Page 2 of 3 FirstFirst 1 2 3 LastLast
Results 13 to 24 of 30

Thread: குசேலன் - சிரிப்பதற்காக மட்டும்

                  
   
   
  1. #13
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் தீபன்'s Avatar
    Join Date
    18 Aug 2005
    Location
    யாழ்ப்பாணம்
    Posts
    1,135
    Post Thanks / Like
    iCash Credits
    33,859
    Downloads
    4
    Uploads
    0
    Quote Originally Posted by மதுரகன் View Post
    அவர்கள் அந்நியர்கள் என்பதாலும் எங்களிடம் மேலோங்கிளுள்ள அமெரிக்க எதிர்ப்புணர்வும்தான் உங்களை அதை ரசிக்கவைக்கிறது. அதே மன்மோகன் சிங்கையோ, வாஜ்பாயையோ இந்திராகாந்தியையோ, எம்.ஜி.ஆரையோ கருணாநிதியையோ கிண்டலடித்தால் உங்களால் சகித்துக்கொள்ள முடியுமா ஆனால் குறித்த நபர்களை பிடிக்காதோருக்கு அது இன்பமாக இருக்கும்.
    அதுபோலத்தான் இதுவும் குறித்த நபரைத்தாக்குவது சிலரை தனிப்பட்ட ரீதியில் சங்கடப்படுத்தினால் ஒரு மனிதன் என்ற வகையில் அருகில் இருப்பவரையாவது சங்கடப்படுத்தாது நடப்பது எம் பொறுப்பல்லவா..?
    கூறியதில் ஏதும் தவறிருந்தால் மன்னித்துக்கொள்ளுங்கள்..
    நீங்கள் சொல்வதில் மன்னிக்குமளவு எந்த தவறுமில்லை நண்பரே. ஆனால் நான் சொல்ல வந்தது அதுவல்ல....
    நீங்கள் உதாரணத்திற்கு சொன்ன பல பிரமுகர்களில் சிலரில் எனக்கும் அபிமானமுண்டு... அதற்காக அவர்களை கிண்டலடித்தாலும் அதையும் நான் ரசிக்கும் குணமுள்ளவன். ஏன், இதில் பல தலைவர்கள்கூட தங்களைபற்றி வரும் கிண்டல்களைஇயும் ரசித்து பதிலடி கொடுப்பவர்களே. என் கருத்து என்னவென்றால் விடயத்தை உணர்வுபூர்வமாக பர்க்காமல் இயல்பாக இலகுவாக நோக்கவேண்டுமென்பதே. பிரபலங்களை கேலி செய்வதும் நகைச்சுவையில் ஒருபகுதியாகத்தான் உலகில் இடம்பெறுகிறது... இந்திய தனியார் தொலைக்காட்சிகளின் லொள்ளு சபா, நையாண்டி தர்பார் போன்ற நிகள்ச்சிகள் இத்தகைய நகைச்சுவைகளைத்தானே கையாள்கின்றன...
    அபிமானிகள் சங்கடப்படுகிறார்களென்றால், ஒருவருகும் சங்கடம் வராத பதிவுகள் வேண்டுமென்றால் மன்றில் வாதங்களும் இருக்காது. உயிர்ப்பும் இருக்காது. பெரும்பாலான பதிவுகள் முடக்கப்படவேண்டியிருக்கும்.
    சினிமா கிசு கிசுக்கள்பகுதியில் பல நடிகைகளை விமர்சிக்கிறோம். கிண்டலடிக்கிறோம். அப்போதெல்லாம் இக்கருத்துக்கள் வராதிருந்தது ஏன்? (உண்மையில் நானும் ரஜினியை ரசிப்பவன் தான்.)
    என்றென்றும் நட்புடன்
    உங்கள் தீபன்.

  2. #14
    இனியவர் பண்பட்டவர் மதுரகன்'s Avatar
    Join Date
    05 Jan 2007
    Location
    வவுனியா
    Posts
    781
    Post Thanks / Like
    iCash Credits
    9,051
    Downloads
    37
    Uploads
    0
    பிடித்திருந்தால் இரசிப்போம்
    இல்லாட்டி விட்டிட்டு போயிற்றிருப்பொம்ல..
    சகோதரன் கிஷோர் அவர்களே..
    உங்களது இந்தப்பதிலுக்கும் "ஆண்கள் மட்டுமல்ல பெண்களும்தான்" என்ற திரியில் நீங்கள் இட்ட மீள்பதிப்பிற்கும் இடையான முரண்பாடுகளை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்...

    பார்ப்பாரில்லை, அப்படி பார்த்தாலும் பின்னூட்டம் இடுவாரில்லை.
    பிறகேன் உங்களது இந்த விக்கிரமாதித்தன் முயற்சி என்பது எனக்கு புரியவில்லை.
    **காதல் என்பது சுவாசம் எப்படி நான் அதை நிறுத்த..
    ***அழகான பெண்களை விடவும் சிலிர்ப்பூட்டும் கவிதைகளே என்னை ஆழமாகப்பாதிக்கின்றன
    மதுரகன்
    இருகண்களும் சில சூரியன்களும் படியுங்கள்

  3. #15
    இனியவர் பண்பட்டவர் மதுரகன்'s Avatar
    Join Date
    05 Jan 2007
    Location
    வவுனியா
    Posts
    781
    Post Thanks / Like
    iCash Credits
    9,051
    Downloads
    37
    Uploads
    0
    முதலில் நான் ஏதாவது புரிந்துகொள்ளத் தவறியிருந்தால் மன்னிக்கவும்
    அடுத்தது
    அது உணர்பூர்வமான விடயம்.
    இத் திரியின் தலைப்பே சிரிப்பதற்கு...!
    அதைத்தான் நான் கூறுகிறேன்..
    சிலபேர் சிரிக்கும் விடயம் சிலருக்கு உணர்வுபூர்வமாக இருந்தால் அதைத்தவிர்க்கலாமல்லவா..?
    **காதல் என்பது சுவாசம் எப்படி நான் அதை நிறுத்த..
    ***அழகான பெண்களை விடவும் சிலிர்ப்பூட்டும் கவிதைகளே என்னை ஆழமாகப்பாதிக்கின்றன
    மதுரகன்
    இருகண்களும் சில சூரியன்களும் படியுங்கள்

  4. #16
    இனியவர் பண்பட்டவர் மதுரகன்'s Avatar
    Join Date
    05 Jan 2007
    Location
    வவுனியா
    Posts
    781
    Post Thanks / Like
    iCash Credits
    9,051
    Downloads
    37
    Uploads
    0
    அபிமானிகள் சங்கடப்படுகிறார்களென்றால், ஒருவருகும் சங்கடம் வராத பதிவுகள் வேண்டுமென்றால் மன்றில் வாதங்களும் இருக்காது. உயிர்ப்பும் இருக்காது. பெரும்பாலான பதிவுகள் முடக்கப்படவேண்டியிருக்கும்.
    சினிமா கிசு கிசுக்கள்பகுதியில் பல நடிகைகளை விமர்சிக்கிறோம். கிண்டலடிக்கிறோம். அப்போதெல்லாம் இக்கருத்துக்கள் வராதிருந்தது ஏன்? (உண்மையில் நானும் ரஜினியை ரசிப்பவன் தான்.)
    ரசிப்புத்தன்மைக்கு ஒரு எல்லை உண்டு..
    சினிமா சம்பந்தமான விமர்சனங்கள் குறித்த நபரின் சுயத்தை விமர்சிப்பது தவறு என்பது என்வாதம்..
    அடுத்தது உண்மையில் நான் கிசுகிசுக்களைப் படிப்பதில்லை..
    ஏனெனில் நடிகர்கள் சினிமாவில்தான் எங்களுடன் உறவாடுகிறார்கள் அவர்களின் சுயத்தை விமர்சிப்பது தேவையற்றது என்பது என் கருத்து.

    சரி ஒரு மூன்றாம் நபர் தொடர்பில் நான் மன்றநண்பர்களுடன் வாதங்களை வளர்த்துக்கொள்ள விரும்பவில்லை. ஆகவே அனைத்தையும் பொறுத்தருள்க..
    **காதல் என்பது சுவாசம் எப்படி நான் அதை நிறுத்த..
    ***அழகான பெண்களை விடவும் சிலிர்ப்பூட்டும் கவிதைகளே என்னை ஆழமாகப்பாதிக்கின்றன
    மதுரகன்
    இருகண்களும் சில சூரியன்களும் படியுங்கள்

  5. #17
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் Narathar's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    London / Sri Lanka
    Posts
    5,891
    Post Thanks / Like
    iCash Credits
    12,457
    Downloads
    11
    Uploads
    0
    Quote Originally Posted by tamilambu View Post
    உளவுத்துறை அதிகாரி1: A1 to A2 calling ஓவர் !!. பொதுவா குசேலன் ஒரு உப்புமா
    படம்னு பேசிக்கிறாங்க..ஆனா குசேலன் DVD சேல்ஸ் எப்படி ஜாஸ்தியாச்சுனு விசாரிக்க
    சொன்னேனே.. விசாரிச்சியா?? over..

    அதிகாரி 2: A2 to A1 calling ஓவர் !! ... சார்.. அந்த DVD எல்லாம் மொத்தமா பின்லேடன் தான் வாங்குறானாம்.. அவனோட தற்கொலை படை வீரர்களோட மன வலிமை பயிற்சிக்கு குசேலனை தான் யூஸ் பண்றாங்களாம்..ஓவர் !!!.























    தமிழை வளர்க்க,
    தமிழரோடு தமிழில் பேசுங்கள்

  6. #18
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் தீபன்'s Avatar
    Join Date
    18 Aug 2005
    Location
    யாழ்ப்பாணம்
    Posts
    1,135
    Post Thanks / Like
    iCash Credits
    33,859
    Downloads
    4
    Uploads
    0
    Quote Originally Posted by மதுரகன் View Post
    ரசிப்புத்தன்மைக்கு ஒரு எல்லை உண்டு..
    சகிப்பு தன்மைக்கு எல்லையுண்டென்றால் ஏற்கலாம்... ரசிப்பதற்குமா எல்லையிடுகிறீர்கள்....?

    Quote Originally Posted by மதுரகன் View Post
    சினிமா சம்பந்தமான விமர்சனங்கள் குறித்த நபரின் சுயத்தை விமர்சிப்பது தவறு என்பது என்வாதம்..
    நண்பர் தமிழம்புவின் பதிவில் இடம்பெற்ற கிண்டல்கள் எல்லாமே தனிநபரை நோக்கியில்லை... அவரின் படத்தை கிண்டலடித்தே உருவாக்கப்பட்டிருந்தது. குறித்த நபரின் சுயம் அங்கு விமர்சிக்கப்படவில்லையே....!?

    Quote Originally Posted by மதுரகன் View Post
    அடுத்தது உண்மையில் நான் கிசுகிசுக்களைப் படிப்பதில்லை..
    ஏனெனில் நடிகர்கள் சினிமாவில்தான் எங்களுடன் உறவாடுகிறார்கள் அவர்களின் சுயத்தை விமர்சிப்பது தேவையற்றது என்பது என் கருத்து.
    நீங்கள் படிப்பதில்லை என்பது சரி. அதற்காக அத்தகைய பதிவுகளே தவறென்பது சரியா...?

    Quote Originally Posted by மதுரகன் View Post
    சரி ஒரு மூன்றாம் நபர் தொடர்பில் நான் மன்றநண்பர்களுடன் வாதங்களை வளர்த்துக்கொள்ள விரும்பவில்லை. ஆகவே அனைத்தையும் பொறுத்தருள்க..
    பொறுத்தருள்வதா...? அந்தளவுக்கு இங்க என்ன நடந்திச்சு...?
    என்றென்றும் நட்புடன்
    உங்கள் தீபன்.

  7. #19
    இனியவர் பண்பட்டவர் மதுரகன்'s Avatar
    Join Date
    05 Jan 2007
    Location
    வவுனியா
    Posts
    781
    Post Thanks / Like
    iCash Credits
    9,051
    Downloads
    37
    Uploads
    0
    சகிப்பு தன்மைக்கு எல்லையுண்டென்றால் ஏற்கலாம்... ரசிப்பதற்குமா எல்லையிடுகிறீர்கள்....?
    நிச்சயமாக ஓரளவுக்கு மேல் சாடப்படும்போது நகைச்சுவைகள் ரசிக்கப்படமுடியாது.. அது சகிப்புத்தன்மை அளவிலும் தங்கியுள்ளது..

    நண்பர் தமிழம்புவின் பதிவில் இடம்பெற்ற கிண்டல்கள் எல்லாமே தனிநபரை நோக்கியில்லை... அவரின் படத்தை கிண்டலடித்தே உருவாக்கப்பட்டிருந்தது. குறித்த நபரின் சுயம் அங்கு விமர்சிக்கப்படவில்லையே....!?
    தனிப்பட்ட சுயம் மீதான தாக்குதல் பற்றி மேலே ஆரென் அவர்கள் கூறிவிட்டார்கள்..(திரைப்படம் என்ற வரம்பு மீறி தனி நபரின் பெயர் இழுக்கப்பட்டிருக்கிறது)

    நீங்கள் படிப்பதில்லை என்பது சரி. அதற்காக அத்தகைய பதிவுகளே தவறென்பது சரியா...?
    நிச்சயமாக இம்மன்றத்திலுள்ள உறுப்பினர் ஒருவரைப்பற்றி கிசுகிசு எழுவதில் என்ன தவறுள்ளதோ அதே தவறுதான் நடிகர்களைப்பற்றி எழுதப்படும் கிசுகிசுக்கள்..

    அவர்கள் நடிப்பை, திரைப்படங்களை விடுத்து தனிப்பட்ட வாழ்வைப்பற்றி எழுதுவது நிச்சயம் கேவலமான விடயம்..
    **காதல் என்பது சுவாசம் எப்படி நான் அதை நிறுத்த..
    ***அழகான பெண்களை விடவும் சிலிர்ப்பூட்டும் கவிதைகளே என்னை ஆழமாகப்பாதிக்கின்றன
    மதுரகன்
    இருகண்களும் சில சூரியன்களும் படியுங்கள்

  8. #20
    இளையவர் பண்பட்டவர்
    Join Date
    03 Nov 2007
    Posts
    84
    Post Thanks / Like
    iCash Credits
    8,963
    Downloads
    0
    Uploads
    0
    Quote Originally Posted by மதுரகன் View Post
    தனிப்பட்ட சுயம் மீதான தாக்குதல் பற்றி மேலே ஆரென் அவர்கள் கூறிவிட்டார்கள்..(திரைப்படம் என்ற வரம்பு மீறி தனி நபரின் பெயர் இழுக்கப்பட்டிருக்கிறது)


    ..
    நீங்கள் கூறும் அந்த தனிப்பட்ட நபர் சிவாஜிராவ் என்று நினைக்கிறேன்.
    அவரைப்பற்றி எனது பதிப்பில் எதுவுமே இல்லையே.....
    எனது பதிப்பிலே திரைப்படம் குசேலன் பற்றியும் பிரபல தமிழ் சினிமா நடிகர் ரஜனியின் படங்களில் வந்தவை பற்றியுமே உள்ளது.

    மேலும் இது எனது சொந்த ஆக்கமல்ல....
    மின்னஞ்சலில் வந்த ஒரு நகைச்சுவை. எனது அறிவுக்கு அது நகைச்சுவையாக தெரிந்தது. மன்றத்தவர்களும் சிரித்து மகிழட்டுமே என்ற எண்ணத்திலேயே பதித்தேன்.

    முக்கிய குறிப்பு: நானும் சுப்பர் ஸ்ரார் ரஜனிகாந்த் அவர்களின் ரசிகன்.
    வைத்த குறி தப்பாது.....>>--தமிழ்அம்பு-->>

  9. #21
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஓவியா's Avatar
    Join Date
    27 Apr 2006
    Location
    LONDON
    Posts
    8,998
    Post Thanks / Like
    iCash Credits
    41,530
    Downloads
    5
    Uploads
    0
    முன் குறிப்பு:
    நான் ரஜினியின் நடிப்பையும் ரசிப்பேன் கலைஞரின் தமிழ் புலமையையும் ருசிப்பேன். நான் எந்த ஒரு கட்சிக்கும் ஆதரவில்லை.
    ******************************************************************************************************************


    இது போன்ற திரிகள்/பதிவுகள் மன்றத்திற்க்கு தேவையா என்று தெரியவில்லை. முடிவு மன்றத்தின் கைகளில்.


    மிகவும் அதிகபிரசங்கி வகையை சேர்ந்திருக்கிறது இங்குள்ள நகைச்சுவைகள் சில. ரசிக்கவே முடியவில்லை, சுத்தமா சகிக்கவில்லை. இது முற்றிலும் தனி மனித தாக்குதல்களையே சார்ந்துள்ளது.


    முடிந்தால் இனி இதுபோல் பதிவுகளை இங்கு யாரேனும் பதிவதை தவிறுங்கள். இதனால் மற்றவர்களின் மனம் புண்படுவைதை தவிற்க்கலாம். காரணம் இது பலர் வந்து போகும் இடம். உங்களுக்கு ரஜினியை பிடிக்காமல் இருக்கலாம் ஆனால் சிலருக்கு அவரை மிகவும் பிடிக்கும். (ரஜினி ரசிகையான எனக்கும் சில ஜோக்குகளை படித்து மனம் புண்பட்டு விட்டது உண்மையே)


    நண்பர் தமிழன்பு,
    நீங்கள் புதியவர் அதனால் இப்படியான பதிவுகளுக்கு இங்கு ஆதரவு அவ்வலவாக இருக்காது என்பது உங்களுக்கு தெரியாமல் இருந்திருக்கலாம். இனி உங்களுடைய அழகிய வளமிக்க எழுத்துதிறமையில் (தமிழ் திறமை உங்ககிட்ட அதிகமாகவே இருக்கு, வாழ்த்துக்கள்) நல்ல சுயப்படைப்புகளை இங்கு வாரி வழங்கி மகிழுங்கள். நாங்களும் அதை படித்து ஆனந்தப்படுவோம்.


    நன்றி.

    உண்மை தோழி
    - ஓவியா
    Last edited by ஓவியா; 17-08-2008 at 11:16 PM.
    தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
    வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்

  10. #22
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் mukilan's Avatar
    Join Date
    27 Jul 2005
    Location
    கனடா
    Posts
    1,999
    Post Thanks / Like
    iCash Credits
    32,969
    Downloads
    53
    Uploads
    5
    அன்பு நண்பர்களே! சர்ச்சைக்குரிய விதத்தில் இந்தத் திரி செல்வதில் எவருக்குமே விருப்பம் இருக்காது என நினைக்கிறேன். பிறர் மணம் புண்படுகிறது என வெளிப்படையாகத் தெரிவித்தும் அந்த உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல் இதைத் தொடரக்கூடாது. பண்பட்டவர் என்ற பட்டம் பதிவுகளின் எண்ணிக்கையால் அல்ல. பண்பட்டவர்கள் பண்பட்டவர்களாகவே நடந்து கொள்ளவேண்டும். இனிமேலும் இத்திரியில் விவாதிக்க வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன். கூடிய விரைவில் மேல் நடவடிக்கை எடுக்கப்படும்.புரிதலுக்கு நன்றி.
    உன் வீட்டுக்கண்ணாடி ஆனாலும் கூட முன் வந்து நின்றால்தான் முகம் காட்டும் இங்கே!

  11. #23
    இளையவர் பண்பட்டவர்
    Join Date
    03 Nov 2007
    Posts
    84
    Post Thanks / Like
    iCash Credits
    8,963
    Downloads
    0
    Uploads
    0
    முகிலன் அவர்களே!
    எனது சிறு கருத்தும் ஓவியாவுக்கு பதிலும்.

    ஓவியா அவர்களே!
    நீங்கள் கூறியதுபோல் என்னுடய சுய படைப்புகள் பலவற்றை இங்கே தர இருக்கிறேன்.
    மேலும், இந்த மன்றத்திற்கு நான் புதியவன். இருந்தபோதிலும் மன்ற விதிகளையும் இங்குள்ள ஏனைய பதிவுகளையும் பார்த்த அடிப்படையிலேயே இந்த பதிவை இங்கே பதித்துள்ளேன். நீங்கள் கூறுவதுபோல் இது மிகப்பெரிய குற்றமாக எனக்கு இப்போதுகூட தெரியவில்லை.
    நீங்கள் கூறுவதைப் பார்த்தால் சர்தார்ஜி ஜோக்குகளை என்ன செய்வது???
    அதுமட்டுமல்லாமல் நடிகர் வடிவேலு நடித்த 23ஆம் புலிகேசி என்ற படத்தினை கிண்டல் செய்யும் விதமாக 23-ஆம் எலிகேசி என இங்கே ஆரம்பிக்கப்பட்ட பகுதியில் "கலக்கலா இருக்கு லெனின்."என்றுகூட நீங்கள் பின்னூட்டம் செய்திருக்கிறீர்களே....
    அது தவறில்லையா??? வடிவேல் ரசிகர்கள் மனம் புண்படாதா???
    வைத்த குறி தப்பாது.....>>--தமிழ்அம்பு-->>

  12. #24
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    தமிழம்பு....23ஆம் எலிகேசியில் எந்த ஓரு இடத்திலாவது வடிவேலின் பெயர் வருகிறதா? சற்று மீண்டும் வாசித்துவிட்டு வாருங்கள். கற்பனைக் கதாப்பாத்திரம் வேறு, வாழும் மனிதர்கள் வேறு.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

Page 2 of 3 FirstFirst 1 2 3 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •