Page 127 of 129 FirstFirst ... 27 77 117 123 124 125 126 127 128 129 LastLast
Results 1,513 to 1,524 of 1538

Thread: கவிச்சமர் - களம்

                  
   
   
  1. #1513
    இளையவர் பண்பட்டவர்
    Join Date
    10 Aug 2010
    Posts
    78
    Post Thanks / Like
    iCash Credits
    31,472
    Downloads
    0
    Uploads
    0
    வேண்டுமென வேண்டிய அனைத்தும்
    வேண்டியவன் பெற்றதில்லை
    வேண்டியவன் பெற்றதெல்லாம்
    வேண்டியவையாக இல்லை
    வேண்டியவையான அனைத்தும்
    வேண்டியவன் கேடகவில்லை
    வேண்டியவன் கேட்டதெல்லாம்
    வேண்டியனவாக இல்லை
    வேண்டுமென்று வேண்டுமென்று
    வேண்டியவன் வேண்டியது
    வேண்டியதா என்பதையே
    வேண்டியவன் உணரவில்லை
    வேண்டியவன் வேண்டியதை உணராது வேண்டும் போது
    வேண்டுதல் வேண்டாமை இலான் அடியில்
    வேண்டுதலாய் செல்வதில்லை

  2. #1514
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    46,277
    Downloads
    183
    Uploads
    12
    செல்வதில்லை என்று
    உறுதியுடன் இருந்த கால்கள்

    வருவதில்லை என
    விலகிச் சென்ற பிறகும்

    கண்கள் இங்கேயே பார்த்துக்கொண்டிருக்கின்றன
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  3. Likes ஆதவா liked this post
  4. #1515
    இளையவர் பண்பட்டவர்
    Join Date
    10 Aug 2010
    Posts
    78
    Post Thanks / Like
    iCash Credits
    31,472
    Downloads
    0
    Uploads
    0
    இங்கேயே பார்த்தேத்தான் இருக்கின்றன கண்கள்
    இங்கேயே பூத்தேத்த்தான் இருக்கின்றன நினைவுகள்
    இங்கேயே ஒரு காவல் நாய் போல
    படுத்தேத்தேன் இருக்கிறது நெஞ்சம்
    எங்கே இல்லாத போதும்
    இங்கே இல்லாமல் போவது இல்லை
    இங்கே இல்லாமல் போனதும் இல்லை

  5. #1516
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    46,277
    Downloads
    183
    Uploads
    12
    இல்லயென்று உன் தலை
    அசைந்தாடுகின்ற போது
    உன் காது வளையங்கள்
    ஆமாமெனச் சொல்லிச்
    சிரிக்கின்றன!
    Last edited by ஆதி; 30-04-2015 at 11:16 AM. Reason: To remove duplicate post
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  6. #1517
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    சிரிக்கின்றன சில கசப்பான உண்மைகள்
    சமூக வீதியில் சிதறிகிடக்கும் அவலங்களைப் பார்த்து,
    பொய்களின் பேயாட்டம்...நியாயங்களின் தள்ளாட்டம்
    இருந்தும் இன்னமும் மழை பெய்கிறது சரியாய் வாழும் சிலரால்...!
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  7. #1518
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    46,277
    Downloads
    183
    Uploads
    12
    சிலரால் பேசப்படும் தர்மங்கள்
    சிலரால் செய்யப்படும் தியாகங்கள்
    சிலரால் எண்ணப்படும் நன்றிகள்
    சிலரால் உணரப்படும் அன்புகள்
    சிலவாக இருந்தாலே சிறப்பு!
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  8. #1519
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    சிறப்பு சிறகு விரிக்கையில்
    தொலைந்து போவது,
    உழைப்பும் விலையும்
    மட்டுமல்ல,
    அந்த சிறப்பின் திறப்பும் கூட...!!

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  9. #1520
    இளையவர் பண்பட்டவர்
    Join Date
    10 Aug 2010
    Posts
    78
    Post Thanks / Like
    iCash Credits
    31,472
    Downloads
    0
    Uploads
    0
    சிறப்பு மிக்க
    அத்தனை மேன்மைகளாலும் அமைந்தது
    உன் ஆசனம்
    சிறப்பு மிக்க
    அத்தனை தூய்மைகளாலும் வடிவமைக்கப்பட்டது
    உன் ஆடை
    சிறப்பு மிக்க
    அனைத்து நறுமணங்களும் கமழ்வது
    உன் பெயர்
    சிறப்பு மிக்க
    அனைத்து ஆபரணங்களிலும் மிளிர்வது
    உன் அழகு
    சிறப்பு மிக்க
    அனைத்து நேசத்திலும் தெரிவது
    உன் கண்கள்
    சிறப்பு மிக்க
    அனைத்து கருணைகளிலும் காண்பது
    உன் கைகள்
    சிறப்பு மிக்க
    அனைத்து புலவர்களாலும் நிகழ்ந்தது
    உன் வளர்ப்பு
    சிறப்பு மிக்க
    அனைத்து மாமன்னர்களாலும் விரிந்தது
    உன் பரப்பு
    சிறப்பு மிக்க
    அனைத்து நூல்களாலும் உண்டானது
    உன் செழிப்பு
    நீ ஒரு காந்தபுலம்
    நீ ஒரு ஆள்கடத்தி
    நீ ஒரு ரசவாதம்
    நீ ஒரு மாயநீலம்
    ஒரு சூனியக்காரியின்
    அத்தனை மந்திரங்களும் கட்டப்பட்டது
    உன் நிலத்தின் சுவர்

  10. #1521
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    46,277
    Downloads
    183
    Uploads
    12
    சுவர்
    சாய்ந்து அழும்பொழுது தோழன்
    பெயரை கிறுக்கிய போது கோட்டை
    கிரிக்கெட்டிற்கு ஸ்டம்ப்

    பல நேரங்களில்
    பெரியவர்களுக்கு
    அதனருமை தெரிவதே இல்லை..

    அதற்கும் எனக்கும்
    இப்போது ஒரே பெயர்
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  11. #1522
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    Quote Originally Posted by தாமரை View Post
    சுவர்
    சாய்ந்து அழும்பொழுது தோழன்
    பெயரை கிறுக்கிய போது கோட்டை
    கிரிக்கெட்டிற்கு ஸ்டம்ப்

    பல நேரங்களில்
    பெரியவர்களுக்கு
    அதனருமை தெரிவதே இல்லை..

    அதற்கும் எனக்கும்
    இப்போது ஒரே பெயர்

    பெயர் என்பது எதனைக் குறிக்கிறது?
    என்னை? என் உடலை? என் உயிரை?
    என் ஆளுமையை?
    எனக்கு நீ விதித்த மதிப்பை?
    (ஆனால்
    ஒருபோதும்
    பெயர் பெயரை மட்டுமே குறிக்கிறது
    என்று சொல்லாதே
    போலியாக இருந்துவிடும் பதில்)
    பெயர் என்பது உடையைப் போன்றது
    என் நிர்வாணத்தை மறைக்கும்
    சொல்லாடை.
    அது உடலுக்கு உடல்
    மாறிக் கொண்டேயிருக்கிறது
    அல்லது
    பெயருக்குப் பெயர்
    மாறிக் கொண்டேயிருக்கிறது உடல்
    பெயர் என்பது எதனையும் குறிப்பதில்லை
    என்னையுமில்லை,
    என்னுடலையுமில்லை
    அது ஒருபோதும்
    ஆடையின் இறுக்கமாக இருப்பதில்லை
    பெயர் என்பது
    பெயரையும் குறிப்பதில்லை.
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  12. Likes jaffy liked this post
  13. #1523
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    குறிப்பதில்லை வரலாறு
    சாமான்யனின் தோல்விகளையும் வெற்றிகளையும்
    தொடர் வெற்றிகளும் ஒரு சமயம் மறக்கப்படுகின்றன
    தொடர் தோல்விகள் மறைக்கப்படுகின்றன
    குட்டிச்சுவர் இடிந்தால் சம்பவம்
    கோட்டை இடிந்தால் சரித்திரம்
    கோட்டையாய் இருப்போம்
    இடிந்தாலும் வரலாறாய் வாழுவோம்...!!!
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  14. #1524
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    Quote Originally Posted by சிவா.ஜி View Post
    குறிப்பதில்லை வரலாறு
    சாமான்யனின் தோல்விகளையும் வெற்றிகளையும்
    தொடர் வெற்றிகளும் ஒரு சமயம் மறக்கப்படுகின்றன
    தொடர் தோல்விகள் மறைக்கப்படுகின்றன
    குட்டிச்சுவர் இடிந்தால் சம்பவம்
    கோட்டை இடிந்தால் சரித்திரம்
    கோட்டையாய் இருப்போம்
    இடிந்தாலும் வரலாறாய் வாழுவோம்...!!!
    வாழ்வோமென்ற சொல்
    அந்த ஒற்றைச் சொல்லுக்காகத்தான்
    நீ பிளந்து நிற்கும் மார்பில்
    குடியிருக்கிறேன்.
    உன் கடுஞ்சீற்றத்திற்கெல்லாம்
    பயப்படாதிருக்கிறேன்.
    நீ ரெளத்திரத்துடன் எறியும் நெருப்பை
    என் மார்போடு தழுவிக் கொள்கிறேன்.
    கோபக் கனலின் நடுக்கத்தில்
    உன் கூந்தலையே பற்றிக் கொள்கிறேன்
    ஆசுவாசப்படுத்திக் கொள்ள
    கொஞ்சம் அவகாசம் கொடு
    இன்னொரு சொல்லுக்காகவும்
    காத்திருக்கிறேன்.
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

Page 127 of 129 FirstFirst ... 27 77 117 123 124 125 126 127 128 129 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •