Page 1 of 3 1 2 3 LastLast
Results 1 to 12 of 30

Thread: குசேலன் - சிரிப்பதற்காக மட்டும்

                  
   
   
 1. #1
  இளையவர் பண்பட்டவர்
  Join Date
  03 Nov 2007
  Posts
  84
  Post Thanks / Like
  iCash Credits
  5,053
  Downloads
  0
  Uploads
  0

  குசேலன் - சிரிப்பதற்காக மட்டும்

  குசேலன் - சிரிப்பதற்காக மட்டும்
  குசேலன் திரைப்படம் தொடர்பாக மின்னஞ்சலில் வந்த சில துணுக்குகள். மூலப் பதிப்பு எங்கிருந்து என்று தெரியவில்லை. சிரிப்பதற்காக மட்டுமே இங்கே தருகிறேன்.

  ராமு : நம்ம கருடர் டிவில குசேலனை வச்சு புதுசா ஏதோ புரோக்ராம் பண்றாங்களே.. அதோட பேரு என்னடா?
  சோமு : ஊத்திக்க போவது யாரு?
  ---------------------------------------


  ஆசிரியர் : குசேலன் என்ன கொடுத்தாரு?
  மாணவி : அல்வா கொடுத்தாரு.
  ஆசிரியர் : தப்பு தப்பு!!!.. அவர் அவல் தான் கொடுத்தார்..
  மாணவி : நீங்க சொல்றது அந்த காலம். நான் சொல்றது இந்த காலம்  நர்ஸ் : டாக்டர் அந்த பேஸண்ட பேச்சு மூச்சு இல்லாம இருந்தாரே.. அவருக்கு என்ன shock treatment பண்ணி பேச வைச்சிங்க?
  டாக்டர்: ஒண்ணுமில்லை சிம்பிளா "குசேலன்" பேஸண்ட் முன்னாடி போட்டு காட்டுனேன்.. அந்த படத்தை பாக்க முடியாம "நிப்பாட்டு"னு சொல்றதுக்காக வாயை தொறந்து பேசிட்டாரு..


  உளவுத்துறை அதிகாரி1: A1 to A2 calling ஓவர் !!. பொதுவா குசேலன் ஒரு உப்புமா
  படம்னு பேசிக்கிறாங்க..ஆனா குசேலன் DVD சேல்ஸ் எப்படி ஜாஸ்தியாச்சுனு விசாரிக்க
  சொன்னேனே.. விசாரிச்சியா?? over..

  அதிகாரி 2: A2 to A1 calling ஓவர் !! ... சார்.. அந்த DVD எல்லாம் மொத்தமா பின்லேடன் தான் வாங்குறானாம்.. அவனோட தற்கொலை படை வீரர்களோட மன வலிமை பயிற்சிக்கு குசேலனை தான் யூஸ் பண்றாங்களாம்..ஓவர் !!!  ராமு : கஜினிக்கும் ரஜினிக்கும் என்னடா வித்தியாசம்?
  சோமு : தனக்கு மட்டும் மொட்டை போடுறவன் கஜினி.. தமிழனுக்கெல்லாம் மொட்டை போடுறவன் ரஜினி ..  மொக்கை ஸ்டாரின் பஞ்சர் ஆன பஞ்ச் டயலாக்ஸ்:

  நான் எப்போ அடிப்பேன் எதுக்கு அடிப்பேன்னு யாருக்கும் தெரியாது ஆனால் அடிக்க வேண்டிய நேரத்துல கரெக்டா பல்ட்டி அடிப்பேன்.

  நான் ஒரு தடவ பல்ட்டி அடிச்சா நூறு தடவ பல்ட்டி அடிச்ச மாதிரி.

  நான் லேட்டா அடிச்சாலும் லேட்டஸ்டா அடிப்பேன்.

  அதிகமா பல்ட்டி அடிச்ச ஆம்பிளையும் அதிகமா தண்ணி அடிச்ச பொம்பளையும் உருப்பட்டதா சரித்திரம் இல்ல.

  பன்னிதான் கூட்டமா பல்ட்டி அடிக்கும் சிங்கம் தனியாவே பல்ட்டி அடிக்கும்.

  அந்த ஆண்டவன் சொல்றான் இந்த அருணாச்சலம் பல்ட்டி அடிக்கிறான்.

  கேட்டதுமே உதறுது இல்ல.
  வைத்த குறி தப்பாது.....>>--தமிழ்அம்பு-->>

 2. #2
  அனைவரின் நண்பர் பண்பட்டவர் தீபா's Avatar
  Join Date
  24 Apr 2007
  Location
  கோவை
  Posts
  1,033
  Post Thanks / Like
  iCash Credits
  16,713
  Downloads
  1
  Uploads
  0
  சிலது ஆஹா! சிலது ஓகே!! சிலது சகிக்கலை.

 3. #3
  மன்றத்தின் தூண் பண்பட்டவர்
  Join Date
  15 Nov 2007
  Location
  பாலைவனம்
  Posts
  2,785
  Post Thanks / Like
  iCash Credits
  46,729
  Downloads
  114
  Uploads
  0
  முதலில் வருபவை நகைச்சுவையாக இரசிக்க வைக்கின்றன. அனால் அந்த மொட்டை மேட்டர் அதற்குப் பின் வருபவை தனிமனிதத் தாக்குதல் ரகம். படத்தை வைத்து வந்தவற்றை இரசிக்கலாம் பிறவற்றை????

  திரையில் பெரும்பாலும் தன்னை வைத்தே நகைச்சுவையைக் கையாண்டு சிரிக்க வைப்பவர் ரஜினி. அவரது படங்களில் எனக்குப் பிடித்ததும் அதுவே... தனிமனிதத் தாக்குதல் இல்லாமல் நகைச்சுவை கொடுங்களேன்.
  அன்புடன்...
  செல்வா

  பின்னூட்டங்களில் முன்னுரிமை, மன்றப் படைப்புகளுக்கே...!

 4. #4
  மன்றத்தின் தூண் பண்பட்டவர் இதயம்'s Avatar
  Join Date
  20 Feb 2005
  Location
  தஞ்சவூதி
  Posts
  3,565
  Post Thanks / Like
  iCash Credits
  55,135
  Downloads
  72
  Uploads
  2
  கலைகள் மனித சந்தோஷப்படுத்த தான்..! அவற்றை மற்றவர் மனம் புண்படுத்தவோ அல்லது அவற்றால் பிறர் புண்படவோ அனுமதிக்கலாகாது. இந்த நகைச்சுவை தனிமனித தாக்குதலுக்காகவே உருவாக்கப்பட்டவை என்பது கண் கூடு..! இப்பொழுது இது போன்ற நகைச்சுவைகள்(!) விஜய் பற்றி அதிகம் இணையத்தில் காணப்படுகிறது. இது போன்ற பதிவை தவிர்க்கலாமே..!!
  அன்புடன்,
  இதயம்

 5. #5
  அனைவரின் நண்பர் பண்பட்டவர் shibly591's Avatar
  Join Date
  18 Aug 2006
  Location
  srilanka
  Posts
  1,432
  Post Thanks / Like
  iCash Credits
  15,813
  Downloads
  55
  Uploads
  0
  ரஜனி நிலை இப்படியா...??????.
  வாழ்க்கை என்பதும்
  ஒரு புதுக்கவிதைதான்..
  என்ன ஒரு புதுமை..
  நம்மால் விளங்கவே முடியாத
  புதிர்க்கவிதை


  www.shiblypoems.blogspot.com

  இங்கே சொடுக்கவும்..
  http://www.tamilmantram.com/vb/showt...172#post373172

 6. #6
  இனியவர் பண்பட்டவர் உதயசூரியன்'s Avatar
  Join Date
  20 Feb 2007
  Posts
  786
  Post Thanks / Like
  iCash Credits
  9,648
  Downloads
  1
  Uploads
  0
  நண்பரின் இந்த திரிக்கு நேரடி தொடர்பு சிரிப்பு..இதோ......
  இதை அவர் பதிக்க மறந்து விட்டார் என நினைக்கிறேன்..
  இதுவும்.. அவர் எடுத்த மூலத்தில் இருந்து எடுக்க பட்டது தான்....
  படித்து சிரியுங்கள்........

  வாழ்த்துக்கள்
  வாழ்க தமிழ்

  குசேலன் - 2 வருகிறது ஜாக்கிரதை...........


  இடம் : குசேலன் 2 டிஸ்கசன் நடக்கும் இடம்

  நேரம் : நம்ம எல்லோருக்கும் கெட்ட நேரம்......

  இருப்பவர்கள் : விஜய், பி.வாசு, வடிவேலு, பேரரசு.

  வரமறுப்பவர்கள் : பசுபதி, நயந்தாரா, ரஜினி

  வாசு: என்ன எல்லோரும் வந்தாச்சா????? என்ன இது பாத்ரூம்ல யாரோ அழுகிற மாதிரி இருக்கு.

  (விஜய் பாத்ரூமில் குமுறிக் குமுறி அழுது கொண்டிருக்கிறார்)

  வாசு: விஜய் என்ன இது ? இன்னும் இந்தப் பழக்கம் உங்கள விட்டுப் போகலையா????? ஏன் அழறீங்க?? அட சொல்லிட்டு அழுங்க....

  விஜய்: அது அது .......பூ பூபூ..........எல்லோரும் குசேலன் பாத்துட்டு இதுக்குக் குருவியே பரவாயில்லன்னு சொல்றாங்க.......எம் படத்துக்கு இப்படி திடீர்னு ஒரு பெருமை வரும்னு நான் நினைக்கவேயில்லை.......அதான்.......பூ
  ??ூபூ...

  வடிவேலு : ஏய் எங்கள வச்சு ஒன்னும் காமெடி....கீமெடி பண்ணலியே.........

  விஜய்: ண்ணா....நான் ஏங்னா காமெடி பண்ணனும்...அதான் வாசு சார் குசேலன் படத்துல 13 ரீலு காமெடியா பின்னியிருக்காராமே.........(தனக்க༢r />?ள்ளேயே சிரிக்கிறார்)

  வாசு: ஆஹா குசேலன் 2 எடுக்கலாம்னு பாத்தா விடமாட்டாங்க போலியே.....தம்பி விஜய் போப்பா....போ..போ....பிரபுதேவா கூப்புடுறாரு பாரு.....வில்லு வராமலா போயிடும்....அப்ப வச்சுக்கிறேன்...

  வடிவேலு எங்க யாரையும் காணோம்....பசுபதி எங்க????

  வடிவேலு : அய்யா!!!!! அவரு சைக்கோ கில்லருக்குப் பயந்துக்கிட்டு சென்னைய விட்டே ஓடிப் போயிட்டேன்னு சொல்ல சொன்னாருய்யா??????

  வாசு : அப்ப நயந்தாரா???

  வடிவேலு : அத ஏன்யா கேட்குறீங்க.....ஏதோ நெட்ல கசமுசா படம் வந்திருக்குன்னுப் போய் பாத்தா நம்ம குசேலன் பட சீன் தான் ஓடுதாம்யா...அதான் அந்தப் பஞ்சாயத்துக்குப் போயிருக்காங்க.....

  வாசு : சரி அவங்கள விடுங்க ......முதல்ல உங்க காமெடி பார்ட்ட சொல்லிற்றேன்.....குசேலன் 2 ல உங்க பொண்டாட்டிய நீங்க........

  வடிவேலு : அய்யா....மறுபடியுமா????? நீங்க விடுங்கய்யா????நான் என்னோட டீம வச்சே எழுதிக்கிறேன்......நல்லா கிளப்புறாங்கய்யா பீதிய......

  (ரஜினி வீட்டில்)

  ரஜினி : சத்தி....சத்தி.... மறுபடியும் பிராப்ளம் ஸ்டார்ட் ஆயிடுச்சு.......வாசு குசேலன் 2 டிஸ்கசனுக்குக் கூப்பிடுறார்....

  சத்தி : என்னது மறுபடியுமா???? தலைவா ஏற்கனவே எல்லோரும் எதோ எழவு விழுந்தா மாதிரி போன் மேலே போன்.....இன்னும் பார்ட் 2 வந்தா கிளிஞ்சுரும்.....

  ரஜினி : அப்ப நான் வேணா...."பாடம் கத்துக்கிட்டேன்....இனிமே இப்படி நடக்காது"ன்னு விளக்கம் கொடுத்துரட்டுமா????

  சத்தி : தலைவா.....தயவு செய்து கொஞ்ச நாளைக்கு நீங்க எந்த விளக்கமும் கொடுக்காதீங்க....இப்ப கொடுத்த விளக்கத்துக்கே என்ன பிச்சுப் புடுங்குறாங்க....அதனால பேசாம ஒரு எட்டுப் போய்ட்டு வந்துருங்க......

  (மீண்டும் டிஸ்கசன் நடக்கும் இடம்)

  பேரரசு : அண்ணே நான் எல்லாம் ரஜினிக்கு கதையே சொல்ல முடியாதுன்னு நினைச்சிட்டு இருந்தேன்.....ஆனா உங்க குசேலன் பாத்த பின்னாடி முடிவே பண்ணிட்டேன்...

  வடிவேலு : என்னன்னு......

  பேரரசு : ரஜினிய வச்சு பூஜை போட்டுறலாம்னு.....படம் பேரு "திருவேற்காடு". இது ஆடி மாசம் வேற*. சும்மா கலெக்சன அள்ளிட்லாம்........

  வடிவேலு : ஆஹா ஒரு குரூப்பாத்தான்யா அலயறாங்க......

  ரஜினி பேரரசு நிற்பது போலவே காட்டிக் கொள்ளாமல் நேராக வாசுவிடம் வருகிறார்...பேரரசு ஏதோ முனுமுனுத்துக் கொண்டே சென்று விடுகிறார்.

  ரஜினி : வாசு குசேலன் 2ன்னு ஒரு சப்ஜெக்ட் சொல்றேன்னீங்களே.....சொல்லுங்க...
  .

  வாசு : "ஓப்பனிங் சீன்ல நான் உங்கள வச்சு அபூர்வராகங்கள் 2 சூட் பண்ணிக்கிட்டு இருக்கேன்"

  வடிவேலு : இப்பத்தான் குசேலன் 2ன்னு சொன்னீங்க.....

  வாசு : குறுக்க குறுக்க பேசுனீங்கன்னா இந்தப் படத்துல உங்களுக்கு 2 பொண்டாட்டின்னு கதை பண்ணிடுவேன் ஜாக்கிரதை..............

  வடிவேலு : 2 வைபா.............

  வாசு : அந்தக் காட்சில நீங்க ஒரு ஹெலிஹாப்ட்ரால முட்டிக் கதவ திறக்குறீங்க......

  ரஜினி : என்னது ஹெலிஹாப்ட்ரல முட்டியா......

  வாசு : அது ஒன்னும் பிரச்சினை இல்லை....சவுந்தர்யாகிட்ட சொல்லி ஆக்கர் ஸ்டுடியோல வச்சு சீ.ஜீ பண்ணிடலாம்....

  வடிவேலு : யாரு ஆத்துல டால்பின் விட்டாங்களே அந்த அக்காங்களா????

  (ரஜினி தலை தெறிக்க ஓடிக் கொண்டிருக்கிறார்)
  சொன்னதை செய்வோம்! செய்வதை சொல்வோம்!!
  மனிதனாக இருப்போம்...!! மதத்தை புறந்தள்ளுவோம்
  !!!


  நல்ல சினிமாவை பார்க்கணுமா...???

 7. #7
  இனியவர் பண்பட்டவர் poornima's Avatar
  Join Date
  13 Mar 2008
  Posts
  808
  Post Thanks / Like
  iCash Credits
  5,050
  Downloads
  3
  Uploads
  0
  கலக்குங்க.. உதயசூரியன் பாராட்டுகள்

  பூர்ணிமா
  ==================
  தேமதுரத் தமிழோசை உலகெல்லாம்
  ஒலிக்கச் செய்வோம்....

 8. #8
  மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
  Join Date
  01 Apr 2003
  Location
  Singapore
  Posts
  12,060
  Post Thanks / Like
  iCash Credits
  67,201
  Downloads
  18
  Uploads
  2
  Quote Originally Posted by tamilambu View Post
  ராமு : கஜினிக்கும் ரஜினிக்கும் என்னடா வித்தியாசம்?
  சோமு : தனக்கு மட்டும் மொட்டை போடுறவன் கஜினி.. தமிழனுக்கெல்லாம் மொட்டை போடுறவன் ரஜினி ..
  இது நேரடியான தாக்குதல். இந்த மாதிரியான நேரடி தாக்குதல்களை தவிர்த்தால் நல்லது. ரஜினி ரசிகர்கள் பலர் இங்கே இருக்கிறார்கள். யார் மனதையும் நோகடிக்காத வண்ணம் உங்கள் பதிவுகள் இருந்தால் நல்லது.

 9. #9
  இனியவர் பண்பட்டவர் poornima's Avatar
  Join Date
  13 Mar 2008
  Posts
  808
  Post Thanks / Like
  iCash Credits
  5,050
  Downloads
  3
  Uploads
  0
  விடுங்க ஆரென்'ஜி ரஜினி ரசிகர்களே நொந்து போய்தான் இருக்காங்க.. கொஞ்சம் சிரிச்சி இளைப்பாறிக்கட்டும்..

  பூர்ணிமா
  ==================
  தேமதுரத் தமிழோசை உலகெல்லாம்
  ஒலிக்கச் செய்வோம்....

 10. #10
  நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
  Join Date
  23 May 2007
  Location
  வளைகுடா நாடுகள்
  Posts
  15,360
  Post Thanks / Like
  iCash Credits
  173,626
  Downloads
  39
  Uploads
  0
  வேலைவெட்டியில்லாதவர்கள் யாரோ விளைவித்ததை, வீனாய்க் கொண்டுவந்து இங்கே கொட்டியிருக்கிறார்கள். தேவையற்றபதிவு. இந்தத் திரியால் எந்த உபயோகமும் இல்லை. எரிச்சல்தான் வருகிறது.
  அன்புடன் சிவா
  என்றென்றும் மன்றத்துடன்
  கவலை என்பது கைக்குழந்தையல்ல
  எல்லா நேரமும் தோளில் சுமக்க
  கவலை ஒரு கட்டுச் சோறு
  தின்று தீர்க்க வேண்டும் அல்லது
  பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

 11. #11
  அனைவரின் நண்பர் பண்பட்டவர் தீபன்'s Avatar
  Join Date
  18 Aug 2005
  Location
  யாழ்ப்பாணம்
  Posts
  1,135
  Post Thanks / Like
  iCash Credits
  29,949
  Downloads
  4
  Uploads
  0
  கிண்டலடிப்பதில் தனிப்பட்ட தாக்குதலென தவிர்க்கவேண்டிய அவசியமில்லை. கிளிங்டனையும் ஜார்ஜ் புஸ்சையும் கிண்டலடித்தால் ரசிக்கும் நாம் நம்மவர்களுள் நமக்கு பிடித்தவர்களை கிண்டலடிக்கும்போதுமட்டும் அதை குப்பைகள் என்பது அழகல்ல. பிடிக்காதவற்றை தவிர்ப்போம். பிடித்தவர்கள் ரசிக்கட்டுமே... அரசியல் தலைவர்களையே கேலிச் சித்திரங்களால் கடுமையாக தாக்கும் ஜனநாஜாக நாட்டில் நடிகர் ஒருவரை கிண்டல் பண்ணுவதொன்றும் பாரதூரமான குற்றமல்லவே...
  என்றென்றும் நட்புடன்
  உங்கள் தீபன்.

 12. #12
  இனியவர் பண்பட்டவர் மதுரகன்'s Avatar
  Join Date
  05 Jan 2007
  Location
  வவுனியா
  Posts
  781
  Post Thanks / Like
  iCash Credits
  5,141
  Downloads
  37
  Uploads
  0
  கிளிங்டனையும் ஜார்ஜ் புஸ்சையும் கிண்டலடித்தால் ரசிக்கும் நாம்
  அவர்கள் அந்நியர்கள் என்பதாலும் எங்களிடம் மேலோங்கிளுள்ள அமெரிக்க எதிர்ப்புணர்வும்தான் உங்களை அதை ரசிக்கவைக்கிறது. அதே மன்மோகன் சிங்கையோ, வாஜ்பாயையோ இந்திராகாந்தியையோ, எம்.ஜி.ஆரையோ கருணாநிதியையோ கிண்டலடித்தால் உங்களால் சகித்துக்கொள்ள முடியுமா ஆனால் குறித்த நபர்களை பிடிக்காதோருக்கு அது இன்பமாக இருக்கும்.
  அதுபோலத்தான் இதுவும் குறித்த நபரைத்தாக்குவது சிலரை தனிப்பட்ட ரீதியில் சங்கடப்படுத்தினால் ஒரு மனிதன் என்ற வகையில் அருகில் இருப்பவரையாவது சங்கடப்படுத்தாது நடப்பது எம் பொறுப்பல்லவா..?
  கூறியதில் ஏதும் தவறிருந்தால் மன்னித்துக்கொள்ளுங்கள்..
  **காதல் என்பது சுவாசம் எப்படி நான் அதை நிறுத்த..
  ***அழகான பெண்களை விடவும் சிலிர்ப்பூட்டும் கவிதைகளே என்னை ஆழமாகப்பாதிக்கின்றன
  மதுரகன்
  இருகண்களும் சில சூரியன்களும் படியுங்கள்

Page 1 of 3 1 2 3 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •