Page 98 of 129 FirstFirst ... 48 88 94 95 96 97 98 99 100 101 102 108 ... LastLast
Results 1,165 to 1,176 of 1538

Thread: கவிச்சமர் - களம்

                  
   
   
 1. #1165
  மன்றத்தின் தூண் பண்பட்டவர் கலைவேந்தன்'s Avatar
  Join Date
  03 Jun 2007
  Location
  புதுதில்லி
  Age
  60
  Posts
  2,017
  Post Thanks / Like
  iCash Credits
  21,582
  Downloads
  10
  Uploads
  0
  ஓ அப்படியா... மன்னியுங்கள் தயாளன். இனி கவனம் வைக்கிறேன்..!!

 2. #1166
  மன்றத்தின் தூண் பண்பட்டவர் கலைவேந்தன்'s Avatar
  Join Date
  03 Jun 2007
  Location
  புதுதில்லி
  Age
  60
  Posts
  2,017
  Post Thanks / Like
  iCash Credits
  21,582
  Downloads
  10
  Uploads
  0

  உண்மை புறத்தொதுக்கி ஊர்ப்பேச்சில் தான்மயங்கி
  தண்மை இழந்தே தரங்கெட்டு - பெண்மையதன்
  சீர்கெட்டுப் பேரிழந்து போயதாய பெண்ணினத்தால்
  ஊர்கெட்டுப் போகும் அறி.

 3. #1167
  மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
  Join Date
  23 Dec 2008
  Location
  ஆஸ்திரேலியா
  Age
  51
  Posts
  7,283
  Post Thanks / Like
  iCash Credits
  101,126
  Downloads
  21
  Uploads
  1
  அறிதுயில் கொள்ளும் அழகுக் கண்மணி,
  அறிவேனடி உன் அழும்பின் பின்னணி.

  ஆக்கித் தருவேனடி பணியாரம்
  ஏக்கந்தவிர்ப்பாய் என் மணியாரம்.

  கட்டாயம் பண்ணுவேன் சீராளம்,
  கணக்கற்று நீயுண்ணலாம் ஏராளம்.

  கூடவே செய்வேனடி போளி,
  கொஞ்சமும் செய்யவில்லை கேலி.

  பாலப்பமும் இடியாப்பமும் புட்டும்
  பக்குவமாய் உனக்கொருநாள் கிட்டும்.

  பொங்கல் பூரி லட்டோடு முறுக்கும்
  பாயசம் அதிரசம் தேன்குழலும் இருக்கும்.

  இட்டிலியும் தோசையும் வடையும்
  இன்னுமின்னும் உன்மனம் குடையும்
  பலகாரங்களின் பெயர்களைச் சொல்லிடுவாய்,
  சிலகாலத்தில் யாவும் சேரும் உன் வாய்!

  வாரி வளைத்துத் தின்றிட நீயும்
  வயிறு நிறைந்து உவப்பேன் நானும்.

  ஆசைப்படும் அத்தனையும் அல்லது
  அதில் ஒன்றேனும் கிடைக்கும் வரை...

  பாசமுடன் நான் கொடுக்கப்
  பருகிடுவாய் இப்பழங்கஞ்சி.
  பசியறியாக் கனவொன்றுக்குக்
  காத்திருப்பாய் கண் துஞ்சி!

 4. #1168
  Banned
  Join Date
  28 Jan 2012
  Posts
  652
  Post Thanks / Like
  iCash Credits
  15,849
  Downloads
  0
  Uploads
  0
  கண் துஞ்சி காத்திருப்பேன், கவலை வேண்டாம்
  கட்டுகட்டாய் கட்டவிழ்த்துவிட்ட கட்டுகதைக்காக
  இல்லாவிட்டாலும் , உன் கட்டிக்கரும்பு நான்
  பசியாற நீ கொண்ட அளவிட முடியா உன் அன்பிற்காக !

 5. #1169
  இனியவர் பண்பட்டவர் Dr.சுந்தரராஜ் தயாளன்'s Avatar
  Join Date
  17 Feb 2012
  Location
  Bangalore, Karnataka, India
  Age
  70
  Posts
  698
  Post Thanks / Like
  iCash Credits
  14,812
  Downloads
  0
  Uploads
  0
  அன்பிற்கு ஏங்குகின்ற ஆதரவற் றோரானார்
  என்புதனைத் தான்விட்டான் ஏதம்செய் சிங்களவன்
  உன்னைநோக் கும்பொழ்து ஊர்ந்தாய்நீ தில்லியிலே
  என்னநீ எம்தலைவன் போ

 6. #1170
  நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
  Join Date
  23 May 2007
  Location
  வளைகுடா நாடுகள்
  Posts
  15,360
  Post Thanks / Like
  iCash Credits
  176,696
  Downloads
  39
  Uploads
  0
  என்ன நீ எம் தலைவன் போ
  தொண்டனைவிட்டு கோடி சம்பாதித்து
  கொழுத்த தலைவனைக் கண்டேன்
  கோடியில் தன் பங்காய் முக்காலை
  விழுங்கின தலைவனைக் கண்டேன்
  மகன்களுக்கும், மகளுக்குமாய்
  பதவி வேண்டி தலைநகருக்கு
  தள்ளாத வயதிலும் தள்ளு வண்டியில் போன
  தலைவனைக் கண்டேன்......
  தொண்டனுக்காய்......குரல்தரா
  கொள்கை தாங்கிய தலைவனாய் உனைக் கண்டேன்
  என்ன நீ எம் தலைவன் போ.....!!!
  ஊரோடு ஒத்து வாழ்....
  இல்லையேல் தலைவனாய் நீ பாழ்...!!!
  அன்புடன் சிவா
  என்றென்றும் மன்றத்துடன்
  கவலை என்பது கைக்குழந்தையல்ல
  எல்லா நேரமும் தோளில் சுமக்க
  கவலை ஒரு கட்டுச் சோறு
  தின்று தீர்க்க வேண்டும் அல்லது
  பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

 7. #1171
  இனியவர் பண்பட்டவர் மஞ்சுபாஷிணி's Avatar
  Join Date
  02 Aug 2009
  Location
  குவைத்
  Age
  54
  Posts
  980
  Post Thanks / Like
  iCash Credits
  13,945
  Downloads
  13
  Uploads
  0
  நீ பாழ் ஆகும் நிலையைக் காண்
  நீ பாழாக்கும் உன் வாழ்க்கை காண்
  நற்சிந்தனைப்போற்றும் வழியில் நடந்து
  கங்கை நீராய் களங்கம் கரைத்து
  தூய்மையாய் அன்பை பெருக்கு.....
  மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானரதூதமுக்யம் ஸ்ரீராமதூதம் சரணம் ப்ரபத்யே: 8. #1172
  மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
  Join Date
  23 Dec 2008
  Location
  ஆஸ்திரேலியா
  Age
  51
  Posts
  7,283
  Post Thanks / Like
  iCash Credits
  101,126
  Downloads
  21
  Uploads
  1
  தூய்மையாய் அன்பைப் பெருக்கினாய்!
  தாய்மையாய் உன்னை உருக்கினாய்!
  என்ன செய்து என்ன?
  என்னை உணரா என்னால்
  எண்ணிலா துயரம் கொண்டாய்!
  வேறென்ன சுகம் கண்டாய்?
  இதயம் நுழைந்த என்னை
  இறுகக்கட்டிக்கொண்ட உன்னை
  விலக்கி வெளியேறுகிறேன்,
  விலகி வழிமாறுகிறேன்.
  இனியேனும் இதம்தரட்டும்
  இசைவான பொழுதுகள் யாவும்.
  உன்மனம் கிழித்துக்கொண்டிருந்த
  ஊசிமுனை வார்த்தைகள்
  இனி என் உதடு தைக்கட்டும்.

 9. #1173
  மன்றத்தின் சுடர் பண்பட்டவர் பூமகள்'s Avatar
  Join Date
  10 Aug 2007
  Location
  பூக்கள் நடுவில்
  Posts
  6,617
  Post Thanks / Like
  iCash Credits
  71,918
  Downloads
  89
  Uploads
  1
  இனி என் உதடு தைக்கட்டும்..
  இதமான பார்வையில்லை..
  இனிப்பான நினைவுமில்லை..
  கானல் போல் கலைந்த நட்பு..
  கனவிலும் வர மறக்கட்டும்..

  இனிதான நட்பிங்கு..
  பிரிவுக் கோபம்
  சாபமாகும் முன்
  என் உதடு தைக்கட்டும்
  நல்நட்பு வாழட்டும்...!
  -- பூமகள்.

  "விண்தாண்டும் வேலையின் கடிது - உன்
  உளக்கண் தாண்டும் வேலை..!!"


  பூமகள் படைப்புகள்


 10. #1174
  மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
  Join Date
  21 Apr 2007
  Age
  43
  Posts
  9,836
  Post Thanks / Like
  iCash Credits
  77,924
  Downloads
  100
  Uploads
  0
  வாழட்டும் உலகம்
  என்றென்றும் எம்மை
  உள்ளிருத்திக்கொண்டு...
  இப்படிக்கு..,
  முள்ளிவாய்க்கால் உடலங்கள்...

  "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
  தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

 11. #1175
  நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
  Join Date
  23 May 2007
  Location
  வளைகுடா நாடுகள்
  Posts
  15,360
  Post Thanks / Like
  iCash Credits
  176,696
  Downloads
  39
  Uploads
  0
  முள்ளிவாய்கால் உடலங்கள்
  சொல்லுகிறது மனிதமின்மையை
  உலகமே பார்க்கட்டும்...
  கொடுமைகள் செய்வதை விட மாட்டோம்
  இப்படிக்கு இலங்கை....!!!!!
  அன்புடன் சிவா
  என்றென்றும் மன்றத்துடன்
  கவலை என்பது கைக்குழந்தையல்ல
  எல்லா நேரமும் தோளில் சுமக்க
  கவலை ஒரு கட்டுச் சோறு
  தின்று தீர்க்க வேண்டும் அல்லது
  பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

 12. #1176
  Banned
  Join Date
  28 Jan 2012
  Posts
  652
  Post Thanks / Like
  iCash Credits
  15,849
  Downloads
  0
  Uploads
  0
  இப்படிக்கு இலங்கை என முடிப்பதையே
  வழக்கமாய் கொண்டதனால் தானோ
  நம் கதை முடிந்து கொண்டே இருக்கின்றது ??
  மாற்றாக இப்படிக்கு ஈழம் என புதியதாய்
  துவங்கித்தான் பார்ப்போமே ?
  நம் கதை இனியாவது புதியதாய்
  துவங்கிடுமா என்று ...


  அளவிட முடியா ஆசைகளுடன்
  ஆசை தமிழன்

Page 98 of 129 FirstFirst ... 48 88 94 95 96 97 98 99 100 101 102 108 ... LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •