சாரு நிவேதிதா அவர்களின் தப்புத்தாளங்கள் புத்தகத்தை மிகச் சமீபத்தில் படிக்க நேர்ந்தது. அதில் ஒரு கட்டுரை ”உழைப்பே விடுதலை செய்யும் “ எழுதி இருக்கிறார். அதைப் படிக்கையில் வாழ்வின் மீதான பிடிப்பு என்னை விட்டு அகன்றோடியது போல இருந்தது.

மனிதனுக்காக மனிதனால் உருவாக்கப்பட்ட கொலைக்களத்தினை மிக விரிவாக எழுதியிருந்தார். ஜெர்மனியில் இருக்கும் ஷாஸன்ஹெளஸன் என்ற இடத்தில் இருக்கும் கொலைக்களத்தின் புகைப்படம் இத்துடன் பார்வைக்கு இணைத்துள்ளேன்.

Station Z, Site of the Gallows, Pathology போன்ற வார்த்தைகளைப் படிக்கும் போது எனக்குத் தோன்றிய உணர்ச்சியினை வெளியிட வார்த்தைகள் இல்லை.