Results 1 to 1 of 1

Thread: சினிமா பாடல் வரிகளை மாற்றுவோமா?_பகுதி 2

                  
   
   
  1. #1
    இனியவர் பண்பட்டவர் "பொத்தனூர்"பிரபு's Avatar
    Join Date
    08 Jun 2008
    Location
    சிங்கப்பூர்
    Age
    40
    Posts
    711
    Post Thanks / Like
    iCash Credits
    14,469
    Downloads
    233
    Uploads
    0

    சினிமா பாடல் வரிகளை மாற்றுவோமா?_பகுதி 2

    பார்த்த முதல் நாளே(வேட்டையாடு விளையாடு)

    பல்லவி :

    காதல் வந்ததாலே..
    என் நெஞ்சில்
    காதல் வந்ததாலே..
    யாவும் இனிக்கிறதே..
    இவ்வுலகில்
    வாழப் பிடிக்கிறதே..

    உனைப்போல் ஒருத்தி
    கிடைத்தவுடன் – இந்த
    உலகம்தானே
    பிடித்த இடம்
    சொர்க்கங்கள் வேண்டாம்
    நீ மட்டும் போதும்
    (காதல் வந்ததாலே........)

    சரணம் 1 :

    மயிலிறகு கூந்தல்
    வருடிக் கொண்டேதான் - உன்
    மார்பில் முகம்சாய்க்க வேண்டும்
    வாழும் காலமெல்லாம்
    உன் கண்ணின் இமைக்குள்
    நான் கைதியாகிவிட வேண்டும்

    எனை கொத்திக் கொல்லும்
    கழுகென்று - உந்தன் விழிரெண்டை
    நானும் அன்று கண்டேன்
    எனை கொன்றுத் தின்ன
    என்னுயிரை உனக்கே உயிலெழுதி
    நானும் மின்று தந்தேன்

    உன்னோடு ஒர்நாள்
    வாழ்ந்தாலும் போதும் - என்
    வாழ்வு வளமாகும் பெண்ணெ......
    நீயின்றி வாழ்ந்தாலே
    ஜென்மங்கள் யாவும்
    சாபமாகிப்போகுமடி கண்ணே..
    (காதல் வந்ததாலே..)


    சரணம் 2 :

    கடற்கரை மணலில்
    உன்பாதச் சுவடில்
    கால்பதித்து நடந்திட ஆச(சை)
    காற்றில் கலந்துவிட்ட
    உன் சுவாசக் காற்றை
    கண்டேடுத்து சுவாசிக்க ஆச(சை)


    உன்கண்கள் இரண்டும்
    என்கண்கள் இரண்டும்
    ஓர்கானவு கானும்வரம் வேண்டும்
    கானும் கனவிலும்
    கண்மனியே உனைநான்
    பிரியாமல் வாழ்ந்திட வேண்டும்

    கடவுள்கள் கூடி
    உனைகேட்டால் கூட
    நான் திருப்பித்தரமாட்டேன் பெண்ணே..
    எமனே என் எதிரே
    வந்தாலும் கூட
    போரிட்டு உனைகாப்பேன் கண்ணே..
    (காதல் வந்ததாலே..)



    (காக்க காக்க படத்தில் இருந்து ஒன்றா இரண்டா படலுக்கு)
    http://www.tamilmantram.com/vb/showthread.php?t=16392
    Last edited by "பொத்தனூர்"பிரபு; 15-08-2008 at 01:16 AM.
    ...........................................................
    அன்பே கடவுள் ....
    " கடவுள் - னா யாரு ?" - " அன்பால் ஆள்பவன்" -
    "அப்புறமென்ன நீயே கடவுளாய் இருந்துவிடு ..."
    - பிரபு(ஆனந்த) சுவாமிகள்

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •