அன்னப்பறவை என்று ஒன்று இருந்ததாக சொல்கிறார்களே.
பஞ்சவர்ணக்கிளி இந்த லிஸ்டில் இல்லையே
வல்லூறு..
கூகை வேறு ஆந்தை வேறுதான்.. (கூகை ஆந்தைப் போல நீயும் வெண்ணிலாவே, பகல் கூட்டினில் உறங்குவாயோ வெண்ணிலாவே.. கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை.)
மைனா
அன்னப்பறவை
பருந்து வேறு கழுகு வேறுதான்..
இருவாயனா இல்லை இருவாச்சியா?
அன்றில் பறவை
மயில்
வான்கோழி
தீக்கோழி( ஆஸ்டிரிட்ச் அல்ல இது, காட்டில் இருக்கும். உடலெல்லாம் புள்ளிப் புள்ளியாய் இருக்கு, வரகுக்கோழியோ??)
எதைச் சமைத்துக் கொடுத்தாலும் சாப்பிட நான் ரெடி..
யாருக்காவது சமையல் குறிப்பு வேணுங்களா?
Last edited by தாமரை; 19-08-2008 at 12:57 PM.
தாமரை செல்வன்
-------------------------------------------
கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
கூறுடனேக் கூராக்கிக் கூறு.
-------------------------------------------
வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
தாமரை பதில்கள்
தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...
அருமையான அரிய தகவல்கள்....
நல்ல தமிழ் பெயர்கள்...
படமும் இருந்தால் நாமும் தெரிந்து கொண்டு, சிறுவர்களுக்கும் காட்டலாம்.
தமிழில் சிறிய பறவைகளுக்கு சில்லைகள், சிட்டுக்கள், குருவிகள் என பெயர் உள்ளதை போல ஊணுன்னும் பறவைகளில் பல பிரிவுகளை கொண்டு இருக்கிறது. அவைகள் முறையே வைரிகள், வல்லூறுகள், இராசாளி , பருந்துகள், கழுகுகள், பாறு என அவைகளின் வேட்டையாடும் விதத்தாலும், உடல் அமைப்புக்கு ஏற்றவாறும் வகைப் படுத்தப் பட்டுள்ளது. இதில் ஆந்தை இரவாடிப் பறவை... அது தனி இனமாகவே கருதப் படுகிறது. பகலிலும் வேட்டையாடும் ஆந்தைகளும் உண்டு. பகலில் ஆந்தைக்கு கண் தெரியாது என்பது பொய்யான கருத்து. ஆந்தைக்கு கருவிழி அமைப்பு பெரிதாக உள்ளதால் உள்வாங்கும் ஒளியின் அளவு அதிகமாகும் போது உருவம் தெளிவில்லாமல் தெரியும் வாய்ப்புக்கள் அதிகம். ஆந்தைகள் பொதுவாக காற்றின் அதிர்வு அலைகளை பின்பற்றியே பூச்சிகளையும், சிறிய பறவைகளையும் வேட்டையாடும்.
ந.இரவீந்திரன்
வாழ்க்கை எப்போதும் இனிமையானது ?
நல்ல தகவல் பரிமாற்றம் இரவி அண்ணா, இதுபோன்ற உங்கள் அனுபவப் பதிவுகள் தொடரட்டும்.
மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
-இயக்குனர் ராம்
அநியாங்க(நான் என்னைப்பத்தி சொல்றேங்க)....68ல ஒரு 18 கூட எனக்குத் தெரியலயே...நன்றி தோழர்/தோழி.
வணக்கங்களுடன்
தமிழ்ச்சூரியன்
"தமிழுக்கு நிகர் தமிழே"
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks