Page 104 of 129 FirstFirst ... 4 54 94 100 101 102 103 104 105 106 107 108 114 ... LastLast
Results 1,237 to 1,248 of 1538

Thread: கவிச்சமர் - களம்

                  
   
   
  1. #1237
    இனியவர் பண்பட்டவர்
    Join Date
    03 May 2012
    Location
    Bangalore
    Posts
    860
    Post Thanks / Like
    iCash Credits
    24,112
    Downloads
    7
    Uploads
    0
    சொல்லிவிடு நிலவே!
    அணுஅணுவாய் ஆவி பிரிந்திருக்க
    நொடிக்கொருமுறை இறக்கிறாள் என்று;

    சொல்லிவிடு நிலவே!
    பிள்ளைபோல் துள்ளித் திரிந்தவள்
    பிறர் கண்ணில் படுவதில்லை என்று;

    சொல்லிவிடு நிலவே!
    அவர்பெயர் உச்சரித்த இதழ்களுக்கு
    பிறர்பெயர் தெரியவில்லை என்று;

    சொல்லிவிடு நிலவே!
    காதலினைத் தாங்கிய இதயத்திற்கு
    பிரிவினைத்தாங்க பலமில்லை என்று;

    சொல்லிவிடு நிலவே!
    மணமுடிக்க வற்புறுத்திய உறவுகளிடம்
    பிணமாய்போக ஒத்துக்கொண்டாள் என்று;

    சொல்லிவிடு நிலவே!
    கண்ணாய் வளர்த்த பெற்றோர்களுக்கே
    கன்னியவள் கபடமானாள் என்று;

    சொல்லிவிடு நிலவே!
    அவர் ரசித்த விழிகளுக்கு
    கண்ணீர்தவிர வேறு கதியில்லை என்று;

    சொல்லிவிடு நிலவே!
    விட்டுச்செல்லும் உயிரைக் கட்டிவைப்பது
    காதலரவர் பொறுப்பு என்று;
    வல்லமை தாராயோ, இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்க்கே!

  2. #1238
    Banned
    Join Date
    28 Jan 2012
    Posts
    652
    Post Thanks / Like
    iCash Credits
    16,789
    Downloads
    0
    Uploads
    0
    பொறுப்பு என்று தெரிந்ததனால் தான்
    நீ இல்லா இடைப்பட்ட பொழுதுகளிலும்
    உன் நினைவுகளோடு தீரா காதலாய்
    உன் மீது வெறுப்பு சிறு தீப்பொறி அளவுமின்றி
    இன்னமும் துடிக்கின்றது இதயம், உன் நினைவுகளால் .

  3. #1239
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    உன் நினைவுகளால் வாழ்ந்துகொண்டிருக்கிறேன்
    உன் நினைவுகளால் மட்டுமே வாழ்ந்துகொண்டிருக்கிறேன்
    என்னை நீ வெறுத்தொதிக்கியதால்
    எனக்கு என் தேவதை கிடைத்ததால்
    நன்றியோடு உனை நினைக்கிறேன்...!!!
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  4. #1240
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    நன்றியோடு உனை நினைக்கிறேன்.

    கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த

    ஒன்றுநன்று உள்ளக் கெடும் அன்றோ?

    கொன்றாய் என் நேசம்!

    குற்றமில்லை ஏனெனில்...

    உயிர்ப்பித்திருந்தாய் என் சிநேகம்!

    விழி விலகிடும் காதலினும்

    தோள் விலகிடும் தோழமையின்

    வலி வலிதென்று உணரச் செய்தாய்!

    வாழிய தோழமையென்று

    வலிந்து கூத்தாடுகிறேன்,

    வழியும் விழிநீர் விலக்கி!

  5. #1241
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் கலைவேந்தன்'s Avatar
    Join Date
    03 Jun 2007
    Location
    புதுதில்லி
    Age
    61
    Posts
    2,017
    Post Thanks / Like
    iCash Credits
    22,662
    Downloads
    10
    Uploads
    0
    விழிநீர் விலக்கித்
    தேடுகின்றேன் உன்னை..
    விடியல் ஒன்றின்றி
    வாடுகின்றேன் தன்னில்..

    ஒழிந்தனன் இவனென்று
    ஓடிவிட்டாய் நீயும்..
    பழித்தவன் மீதே
    காதல் வைத்தாய்...

    இழிந்த நிலையெனும்
    பேரெடுத்தாய்..
    இனியும் விடியுமென்று
    நாடிவிட்டாய்..

    உனக்கான அனுதாப
    ஓலைகளுடன் நானும்
    ஒதுங்கி நின்றுகாத்திருப்பேன்
    வருவாய் நீயும்..!

  6. #1242
    Banned
    Join Date
    28 Jan 2012
    Posts
    652
    Post Thanks / Like
    iCash Credits
    16,789
    Downloads
    0
    Uploads
    0
    வருவாய் நீயென விழிபூத்து
    வழியும் விழி நீர் விளக்கி
    விழிநீர் வடிந்த அதே விழியால்
    விடிய விடிய உன் முகம் பார்பதுபோல்
    விநோதமாய் ,விவகாரமாய் ஒரு ஆசை .
    இத்தனை வீரியம் தோழமைக்கு
    உன்னில் உண்டெனும் விவரம் அறிந்திருந்தால்,
    கனவு தோழனாய் இருந்திட
    கடும் தவம் புரிந்திருப்பேன் ....

  7. #1243
    இனியவர் பண்பட்டவர்
    Join Date
    03 May 2012
    Location
    Bangalore
    Posts
    860
    Post Thanks / Like
    iCash Credits
    24,112
    Downloads
    7
    Uploads
    0
    கடும்தவம் புரிந்திருப்பேன் முற்பிறப்பில்
    கயல்விழியாள் காதலியைக் கிடைத்துவிட்டாள் இப்பிறப்பில்;
    பாவங்கள் பலவும் செய்திருப்பேன் முற்பிறப்பில்
    பாவையவள் கண்ணில் நீர்நிறைக்கிறாள் இப்பிறப்பில்;
    முத்துக்கள் சிந்தும்முன் ஏந்திடத்துடிக்குது ஐம்பொறி
    முட்டுக்கட்டையாய் தடுப்பது உன்வீட்டார் ஜாதிவெறி;
    வல்லமை தாராயோ, இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்க்கே!

  8. #1244
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    உன் வீட்டார் ஜாதிவெறி
    என என் செய்யும்...
    நீயும் நானும் மனித ஜாதி
    நம்மை இணைத்தது காதல் ஜோதி
    வீடில்லையேல் இருக்கிறது வீதி
    வீட்டார் இல்லையேல் நட்புள்ளது
    இல்லறம் தொடங்கி நல்லறமாய் நடக்கும்போது
    சொல்லிவிடுவோம் அவருக்கு சேதி...
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  9. #1245
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    சேதியொன்றை சொல்லிப்போகும் நிமித்தம்

    வாயிற் கதவைத் தட்டியதாய் சொன்னாய்.

    சொல்லும் சேதிக்காய் காத்திருந்ததென் ஆவல்.

    சொன்னாயோ, மறந்தாயோ தெரியவில்லை.

    கேட்டேனோ, மறந்தேனோ எனக்கும் தெரியவில்லை.

    வந்தாய்... சென்றாய்... சென்றபின்னும் எப்படி

    சிக்குண்டு கிடக்கிறாய் என் சிந்தனைப் பின்னலில்.

  10. Likes சிவா.ஜி liked this post
  11. #1246
    இனியவர் பண்பட்டவர்
    Join Date
    03 May 2012
    Location
    Bangalore
    Posts
    860
    Post Thanks / Like
    iCash Credits
    24,112
    Downloads
    7
    Uploads
    0
    சிக்குண்டு கிடக்கிறாய் என் சிந்தனைப் பின்னலில்
    வெளியேறச் சொன்னாலும் விடாபிடியாய் மறுக்கிறாய்
    நெருங்கி வந்தாலும் பேசாமலே கொல்கிறாய்
    கனவுகளுக்குள் எல்லாம் நீயே ஆக்ரமிக்கின்றாய்
    தொலைதூரம் இருந்துகொண்டே பொழுதெல்லாம் ஆடுவிக்கின்றாய்
    ஏங்குவதில்கூட சுகமிருக்குமென்று கற்றுத் தந்தவள்
    என் தேவதை நீ அல்லவா?
    வல்லமை தாராயோ, இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்க்கே!

  12. #1247
    Banned
    Join Date
    28 Jan 2012
    Posts
    652
    Post Thanks / Like
    iCash Credits
    16,789
    Downloads
    0
    Uploads
    0

    என் தேவதை நீ அல்லவா ?
    உனக்கு மட்டும் ஒரு ரகசியம் சொல்கிறேன்
    நான் எழுதும் கவிதைகள் எல்லாம் எல்லோராலும்
    ரசிக்கபடுவதன் ரகசியம் சொல்கிறேன் , கேளடி கண்மணி !
    என் ஒவ்வொரு கவிதையும் , ஒவ்வொரு வரிகளும்
    ஒவ்வொரு வாக்கியமும்,.ஒவ்வொரு வார்த்தையும்,
    ஏன் ஒவ்வொரு எழுத்தையும் , உயிர்க்கவிதையே !
    உன்னைவிட அழகாய் படைக்க எண்ணி,
    முனைந்தும் முடியாத தோல்வி கவிதைகளே !

  13. #1248
    இனியவர் பண்பட்டவர்
    Join Date
    03 May 2012
    Location
    Bangalore
    Posts
    860
    Post Thanks / Like
    iCash Credits
    24,112
    Downloads
    7
    Uploads
    0
    முனைந்தும் முடியாத தோல்விக் கவிதைகளே!!
    அழகுத் தமிழில் அடியெடுத்து வைத்தீர்கள்!
    அத்தனையும் பழமை என்றார்கள்!
    அன்பொன்றே ஆயுதம் என்றீர்கள்!
    அறியாமையும் வெளிப்பாடு என்றார்கள்!
    அடிமைத்தனத்தை அகற்ற முதல்விதை போட்டீர்கள்!
    அதிகாரவர்க்கத்தினர் வேரோடு அழித்தார்கள்!
    அழுவதை நிறுத்துங்கள்!
    இன்று ஏளனிப்பது
    நாளை ஏற்றுக்கொள்ளப்படும்
    நாளைமறுநாள் அதுவே கொண்டாடப்படும்!!
    அப்போது அவர்களே சொல்வார்கள்
    அதுதான் அழியாக் கவிதையென்று!
    வல்லமை தாராயோ, இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்க்கே!

Page 104 of 129 FirstFirst ... 4 54 94 100 101 102 103 104 105 106 107 108 114 ... LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •