Page 51 of 129 FirstFirst ... 41 47 48 49 50 51 52 53 54 55 61 101 ... LastLast
Results 601 to 612 of 1538

Thread: கவிச்சமர் - களம்

                  
   
   
  1. #601
    இனியவர் பண்பட்டவர் வசீகரன்'s Avatar
    Join Date
    05 Jun 2007
    Location
    சென்னை
    Posts
    688
    Post Thanks / Like
    iCash Credits
    23,167
    Downloads
    15
    Uploads
    0
    எஞ்சி நிற்கிறது...!

    மறந்துவிட்டதாய்
    சொன்ன
    ஏக்கங்களை...
    துறந்துவிட்டதாய்
    சொன்ன
    ஏமாற்றங்களை...

    நீங்கிவிட்டதாகவெண்ணிய
    உன் நினைவுகளை...

    நகைக்கிறது என் மனம்
    நடிக்கதெரியாமல் அரங்கம் அமைத்த
    என்னைப் பார்த்தபடி..!
    துன்பங்களை தரும் கஷ்டங்கள் மட்டும் இல்லையென்றால்...
    மனிதனுக்கு வாழ்க்கையில் போராடும் எண்ணமே இல்லாமல் போய்விடும்!

  2. #602
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    என்னைப் பார்த்தபடி
    விலகிச் செல்கிறது ஒரு
    வெண் மேகம்
    இன்னும் பார்த்திருந்தால்
    கறுத்துவிடுவோமோ என..
    என் நிறத்தை அஞ்சியபடி
    நிலவும், நட்சத்திரங்களும் கூட*
    இருளில் மறைந்தன*
    உருவில் கருமையானாலும்
    ஒன்றில் எனக்குப் பெருமை
    நிஜத்திலும், நிழலிலும்
    எப்போதும் நான் கருமை...
    நிறம் மாறாதிருப்பதில் பெருமை...!!!
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  3. #603
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சரண்யா's Avatar
    Join Date
    29 Aug 2009
    Posts
    2,305
    Post Thanks / Like
    iCash Credits
    25,333
    Downloads
    19
    Uploads
    0
    நிறம் மாறாதிருப்பதில் பெருமை...!!!
    நிறமென்பதை குணம் என்றெடுத்து
    தரமென்பதை பணம் என்பதால் அங்கே
    மாறாதிருந்தால் வென்றிடும் திறமை.
    நாம் பலருக்கு உதவி செய்வோம்
    நம் வாழ்வும் உயர்ந்திடட்டும்.

  4. #604
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் sarcharan's Avatar
    Join Date
    20 Dec 2005
    Location
    மும்பை
    Posts
    3,553
    Post Thanks / Like
    iCash Credits
    46,708
    Downloads
    290
    Uploads
    27
    திறமை!
    தைரியம்!
    துணிவு!

    திரைப்படங்கள்
    அல்ல மானிடா..

    மதி கொண்டு,
    விதி வெல்ல
    விண்ணகன் தந்த
    ஆயுதங்கள்!

  5. #605
    இனியவர் பண்பட்டவர் வசீகரன்'s Avatar
    Join Date
    05 Jun 2007
    Location
    சென்னை
    Posts
    688
    Post Thanks / Like
    iCash Credits
    23,167
    Downloads
    15
    Uploads
    0
    ஆயுதங்கள் பாதுகாப்பில்
    மருட்சியுடன் பூக்கும்
    பூக்கள்

    அமிலங்கள் மிதக்க
    விஷம்
    தோய்ந்து வரும் நதி..

    பாஸ்பரஸின் வாடை
    கலந்து
    கொலைக்கிருமிகளுடன்
    அலையும் காற்று..

    கொடூரங்களின் அசுரப்பிடியில்
    முழுநீள இரவுகள்..

    வக்கிர மனிதர்களின் முன்னால்
    வாழத் திராணியற்று
    கொலையுண்டது

    இயற்கை..!
    துன்பங்களை தரும் கஷ்டங்கள் மட்டும் இல்லையென்றால்...
    மனிதனுக்கு வாழ்க்கையில் போராடும் எண்ணமே இல்லாமல் போய்விடும்!

  6. #606
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஆதி's Avatar
    Join Date
    31 Oct 2007
    Posts
    6,826
    Post Thanks / Like
    iCash Credits
    99,183
    Downloads
    57
    Uploads
    0
    ஆயுதங்கள்
    கண்டு பிடிக்கிறோம்
    சோதனை செய்கிறோம்
    உற்பத்தி செய்கிறோம்

    எதிரிகளிடம் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக..

    வல்லரசாய் திகழ்வதற்காக..

    சரித்திரம் படைப்பதற்காக..

    என்கிறோம்.


    ஒருத்தன் ஒன்றையும் கண்டுபிடிக்கவில்லை
    சோதனை செய்யவில்லை
    உற்பத்தியும் செய்யவில்லை..
    ஆனால்
    வரலாற்றை இரண்டாக பிரித்தான்..

    இன்னொருத்தன்
    உண்மையை கண்டுபிடித்தாம்
    உண்மையை சோதனை செய்தான்
    உண்மையை உற்பத்தி செய்தான்
    மகாத்மாவானான்..

    ஆயுதங்கள்
    ஒன்றையும் சாதித்துவிடவில்லை
    ஏசுவையும், மாகத்மாவையும் கொன்றதை தவிர..
    அன்புடன் ஆதி



  7. #607
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    கொன்றதைத் தவிர,
    வென்றவை ஏது..?

    மண்டையோடுகளையும்
    எலும்புக்கூடுகளையும் கூட
    விட்டுவைக்காது
    நொருக்கித் துகள்களாக்கிவிட்டும்,
    வசந்தபூமியைக்
    கருக்கி மயானமாக்கிவிட்டும்,
    இன்னமும் அடங்கவில்லையா
    உங்கள் கொலைவெறி..?

    பேரவலம் ஒன்றைத் தந்ததைத்தவிர,
    வேறெதைத்தான் வென்றீர்கள்..?

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

  8. #608
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் sarcharan's Avatar
    Join Date
    20 Dec 2005
    Location
    மும்பை
    Posts
    3,553
    Post Thanks / Like
    iCash Credits
    46,708
    Downloads
    290
    Uploads
    27
    இயற்கை..!
    கடவுள் ஈந்த "டானிக்"
    உடைந்த மனதுக்கும்,
    உற்சாக மனதுக்கும்.

  9. #609
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் sarcharan's Avatar
    Join Date
    20 Dec 2005
    Location
    மும்பை
    Posts
    3,553
    Post Thanks / Like
    iCash Credits
    46,708
    Downloads
    290
    Uploads
    27
    வேறெதைத்தான் வென்றீர்கள்..?

    புரட்சி செய்வோம்!
    புவியை வெல்வோம்!

    வெல்வோம் என்றவர்களே
    எதை வென்றீர்கள்..?

    இயந்திர மனிதர்களாய்
    இல்வாழ்வு மறந்து..

    திரை கடல் ஓடி
    திரவியம் தேடி..

    உற்ற சுற்றம் மறந்து
    உல்லாசமாய் வாழ்ந்து

    "மானிட்டராய்" மாறும்
    மானிடர்க்கு மத்தியில்
    அடங்கிபோனதோ அறைகூவல்கள்?

  10. #610
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    அறைகூவல்கள்
    துன்பக் கதறல்களில்
    சப்தமிழந்துதான்விட்டன...
    சப்தநாடிகளும் அடக்கப்பட்டதாய்க்
    கெக்கெரிக்கும்
    கொலைகாரரின் கூச்சல்கள்
    அறைந்தாலும்,
    இந்தச் சிலுவையிலிருந்தும்
    ஓர் உயிர்ப்பு
    மீண்டு வரும்...

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

  11. #611
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் sarcharan's Avatar
    Join Date
    20 Dec 2005
    Location
    மும்பை
    Posts
    3,553
    Post Thanks / Like
    iCash Credits
    46,708
    Downloads
    290
    Uploads
    27
    மீண்டு வரும்..
    அக்(கி)னி(க்)கவிதைகள்
    மன்ற மனங்களில்
    மறுமலர்ச்சி உண்டாக்க
    மீண்டு(ம்) வலம் வரும்!

    காத்திரு மனமே!
    கவிதை தென்றல்
    கடல் போல் பாயும்
    கண்ணிமைக்கும் நேரத்தில்...
    Last edited by sarcharan; 18-05-2010 at 01:45 PM.

  12. #612
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    கண்ணிமைக்கும் நேரத்தில்
    கண்மூடிப்போன உறவுகளே...
    உங்களுக்கு,
    ஆண்டுத் திவசம் செய்ய
    அனுமதியில்லை...

    கண்ணீர் துளிர்க்கின்றோம்..,
    அதிற் கரையட்டும்
    உங்கள் அஸ்திகளேனும்...

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

Page 51 of 129 FirstFirst ... 41 47 48 49 50 51 52 53 54 55 61 101 ... LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •