Page 11 of 25 FirstFirst ... 7 8 9 10 11 12 13 14 15 21 ... LastLast
Results 121 to 132 of 292

Thread: ஒலிம்பிக்ஸ் - வெள்ளி வென்றார் சுஷில்குமார்!

                  
   
   
  1. #121
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ராஜா's Avatar
    Join Date
    04 Nov 2006
    Location
    மனசுக்கு பிடித்த மன்னார்குடி.
    Posts
    8,573
    Post Thanks / Like
    iCash Credits
    45,983
    Downloads
    0
    Uploads
    0


    முக்கிய போட்டிகள் : குத்துச்சண்டை



    லண்டன் ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டிகள், "எக்ஸ்சல்' என்ற இடத்தில் நடக்கிறது. ஜூலை 28 - ஆக., 12ம் தேதி வரை நடக்கும் இப்போட்டியில் 13 பதக்கங்கள் (10 ஆண்கள், 3 பெண்கள்) வழங்கப்படுகிறது. இதற்காக 250 வீரர்களும், 36 வீராங்கனைகளும் பங்கேற்கின்றனர்.

    ஒலிம்பிக்கில் குத்துச்சண்டை போட்டிகள் 1904ல் செயின்ட் லூயிஸ் நகரில் நடந்த ஒலிம்பிக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. பெண்களுக்கான குத்துச்சண்டை போட்டிகள் இம்முறை முதன்முதலில் நடத்தப்படுகிறது.

  2. #122
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ராஜா's Avatar
    Join Date
    04 Nov 2006
    Location
    மனசுக்கு பிடித்த மன்னார்குடி.
    Posts
    8,573
    Post Thanks / Like
    iCash Credits
    45,983
    Downloads
    0
    Uploads
    0


    முக்கிய போட்டிகள் : பீச் வாலிபால்



    லண்டன் ஒலிம்பிக் பீச் வாலிபால் போட்டிகள், "ஹார்ஸ் கார்ட்ஸ் பரேடு' என்ற இடத்தில் நடக்கிறது. ஜூலை 28 - ஆக., 9ம் தேதி வரை நடக்கும் இப்போட்டியில், இரண்டு பதக்கங்கள் வழங்கப்படுகிறது. இதற்காக ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் தலா 12 அணிகள் பங்கேற்கின்றன.

    ஒலிம்பிக்கில் பீச் வாலிபால் போட்டிகள், முதன்முதலில் 1996ல் அட்லாண்டாவில் நடந்த ஒலிம்பிக்கில் அறிமுகம் செய்யப்பட்டது.

  3. #123
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ராஜா's Avatar
    Join Date
    04 Nov 2006
    Location
    மனசுக்கு பிடித்த மன்னார்குடி.
    Posts
    8,573
    Post Thanks / Like
    iCash Credits
    45,983
    Downloads
    0
    Uploads
    0


    முக்கிய போட்டிகள் : கூடைப்பந்து



    லண்டன் ஒலிம்பிக் கூடைப்பந்து போட்டிகள், ஒலிம்பிக் பார்க்கில் உள்ள கூடைப்பந்து அரினா (லீக் சுற்று, பெண்கள் காலிறுதி) மற்றும் நார்த் கிரீன்விச் அரினா (ஆண்கள் காலிறுதி, அரையிறுதி மற்றும் பைனல்) என இரண்டு இடங்களில் நடக்கிறது. ஜூலை 28 - ஆக., 12ம் தேதி வரை நடக்கும் இப்போட்டியில், இரண்டு பதக்கங்கள் வழங்கப்படுகிறது. இதற்காக ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் தலா 12 அணிகள் பங்கேற்கின்றன.

    ஒலிம்பிக்கில் கூடைப்பந்து போட்டிகள், முதன்முதலில் 1936ல் பெர்லினில் நடந்த ஒலிம்பிக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் ஆண்கள் மட்டும் விளையாடினர். பெண்களுக்கான கூடைப்பந்து போட்டிகள் 1976ல் கனடாவின் மான்ட்ரியல் நகரில் நடந்த ஒலிம்பிக்கில் அறிமுகமானது.

  4. #124
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ராஜா's Avatar
    Join Date
    04 Nov 2006
    Location
    மனசுக்கு பிடித்த மன்னார்குடி.
    Posts
    8,573
    Post Thanks / Like
    iCash Credits
    45,983
    Downloads
    0
    Uploads
    0


    முக்கிய போட்டிகள் : பாட்மின்டன்



    லண்டன் ஒலிம்பிக் பாட்மின்டன் போட்டிகள், வெம்பிளே அரினாவில் நடக்கிறது. ஜூலை 28 - ஆக., 5ம் தேதி வரை நடக்கும் இப்போட்டியில், ஐந்து பதக்கங்கள் வழங்கப்படுகிறது. ஆண்கள் மற்றும் பெண்கள் ஒற்றையர், இரட்டையர் தவிர கலப்பு இரட்டையர் பிரிவிலும் போட்டிகள் நடத்தப்படுகிறது. இதற்காக 172 பேர் (86 ஆண்கள், 86 பெண்கள்) பங்கேற்கின்றனர்.ஒலிம்பிக்கில் பாட்மின்டன் போட்டிகள், 1992ல் ஆண்டு பார்சிலோனாவில் நடந்த ஒலிம்பிக்கில் முதன்முதலில் அறிமுகம் செய்யப்பட்டது.

  5. #125
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ராஜா's Avatar
    Join Date
    04 Nov 2006
    Location
    மனசுக்கு பிடித்த மன்னார்குடி.
    Posts
    8,573
    Post Thanks / Like
    iCash Credits
    45,983
    Downloads
    0
    Uploads
    0


    முக்கிய போட்டிகள் : வில்வித்தை



    லண்டன் ஒலிம்பிக் வில்வித்தை போட்டிகள் லார்ட்ஸ் மைதானத்தில் நடக்கிறது. ஜூலை 27 - ஆக., 3ம் தேதி வரை நடக்கும் இப்போட்டியில், நான்கு பதக்கங்கள் வழங்கப்படுகிறது. ஆண்கள் மற்றும் பெண்கள் தனிநபர், ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் பிரிவில் போட்டிகள் நடத்தப்படுகிறது. இதற்காக 128 பேர் (64 ஆண்கள், 64 பெண்கள்) விளையாட உள்ளனர்.

    ஒலிம்பிக்கில் வில்வித்தை போட்டி முதன்முதலில் 1900ம் ஆண்டு பிரான்ஸ் தலைநகர் பாரிசில் அறிமுகம் செய்யப்பட்டது. லண்டனில் 1908ல் நடந்த ஒலிம்பிக் போட்டிக்கு பின், நீக்கப்பட்டது. பின் 1920ல் மட்டும் நடத்தப்பட்டது. சுமார் 52 ஆண்டுகளுக்கு பின், மீண்டும் இடம் பிடித்த வில்வித்தை போட்டிகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.

  6. #126
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ராஜா's Avatar
    Join Date
    04 Nov 2006
    Location
    மனசுக்கு பிடித்த மன்னார்குடி.
    Posts
    8,573
    Post Thanks / Like
    iCash Credits
    45,983
    Downloads
    0
    Uploads
    0
    இந்திய ஹாக்கி அணிக்கு சிக்கல் * முன்னணி வீரர்கள் காயம்



    லண்டன் ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் பங்கேற்கவுள்ள இந்திய அணிக்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. நட்சத்திர வீரர்களான சர்தாரா சிங், இக்னேஸ் டிர்க்கி ஆகியோருக்கு காயம் ஏற்பட்டிருப்பது பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.

    லண்டனில் 30வது ஒலிம்பிக் போட்டி ஜூலை 27ல் துவங்குகிறது. பீஜிங்கில் 2008ல் நடந்த ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறாத இந்திய ஹாக்கி அணி, இம்முறை வாய்ப்பு பெற்றுள்ளது. சமீபத்தில் இந்திய அணி, முத்தரப்பு தொடரில் பங்கேற்க ஸ்பெயின் சென்றது. இத்தொடரின் போது முன்னணி இந்திய வீரர்களான இக்னேஸ் டிர்க்கி (கணுக்கால்), சர்தாரா சிங் (முழங்கால்) ஆகியோர் காயமடைந்தனர். இதனால் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.
    இதுகுறித்து இந்திய பயிற்சியாளர் மைக்கேல் நோப்ஸ் கூறுகையில், ""ஒலிம்பிக் போட்டி துவங்க இன்னும் சில தினங்கள் உள்ள நிலையில் முக்கிய வீரர்கள் காயமடைந்திருப்பது வருத்தமான விஷயம். அனுபவம் வாய்ந்த இவர்கள் இருவரும் இந்தியாவுக்காக நிறைய போட்டிகளில் பங்கேற்றுள்ளனர். இதில் இக்னாஸ் டிர்கே, 2004ல் ஏதென்ஸ் நகரில் நடந்த ஒலிம்பிக்கில் விளையாடிய அனுபவம் உள்ளவர். இருப்பினும் இவர்களது காயம் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாததால், விரைவில் குணமடைந்து போட்டியில் விளையாடுவார்கள் என நம்புகிறேன்,'' என்றார்.

  7. #127
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ராஜா's Avatar
    Join Date
    04 Nov 2006
    Location
    மனசுக்கு பிடித்த மன்னார்குடி.
    Posts
    8,573
    Post Thanks / Like
    iCash Credits
    45,983
    Downloads
    0
    Uploads
    0
    ஒலிம்பிக்கில் முதல் ஆறு இடங்களுக்குள் வருவதே இலக்கு' - மயூக்கா..



    ""ஒலிம்பிக்கில் முதல் ஆறு இடங்களுக்குள் வருவதே இலக்கு'' என, இந்திய தடகள வீராங்கனை மயூக்கா தெரிவித்தார்.
    லண்டன் ஒலிம்பிக் வரும் 27ம் தேதி துவங்குகிறது. இதில் இந்திய "டிரிபிள் ஜம்ப்' பிரில் மயூக்கா பங்கேற்கிறார். பதக்கம் வாய்ப்பு குறித்து இவர் கூறியது: ஒலிம்பிக்கில் பதக்க வாய்ப்பு குறித்து உறுதி கொடுக்க விரும்பவில்லை. இறுதிச்சுற்றுக்கு தகுதி பெறுவதே மிகப்பெரிய விஷயம். முதல் ஆறு இடங்களுக்குள் வருவதே என் இலக்கு. பெர்லினில் நடந்த போட்டியில் 14.10மீ., வரை தாண்டினேன். எனவே லண்டனில் சிறப்பாக செயல்படுவேன் என நம்புகிறேன்.
    எங்களுக்கு எந்தவிதமான காயமும் இல்லை. ஆனால் எங்களை ஏன் உடற்தகுதி குறித்து நிரூபிக்க சொல்கிறார்கள் என தெரியவில்லை. பெர்லின் போட்டியில் என் தகுதியை நிரூபித்துவிட்டேன். பயிற்சியாளரையும், ஒலிம்பிக்கிற்கு அழைத்துச் செல்லலாம் என நினைத்திருந்தேன். ஆனால் இதற்கு இந்திய ஒலிம்பிக் சங்கம் அனுமதி அளிக்கவில்லை. இவர் லண்டனுக்கு வரவில்லையெனில், போட்டியில் என்னுடைய செயல்பாடு பாதிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

    இது குறித்து மயூக்கா பயிற்சியாளர் ஷியாம் குமார் கூறுகையில்"" ஆசிய கிராண்ட் பிரிக்ஸ் போட்டிக்கு பின், இவருக்கு குதிகாலில் காயம் ஏற்பட்டது. ஆனால் பயிற்சியின் போது, 14மீ., மேல், தாண்டுகிறார். இதைவிட, ஒலிம்பிக்கில் சிறப்பாக செயல்படுவார். உலக சாம்பியன்ஷிப் போட்டியில் நீளம் தாண்டுலில் போட்டியிட்டு, திறமையை வெளிப்படுத்தினார். ஒலிம்பிக்கிற்கு "டிரிபிள் ஜம்ப்பில்' தகுதி பெற்றார். நீளம் தாண்டுதலை விட, "டிரிபிள் ஜம்ப்' போட்டியில் சிறப்பாக செயல்படுவார்'' என்றார்.

  8. #128
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ராஜா's Avatar
    Join Date
    04 Nov 2006
    Location
    மனசுக்கு பிடித்த மன்னார்குடி.
    Posts
    8,573
    Post Thanks / Like
    iCash Credits
    45,983
    Downloads
    0
    Uploads
    0
    மூன்றாவது அதிர்ஷ்ட வாய்ப்பு: ககன் நரங்



    ""லண்டன் ஒலிம்பிக்கில் விளையாட இருப்பது மூன்றாவது முறையாக கிடைத்த அதிர்ஷ்ட வாய்ப்பு. இதில் பதக்கம் வென்று "ஹீரோ'வாக ஜொலிக்க வேண்டும்,'' என, இந்திய துப்பாக்கி சுடுதல் வீரர் ககன் நரங் விருப்பம் தெரிவித்தார்.

    லண்டன் ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய துப்பாக்கி சுடுதல் (ஏர் ரைபிள்) வீரர் ககன் நரங் தகுதி பெற்றுள்ளார். இதன்மூலம் மூன்றாவது முறையாக ஒலிம்பிக் போட்டியில் விளையாடும் வாய்ப்பை பெற்றார். முன்னதாக 2004 (ஏதென்ஸ்), 2008ல் (பீஜிங்) நடந்த ஒலிம்பிக்கில் விளையாடினார். ஆனால் பதக்கம் வெல்ல தவறினார்.

    சமீபகாலமாக "சூப்பர் பார்மில்' உள்ள இவர், 2010ல் டில்லியில் நடந்த காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் நான்கு தங்கம் வென்றார். இதனை தொடர்ந்து சீனாவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் இரண்டு வெள்ளிப் பதக்கம் கைப்பற்றினார். பாங்காக்கில் நடந்த உலக கோப்பை தொடரில் மொத்தம் 703.5 புள்ளிகள் பெற்ற இவர், தகுதிச் சுற்றில் 600க்கு 600 புள்ளிகள் பெற்று புதிய உலக சாதனை படைத்தார்.

  9. #129
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ராஜா's Avatar
    Join Date
    04 Nov 2006
    Location
    மனசுக்கு பிடித்த மன்னார்குடி.
    Posts
    8,573
    Post Thanks / Like
    iCash Credits
    45,983
    Downloads
    0
    Uploads
    0
    செங்கல் சூளையில் வேலை பார்க்கும் ஆசிய விளையாட்டு வீராங்கனை சாந்தி!



    கடந்த 2006ம் ஆண்டு தோஹாவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் 800மீ ஓட்டப்பந்தயத்தில் தமிழக வீராங்கனை சாந்தி சவுந்திரராஜன் வெள்ளிப் பதக்கம் வென்றார். ஆனால் அவர் நாடு திரும்பிய பிறகு அவர் பெண்ணா, ஆணா என்ற பிரச்சனை எழுந்தது. அது தொடர்பாக நடத்தப்பட்ட பரிசோதனையின் முடிவுகளும் அவருக்கு எதிராக இருந்தன.

    இதையடுத்து அவர் வாங்கிய பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் பறிக்கப்பட்டதுடன் அவர் இனி எந்த போட்டிகளிலும் கலந்து கொள்ள முடியாதவாறு இந்திய தடகள கூட்டமைப்பு அவருக்கு தடை விதித்தது. பெர்லின் உலக சாம்பியன்ஷிப் 2009 போட்டி ஓட்டப்பந்தயத்தில் தங்கப் பதக்கம் வென்ற தென்னாப்பிரிக்க தடகள வீராங்கனை செமன்யா இதே போன்று சர்ச்சையில் சிக்கிய பதக்கத்தை இழந்தார். அவர் எந்த போட்டியிலும் கலந்து கொள்ளக் கூடாது என்று சர்வதேச தடகள போட்டிகளுக்கான கூட்டமைப்பு சங்கம் அவருக்கு தடை விதித்தது.

    ஆனால் தென்னாப்பிரிக்கா செமன்யாவுக்கு ஆதரவாக போராடியதை அடுத்து அவர் மீதான தடை கடந்த ஆண்டு வாபஸ் பெறப்பட்டது. அவர் வரும் வெள்ளிக்கிழமை துவங்கவிருக்கும் லண்டன் ஒலிம்பிக் போட்டியில் தென்னாப்பிரிக்க கொடியை ஏந்திச் செல்லவிருக்கிறார். ஆனால் சாந்திக்கோ மத்திய, மாநில அரசுகள் எந்த ஆதரவும் தெரிவிக்கவில்லை.

    இந்நிலையில் தனது பதக்கம் பறிக்கப்பட்டு வேலையில்லாமல் இருந்த சாந்தி தற்கொலைக்கு முயன்றார். அதன் பிறகு தமிழக தடகள வீரர்களுக்கு பயிற்சியாளராக மாதம் ரூ.5,000 சம்பளத்தில் வேலை பார்த்தார். அதுவும் ஒப்பந்த ஊழியராக பணியாற்றினார். அவரிடம் பயிற்சி பெற்றவர்கள் தேசிய அளவில் பதக்கங்கள் வென்றும் அவருக்கு ஊதிய உயர்வோ, பணி நிரந்தரமோ செய்யப்படவில்லை. இது குறித்து அவர் தமிழக அரசுக்கு விடுத்த கோரிக்கையையும் யாரும் கண்டுகொள்ளவில்லை.

    இதனால் அவர் பயிற்சியாளர் பணியில் இருந்து விலகினார். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள செங்கல் சூளையில் வேலைபார்த்து அவரது தந்தை சவுந்திரராஜனும், தாய் மணிமேகலையும் தினமும் ரூ.500 சம்பாதிக்கின்றனர். ஆனால் அந்த வருமானத்தை வைத்து 6 பேர் இருக்கும் குடும்பத்தை ஓட்டுவது கடினம் ஆகும். அதனால் சாந்தி கடந்த 3 மாதங்களாக செங்கல் சூளையில் தினமும் ரூ.200 கூலிக்காக வேலை பார்க்கிறார்.
    இது குறித்து அவர் கூறுகையில்,

    செங்கல் சூளையில் வேலை பார்க்கிறேன். வேலைக்கு சேர்ந்த புதிதில் வேலை முடிந்து வீட்டுக்கு வந்த பிறகு சாப்பிடவும் முடியாது, எந்த பொருளையும் தொடக் கூட முடியாது. அந்த அளவுக்கு கைகள் வீங்கி வலிக்கும். தோல் உரிந்து கொப்புளங்களாக இருக்கும். நான் புதுக்கோட்டை மாவட்ட கலெக்டரை சந்தித்து பியூன் வேலை கொடுக்குமாறு கேட்டேன். ஆனால் நான் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யாததால் எனக்கு அந்த பணியைத் தர முடியாது என்று அவர் தெரிவித்தார்.

    நான் ஒரு தடகள வீராங்கனையாக செய்த சாதனைகளைக் கூறியும், எனது குடும்பத்தின் ஏழ்மை நிலையை எடுத்துக் கூறியும் எனக்கு வேலை தர மறுத்துவிட்டார். நான் அப்போதைய முதல்வர் கருணாநிதியையும், தற்போதைய முதல்வர் ஜெயலலிதாவையும் சந்திக்க முயன்றும் அனுமதி கிடைக்கவில்லை.
    நான் ஆசிய போட்டியில் பதக்கம் வென்றதற்காக கலைஞர் கொடுத்த பரிசு பணம் ரூ.15 லட்சம் எனது சகோதர, சகோதரிகளின் படிப்புக்கும், சகோதரியின் திருமணத்திற்கும் செலவாகிவிட்டது. எனது சகோதரர் இன்னும் படித்துக் கொண்டு தான் இருக்கிறார். சில சமயம் தற்கொலை செய்து கொண்டால் என்ன என்று நினைப்பேன். அல்லது யாரும் காணாத இடத்திற்கு சென்றுவிடலாமா என்று தோன்றும். ஆனால் நான் என்ன தவறு செய்தேன். என் கையில் இல்லாத விஷயத்திற்காக நான் ஏன் தண்டிக்கப்பட்டேன் என்றார்.

    மீண்டும் ஓட்டப்பந்தியத்தில் கலந்து கொள்ள சாந்தி விரும்பினாலும், தற்போது அவருக்குத் தேவை குடும்பத்தை ஓட்டும் அளவுக்கு வருமானம் வரும் ஒரு வேலை தான்.

  10. #130
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ராஜா's Avatar
    Join Date
    04 Nov 2006
    Location
    மனசுக்கு பிடித்த மன்னார்குடி.
    Posts
    8,573
    Post Thanks / Like
    iCash Credits
    45,983
    Downloads
    0
    Uploads
    0
    லண்டன் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவிற்கு 5 பதக்கங்கள் கிடைக்கும்-விஸ்வநாதன் ஆனந்த் நம்பிக்கை



    பீகார் தலைநகர் பாட்னாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் இந்திய செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்த் கலந்து கொண்டார். அப்போது லண்டன் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ள உள்ள இந்திய அணிக்கு 5 பதக்கங்கள் கிடைக்கும் என்று நம்புவதாக தெரிவித்தார்.

  11. #131
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ராஜா's Avatar
    Join Date
    04 Nov 2006
    Location
    மனசுக்கு பிடித்த மன்னார்குடி.
    Posts
    8,573
    Post Thanks / Like
    iCash Credits
    45,983
    Downloads
    0
    Uploads
    0
    லண்டன் ஒலிம்பிக் கிராமத்தின் முன் ஈழத்தமிழ் இளைஞர் சிவந்தன் உண்ணாவிரதம்



    லண்டன் ஒலிம்பிக் போட்டி வரும் 27ம் தேதி துவங்க உள்ளது. இதில் 205 நாடுகளை சேர்ந்த வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். இலங்கையில் இருந்தும் வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். இந்த நிலையில் ஈழ தமிழர்களின் பிரச்சனையை முன் நிறுத்தியும், ஒலிம்பிக் போட்டியில் இலங்கை அணி கலந்து கொள்ள அனுமதிக்க கூடாது என்பதை வலியுறுத்தியும், ஒலிம்பிக் கிராமத்தின் முன்பு உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகிறது. சிவந்தன் தலைமையிலான இப்போராட்டத்திற்கு மதிமுக பொது செயலாளர் வைகோ ஆதரவு தெரிவித்து, அறிக்கை வெளியிட்டுள்ளார்.

  12. #132
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ராஜா's Avatar
    Join Date
    04 Nov 2006
    Location
    மனசுக்கு பிடித்த மன்னார்குடி.
    Posts
    8,573
    Post Thanks / Like
    iCash Credits
    45,983
    Downloads
    0
    Uploads
    0
    லண்டன் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் மலேசிய கர்ப்பிணி வீராங்கனை நூர் சூர்யானி



    லண்டன் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க உள்ள மலேசிய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை நூர் சூர்யானி, 8 மாத கர்ப்பிணியாக உள்ளார். இதன் மூலம் மலேசியாவில் இருந்து ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் முதல் கர்ப்பணி பெண் என்ற சாதனையை அவர் படைக்க உள்ளார்.

    லண்டன் ஒலிம்பிக் போட்டி வரும் 27ம் தேதி முதல் துவங்க உள்ளது. இதில் 205 நாடுகளை சேர்ந்த சுமார் 16 ஆயிரம் வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொள்ள உள்ளனர். ஒலிம்பிக் போட்டிகளில் சில வி்த்தியாசமான சம்பவங்கள் நடைபெறுவது உண்டு. தற்போது அந்த பட்டியலில் மலேசியாவை சேர்ந்த கர்ப்பிணி பெண் ஒருவரும் இணைந்துள்ளார்.

    மலேசியாவை சேர்ந்த துப்பாக்கி சுடுதல் வீராங்கனை நூர் சூர்யானி முகமது தயாபி. தற்போது 8 மாத கர்ப்பணியாக உள்ள இவர், லண்டன் ஒலிம்பிக் போட்டியில் நடைபெற உள்ள 10 மீட்டர் ஏர் ரேபில் போட்டியில் பங்கேற்க உள்ளார்.

    மலேசியாவில் இருந்து துப்பாக்கி சுடுதல் போட்டிக்காக தகுதி பெற்றுள்ள நூர் சூர்யானி, மற்ற வீராங்கனைகளை போலவே, பதக்கம் பெறும் ஆர்வத்துடன் களமிறங்குவதாக கூறியுள்ளார்.

Page 11 of 25 FirstFirst ... 7 8 9 10 11 12 13 14 15 21 ... LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •