Page 96 of 129 FirstFirst ... 46 86 92 93 94 95 96 97 98 99 100 106 ... LastLast
Results 1,141 to 1,152 of 1538

Thread: கவிச்சமர் - களம்

                  
   
   
  1. #1141
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    தினந்தோறும் படையலிடப்படும்
    வெஞ்சோற்றுக்குவியலை
    புறங்காலால் அகல உழுதபடி வெளியேகி,
    புழுதியிலிறைத்தப் பருக்கைகளில்
    பசியாற்றிக்கொள்ளும் மனவெலிகள்!

    உறுபசி தீர்த்த உதரங்களைச் சுமந்தும்,
    பெரும்பசி தீர்க்கும் பிரயத்தனங்களில் முனைந்தும்,
    திளைத்துக்கிடக்கும் களியாட்டங்களில்
    தன்னை அமிழ்த்திக்கிடக்கிறது
    காமங்கடந்த கிழட்டுக் கூகையொன்று,
    கவ்வுங்காலங்கடந்துசெல்வது பற்றிய
    கவலையும் சிந்தனையுமற்று!

  2. #1142
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் கலைவேந்தன்'s Avatar
    Join Date
    03 Jun 2007
    Location
    புதுதில்லி
    Age
    61
    Posts
    2,017
    Post Thanks / Like
    iCash Credits
    22,662
    Downloads
    10
    Uploads
    0
    சிந்தனையு மற்றுச் செயல்வழி சீர்கெட்டு
    நிந்தனை பெற்று ஒழுகுவர் - அன்னவரை
    வந்தனை செய்தே மதிகெட்டு வாழ்வோரின்
    மெய்தோறும் தீயாம் நினை.

  3. #1143
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    நினைவுக்குக் கொண்டுவர முயலும்
    முந்தையப் பொழுதொன்றின் கணங்களை
    முன்போலவே தழுவிக்கொள்கிறது தோல்வி!

    மூடுபனியாய் முன்பணிக்காலம்,
    முனைப்பினைப் புறமுதுகிட்டோடச் செய்ய…
    பின்னோக்கி வலிந்தனுப்பப்பட்டவை யாவும்
    திரும்பி வாராமை கண்டு வெருண்டு
    விரட்டிப்பிடிக்க ஓடும் முயலாமைக்கதைகள்.

    அது அந்த இடத்தில் இருந்ததாய் நினைவில்லை,
    இருந்திருக்கலாம்,
    கவனித்ததாய் தெரியவில்லை,
    கவனித்திருக்கலாம்,
    புறக்கணித்தக் காரணம் புரியவில்லை.
    புறக்கணிப்பைப் புறக்கணித்தும்
    புலப்படா விநோதம் புரியவில்லை.

    இடைச்செருகல் பற்றிய குடைச்சல்கள்
    மனவடுக்கின் இடைச்செருகும்
    அவலத்தை உணர்ந்தபாடில்லை
    இந்தக் கவிச்செருகும் கடைசிக்கணத்திலும்.

  4. #1144
    புதியவர் muthirkanni's Avatar
    Join Date
    06 Jun 2010
    Posts
    6
    Post Thanks / Like
    iCash Credits
    8,964
    Downloads
    0
    Uploads
    0
    கணத்திலும் குறவு நொடியோ
    நொடியிலும் குறைவு சிட்டிகையோ
    சிட்டிகையிலும் குறைவு மாத்திரையோ
    இவ்வெவற்றிலும் குறையும் காலமும்
    என்னை மறவாத நேசமும் பாசமும்
    காட்டிடும் என் தாய் அல்ல அல்ல
    தாயின் மறுபிறவி என் துணை.

    நட்புடன்
    முதிர்கன்னி

  5. #1145
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    என் துணை என் நிழலன்றி யார்
    என பலகாலம் நினைத்திருந்தேன்
    இருட்டில் இல்லாது போகும்
    நிழலைக்காட்டிலும் என்றும் என்னுடன் இருக்கும்
    நிலையான துணையாய்
    நின்னைக் கண்டேன் துணைவியே...!!
    மங்கலநாணிட்ட நாள்முதலாய்...
    எங்கும், எதிலும் என்னுடனிருக்கும் இணையே
    உனக்கு ஏது உலகில் இணையே!!!
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  6. #1146
    இனியவர் பண்பட்டவர் Dr.சுந்தரராஜ் தயாளன்'s Avatar
    Join Date
    17 Feb 2012
    Location
    Bangalore, Karnataka, India
    Age
    71
    Posts
    698
    Post Thanks / Like
    iCash Credits
    15,892
    Downloads
    0
    Uploads
    0
    இணையில்லா வாழ்க்கையது இல்வாழ்க்கை இல்லை
    துணையில்லா வாழ்க்கையது துன்பத்தில் ஆகும்
    பிணைப்பின்றிப் போனாலோ பிள்ளைகளும் பேணார்
    மனைவி இரும்வரையே மாண்பு

  7. #1147
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    மாண்புமிகு மந்திரிகள் மமதையில் இருந்ததினால்
    ஆண்டவர் மாறினர்; ஆட்சியும் மாறியது
    மீண்டெழுந்து வந்தவர் மீதுரைகள் செய்கின்றார்
    கூண்டோடு ஒழித்திடவே கூப்பாடு போடுகிறார்
    மாண்டது தமிழுணர்வு ; மீண்டும் எழுப்பிடவே
    தூண்டுகோல் போலிங்கே துலங்கிடுவாய் தமிழ்மகனே!
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

  8. #1148
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் கலைவேந்தன்'s Avatar
    Join Date
    03 Jun 2007
    Location
    புதுதில்லி
    Age
    61
    Posts
    2,017
    Post Thanks / Like
    iCash Credits
    22,662
    Downloads
    10
    Uploads
    0
    தமிழ்மகனே யுந்தன் தரங்கெட்டுத் தாழ்ந்து
    உமிழ்கின்றா ரெச்சிலதை பாரில் - உமியளவும்
    ஈவிரக்க மேதுமின்றிக் கொன்றழித்தார் இவ்வினத்தை
    போவிது யுன்பெருமை சொல்.

  9. #1149
    இனியவர் பண்பட்டவர் Dr.சுந்தரராஜ் தயாளன்'s Avatar
    Join Date
    17 Feb 2012
    Location
    Bangalore, Karnataka, India
    Age
    71
    Posts
    698
    Post Thanks / Like
    iCash Credits
    15,892
    Downloads
    0
    Uploads
    0
    சொல்வதற்கோ தற்பெருமை தோகைவிரித் தாடுதுபார்
    வெல்வதற்கோ நாதியில்லை வேட்டுவைத்தார் நம்மவரே
    விற்பனராய் மேதினியில் வீரமுடன் வாழ்ந்தோரை
    கற்பழித்தான் கட்டிவைத்தே யின்று


  10. #1150
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் கலைவேந்தன்'s Avatar
    Join Date
    03 Jun 2007
    Location
    புதுதில்லி
    Age
    61
    Posts
    2,017
    Post Thanks / Like
    iCash Credits
    22,662
    Downloads
    10
    Uploads
    0
    இன்றுங்கள் காலம்கை கொட்டியே ஆர்த்திடுவீர்
    நன்றாகச் செய்யுங்கள் நர்த்தனமும் - என்றேனும்
    எங்களுக்கும் காலமுண்டு என்றேனும் சேர்ந்துதைப்போம்
    சிங்களரே கூத்தாடு வீர்.

  11. #1151
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    கூத்தாடுவீர் கொண்டாடுவீர்
    எத்தனைக்காலம் தாங்குமிந்த எக்காளம்
    செய்தவை திரும்பத்தாக்கும்
    பொறுத்திருங்கள் வரும் அக்காலம்...!!!
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  12. #1152
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    வரும் அக்காலமென்றே
    முக்காலமும் காத்திருக்கிறேன்
    முக்கூடற்பாதையொன்றில்!

    எந்தக்குதிரை மேலேறி
    எந்தத் தேசத்து அரசக்குமாரன்
    எந்தப்பாதை வழி வருவானோ?

    சற்று அமைதியாயிருங்கள்.
    களைத்தப் பரியொன்று சாவதானமாய்க்
    கால்மாற்றியிடும் குளம்படிச்சத்தம்,
    தூரத்துப் பனிமூட்டம்விலக்கி
    மெல்ல செவிசேர்வதைக் கவனியுங்கள்.
    கும்பிட்டுக் கேட்கிறேன், போய்விடுங்கள்,
    அபூர்வமாய் வரும் அரசகுமாரன் அவன்!
    எவளுக்கு மாலையிடுவது என்னும் குழப்பத்தில்
    ஆழ்த்திவிடாதீர்கள் அவனை!

Page 96 of 129 FirstFirst ... 46 86 92 93 94 95 96 97 98 99 100 106 ... LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •