Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 17

Thread: தடுத்தாண்டவர் - அ.மை -33

                  
   
   
  1. #1
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0

    தடுத்தாண்டவர் - அ.மை -33

    அறிவியல் மைல்கற்கள் - 33

    ----------------------------------------------
    அ.மை- 32: நிலமகள் பரமதம் - இங்கே:
    http://www.tamilmantram.com/vb/showthread.php?t=16433

    -----------------------------------------------

    அறிவியல் மைல்கற்கள் - 33


    தடுத்தாண்டவர்


    எட்வர்ட் ஜென்னர் -Edward Jenner ( 1749 - 1823)

    ---------------------------------


    ''இன்னும் ஏன் சிந்தனை?
    செய்துவிடு பரிசோதனை!''


    தம் சீடனான ஜென்னருக்கு மூத்த மருத்துவர் ஜான் ஹண்ட்டர்
    சொன்ன அறிவுரை இது..!

    எதைப் பற்றி ஜென்னர் சிந்தித்தார்?
    என்ன செய்ய யோசித்தார்?


    ஜென்னர் இங்கிலாந்தின் பெர்க்லி நகரில் பிறந்தவர்.
    பறவைகள் உள்ளிட்ட இயற்கையைப் படிப்பதே அவர் முதல் காதல்.
    உள்ளூரில் ஒரு மருத்துவரிடம் உதவியாளராக பல ஆண்டு பணியாற்றியதால்
    மருத்துவம் மேல் மறுகாதல்!

    பின் இலண்டன் சென்று முறையாய் முழுமையாய் மருத்துவம் படித்து,
    பிறந்த ஊர் திரும்பி, மளமளவென பிரபல மருத்துவர் ஆனார்!

    மருத்துவக் கல்லூரியில் அவர் ஆசான் ஹண்ட்டர்.
    பெர்க்லிக்குத் திரும்பினாலும், ஆசானுடன் எப்போதும் தொடர்பிலிருந்தார் ஜென்னர்.

    ஜென்னர் வாழ்ந்த அந்த காலகட்டத்தில் :

    --------------------------------------------------------------
    ஒரு தகவல்:

    ஊரில் ஆயிரம் பேர் இருந்தால் -
    அதில் அறுநூறு பேருக்கு பெரியம்மை வரும்...!
    வந்தவரில் இருநூறு பேர் மாண்டு போவார்கள்!!
    பிழைத்தவர்களில் முகத்தழும்பும், கண்ணிழப்புமாய் நின்றவர்கள் நிறைய்ய்ய்ய்ய!

    கொள்ளை (பிளேக்), பேதி ( காலரா) வுடன் பெரியம்மையும் சேர்ந்து
    முப்பெரும் அரக்கர்களாய் உலகை அடிக்கடி காலி செய்த காலம் அது..!

    ----------------------------------------------------------------------

    ஒரு முயற்சி :

    பெரியம்மை வந்தவர்களின் கொப்புள நீரை மற்றவர் வலிந்து தோலுக்குள் ஏற்றிக்கொண்டால்
    (Variolation) - அவர்களுக்கு வரும் அம்மைநோய் வீரியம் கொஞ்சம் குறைந்து வந்தது.

    ஆனாலும், இது சட்டியில் இருந்து அடுப்பில் விழுவதைப்போல..
    பலநேரம் தடுப்புக்காக வலிந்து ஏற்ற நோயே காவு வாங்கி பயமுறுத்தியது..

    --------------------------------------------------------------------------------

    ஜென்னரின் கவனிப்பு:
    பால் கறப்பவர்கள் கைகளில் மாட்டம்மை தொற்றும்.
    அப்படி மாட்டம்மை வந்தவர்களுக்கு, பெரியம்மை வருவதில்லை..!

    ------------------------------------------------------------------------

    ஜென்னரின் சிந்தனை :

    வலிய மாட்டம்மை வரவழைத்துக் கொண்டால்
    பெரியம்மையிலிருந்து தப்பலாம்..

    மாட்டம்மை வீரியம் குறைந்த நோய்..விபரீத வாய்ப்புகள் குறைவு..

    -------------------------------------------

    செய்தார் சோதனை :

    1796; மே 14 - மனித வரலாற்றில் ஒரு பொன்னாள்.
    சாரா என்ற பால்காரியின் மாட்டம்மை கைப்புண் சீழை
    ஜேம்ஸ் ஃபிப்ஸ் என்ற எட்டு வயது சிறுவனுக்கு ஊசியால் ஏற்றிய நாள்.

    இலேசான காய்ச்சல்.. கொஞ்சம் ஊசி போட்ட இடத்தில் கொப்புளம்.
    சில நாளில் ஆறித்தேறிவிட்டான் ஜேம்ஸ்!

    ஆறாவது வாரம், அவனுக்கு பெரியம்மைச் சீழை ஏற்றினார் ஜென்னர்!
    எத்தனை மனத்தவிப்பு... அதை மீறும் எத்துணை அறிவியல் முனைப்பு..?
    ஜென்னரின் கரங்களின் அக்கண நிலையை ஒரு கணம் எண்ணிப்பாருங்கள்!


    கவனிப்பு.. சிந்தனை.. அதையொட்டிய முடிவு!
    ஜேம்ஸ் நலமாய் இருந்தான்.
    ஜென்னர் - வென்றார்..
    மனித குலமே பலன் கண்டது..
    -----------------------------------------------------------

    உலக நாயகன்:

    உலகெங்கும் ஜென்னரின் கோட்பாடு ஏற்கப்பட்டு
    பெரியம்மைத் தடுப்பு அமலாக்கப்பட்டது..

    இறுதியாய் 14 ஆண்டுகள் முனைப்பாய்ச் செயலாக்கி
    1980-ல் பெரியம்மை முற்றிலும் ஒழிக்கப்பட்டது..!

    ஜென்னர் காட்டிய வழியில் பின்னர் வந்த லூயி பாஸ்டர்
    காலரா, ஆந்த்ராக்ஸ், ரேபீஸ் - தடுத்தாண்டார்.

    அதன்பின் பலர் ஹெப்படைட்டிஸ் பி முதல் டைபாய்டு வரை
    இன்னும் இன்னும் தடுத்தாண்டனர்..

    சகமனிதர் நோய்கண்டு, அது தடுக்கும் முறை கண்டு
    கோடிக்கணக்கானோரைக் காப்பாற்ற வழி சொன்ன
    ஜென்னர் போன்றவர்களே உண்மையான உலக நாயகர்கள் , இல்லையா நண்பர்களே!
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  2. #2
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் mukilan's Avatar
    Join Date
    27 Jul 2005
    Location
    கனடா
    Posts
    1,999
    Post Thanks / Like
    iCash Credits
    32,969
    Downloads
    53
    Uploads
    5
    நோய் வருமுன்னரே அதைத் தடுத்தாண்டால் எப்படி என சிந்தித்த எட்வர்ட் ஜென்னருக்கு தடுத்தாண்டவர் என்ற பெயர் சரியான பொருத்தம்.

    கூர்ந்து கவனித்தலே இன்று நாம் ஆரோக்கியமாக (ஓரளவேணும்) இருப்பதற்கான வழிவகை காண அடிகோலியிருக்கிறது. முள்ளை முள்ளால் எடுத்த முத்தான யோசனை அவருக்குத் தோன்றியதாலேயே இன்று பெரும்பாலான நாடுகளில் பெரியம்மை காணாமல் போய்விட்டது.

    அந்த நாளில் ஆராய்ச்சிகள் முறைப்படுத்தப் படவில்லையோ? ஒரு ஆராய்ச்சிக்காகச் சிறுவனின் உடலில் மாட்டம்மை கிருமிகளைச் செலுத்துவதும் பின்னர் அக்கிருமிகளின் எதிர்ப்பு சக்தி கண்டறிய மற்றொரு நோய்க்கிருமியைச் செலுத்துவதும் எளிதாக நடந்திருக்கிறதே!.

    தடுத்தாண்டவர் எட்வர்ட் ஜென்னர் என்றால் அப்படி ஒரு அரிய முயற்சிக்கு தன் உடலைக் கொடுத்தாண்டவர் ஜேம்ஸ் ஃபிப்ஸ் அல்லவா?

    வழக்கம் போல சுருங்கச் சொல்லி விரிவாக விளங்க வைக்கும் உங்களின் அற்புதமான படைப்பு. அறிவியல் மைந்தர்களைச் சந்திப்பதில் பேரானந்தம் அண்ணா.
    உன் வீட்டுக்கண்ணாடி ஆனாலும் கூட முன் வந்து நின்றால்தான் முகம் காட்டும் இங்கே!

  3. #3
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2003
    Posts
    7,901
    Post Thanks / Like
    iCash Credits
    20,940
    Downloads
    62
    Uploads
    3
    எட்வர்ட் ஜென்னர்...! ஜேம்ஸ் ஃபிப்ஸ்...!!

    சிறந்த சாதனை செய்தவர்களை, அவர்கள் எடுத்த கடும் முயற்சிகளை இதுவரை அறியாமலே இருந்தது கண்டு மனம் வருந்துகிறேன். போதிய வசதிகள் இல்லாமல் இருந்த காலத்தில் துணிந்து பரிசோதித்து, வெற்றி கண்டவர்களைக் கண்டு வியக்கிறேன். மனிதகுலத்திற்கு அவர்கள் செய்த பேருதவிக்கு நன்றி கூறி மகிழ்கிறேன்.

    அவ்வப்போது இதைப்போல தடுத்தாட்கொள்ளும் இனிய அண்ணனுக்கு அன்பு.

  4. #4
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    15 Nov 2007
    Location
    பாலைவனம்
    Posts
    2,785
    Post Thanks / Like
    iCash Credits
    55,551
    Downloads
    114
    Uploads
    0
    சிலச் சித்த மருத்துவப் புத்தகங்களை வாசிக்கும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது.
    அதில் குறிப்பிட்டுருக்கும் மருந்துகள் அவற்றின் அளவுகள் பக்குவங்கள்
    கலக்க வேண்டியவை கலக்க வேண்டிய சமயங்கள் பக்குவம் தவறினால் தவறிப்போகும் மருந்துகள் என .....
    அப்பப்பா... நுண்ணிய அளவீடுகள். இவற்றை எல்லாம் சோதித்து ஆராய்ந்து கண்டவர் யார்... அதற்கு அவர்கள் செலவாக்கிய உழைப்பு பலநேரங்களில் உயிரையே கூட.
    தொடர்ந்து அழகியத் தமிழில் அறிவியல் மைல் கற்களை வழங்கிவரும் அண்ணனுக்கு நன்றிகள்.
    அன்புடன்...
    செல்வா

    பின்னூட்டங்களில் முன்னுரிமை, மன்றப் படைப்புகளுக்கே...!

  5. #5
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் shibly591's Avatar
    Join Date
    18 Aug 2006
    Location
    srilanka
    Posts
    1,432
    Post Thanks / Like
    iCash Credits
    25,009
    Downloads
    55
    Uploads
    0
    வித்தியாசமான ஆனால் அதிக பயனுள்ள தகவல்..

    நன்றிகள் இளசு அண்ணா....
    வாழ்க்கை என்பதும்
    ஒரு புதுக்கவிதைதான்..
    என்ன ஒரு புதுமை..
    நம்மால் விளங்கவே முடியாத
    புதிர்க்கவிதை


    www.shiblypoems.blogspot.com

    இங்கே சொடுக்கவும்..
    http://www.tamilmantram.com/vb/showt...172#post373172

  6. #6
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    பெரியம்மை என்ற கொடு நோயை, சிறு நோயின் உதவியால் தடுத்தாட்கொண்ட ஜென்னர்...உண்மையிலேயே ஒரு வின்னர். அதற்காக தன் உடலையே பரிசோதனைக்கூடமாக்க ஒத்துழைத்த ஜேம்ஸ் ஃபிப்ஸ்..மனமுவந்து பாரட்டப்படவேண்டிவர். அழகு தமிழில் தடுத்தாண்டவரையும், கொடுத்தாண்டவரையும்(நன்றி முகிலன்) அறியத்தந்த இளசுவுக்கு நன்றி. பாராட்டுகள்.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  7. #7
    இனியவர் பண்பட்டவர் poornima's Avatar
    Join Date
    13 Mar 2008
    Posts
    808
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    3
    Uploads
    0
    அறிவியல் பற்றி தமிழில் எழுதும்போது நிறையவே எச்சரிக்கையாக
    இருக்க வேண்டி இருக்கிறது. அதிகம் தமிழ்படுத்தினோம் என்பதிலும் சற்று அபாயம் இருக்கிறது - சுஜாதா.

    எளிமையும் இனிமையும் கலந்த பயனுள்ள பதிவைத் தந்துக் கொண்டிருப்பதால் தான் இன்னமும் "இளசு"வாகவே இருக்க முடிகிறதோ என்னவோ.. பாராட்டுகள்.





    பூர்ணிமா
    ==================
    தேமதுரத் தமிழோசை உலகெல்லாம்
    ஒலிக்கச் செய்வோம்....

  8. #8
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் பூமகள்'s Avatar
    Join Date
    10 Aug 2007
    Location
    பூக்கள் நடுவில்
    Posts
    6,617
    Post Thanks / Like
    iCash Credits
    72,958
    Downloads
    89
    Uploads
    1
    தடுத்தாண்டவரின் பெரியம்மை மீதான தாண்டவம்..
    கோடான கோடி மக்களின் நல வாழ்வுக்கு வழி வகுத்திருக்கிறது..!!

    ஜென்னர் சிறந்த சீடரென்பதும்..
    ஹண்ட்டர் சிறந்த குரு என்பதும்..
    அந்த எட்டு வயது சிறுவன்..
    தன்னை அற்பணித்து
    கொடுத்தாண்டவரானதும்...

    மலைக்க வைக்கிறது..!!

    ஹென்னர் கையில் பெரியம்மை கிருமி கொண்டு சிறுவனுக்கு ஏற்றும் அந்த ஒரு கணம் சிந்திக்கையில் உடல் சிலிர்க்கிறது...!!

    ஜென்னர் முதல் ஜேம்ஸ் வரை..

    உண்மையான உலக நாயகர்களின் பட்டியலை வெளியிட்டு வரும் பெரியண்ணாவே எனக்கு மிகச் சிறந்த உலக நாயகர்..!!

    தொடருங்கள் அண்ணலே..!!


    (தாமதமான பின்னூட்டத்துக்கு இந்த தங்கையை மன்னியுங்கள்.)
    -- பூமகள்.

    "விண்தாண்டும் வேலையின் கடிது - உன்
    உளக்கண் தாண்டும் வேலை..!!"


    பூமகள் படைப்புகள்


  9. #9
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    Quote Originally Posted by mukilan View Post
    அந்த நாளில் ஆராய்ச்சிகள் முறைப்படுத்தப் படவில்லையோ?
    தடுத்தாண்டவர் எட்வர்ட் ஜென்னர் என்றால் அப்படி ஒரு அரிய முயற்சிக்கு தன் உடலைக் கொடுத்தாண்டவர் ஜேம்ஸ் ஃபிப்ஸ் அல்லவா?

    .
    நன்றி முகில்ஸ்..

    1) அந்தந்த காலகட்டத்துக்கு ஏற்ப சட்டங்கள் - நியாயங்கள் மாறி வருகின்றன ..இல்லையா?

    இன்று அப்படி ஒரு சோதனை செய்வதை எண்ணவும் இயலாதே!

    எதிக்ஸ் என்னும் மனித நெறி, மற்றும் ஆராய்ச்சி முறைமைக் குழுக்களிடம் இப்படி ஒரு சோதனை என எழுதிக் கொடுத்தவுடனே நம்மை ஒரு வழி ஆக்கிவிடுவார்கள்..

    2) கொடுத்தாண்டவர் - சாலப்பொருத்தம்!

    இந்த வகை ஆராய்ச்சிகள் இருகை ஓசைகள்..
    மறுகையையும் சமச்சொல்லால் சீராட்டிய உனக்கு என் அன்பு!
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  10. #10
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    Quote Originally Posted by பாரதி View Post
    எட்வர்ட் ஜென்னர்...! ஜேம்ஸ் ஃபிப்ஸ்...!!

    . போதிய வசதிகள் இல்லாமல் இருந்த காலத்தில் துணிந்து பரிசோதித்து, வெற்றி கண்டவர்களைக் கண்டு வியக்கிறேன். மனிதகுலத்திற்கு அவர்கள் செய்த பேருதவிக்கு நன்றி கூறி மகிழ்கிறேன்.

    .
    மாறா அன்புடன் எனைத் தொடர்ந்து ஊக்கும் உனக்கு என் பதில் அன்பு - பாரதி!

    வசதிகள் குறைவை மீறிச் சாதித்த அவர்கள் மீது மதிப்பு பல்குவது சரிதான்!
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  11. #11
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    30 Mar 2008
    Location
    இப்ப மும்பையில,
    Posts
    449
    Post Thanks / Like
    iCash Credits
    9,028
    Downloads
    96
    Uploads
    0
    பயனுள்ள ஆரோக்கியமான தகவல். நன்றி இளசு அண்ணா.
    பக்கத்து வீட்டுக்காரன் பசித்திருக்க இறைவனுக்கு படைக்கப்படும் உணவுகளை இறைவன் ஏற்பதில்லை.

  12. #12
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    17 Mar 2008
    Posts
    1,037
    Post Thanks / Like
    iCash Credits
    25,717
    Downloads
    39
    Uploads
    0
    எளிய தமிழில் சுவைபட விவரித்திருக்கிறீர்கள். மிக்க நன்றி.

    கீழை நாடான்

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •