Page 54 of 129 FirstFirst ... 4 44 50 51 52 53 54 55 56 57 58 64 104 ... LastLast
Results 637 to 648 of 1538

Thread: கவிச்சமர் - களம்

                  
   
   
  1. #637
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    நைஞ்சு போன ஆசைகள் சிலவும்
    நைவேத்தியம் ஆகின்றன
    உன்னைக் காண்கையில்..

    அரிசி கிளைஞ்ச கையோடு
    கோழி துரத்தும் நீ..

    கூட்டி முடிச்ச கையோடு
    விளக்குமாறை விசுறும் நீ..

    துவைச்ச உடுப்பை
    நந்தியாவட்டைப் பூச்செடியின் மேல்
    உதறும் நீ..

    இப்படி
    நைந்து விட்ட ஆசைகள் சிலவும்
    நைவேத்தியம் ஆகின்றன
    பனிப்புலத்தில் உனைக் காண்கையில்..

  2. #638
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஆதி's Avatar
    Join Date
    31 Oct 2007
    Posts
    6,826
    Post Thanks / Like
    iCash Credits
    99,183
    Downloads
    57
    Uploads
    0
    உனைக் காண்கையில்
    நானெண்ணியதை போன்றெந்த மாறுதலும் நிகழ்ந்ததில்லை
    எல்லாமும் அவையவையாகவே இருந்தன
    எனைத்தவிர்த்து..

    பேசி உன்னோடு போக்கிய பொழுதுகளினூடே
    அலுப்பும், சலிப்பும், மௌனமும் குறுக்கிடாமல் இல்லை..

    நீ அருகிருந்த தருணங்களிலும்
    மற்ற பெண்கள் மேல் பார்வை படராமலிருந்ததில்லை..

    முகில் மூடிய மழைகால வானமோ
    ஆலமரத்தில் பூக்கும் குயில் பாட்டோ
    ஒரு கவிதை புத்தகமோ
    உன் நினைவுகளையும் மீறி
    என் தனிமைகளை ஆக்ரமிக்காமல் இருந்ததில்லை..

    உன்னைவிடவும் அதிகமாய் சிலவற்றை
    நான் நேசிக்காமலில்லை
    என்றாலும்
    எனை ஈர்க்கும் யாவற்றையும் விட
    உன் மீதொரு நிரந்தரமான பிடிப்பு
    எனக்கில்லாமலும் இல்லை..
    அன்புடன் ஆதி



  3. #639
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் Nivas.T's Avatar
    Join Date
    18 Mar 2010
    Location
    தாய்த்தமிழ்நாடு
    Posts
    2,949
    Post Thanks / Like
    iCash Credits
    20,125
    Downloads
    47
    Uploads
    2
    இனியும் சொல்லாதீர்கள்....

    நாம் ஓர் இனம்
    நாம் ஓர் குலம்
    என்று.....

    அழிவை தந்துவிட்டு
    கண்ணீர் அஞ்சலி
    ஒரு கேடு

    துக்கம் தந்துவிட்டு
    மனத்துயரம் ஒரு கேடு

    மதிகெட்ட மாந்தர்களே.........
    த.நிவாஸ்
    வீழ்வது நாமாய் இருப்பினும் வாழ்வது தமிழாய் இருக்கட்டும்

  4. #640
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    Quote Originally Posted by ஆதன் View Post
    உனைக் காண்கையில்
    நானெண்ணியதை போன்றெந்த மாறுதலும் நிகழ்ந்ததில்லை
    எல்லாமும் அவையவையாகவே இருந்தன
    எனைத்தவிர்த்து..

    பேசி உன்னோடு போக்கிய பொழுதுகளினூடே
    அலுப்பும், சலிப்பும், மௌனமும் குறுக்கிடாமல் இல்லை..

    நீ அருகிருந்த தருணங்களிலும்
    மற்ற பெண்கள் மேல் பார்வை படராமலிருந்ததில்லை..

    முகில் மூடிய மழைகால வானமோ
    ஆலமரத்தில் பூக்கும் குயில் பாட்டோ
    ஒரு கவிதை புத்தகமோ
    உன் நினைவுகளையும் மீறி
    என் தனிமைகளை ஆக்ரமிக்காமல் இருந்ததில்லை..

    உன்னைவிடவும் அதிகமாய் சிலவற்றை
    நான் நேசிக்காமலில்லை
    என்றாலும்
    எனை ஈர்க்கும் யாவற்றையும் விட
    உன் மீதொரு நிரந்தரமான பிடிப்பு
    எனக்கில்லாமலும் இல்லை..
    எனக்கில்லாமலும் இல்லை
    உன்மீதான ஈர்ப்பைத்தாண்டிய
    விரோதமும் குரோதமும்!

    வசியம் செய்து உன் வலையில் வீழ்த்தி
    மெல்ல மெல்ல விழுங்கிக்கொண்டிருக்கிறாய்
    ஒரு வல்லிய மலைப்பாம்பினைப்போல்!

    அறிந்தும் உன்னிடமிருந்து
    விடுவிக்க முயலாமல்
    அமைதியாயிருக்கும் என்னைப் பார்த்து
    வெற்றிப்பெருமிதத்துடன் நகைக்கிறாய்!

    தாராளமாய் நகைத்துக்கொள்!
    இன்னும் சில கணத்தில்
    உன் வயிற்றைக்கிழித்து
    வந்து குதிப்பேன், வாதாபி போல்!
    அதுவரையிலும்……..
    பிழைத்துப்போ!

  5. #641
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் Nivas.T's Avatar
    Join Date
    18 Mar 2010
    Location
    தாய்த்தமிழ்நாடு
    Posts
    2,949
    Post Thanks / Like
    iCash Credits
    20,125
    Downloads
    47
    Uploads
    2
    பிழைத்துப்போ தமிழே! பிழைத்துப்போ!
    உன்னை அழிக்க ஆயிரம் அரிவாள்!
    அதனை எவர் இங்கே அறிவார்!
    ஆயிரம் ஆண்டுகள் கடந்தவள் நீ!
    காவிரிக் கரையில் வளர்ந்தவள் நீ!
    உன்னை அழிக்க வந்தவர் எவரும்!
    பிழைத்ததில்லை என்பதை உலகம் அறியும்!
    பிழைத்துப்போ தமிழே! பிழைத்துப்போ!
    இன்னும் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள்
    தழைத்துப்போ!
    நம்மினத்தை அழைத்துப்போ!
    த.நிவாஸ்
    வீழ்வது நாமாய் இருப்பினும் வாழ்வது தமிழாய் இருக்கட்டும்

  6. #642
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    அழைத்துப்போ அன்பே, இந்த
    உயிர்க்கூட்டையும் உன்னோடு!

    இமை தழுவாத பொழுதுகளில்
    எப்படியோ உட்புகுந்து
    என் இதயத்தைப் பறித்துவிட்டாய்!
    இயங்குகிறேன் துடிப்பின்றி!

    இரக்கமில்லாமல் என்
    உறக்கத்தை ஆட்கொண்டாய்!
    உலவுகிறேன் நடுநிசியில்!
    கண்விழித்துக் காணும் கனவுகளையும்
    நீயே கைவசப்படுத்துகிறாய்!

    இன்னும் எனக்கென்ன மிச்சம்,
    என்னுடையதென்று உரிமை கொண்டாட?
    கொஞ்சங்கொஞ்சமாய்க் கூறுபோடாமல்
    மொத்தமாய் கவர்ந்துபோ!
    மரத்துப்போன உணர்வோடு வாழ
    மரப்பாச்சி அல்லவே நான்!

  7. #643
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    நான்
    என்னைக் கண்டது
    உன்னைக் கண்டுதான்.

    பூக்களின் புன்னகை பறித்து
    ஓரு நகை செய்தேன்
    உன்னுதட்டில் பூட்டவென..


    மின்மினிகளைத் திரட்டி ஒரு
    விண்மினி செய்தேன்
    உந்தன் கண்களில் பொருத்தி விடலாமென..

    தேமாக்கள் தேர்ந்தெடுத்து
    பாதைகள் அமைத்தேன்
    பாதங்களை நீ பதிப்பாயென..

    கார்த்திகை மலர்கள் கவர்ந்தொரு
    மாலை கோர்த்தேன்
    கார் திகை தோகையில் சூட்டவென..

    வண்ணத்துப் பூச்சிகளின்
    நிறங்களைச் சுரண்டியொரு
    கலவை கண்டு பிடித்தேன்
    உடலில் நீ பூசிக்கொள்வாயென..

    அத்தனையும் புறக்கணித்து
    ஒருக்களித்துப் படுத்துக் கொண்டாய்..

    அப்போதுதான் கண்டேன்
    உன்னையே சுற்றிச் வரும் என்னையும்
    உன்னைச் சுற்றி வரும் கனவுகளையும்..

    குழந்தைகளின் கனவுகள்
    என்றுமே வித்தியாசமானவைதான்
    வித்தானவைதான்..

  8. #644
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் Nivas.T's Avatar
    Join Date
    18 Mar 2010
    Location
    தாய்த்தமிழ்நாடு
    Posts
    2,949
    Post Thanks / Like
    iCash Credits
    20,125
    Downloads
    47
    Uploads
    2
    வித்தானவைதான்..

    ஒவ்வொரு வெற்றிக்கும்
    உழைப்புகள் வித்தானவைதான்..

    உழைப்பிற்கு கொண்ட
    உறுதிகள் வித்தானவைதான்..

    வெல்லும் உறுதிக்கு
    நம்பிக்கைகள் வித்தானவைதான்..

    இன்றே நம்பிக்கை வித்திடு
    வெற்றியின் விளிம்பை தொட்டிடு........
    த.நிவாஸ்
    வீழ்வது நாமாய் இருப்பினும் வாழ்வது தமிழாய் இருக்கட்டும்

  9. #645
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    வெற்றியின் விளிம்பைத் தொட்டிடுவேனென்று
    வெறியுடன் முன்னேறியவேளை....
    சரேலென பின்னிழுக்கப்பட்டேன்,
    சகாயக்கரமொன்றால்!

    சாவுகிராக்கியென்றொரு
    சரளவார்த்தைப் பிரயோகத்தை
    சங்கடமாய் ஏற்று
    சடுதியில் மென்று துப்பினேன்!

    சாலையின் நடுவில் கிடக்கும்
    காலித் தண்ணீர்ப்பாக்கெட்டுகளுக்காக
    காலையிலிருந்து எத்தனைப் பிரயத்தனம்?

    அலுப்பின்றிச் சீறும் வாகனங்களை
    ஆயாசத்துடன் வெறித்தபடியே
    அடுத்த பாய்ச்சலுக்குத் தயாராகிறேன்!

  10. #646
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    அடுத்த பாய்ச்சலுக்குத்
    தயாராகிறேன்
    எனக்குள் நான் பதுங்கிக் கொண்டு.

    தெத்தி நீண்டிருக்கும் கோரப்பற்களை
    அணைத்துக் கொள்கின்றன
    உதடுகள்
    குஞ்சினைக் காக்கும் கோழியைப் போன்று.

    கூர்ந்து வளைத்திருந்துக்கும் நகங்களை
    உள்ளிழுத்துக் கொள்கின்றன
    பாதங்கள்
    நத்தையின் பொறிமுறையைப் போன்று..

    நாவோ
    ஒட்டி ஒளிந்து கொள்கின்றது
    குழந்தையின் பயத்துடன்..

    எந்த நிமிடமும்
    எனக்குள் பதுங்கிய நான்
    எழுந்திடக் கூடுமெனும்
    பதட்டமும் பயமும் கலந்துவிட
    பாயத் தயாராகிறேன்
    அடுத்தவன் கனவுகள் மேல்..

  11. #647
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    அடுத்தவன் கனவுகள் மேல்
    அப்படியொன்றும் அக்கறையில்லை
    அதுவரை எனக்கு!

    உடுப்புக்கும் இருப்புக்கும் வழியின்றி
    ஓயாமல் உழல்பவனிடம்
    பிடுங்குவதற்கு பெரிதாயொன்றும்
    இருந்திருக்கவுமில்லை அந்நேரம் வரை!

    ஆட்சியைப் பிடிப்பதாகவும்,
    அரியணை ஏறுவதாகவும்
    அடிக்கடி அவன் காணும்
    அதிசயக்கனவுகள் பற்றித் தெரியவர,
    கன்னக்கோலிட்டேனும்,
    அக்கனவுகளைக் கைப்பற்றத்
    தலைப்பட்டேன்,
    நித்தம் என் நித்திரை தொலைத்து!
    Last edited by கீதம்; 26-08-2010 at 05:12 AM.

  12. #648
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    நித்திரை தொலைத்து
    இருட்டைத் தின்று
    நிலவைக் குடித்து
    நிசப்தத்தில் கை கழுவி
    நட்சத்திரங்களை மெல்கையில்
    தூரத்தே தெரிகிறது விடியல்..
    சட்டென்று
    வெகு அருகினில் வந்து விடுகிறது
    தொலைந்து போன நித்திரை..

Page 54 of 129 FirstFirst ... 4 44 50 51 52 53 54 55 56 57 58 64 104 ... LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •