ஆசை(த்) தமிழனுக்கு
அளவிட முடியாவாசை
ஆசையை அளக்கக் கற்றுக்கொள் தமிழா
அளவிட முடியா ஆசைகள்
அடைய முடியா நிராசைகள்
ஆசை(த்) தமிழனுக்கு
அளவிட முடியாவாசை
ஆசையை அளக்கக் கற்றுக்கொள் தமிழா
அளவிட முடியா ஆசைகள்
அடைய முடியா நிராசைகள்
அன்புடன்...
செல்வா
பின்னூட்டங்களில் முன்னுரிமை, மன்றப் படைப்புகளுக்கே...!
அடைய முடியா நிராசைகள்தான்
என் தமிழனின் ஆசைகள்
அவற்றை அப்படி ஆக்கியதே
என் தலைவர்கள்தான்...
தலைவனின் ஆசை நிறைவேறும்
தமிழனின் ஆசை ம்ஹீஹும்...
ஏன்... தமிழனின் குறிக்கோள்
திரைநாயகனின் கட் அவுட்டுக்கு
பாலாபிகேஷம் செய்வதிலும்
தலைவனுக்கு வாழ்க கோஷம்
எழுப்புவதிலும் அடங்கிவிடுகிறதே...!!
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
அடங்கிவிடுகிறதே ,அடங்கிவிடுகிறதே
என்று அழுந்த கூறியே, அடக்கும் முறையும்
ஒரு வகையினில் அடக்குமுறையே .
சிறு சிறு உதாரணங்களையே
பெரும்பான்மையாய் கருதினால் ,
பெரும்பான்மையினை என்ன வென்று கருதுவார் ??
தலைவர்களை தூற்றுவதிலே காலம்
கழிப்பதை காட்டிலும் , தமிழனை
போற்றிட வேண்டாம் , ஊக்கபடுத்தினால்
ஆக்கமாய் ஏதும் செய்திடலாமே !
ஆக்கமாய் ஏதும் செய்திடலாமே
ஆசைத் தமிழனின் ஆசைதான் அனைவருக்கும்
ஆனால் பெரும்பான்மை தமிழன்
முதுகெலும்புடைந்து...
முட்டிக்கொண்டு நிற்கிறானே
இலவசம் வாங்கும் வரிசையில்...
தலைவனைச் சார்ந்ததே இவ்வுலகு
அன்று அரசன்...இன்று அரசியல்வாதி
இதில் தன்மானமற்றத் தலைவனை
தூற்றாமல் போற்றுவர்களா?
அடக்கினால் யாரும் அடங்கிவிடுவதில்லை
அடங்கிப்போவதிலேயே ஆத்மதிருப்தியடையும்
அடிமைகளை என் செய்வது...???
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
அடிமைகளை என் செய்வது ??
ஒரு கோணத்தில் வேதனைக்குரிய கேள்வி .
மறு கோணத்தில் வேடிக்கையானதும் கூட .
வாழ்வின் ஓட்டத்தின் பொருட்டு
வேறு சில தேட்டத்தின் பொருட்டு
வெளிநாட்டில் வசித்து விதேசி காற்றினை
சுதந்திரமாய் சுவாசிக்கும் வாழ்க்கை வரம்
பலருக்கு வாய்க்காததும்,
சொந்த நாட்டில் ,சொந்த மக்களால்
அரவனைக்கபட்டும் சுதந்திர காற்றினை
சுவாசிக்க முடியாததும், வேடிக்கையும்
வேதனைக்குமான விளக்கங்கள் .
விளக்கங்கள் தேவைப்படாத
சிரிப்பாய் அது இருந்தது
அதில் அன்பிருந்தது
அதில் மழலையிருந்தது
அதில் காதல் இருந்தது
இதெல்லாம் அந்த பாவாடைச் சட்டை வயதில்
நீ சிரித்த சிரிப்பில் இருந்தது....
இப்போதைய உன் சிரிப்புக்கு
அர்த்தம் விளங்க அகராதி வேண்டும்
உன்னால் மட்டுமே இரவல் தரக்கூடிய
உன் உள்ளர்த்த அகராதி வேண்டும்...!!!
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
உன் உள்ளர்த்த அகராதி வேண்டும் !!!
ஆசை,பாசம்,நேசம்,அன்பு ,கருணை,
இரக்கம்,பரிவு ,மென்மை,பெண்மை,
தாய்மை,என ஒவ்வொரு உணர்விற்கும்
தேவைக்கேற்ற அளவு தனித்தனியாய்
அர்த்தம் அறிந்தே வைத்திருக்கின்றேன் .
இருந்தும் "காதல் "எனும் ஓர் உணர்வில்,
உன்னால் மட்டும் எப்படி அத்தனை
உணர்வுகளையும் உள் அடக்கி ஒற்றை
உணர்விற்குள் அர்த்தம் கொள்ள முடிகிறது ???
ஒற்றை உணர்வுக்குள்
அர்த்தம் கொள்ள முடிகிறது
உனக்குள் நானிருக்கிறேன் என்று
ஆயினும் அந்த உணர்வை வெளிக்காட்ட
இத்தனைக் காலம் எடுத்ததேன்...
எரிந்த திரி முடிந்த நிலையில்
எண்ணையூற்றி என்ன பயன்?
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
என்ன பயன் கண்டார்?
ஏராள செல்வம் கொண்டார்.
ஆனாலும் என்ன பயன் கண்டார்?
அரண்மனைபோல் வீடுண்டு,
அது தவிரவும் ஆறேழுவுண்டு.
வாயிலடைத்த வாகனமுண்டு.
வரிசைகட்டும் சேவகர் உண்டு.
மேனிமறைக்கும் ஆபரணமுண்டு.
மேட்டுக்குடி ஆடம்பரமுண்டு.
உண்டு உண்டு எல்லாம் உண்டு,
இல்லை எனவோர் சொல்லுமுண்டு.
தத்தைமொழிப் பிள்ளையில்லை.
தத்துப்பிள்ளையில் எண்ணமில்லை.
செல்லமாய் வளர்க்கிறார் பூனை!
செல்லுமிடந்தோறும் பிள்ளையென்கிறார் அவனை!
அம்மாவிடம் வாடா என்றழைத்து
ஆசையுடன் மடியிருத்திக் கொஞ்சுகிறார்.
ஆயிரமுறை கற்பித்தாலும்
அவன் அழைப்பென்னவோ எப்போதும்…
‘மியா….வ்!’
"மியாவ்" பூனைகளின் தாய் மொழி
இதனையே தலைப்பாய் கொண்டு
பதிப்பொன்று பதிப்போமே என்று
கையில் எழுத்தாணியை கொண்டு
அமர்ந்துவிட்டேன் அதிகாலையே இன்று
"மியாவ்" "மியாவ்" "மியாவ்" என முனுமுனுத்தே
வரிபதிக்க வார்த்தைகள் வந்ததோ இல்லையோ
என் வளர்ப்பு கிளி (மீட்டூ) க்கு புதியதாய்
ஒரு வார்த்தை பழகியது " மியாவ் "என்று .
மியாவ் என்ற அழைப்பை
சங்கேத மொழியாக்கினாயே...
சண்டாளா, பார்,
பூனை கத்தும்போதெல்லாம்
பேதை நான் பாய்ந்துவெளியோட,
புதிராய்ப் பார்த்தபடி
பயந்து வெருண்டோடுது பூனை!
பயந்து வெருண்டோடுது பூனை
சரி சரி ,பூனைக்கு ஐந்தறிவு தான்
சண்டாளி உனக்கென்ன நேர்ந்தது ??
பாவம் பயந்து கிடக்கும் பூனையை
பயம்புருத்துவானேன் ?? நஞ்சு கலப்பில்லா
பிஞ்சு நெஞ்சுக்கு சொந்தக்காரி தானே நீ
பின்பு ஏன்? இந்த கொலை வெறி ???
ஒருவேளை பூனையும், மாமனை போல
ஒரே(புலி) இனத்தை சார்ந்ததாலோ ??
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks