Results 1 to 9 of 9

Thread: குசேலன் - விகடன் விமர்சனம்

                  
   
   
  1. #1
    இனியவர் பண்பட்டவர் "பொத்தனூர்"பிரபு's Avatar
    Join Date
    08 Jun 2008
    Location
    சிங்கப்பூர்
    Age
    40
    Posts
    711
    Post Thanks / Like
    iCash Credits
    14,469
    Downloads
    233
    Uploads
    0

    குசேலன் - விகடன் விமர்சனம்

    விகடன் விமர்சனம் - குசேலன்


    (நன்றி - ஆனந்த விகடன்)
    பால்ய நண்பனைப் பார்க்கத் தவிக்கும் குசேல - கிருஷ்ணனின் கதை!
    சவரத் தொழிலாளியான ஏழை பசுபதியும், புகழின் உச்சியில் ஊஞ்சலாடும் சினிமா சூப்பர் ஸ்டார் ரஜினியும் பால்யகால நண்பர்கள். தன் ஊருக்கே படப்பிடிப்புக்காக வருகை தரும் ரஜினியை, வறுமையினாலும் தாழ்வு மனப்பான்மையாலும் சந்திக்கத் தயங்குகிறார் பசுபதி. ரஜினியைச் சந்தித்தே ஆக வேண்டும் என்ற சூழ்நிலைகள் அவரை நெருக்க, அதற்கான முயற்சிகள் ஃப்ளாப் ஆகின்றன. சந்தித்தாரா என்பதே நட்பில் நனைத்தெடுத்த க்ளைமாக்ஸ்!மலையாளத்தில் வந்த 'கத பறயும் போள்' கதையை கமர்ஷியல் கைகளால் ஆரத் தழுவியிருக்கிறார் பி.வாசு. அசோக்குமார் என்ற சூப்பர் ஸ்டாராகவே ரஜினி வருகிறார் என்பதுதான் படத்தின் மெகா ஹைலைட். சூட்டிங்கில் அவரைப் பார்க்கத் திரள்கிற கூட்டம் செய்கிற ரகளையில் ஆரம்பித்து, ஒரிஜினலான ரஜினியின் கேரக்டரைப்பற்றி அவரை விட்டே பேசவைத்தது வரை ஐடியாக்கள் ஓ.கே-தான். 'தலைவா... நயன்தாராவையே பார்க்காத... எங்களையும் பாரு தலைவா' என ரசிகர்கள் கத்த, படு ஸ்டைலாகத் திரும்பி ரஜினி செய்கிற நெளிசலான மேனரிஸங்கள் ஸ்டார் அப்ளாஸ். திரையில் இத்தனை அமைதியான ரஜினியைப் பார்த்து எவ்வளவு நாளாச்சு!வறுமையில் வாடும் பசுபதி எதற்கெடுத்தாலும் பயந்து குறுகி ஓடுகிற காட்சிகள் கதைக்கான டச்சிங். பள்ளிக்கூட மேடைக் காட்சி மட்டுமே படத்தின் பெரிய ப்ளஸ். இழந்த நட்பின் வலியை ரஜினி குரல் உடைந்து, கண்ணீர் வழியச் சொல்லும்போது தியேட்டரே கலங்குகிறது!ஆனால், சூப்பர் ஸ்டாராக ரஜினியே கிடைத் திருக்கிறார் என்கிற தைரியத்திலேயே பி.வாசு குஷியாகி முழு திருப்தி அடைந்துவிட்டார் போலும்! எக்கச்சக்க லாஜிக் மிஸ்ஸிங். படம் முழுக்க 'குசேலன்' பட யூனிட் என்கிற பெயர் தென்படுகிறது. ஆனால் ஒரு ஸீனில், 'அண்ணாமலை பார்ட் 2', கொஞ்ச நேரம் கழித்து, 'சந்திரமுகி பார்ட் 2' என ரீலுக்கு ரீல் ஓட்டுகிறார்கள் ஜிகினா ஃபிலிம்.ரியல் சூப்பர் ஸ்டாராக வரும் ரஜினி, ஓஷோ புக் படிக்கிறார், ஜப்பான் ரசிகர்களைச் சந்தித்துப் பேசுகிறார், தூங்கவிடாமல் டார்ச்சர் செய்ததற்காகவே, நரிக்குறவர்களைக் கூப்பிட் டுப் பேசுகிறார். மற்றபடி சாதாரண ரசிகர்களுக்கு டாட்டா காட்டுவதற்கே யோசிக்கிறார். ரசிகர் களிடம் இருந்து அந்நியப்பட்டவராக அவரைக் காட்டியிருப்பதில் ஆரம்பிக்கிறது மைனஸ். இது போதாதென்று ரஜினியின் இமேஜைக் கண்ட மேனிக்குப் பொலி போட்டுப் பொங்கல் வைத்திருக்கிறார்கள். ஆர்.சுந்தர்ராஜன் பர்சனலாக வீசும் கேள்விகளுக்கு ரஜினி சொல்லும் பதில்கள், 'வெண்டைக்காய் பந்தலில் வேப்பெண்ணெய் மழை பெய்த' மாதிரி சூப்பர் மழுப்பல்... சுத்த சொதப்பல்!'அதெல்லாம் வசனகர்த்தா எழுதிக் கொடுத்தது. டைரக்டர்ஸ் உருவாக்கினது. அதை நான் பேசினதா நினைச்சா, அது உங்க தப்பு!' என்று இதுவரை தான் அடித்த வரலாற்றுப் புகழ் 'பன்ச்'கள் பற்றி விளக்கம் சொல்லி, ரசிகர்களுக்கு ஞானோதயம் ஏற்படுத்தியதற்காக ரஜினியைப் பாராட்டலாம்!பசுபதிக்கும் ரஜினிக்கும் இடையேயான நட்பின் அழுத்தத்தைப் புரியவைக்க... படத்தில் க்ளைமாக்ஸ் வரையில் ஒரு சாம்பிள்கூட இல்லாததால், ஊர் மக்களோடு சேர்ந்து நமக்கும், பசுபதி புருடா விடுகிறாரோ எனத் தோன்றுகிறது. பசுபதியின் வறுமையையும் இயல்பாகச் சொல்லாததால், கதையோடு நம்மால் ஒன்ற முடியவில்லை. ஏழை பசுபதியின் மனைவி மீனா, அபார்ட்மென்ட் ஆன்ட்டி மாதிரி இருக்கிறார். குழந்தைகளும், சர்ச் பார்க்கில் படிக்கிற தோரணையில் இருக்கிறார்கள். சூப்பர் ஸ்டார் ஆர்வத்தில் கன்னியாஸ்திரீகள் சீரியல் வில்லிகள் மாதிரி நடந்துகொள்வது, பக்கத்து வீட்டு முஸ்லிம் குடும்பம் மட்டன் பிரியாணி தந்து ஐஸ் வைப்பது என்பது மாதிரி நிறைய இடங்கள், அமெச்சூர் டிராமா! அல்லது, பாத்திரப் படைப்புகள் காமெடியா சீரியஸா என்று புரியவைப்பதில் ஏற்பட்ட சறுக்கல்.படத்தின் நிஜமான ஹீரோ பசுபதி. அந்த பாவமான பார்வை காரணமாக 'வெயில்' பசுபதி இடைஇடையே ஞாபகத்துக்கு வந்தாலும், தாழ்வு மனப்பான்மையோடு குழந்தைகளைக்கூட எதிர்கொள்ள முடியாமல் தவிப்பதிலும், க்ளைமாக்ஸில் மேடையில் பேசும் ரஜினிக்கு நிகரான உணர்ச்சிக் கொந்தளிப்போடு உருகுவதிலும் அத்தனை நெகிழ்ச்சி.நயனுக்கு ஸோலோ சாங் வைக்கப் பிடிச்சாங்களே ஒரு சிச்சுவேஷன்... சும்மா கணக்கு காட்டத்தான் உதவி இருக்கிறது.ரஜினியைப் பார்த்து ஆனந்த அதிர்ச்சியில் அரற்றும் லெவலில், வடிவேலுவின் காமெடி ஏரியா கச்சிதம். ஒளிந்து நயன்தாராவை ரசிக்கும் காட்சியில், கேமராவின் கோணம் காமெடி ரசத்தை காமரசமாக்குவதுதான் உறுத்தல். லிவிங்ஸ்டன் குரூப், சந்தானம் அடிக்கிற லூட்டிகளில் ஆங்காங்கே கிச்சுகிச்சு.பசுபதியின் வீட்டில் தொடங்கி ரஜினியின் கெஸ்ட் ஹவுஸ் வரை படம் முழுக்க செயற்கை செட்டுகள்... பத்தாக்குறைக்கு லிவிங்ஸ்டன் குரூப்பில் ஆரம்பித்து பல பாத்திரங்களில் எக்கச்சக்க செயற்கை.'ஓம் சாரிரே...', 'செல்லம்' பாடல்களில் ஜி.வி.ப்ரகாஷ்குமார் ஹாய் சொல்கிறார். பின்னணி இசையில் அவர் தேற்றிக்கொள்ள நிறைய இருக்கிறது. பசுபதியின் வறுமையைக் காட்டுவதிலும், ரஜினியின் செழுமையைக் காட்டுவதிலும் அரவிந்த் கிருஷ்ணாவின் கேமரா அத்தனை அழகு. அதுவும் அவுட்டோர் இடங்களில் கலர் மேஜிக் செய்திருக்கிறார்.ரஜினியை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்கிற குழப்பத்தில் கதையின் இயல்பைத் தொலைத்து விட்டார்கள். அதனால் படம்,கம்பீர மான யானையைக் கடைவீதிக்கு அழைத்துச் சென்ற கதையாகி விட்டது!

    மதிப்பெண்
    39/100


    http://priyamudan-prabu.blogspot.com...post_6180.html

    http://priyamudan-prabu.blogspot.com...post_6180.html
    ...........................................................
    அன்பே கடவுள் ....
    " கடவுள் - னா யாரு ?" - " அன்பால் ஆள்பவன்" -
    "அப்புறமென்ன நீயே கடவுளாய் இருந்துவிடு ..."
    - பிரபு(ஆனந்த) சுவாமிகள்

  2. #2
    Awaiting பண்பட்டவர்
    Join Date
    14 Jun 2008
    Location
    தமிழ்நாடு, இந்தியா
    Posts
    164
    Post Thanks / Like
    iCash Credits
    14,054
    Downloads
    40
    Uploads
    0
    இது ரஜினி படமே கிடையாது
    இதில் அவருக்கு கெளரவ வேடம் மட்டுமே

    படத்தின் தோல்விக்கு முழு காரணம் வாசு மட்டுமே
    படத்தில் காண்பிக்கும் வில்லனாக ரஜினி வாழ்க்கையில் விளையாடிவிட்டார்

  3. #3
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    பிரபு அவர்களுக்கும், அனைவருக்குமே ஒரு வேண்டுகோள்..

    சொந்த படைப்புகளுக்கு முன்னுரிமை அளிக்கும் மன்றம் இது..

    இதே படத்தைப் பற்றி நம் மன்றத்தில் முன்னோடி மனோஜி அவர்கள் விமர்சனம் அளித்திருக்கிறார்கள்.

    நீங்கள் அந்தத் திரியில் - விகடனும் 39 மார்க் அளித்த படம் - என ஒரு வரி எழுதியிருந்தாலே - போதும் என்பது என் எண்ணம்.
    முழுப் பதிவை வெட்டி ஒட்டுதல் தேவையா?

    மிக மிக அரிதான அவசியமான பிறத்தளப் படைப்புகளை
    இங்கே நம் நண்பர்களுக்காகக் கொணர்வது சரியான செயல்..

    பரபரப்பான , காலச்சூட்டில் ஆறிப்போகும் மலிவான மற்ற இணையச் சரக்குகளை இங்கே வெட்டி ஒட்ட எந்த அவசியமுமில்லை...

    இதுபோன்ற பிறத்தள பரபர பதிவுகளை நம் நண்பர்கள் ஒதுக்குவது -
    அல்லது நிர்வாகம் உடனுக்குடன் அகற்றுவது என்பதே -
    இவ்வகைச் செயல்களைக் கட்டுப்படுத்தும்..

    இல்லையெனில் இம்மன்றம் குப்பையாகும்.
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  4. #4
    இனியவர் பண்பட்டவர் "பொத்தனூர்"பிரபு's Avatar
    Join Date
    08 Jun 2008
    Location
    சிங்கப்பூர்
    Age
    40
    Posts
    711
    Post Thanks / Like
    iCash Credits
    14,469
    Downloads
    233
    Uploads
    0
    எலோரும் படிக்கட்டும் என்றுதான் அதை இங்கே அளீத்தேன்
    அவ்வள்வே
    என் படைப்புகளும் இங்கே உள்ளன
    இதில் தவறு இருப்பதாக எனக்கு தோன்றவில்லை
    வேண்டாம் என்றால் மன்றத்தார் நீக்கிவிடலாம்
    (எல்லா வெட்டி ஒட்டபட்ட திரியையுமே)
    ...........................................................
    அன்பே கடவுள் ....
    " கடவுள் - னா யாரு ?" - " அன்பால் ஆள்பவன்" -
    "அப்புறமென்ன நீயே கடவுளாய் இருந்துவிடு ..."
    - பிரபு(ஆனந்த) சுவாமிகள்

  5. #5
    இனியவர் பண்பட்டவர் "பொத்தனூர்"பிரபு's Avatar
    Join Date
    08 Jun 2008
    Location
    சிங்கப்பூர்
    Age
    40
    Posts
    711
    Post Thanks / Like
    iCash Credits
    14,469
    Downloads
    233
    Uploads
    0
    //////////////////////இது ரஜினி படமே கிடையாது
    இதில் அவருக்கு கெளரவ வேடம் மட்டுமே//////////////////////


    ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
    ...........................................................
    அன்பே கடவுள் ....
    " கடவுள் - னா யாரு ?" - " அன்பால் ஆள்பவன்" -
    "அப்புறமென்ன நீயே கடவுளாய் இருந்துவிடு ..."
    - பிரபு(ஆனந்த) சுவாமிகள்

  6. #6
    இனியவர் பண்பட்டவர் poornima's Avatar
    Join Date
    13 Mar 2008
    Posts
    808
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    3
    Uploads
    0
    விகடனின் விமர்சனம் எல்லாம் நடுநிலை கடந்து நாளாகிவிட்டன.

    //பரபரப்பான , காலச்சூட்டில் ஆறிப்போகும் மலிவான மற்ற இணையச் சரக்குகளை இங்கே வெட்டி ஒட்ட எந்த அவசியமுமில்லை...
    //

    ரிப்பீட்டேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ
    Last edited by poornima; 10-08-2008 at 10:38 AM.





    பூர்ணிமா
    ==================
    தேமதுரத் தமிழோசை உலகெல்லாம்
    ஒலிக்கச் செய்வோம்....

  7. #7
    Awaiting பண்பட்டவர்
    Join Date
    14 Jun 2008
    Location
    தமிழ்நாடு, இந்தியா
    Posts
    164
    Post Thanks / Like
    iCash Credits
    14,054
    Downloads
    40
    Uploads
    0
    உண்மையிலேயே ரஜினியை பற்றி பேசவே தேவையில்லை
    ஏனெனில் பேச எதுவும் இல்லை

  8. #8
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் தீபன்'s Avatar
    Join Date
    18 Aug 2005
    Location
    யாழ்ப்பாணம்
    Posts
    1,135
    Post Thanks / Like
    iCash Credits
    33,859
    Downloads
    4
    Uploads
    0
    வெட்டி ஒட்டுவது தேவையற்றதுதான். ஆனாலும் எல்லோரும் படிக்கட்டும் என எண்ணினால் அதை இது சம்பந்தமாக ஏற்கனவே எழுதப்பட்ட விமர்சன திரியில் ஒரு பதிவாக இட்டிருந்தால் குறித்த விடயம் சம்பந்தமான எல்லா பதிவுகளையும் ஒரே திரியில் பார்க்ககூடியதாகவாவது இருந்திருக்கும். (சினிமா போன்ற பொழுதுபோக்கு விடயங்களைகூட வெட்டி ஒடுவது தேவையற்றது என்பதே என் கருத்தும்.)
    என்றென்றும் நட்புடன்
    உங்கள் தீபன்.

  9. #9
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    பதிவை படித்ததில் பிடித்தது பகுதிக்கு மாற்றுகிறேன்.. விரல் வலிக்க அடித்துப் பதிந்ததெனில் மேற்கொண்டு யோ(பே)சிக்கலாம்.

    புரிதலுக்கு நன்றி.

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •