் தலைநீட்டுமொரு வேடிக்கை...

    வாழ்க்கைப் புத்தகத்தின் பக்கங்களை
    நாட்குறிப்பின் பக்கங்களில் நகலெடுக்கும்
    தீராத ஆவலோடு திறக்கப்படும் பேனா...
    தீராத மையோடு காய்ந்துகிடப்பது வாடிக்கை!

    இளித்து இளித்துப் பெற்ற எத்தனையோ
    இலவச நாட்குறிப்புப் புத்தகங்களின்
    ஏராள வெற்றுப்பக்கங்கள்
    இளிப்போடு இழித்துப் பழிக்கின்றன
    இயலாமையை!

  12. #1484
    இனியவர் பண்பட்டவர் கும்பகோணத்துப்பிள்ளை's Avatar
    Join Date
    12 Sep 2012
    Location
    துபாய்
    Posts
    646
    Post Thanks / Like
    iCash Credits
    18,567
    Downloads
    28
    Uploads
    0
    இயலாமை என்பது இல்லாமையல்ல!
    இதயம் கிழிக்கும் உண் ஊசிமுணை வார்தைகளுக்கு
    உதயமாகும் பதிலெல்லாம்
    மேலண்ணத்தில் ஒட்டிக்கொள்கிறது உன்
    மேலுள்ள அன்பால்! உனக்கும் வலிக்குமென்று!
    இயலாமை என்பது இல்லாமையல்ல!
    என்றென்றும் நட்புடன்!

  13. Likes கீதம் liked this post
  14. #1485
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் Nivas.T's Avatar
    Join Date
    18 Mar 2010
    Location
    தாய்த்தமிழ்நாடு
    Posts
    2,949
    Post Thanks / Like
    iCash Credits
    20,125
    Downloads
    47
    Uploads
    2
    இல்லாமையல்ல என்பதழியும்
    உனது எனது என்ற எண்ணம்
    எழும்பாதவரை...
    கற்றோர்க்குமிது
    புலப்படா தென்பது
    விதியோ...

    எவர் செய்த சதியோ...
    த.நிவாஸ்
    வீழ்வது நாமாய் இருப்பினும் வாழ்வது தமிழாய் இருக்கட்டும்

  15. #1486
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    சதியோ... விதியோ...
    சந்தர்ப்ப வசமோ...
    சங்கல்பங்களை நீர்த்துப்போகச்செய்த
    சமாதானங்களும் சம்மதங்களும்
    சாமான்ய வாழ்க்கை நடத்துகின்றன
    சலனங்களை மூடிமறைத்தபடி!

  16. #1487
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் Nivas.T's Avatar
    Join Date
    18 Mar 2010
    Location
    தாய்த்தமிழ்நாடு
    Posts
    2,949
    Post Thanks / Like
    iCash Credits
    20,125
    Downloads
    47
    Uploads
    2
    மூடிமறைத்தபடி
    அழகாய் இருப்பினும்....

    நாற்றமெடுக்கும்
    கண்கொண்டுகாண இயலா
    சதைகளும்
    கறித்துனுக்குகளும்
    குருதியும் கொண்ட கொடூரம்தான்
    உண்மை என்பதனை
    உணர்வதில்லை ஒருபொழுதும்
    த.நிவாஸ்
    வீழ்வது நாமாய் இருப்பினும் வாழ்வது தமிழாய் இருக்கட்டும்

  17. #1488
    இனியவர் பண்பட்டவர் கும்பகோணத்துப்பிள்ளை's Avatar
    Join Date
    12 Sep 2012
    Location
    துபாய்
    Posts
    646
    Post Thanks / Like
    iCash Credits
    18,567
    Downloads
    28
    Uploads
    0
    மூடிமறைத்தபடி! இருக்கிறதடி
    குறளும் பொருளும் போலே நம்காதல்
    நாளும்வளர்ந்தபடி இருக்கிறதடி
    உறவுகளுக்கு பின்னால் நம்காதல்

    மூடிமறைத்தபடி! இருக்கிறதடி
    மேகத்தின் பின்னால் பால்நிலவு!
    மூடிவைத்தபடி இருக்கிறதடி என்
    மோகமும் உன்மேல் என்நிலவே!

    தேடியலைந்தபடி இருக்கிறதடி
    தாகத்தினாலே தவிக்கும் என்நெஞ்சு
    நாடிவந்தபடி இருக்கிறதடி
    நாளும் பொழுதும் நாம் இணைவதற்கே!
    என்றென்றும் நட்புடன்!

  18. Likes prakash01 liked this post
Page 124 of 129 FirstFirst ... 24 74 114 120 121 122 123 124 125 126 127 128 ... LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •