Page 79 of 129 FirstFirst ... 29 69 75 76 77 78 79 80 81 82 83 89 ... LastLast
Results 937 to 948 of 1538

Thread: கவிச்சமர் - களம்

                  
   
   
  1. #937
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் lolluvathiyar's Avatar
    Join Date
    27 Feb 2007
    Location
    Coimbatore
    Posts
    3,823
    Post Thanks / Like
    iCash Credits
    99,361
    Downloads
    10
    Uploads
    0
    Quote Originally Posted by sarcharan View Post
    மண்ணுலகமும் மகிழ!
    மன்னுழகமும் மகிழ மட்டுமல்ல
    வின்னுழகமும் மகிழ வைத்த
    கீதிம் எழுதிய கவிவரிக
    Quote Originally Posted by கீதம் View Post
    கண்ணில் அகப்பட்டது கொலை!
    கருணையேதும் காட்டாமல் அதன்
    கொம்பை வெட்டி, காலை முறித்துக்
    குற்றுயிராய்க் கிடத்தினேன்.
    இவ்வரிக்கு எனுள்ளமும் மகிழ
    100 ஈபனம் நான் வழங்க
    இன்னும் கொலை பல*புரிய
    வாழிய நீர் பல்லாண்டு
    லொள்ளுவாத்தியார் ஆனால் நல்லவாத்தியார்
    என் படைப்புகள்
    என் கவிதைகள்

  2. #938
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் பூமகள்'s Avatar
    Join Date
    10 Aug 2007
    Location
    பூக்கள் நடுவில்
    Posts
    6,617
    Post Thanks / Like
    iCash Credits
    72,958
    Downloads
    89
    Uploads
    1
    Quote Originally Posted by sarcharan View Post
    கண்குளிரப் பார்த்துநின்றேன்!

    பிள்ளைகளின் தாயாய்!
    பதியின் நற்பாதியாய்!
    பண்பான மருகியாய்!

    பல அவதாரத்தில்
    புக்ககத்தில்
    பவனி வரும் என்
    பொன்மகளை
    கண்குளிரப் பார்த்துநின்றேன்!!

    மகளே!! - வேண்டும்
    மகளிர்க்கோர் தினம்!
    மகளிர் மகிழ மட்டுமல்ல
    மண்ணுலகமும் மகிழ!

    மகிழம் பூ முகம்
    தாழம் பூ மனம்
    அல்லிப் பூ சிரிப்பு
    அந்திமந்தாரை வனப்பு
    அகில் தேகம்

    வர்ணிப்புகள் வடித்த
    கவி மனம்..
    ஏங்குவதென்னவோ
    வெள்ளை நிற
    நெட்டை நங்கைக்கு தான்..

    கருப்பிங்கு அவமானம்..
    கருப்பழகிகள் நிலையோ
    அந்தோ பரிதாபம்..

    நகை கூட போட்டால்
    கருப்பிங்கு ஏற்பாம்..
    நகைக்காய் வாங்கும்
    பொருளா பெண்கள்??

    வரதட்சணை வடிவம்
    வேரோடு பிணைந்து
    இப்படி ஒரு நிலை வரலாம்..

    பெண் உள்ள வீட்டின் முன்
    'பெண்கள் விற்கப்படும்'
    பலகையும் மாட்டப்படலாம்..
    -- பூமகள்.

    "விண்தாண்டும் வேலையின் கடிது - உன்
    உளக்கண் தாண்டும் வேலை..!!"


    பூமகள் படைப்புகள்


  3. #939
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    மாட்டப்படலாம்
    கைவிலங்குகள்,
    நீதியைப் புறக்கணித்த...
    சமூக ஒழுங்கைக் குலைத்த
    சண்டாளக்கரங்களில்!

    பூட்டப்படலாமோ
    கால்விலங்குகள்
    சமூகம் புறக்கணித்த...
    சுயநிலை உணராப்
    பேதையர் கால்தனில்?

  4. #940
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் கௌதமன்'s Avatar
    Join Date
    29 Dec 2009
    Location
    தமிழகம்
    Age
    48
    Posts
    1,293
    Post Thanks / Like
    iCash Credits
    27,343
    Downloads
    2
    Uploads
    2
    கால்தனில் நோவு வரலாமாவென
    காதலி நீ வரும் பாதையெல்லாம்
    பூக்களால் விரிப்பினை விரித்தேன்.
    கண்மணி உன் பாத வனப்பினை
    கண்டதும் பூக்களும் கோபத்தில்
    சுருங்கி முட்களாய் மாறியதேனடி?
    சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான்
    " நான் கொஞ்சம் முரண்பட்டவன்”
    எனது வலைப்பூ

  5. #941
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    மாறியதேனடி
    இனிப்பை எங்கோ
    தடம் பதிக்க
    காய்ந்து கருகுகின்றேன்.
    இன்னுமோர் கருகல்
    துளிர்க்காதிருக்க
    இனியேனும்
    தடம் மாறாதிருக்கட்டும்
    உன் தேன் அடி...

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

  6. #942
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    அடி கிடைக்கும்!

    வாயை மூடு!

    ம்!

    சத்தம் வரக்கூடாது!

    தின்பண்டமோ, விளையாட்டுச்சாமானோ கேட்டு
    அடம்பிடித்து அழுது புரளும்போதெல்லாம்
    அடித்தோ... அடிப்பேன் என்று மிரட்டியோ
    அடக்கி ஒடுக்கும் அம்மா....

    தாலியைக் கழட்டிக்கொடுடி...
    தண்ணியடிக்கப்போவணும் என்று
    தகராறு செய்து அடம்பிடிக்கும்
    அப்பாவிடம் மட்டும்
    ஆயுதமெடுக்காமல்
    அழுது கெஞ்சிக் கால்பிடிப்பதேன்?

    பார்த்திருந்த பாலகனுக்கு
    விளங்கவேயில்லை முரண்!

  7. #943
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் யவனிகா's Avatar
    Join Date
    22 Sep 2007
    Location
    கோவை
    Posts
    2,233
    Post Thanks / Like
    iCash Credits
    35,848
    Downloads
    29
    Uploads
    0
    முரண்கள் எல்லாம்...
    முற்றிலுமாய் விளங்கிப்போனால்
    அந்த பாலகனும்
    நம்போல் பாடுகள் படக்கூடும்...
    விட்டு விடுங்கள்...
    அவன் அப்படியே இருக்கட்டும்
    யாரும் விளக்க முனையவேண்டாம்...
    அடம் பிடித்து அழுதுகொண்டு
    அடிவாங்கி பின் அதை மறந்து
    அடித்த அம்மாவின் முந்தானையிலேயே
    முகம் பதித்துஉறங்கி
    முரண்பாடுகள் எதுவுமில்லா
    முக்கியப்பருவம் இது...குழந்தைப்பருவம்..
    அவனுக்கு விளங்கவே வேண்டாம்
    அந்த முரண்.....
    சாகும்வரை தமிழ் பயின்று சாக வேண்டும் − என்
    சாம்பலிலும் தமிழ் மணந்து வேக வேண்டும்.

  8. #944
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    முரண் படாதபோது
    முரண் படுவது
    முரண்படுவதா...
    முரண்படாததா...

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

  9. #945
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் யவனிகா's Avatar
    Join Date
    22 Sep 2007
    Location
    கோவை
    Posts
    2,233
    Post Thanks / Like
    iCash Credits
    35,848
    Downloads
    29
    Uploads
    0
    முரண்படாததாய் எதிலும்
    முற்றிலும் புதியதாய்
    ஒற்றைச்சிந்தனை ஒன்று
    உருவானது...
    அதை கவிதையாய்த்தருவதா?
    உரைநடையில் உரைப்பதா?
    யோசித்து முடிப்பதற்குள்
    ஆயிரம் குரல்கள்...
    முரண்களின் முடிச்சில்
    சிக்கலில் சிந்தனை...
    சாகும்வரை தமிழ் பயின்று சாக வேண்டும் − என்
    சாம்பலிலும் தமிழ் மணந்து வேக வேண்டும்.

  10. #946
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    சிந்தனைச் சிக்கலிற்
    சிக்கியிருந்து
    சிந்தித்த சிந்தனை
    சிக்கியும் சிக்காமல்...

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

  11. #947
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் sarcharan's Avatar
    Join Date
    20 Dec 2005
    Location
    மும்பை
    Posts
    3,553
    Post Thanks / Like
    iCash Credits
    46,708
    Downloads
    290
    Uploads
    27
    சிக்காமல் இருக்கணும்
    காதலியும்
    காதலியின் காதல்
    கடிதங்களும்!!

    சிக்கினால்
    சிக்னலில் தான்
    வாழ்க்கை

  12. #948
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    வாழ்க்கை
    அழகை
    அழகை அணைத்து
    வாழ்வதிலும்
    அழ கை அணைக்க
    வாழ்வதே
    சிறப்பு...

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

Page 79 of 129 FirstFirst ... 29 69 75 76 77 78 79 80 81 82 83 89 ... LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •