Page 75 of 129 FirstFirst ... 25 65 71 72 73 74 75 76 77 78 79 85 125 ... LastLast
Results 889 to 900 of 1538

Thread: கவிச்சமர் - களம்

                  
   
   
  1. #889
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    நீ சிரித்த நாள்முதலாய்
    வீட்டில் தொடங்கி
    வீதியில் தொடர்ந்து
    வேலையிடம் வரை
    எனக்கு வேப்பிலையடிப்பதைப்
    பற்றியே பேச்சு....!!!
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  2. #890
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் யவனிகா's Avatar
    Join Date
    22 Sep 2007
    Location
    கோவை
    Posts
    2,233
    Post Thanks / Like
    iCash Credits
    35,848
    Downloads
    29
    Uploads
    0
    பேச்சுக்கு அடிமையாகிப்
    போனோம் நாம்.
    புகழ்ந்தோ,பரிகசித்தோ
    விமர்சித்தோ,விபரமின்றியோ
    ஏதாவது எப்பொழுதும்
    பேசிக்கொண்டிருக்கிறது
    மனமும் வாயும்.
    பேசுவதை குறைத்துத்தான்
    பார்க்கலாமென்றால்,நமக்குத்
    தலைகனத்துவிட்டதென்று
    ஊருக்குள்ளே புதுப்பேச்சொன்று
    புறப்படுகிறது...என்ன செய்ய?
    புலிவால் பிடித்த கதையாய்
    பேசப் பழகிய மனிதர் நிலை.
    சாகும்வரை தமிழ் பயின்று சாக வேண்டும் − என்
    சாம்பலிலும் தமிழ் மணந்து வேக வேண்டும்.

  3. #891
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    23 Dec 2009
    Posts
    1,465
    Post Thanks / Like
    iCash Credits
    59,869
    Downloads
    22
    Uploads
    0
    நிலை மாறும் உலகில்
    மனம் போன போக்கில்
    தினம் தோறும் செல்வோர்
    நிலையென்ன சொல்வீர்
    சிலையாகி நின்றால்
    தொலைந்திடும் வாழவே
    தலையாய் நீ யுணர்ந்து
    நல்வழி சொல்வீர்
    நாம் நேசிப்பவரால் மட்டுமே நம்மை அழவும், சிரிக்கவும் வைக்க முடியும்

  4. #892
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் யவனிகா's Avatar
    Join Date
    22 Sep 2007
    Location
    கோவை
    Posts
    2,233
    Post Thanks / Like
    iCash Credits
    35,848
    Downloads
    29
    Uploads
    0
    நல்வழி சொல்வீர்
    அடர்ந்த கானகத்தில்
    மருண்ட மான்குட்டி...
    இருண்ட வானத்தில்
    தொலைந்த விண்மீண்...
    நிறைந்த கரும்பலகையில்
    மறந்த கணக்கின் விடை...
    தொலைந்த பிள்ளையின்
    தூரத்து மலைவீடு..
    கொத்து மலர்களில்
    கூந்தலேறும் ஒற்றைப்பூ
    விடை அறியா கேள்விகள் பல
    வழி அறியாப்பயணமொன்றில்...
    சாகும்வரை தமிழ் பயின்று சாக வேண்டும் − என்
    சாம்பலிலும் தமிழ் மணந்து வேக வேண்டும்.

  5. #893
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் கௌதமன்'s Avatar
    Join Date
    29 Dec 2009
    Location
    தமிழகம்
    Age
    48
    Posts
    1,293
    Post Thanks / Like
    iCash Credits
    27,343
    Downloads
    2
    Uploads
    2
    சொல்வீர் நல்வழி
    சொன்னால் அவ்வழி
    செல்வேன் எந்தோழி!
    அவ்வழி தனிவழி
    அறிவின் புதுவழி
    என்றால் நன்றியின் நன்மொழி
    சொல்வேன் எந்தோழி!
    சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான்
    " நான் கொஞ்சம் முரண்பட்டவன்”
    எனது வலைப்பூ

  6. #894
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் பூமகள்'s Avatar
    Join Date
    10 Aug 2007
    Location
    பூக்கள் நடுவில்
    Posts
    6,617
    Post Thanks / Like
    iCash Credits
    72,958
    Downloads
    89
    Uploads
    1
    சொல்வேன் எந்தோழி
    இன்னும் உன் பற்றி
    செய்தி ஏதும் அறியேன் என்றே..!

    தெரிவித்தால் பிறர் மனம்
    கனக்கும் என நீயுணர்ந்தாய்..!

    உன் வலி பகிர இன்னும்
    என்னில் இடமுண்டென்று நீயறியிலையோ..?


    உனை அறிந்தோர் கொண்ட
    உன் பற்றிய கற்பனைகள்
    அப்படியே விட்டுவிடுகிறேன்...!!

    உன் பற்றி கேட்போரிடம்
    சொல்வேன் தோழி..!
    உன் பற்றிய செய்தி ஏதுமில்லையென்றே..!!
    -- பூமகள்.

    "விண்தாண்டும் வேலையின் கடிது - உன்
    உளக்கண் தாண்டும் வேலை..!!"


    பூமகள் படைப்புகள்


  7. #895
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் கௌதமன்'s Avatar
    Join Date
    29 Dec 2009
    Location
    தமிழகம்
    Age
    48
    Posts
    1,293
    Post Thanks / Like
    iCash Credits
    27,343
    Downloads
    2
    Uploads
    2
    செய்தி ஏதுமில்லையென்றே
    செய்திகளை உருவாக்கும் ஊடகங்கள்!

    நடிகையின் காதல், கூட்டணி குழப்பம்,
    அதிசிய மனிதன், பால் குடிக்கும் கற்சிலை
    என ஏராள செய்திகளை
    சேமிப்பில் வைத்திருக்கும்,
    வேறு செய்தி இல்லாத நிலையில்
    சேமிப்பை செய்தியாக்கும் ஊடகங்கள்
    பரபரப்பை உருவாக்கும்!

    இப்போதெல்லாம்
    சேமிப்பின் கையிருப்பு தேவைப்படாமல்
    இருக்கவே இருக்கிறது
    தினமும் ஒரு செய்தி!

    விலையேற்றம், தலைவர்கள் பேட்டி,
    கட்சிகள் போராட்டம், தேர்தல் கணிப்பு,
    ஊழல், இலவச அறிவிப்புகள்
    செய்திகளால் உறுதியாக நிற்கிறது
    நான்காவது தூண்!
    சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான்
    " நான் கொஞ்சம் முரண்பட்டவன்”
    எனது வலைப்பூ

  8. #896
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    நான்காவது தூண்....!!
    நடுநிலையில் நின்று
    சாயாது சரியாது
    சமநிலை காக்கவேண்டிய தூண்...
    விலைக்குப் போய்
    வெகுநாளாகிவிட்டது
    தலைவர்களின் பெயர்தாங்கி
    வெறும் அறிவிப்புப் பலகையாய்
    சாஸனக் கற்களாய்
    சமைந்து நின்றுவிட்டன..
    சுண்டிவிடும் காசுக்கு
    மண்டிபோடும் தூண்களாய்
    மாறிவிட்டன....!!!
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  9. #897
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சுகந்தப்ரீதன்'s Avatar
    Join Date
    23 Jun 2007
    Posts
    3,869
    Post Thanks / Like
    iCash Credits
    237,295
    Downloads
    69
    Uploads
    1
    மாறிவிட்டன...
    மண்ணின் மைந்தர்களின்
    கொள்கைளும் கோட்பாடுகளும்..!!
    இருந்தும் இயல்பாய்தான் இருக்கிறது
    மண்ணின் மணம் மட்டும்
    ஒவ்வொரு மாரியின்போதும்
    அதே வாசத்தோடும் நேசத்தோடும்..!!
    ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
    வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
    உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
    பழுதுண்டு வேறோர் பணிக்கு.
    -நல்வழி

  10. #898
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    23 Dec 2009
    Posts
    1,465
    Post Thanks / Like
    iCash Credits
    59,869
    Downloads
    22
    Uploads
    0
    நேசத்தோடும் பாசத்தோடும்
    வாசம் செய்யும் எந்தன் உள்ளம்
    வேசம் போட்ட மாந்தர்கள
    துவேசம் கொண்டு
    கோசமிட்டு நாசம் செய்யும்
    தேசத்தின் நிலை கண்டு
    கண்ணீர் வடிக்கிறதே...
    நாம் நேசிப்பவரால் மட்டுமே நம்மை அழவும், சிரிக்கவும் வைக்க முடியும்

  11. #899
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் யவனிகா's Avatar
    Join Date
    22 Sep 2007
    Location
    கோவை
    Posts
    2,233
    Post Thanks / Like
    iCash Credits
    35,848
    Downloads
    29
    Uploads
    0
    வடிக்கிறதேன்? மனமே நீ
    வழிகிற "தேன்"?
    பாறை மனம் கூட பாவை மேல்
    காதல் கொண்டால்
    கல்லிலும் தேன் வடியும்-பாகல்
    காயிலும் பால் ஒழுகும்
    பசியது மறந்து போகும்
    பாவி முகம் நினைத்து விட்டால்.
    கனவு கூட கவிதை பேசும்
    நினைவு எங்கோ நழுவிப்போகும்
    உறக்கம் அங்கே ஒழிந்து போகும்
    விழிப்பும் கூட வீணாய்ப் போகும்
    படித்ததெல்லாம் மறந்து போகும்
    பாவை மொழிவதெல்லாம் பாடமாகும்
    சாகும்வரை தமிழ் பயின்று சாக வேண்டும் − என்
    சாம்பலிலும் தமிழ் மணந்து வேக வேண்டும்.

  12. #900
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் பூமகள்'s Avatar
    Join Date
    10 Aug 2007
    Location
    பூக்கள் நடுவில்
    Posts
    6,617
    Post Thanks / Like
    iCash Credits
    72,958
    Downloads
    89
    Uploads
    1
    பாடமாகும் மொழிவதெல்லாம்
    பாவை தமிழ் மொழியாம்..!!
    மொழியன்னை மெச்சுவாள்
    நல்மொழி மொழிந்தீராயின்..
    எஞ்சி கெஞ்சி விஞ்சி
    மிஞ்சும் தமிழ் மெல்ல இனி
    வாழையடியாய் வாழவே..!!
    -- பூமகள்.

    "விண்தாண்டும் வேலையின் கடிது - உன்
    உளக்கண் தாண்டும் வேலை..!!"


    பூமகள் படைப்புகள்


Page 75 of 129 FirstFirst ... 25 65 71 72 73 74 75 76 77 78 79 85 125 ... LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •