Page 1 of 3 1 2 3 LastLast
Results 1 to 12 of 30

Thread: சுவாமி.நித்ரானந்தா

                  
   
   
  1. #1
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் mukilan's Avatar
    Join Date
    27 Jul 2005
    Location
    கனடா
    Posts
    1,999
    Post Thanks / Like
    iCash Credits
    32,969
    Downloads
    53
    Uploads
    5

    சுவாமி.நித்ரானந்தா

    அது ஒரு அழகிய நந்தவனம்.பூத்துக் குலுங்கும் மலர்கள்.. மயக்கும் மணம் பரப்பி நின்ற மகிழம்பூ மரங்கள். யாரோ ஒரு அழகிய பெண்ணுடன் பேசிக்கொண்டிருக்கிறேன். அழகான பெண்ணுடன் நானா? அதானே நல்ல கனவாகத்தான் இருந்திருக்க வேண்டும். மார்கழி மாதத்தின் காலை நேரம். தலையையும் சேர்த்து மூடிக்கொண்டு, குளிருக்கு கம்பளி கொடுத்த கதகதப்பில்தூங்கிக்கொண்டிருந்தேன். திடீரென மழை வந்த பொழுதே நான் சுதாரித்திருக்க வேண்டும்..... என் சகதர்மினி தான். கையில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் வைத்துக் கொண்டு என்னை எழுப்ப முயற்சிக்கிறாளாம்.

    என் மனைவியைப் பற்றிக் கொஞ்சம் சொல்ல வேண்டும். கல்யாணம் முடிந்த புதிதில் போனால் போகிறதென்று கொஞ்சமே கொஞ்சம் என்று அழகாக இருந்தவள்தான்.. என்னாயிற்றோ மகள் பிறந்ததிலிருந்தே அழகோடு சண்டையிட்டுக் கொண்டவள் போல கிஞ்சித்தும் அழகு படுத்திக் கொள்வதே கிடையாது. நான் சொல்லியும் காண்பித்து விட்டேன்.

    போதும் உங்க மூஞ்சிக்கு என்பாள்.
    நான் மீறி ஏதேனும் சொல்லிவிட்டால் உடனே என் அம்மாவைத் துணைக்குச் சேர்த்துக் கொண்டு சண்டை பிடிக்க வந்துவிடுவாள். எல்லா வீட்டிலும் மாமியார் மருமகள் சண்டை என்றால் எங்கள் வீட்டில் என் அம்மாவிற்கும் என் வீட்டுக்காரிக்கும் நல்ல பொருத்தம். அவர்கள் கூட்டணி எப்பொழுதும் ரொம்ப கெட்டி.எங்கே என்னைப் பட்டினி போட்டு விடுவார்களோ என்று அடிக்கடி வாய்மூடி வெளிநடப்பு செய்து விடும் சிங்கிள் மேன் நான்.

    நான்... ? பேரு பரந்தாமன். சென்னையில் ஸ்டேட் பேங்கில் புரபேஷனரி ஆபிசராக இருக்கிறேன். ரயில்வே கலாசி வேலையில் இருந்து ஐ.ஏ.எஸ் வேலை வரைக்கும் எல்லா வேலைக்கும் முயற்சி பண்ணி தெய்வம் கைவிட்டப்பறம் என் முயற்சியின் திருவினையால வேலை வாங்கினேன். இங்கே சென்னைல நான் அம்மா, என் தர்மபத்தினி செல்வி, மகள் கயல்விழியோடு இருக்கிறேன்.

    தூக்கம் என்பது எவ்வளவு அருமையான விசயம் இல்லையா? அப்படியே உடல் பாரத்தை இறக்கி மனபாரம் போக கண்ணை மூடிக்கொண்டு... அடடா. கிட்டத்தட்ட அது ஒரு தியானம். அதை அனுபவிச்சாதான் தெரியும். என் காதுக்கருகில் வெடி குண்டு வெடித்தாலும் என் தூக்கம் கலையாது. நித்திரையை நிரம்பவும் அனுபவிப்பேன் என்பதால் எனக்கு சுவாமி.நித்ரானந்தா என்றே பட்டம் கொடுக்கலாம். ஆனால் என்னைக்கூட தூக்கத்தில் எழுப்பும் வித்தையையும் கிராதகி கற்று வைத்திருக்கிறாள். ஆரம்பத்தில் காதுக்கருகில் பேசிப்பார்த்து... என்னை அசைத்துப் பார்த்து...ம்ஹீம் எதற்கும் அசையாத என்னை தண்ணீர் ஊற்றி(கவனிக்க தெளித்து அல்ல ஊற்றி) எழுப்பக் கற்றுக் கொண்டிருக்கிறாள். தூக்கத்தில் தண்ணீர் ஊற்றிய பிறகு தூக்கமாவது மண்ணாவது. என் தவம் கலைக்கும் இந்த மேனகைக்குச் சாபமா இட முடியும்?.

    நான் பத்தாம் வகுப்பு படிக்கையில் அப்பா அலாரம் வாங்கிக் கொடுத்தார். அது அடித்து நான் கேட்டதெல்லாம் பகலில்தான். நமக்கும் நித்ராதேவிக்கும் அப்படி ஒரு காதல். மனிதர் உணர்ந்து கொள்ள.. சரி வேண்டாம் விட்டிடுங்க. அது யார் அவ நித்ராதேவி என் சக்களத்தி எனச் செல்வி ஓடி வந்து விடுவாள்.

    ஆனால் என் அத்தைப் பையன் அனந்தராமன் அப்படியல்ல. பையன் படு உஷார்ப்பேர்வழி. நான் நித்ரானந்தா என்றால் அவன் உஷாரானந்தா.அலாரம் வைத்தால் அது அடிப்பதற்குள் எழுந்து அதனை ஆஃப் செய்பவன். உறங்குவானோ இல்லையோ தெரியாது. ஏதேனும் சத்தம் கேட்டால் உடனே எழுந்து விடுவான். இப்படித்தான் சிறுவயதிலே கிராமத்தில் பாட்டி வீட்டில் விடுமுறைக்கு நாங்கள் எல்லாம் சென்றிருந்த பொழுது ஏதோ சத்தம் கேட்டு விழித்தவன் பக்கத்து வீட்டில் திருடர்களைக் கண்டு அனைவரையும் எழுப்பி அவர்கள் பிடிபடக் காரணமாய் இருந்தான். ஊரே அவனைப் பாராட்டிப் பேச அத்தைக்கு இருப்புக் கொள்ளவில்லை. எங்கே போனாலும் எங்க அனந்து ரொம்ப சுறுசுறுப்பு.. எப்போவுமே உஷாரா இருப்பான் என்றெல்லாம் பெருமை பீற்றிக்கொள்வார். அந்தத் திருடன் பிடித்த கதையை மாட்டிக்கொண்ட ரெக்கார்டு டிஸ்க் போல அதையே வசனம் மாறாமல் சொல்லிக் காட்டுவார். மாமா அதைவிட ஒரு படி மேல். எங்க அனந்து சி.பி.ஐ ஆபிஸராவானாக்கும். நீ எல்லாம் என்னத்துக்குடா ஆவே மடி பிடிச்ச பயலே என்பார் என்னை.

    அனந்து சென்னை மாநகராட்சிப் பள்ளிக்கூடத்தில் கணக்கு வாத்தியாராக இருக்கிறான். சிறுவயதில் எங்கள் வீட்டிற்கு வருகையில் என் அம்மா எழுந்து வாசல் தெளிக்கும் சத்தம் கேட்டே எழுந்து விட்டேன் என்பான். என் அப்பாவும் தங்கை பையனை வானளாவப் புகழ்வார். நீயும் அவனைப் போல இருக்கணும் பரந்தாமா என்ற அட்வைஸ் வேறு. சரியென்று தலையாட்டுவதைத் தவிர வேறேன்ன செய்ய. அன்றிலிருந்து இன்று வரை தலையாட்டும் காரியத்தைச் சிரமேற்கொண்டு செய்து வருகிறேன்.

    இன்று பேங்க் சென்று உக்காரக்கூட இல்லை. செல்போனில் அனந்துவின் அம்மா(அத்தை) அழைத்தார்.
    என்ன ஆச்சு அத்தை என்றேன்.
    பரந்தாமா, அனந்து மயங்கி விழுந்துட்டாண்டா. எனக்குப் பயமாயிருக்கு கொஞ்சம் வந்துட்டுப் போயேன் என்றார்.
    மேனேஜரிடம் சென்று அரைநாள் பர்மிஷன் போட்டு விட்டு அனந்து வீட்டிற்குச் சென்றேன். போன மாதம்தான் அனந்துவிற்கு திருமணம் ஆகியிருந்தது.
    அனந்துவின் மனைவி சுமதி வாங்கண்ணா! அவர் அங்கே படுத்திருக்கார்.. எனக்குப் பயமாயிருக்கு பாருங்க என்றார்.

    நான் அனந்துவை எழுப்பினேன். ஈனஸ்வரத்தில் முனகினான். நம்பவே முடியவில்லை. காலடிச் சத்தம் கேட்டாலே எழுந்து விடும் அனந்துவா? ஒரு ஆட்டோ அமர்த்திக் கொண்டு டாக்டர்.பாத்ரூம்பூதம் கிளினிக்கிற்கு விரைந்தேன். டாக்டர் அனந்துவின் நாடி பிடித்துப் பார்த்தார். கண்களில் லைட் அடித்துப் பார்த்து விட்டு ஸ்லீப் டெப்ரிவியேசன் போலத் தெரியுதே என்றார். பின்னர் அவர் பரிந்துரைத்த சில தூக்க மாத்திரைகள் வாங்கிக்கொண்டு ஆட்டோவில் வீடு திரும்பினோம்.

    அனந்துவிடம் ஏன் டா தூங்கலை! என்றேன். சுமதி ராத்திரியெல்லாம் குறட்டை விடறாடா! எனக்குத் தூக்கம் போய்டறது என்றான். இதைக்கேட்டு சிரிப்பதா அழுவதா? என்றே தெரியவில்லை. ஆனால் தூக்கம் என்பது வரம் என்று புரிந்தது
    இப்போ சொல்லுங்க நீங்க சுவாமி.நித்ரானந்தாவாக விரும்பறீங்களா இல்லை சுவாமி.உஷாரானந்தாவாக விரும்பறீங்களா?

    ...ஆங் சொல்ல மறந்திட்டேனே.. இப்போ அனந்துவை எப்படி எழுப்பறதுன்னு செல்வி கிட்ட போன்ல சுமதி டிப் கேட்கறாங்க. பின்னே அனந்துவிற்கு தூங்க ட்ரெய்னிங் கொடுத்தது நானாச்சே! சுவாமி.நித்ரானந்தாய நமக.
    Last edited by mukilan; 28-07-2008 at 07:06 PM.
    உன் வீட்டுக்கண்ணாடி ஆனாலும் கூட முன் வந்து நின்றால்தான் முகம் காட்டும் இங்கே!

  2. #2
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    47,203
    Downloads
    183
    Uploads
    12
    நீங்களுமா முகிலன்?

    இதைப் படிக்கும் போது எங்கள் அம்மா என்னை எழுப்பும் நுட்பம் நினைவுக்கு வருகிறது..

    ஒரு கப் காஃபி, அப்புறம் ஒரு சொம்புத் தண்ணீர் கொண்டு வந்து காஃபியை பக்கத்து டீப்பாய் வைத்துவிட்டு

    தலைமாட்டில் அமர்ந்துகொண்டு கொஞ்சமாய்த் தண்ணீரில் விரல் நனைத்து இமைகளின் மேல் பூவுக்கு வர்ணம் பூசுவது மாதிரி, மெதுவாகத் தடவிவிட்டு "ராஜூ ராஜூ" என அழைப்பார்கள்..

    அப்படியே தாமரை மலரும்....

    என்ன கேட்டீங்க? இப்ப எப்படியா? இப்பவு தூக்கம் அப்படியேப் பூட்டியக் கதவு தான். ஆனால் தூங்கும் முன் மனசுக்குள் அலாரம் செட் ஆகிடும். எத்தனை மணிக்கு விழிக்கணுமோ, அப்போது தானாத் தூக்கம் தெளிஞ்சிடும்.


    தயவு செய்து யாரும் எங்க வீட்டு ஃபோன் நம்பரை முகிலனுக்கு குடுத்திராதீங்க..
    Last edited by தாமரை; 12-07-2008 at 02:22 AM.
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  3. #3
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் mukilan's Avatar
    Join Date
    27 Jul 2005
    Location
    கனடா
    Posts
    1,999
    Post Thanks / Like
    iCash Credits
    32,969
    Downloads
    53
    Uploads
    5
    பரவாயில்லையே! என்னைப் போலவே தூங்க இங்கு நிறையப் பேர் இருக்கிறார்கள்.

    உங்க போன நம்பர் எனக்குத் தெரிஞ்சா பரவாயில்லை... தெரியவேண்டியவங்களுக்குத் தெரியக் கூடாதே!
    Last edited by mukilan; 12-07-2008 at 02:23 AM.
    உன் வீட்டுக்கண்ணாடி ஆனாலும் கூட முன் வந்து நின்றால்தான் முகம் காட்டும் இங்கே!

  4. #4
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    11 Oct 2004
    Location
    தமிழ்மன்றம்
    Posts
    4,511
    Post Thanks / Like
    iCash Credits
    203,440
    Downloads
    104
    Uploads
    1
    வெல்கம் பேக் முகில்ஸ்....

    நீண்........ட நாட்க்களுக்கு பிறகு ஒரு பதிவு....
    அது என்னமோ பாருங்க இந்த பதிவு வாசிக்க வாசிக்க என் உதட்டு ஓரம் காதுவரை மெதுவாக சென்றதை "செல்வி" பார்த்து விட்டார்.....

    எப்போதேனும் கடந்து செல்லும் யாரோ ஒரு பெண் நீ பூசும் வாசனைத் திரவியத்தை நினைவுபடுத்துகையில் உன்னை எப்படி மறப்பதாம்?
    எப்போ இந்தியா வருவதா உத்தேசம்....:-)
    பென்ஸ்

    என் பதிவில் உள்ள எழுத்து பிழையை சகிக்கவும்... அதை சுட்டி காட்டுபவர்களுடன் நான் சன்டையாக்கும்...

  5. #5
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் மதி's Avatar
    Join Date
    10 Aug 2005
    Location
    சென்னை
    Posts
    8,263
    Post Thanks / Like
    iCash Credits
    77,744
    Downloads
    78
    Uploads
    2
    கலக்கல் முகில்ஸ்...

    எப்படி இவ்வளவு சரளமா எழுதறீங்க...

    சுவாமி நித்திரானந்தா நீங்க இல்லியே??

  6. #6
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் mukilan's Avatar
    Join Date
    27 Jul 2005
    Location
    கனடா
    Posts
    1,999
    Post Thanks / Like
    iCash Credits
    32,969
    Downloads
    53
    Uploads
    5
    Quote Originally Posted by பென்ஸ் View Post
    வெல்கம் பேக் முகில்ஸ்....

    நீண்........ட நாட்க்களுக்கு பிறகு ஒரு பதிவு....
    அது என்னமோ பாருங்க இந்த பதிவு வாசிக்க வாசிக்க என் உதட்டு ஓரம் காதுவரை மெதுவாக சென்றதை "செல்வி" பார்த்து விட்டார்.....



    எப்போ இந்தியா வருவதா உத்தேசம்....:-)
    உங்கள் ஊக்கத்திற்கு மிக்க நன்றி பென்ஸ். உங்க வீட்லயும் ஒரு செல்வி இருக்காங்களா?

    எப்போ இந்தியா வருவதா உத்தேசம்....:-
    என் துரதிர்ஷ்டம்தான் பென்ஸ் இது. நானும் இன்னும் கொஞ்ச நாள் என்று சொல்லிச் சொல்லியே நாட்களைக் கடத்தி விட்டேன். நிச்சயம் டிசம்பர் 2008க்குள் வந்து விடுவேன் என நினைக்கிறேன். மன்றத்தின் சங்கமத்தில் கலந்து கொள்வது பற்றி உறுதியாகத் தெரியாததால் என்னால் எதுவும் சொல்ல இயலவில்லை.
    உன் வீட்டுக்கண்ணாடி ஆனாலும் கூட முன் வந்து நின்றால்தான் முகம் காட்டும் இங்கே!

  7. #7
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    47,203
    Downloads
    183
    Uploads
    12
    Quote Originally Posted by பென்ஸ் View Post
    எப்போ இந்தியா வருவதா உத்தேசம்....:-)
    பென்ஸ் உண்மையைச் சொல்லிடுங்க. எங்க இருக்கீங்க!
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  8. #8
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் mukilan's Avatar
    Join Date
    27 Jul 2005
    Location
    கனடா
    Posts
    1,999
    Post Thanks / Like
    iCash Credits
    32,969
    Downloads
    53
    Uploads
    5
    Quote Originally Posted by மதி View Post
    கலக்கல் முகில்ஸ்...
    எப்படி இவ்வளவு சரளமா எழுதறீங்க...
    நன்றி மதி! உங்கள் ஊக்கம் இருக்கையில் எல்லாம் சரளமா வருமப்பு.
    Quote Originally Posted by மதி View Post
    ..
    சுவாமி நித்திரானந்தா நீங்க இல்லியே??
    இல்லைன்னு சொன்னா நம்பவா போறீங்க
    நேற்று இரவுதான் உங்களிடம் புலம்பிக் கொண்டிருந்தேன். பென்ஸ் வேறு எப்பொழுது இந்தியா எனக் கேட்டு விட்டார்
    உன் வீட்டுக்கண்ணாடி ஆனாலும் கூட முன் வந்து நின்றால்தான் முகம் காட்டும் இங்கே!

  9. #9
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் mukilan's Avatar
    Join Date
    27 Jul 2005
    Location
    கனடா
    Posts
    1,999
    Post Thanks / Like
    iCash Credits
    32,969
    Downloads
    53
    Uploads
    5
    Quote Originally Posted by தாமரை View Post
    பென்ஸ் உண்மையைச் சொல்லிடுங்க. எங்க இருக்கீங்க!
    அவர் மன்றத்திற்கு வந்து போகும் நேரத்தைப் பார்த்தால் ஏதோ வட அமெரிக்க நாட்டில் இருப்பது போலத்தான் தோன்றுகிறது.
    உன் வீட்டுக்கண்ணாடி ஆனாலும் கூட முன் வந்து நின்றால்தான் முகம் காட்டும் இங்கே!

  10. #10
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    47,203
    Downloads
    183
    Uploads
    12
    Quote Originally Posted by mukilan View Post
    அவர் மன்றத்திற்கு வந்து போகும் நேரத்தைப் பார்த்தால் ஏதோ வட அமெரிக்க நாட்டில் இருப்பது போலத்தான் தோன்றுகிறது:
    அப்படியென்றால் இந்தியா எப்போது போறீங்க என்றல்லவா கேட்டிருக்கணும்.
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  11. #11
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் mukilan's Avatar
    Join Date
    27 Jul 2005
    Location
    கனடா
    Posts
    1,999
    Post Thanks / Like
    iCash Credits
    32,969
    Downloads
    53
    Uploads
    5
    எனக்கும் அப்படித்தான் தோன்றியது. ஆனால் பென்ஸ் அப்படிக் கேட்டிருந்தால் நாம் இங்கு விவாதிக்கவே தேவையில்லையே!
    நல்லாக் குழப்புறாரே!!!!
    உன் வீட்டுக்கண்ணாடி ஆனாலும் கூட முன் வந்து நின்றால்தான் முகம் காட்டும் இங்கே!

  12. #12
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    47,203
    Downloads
    183
    Uploads
    12
    Quote Originally Posted by mukilan View Post
    எனக்கும் அப்படித்தான் தோன்றியது. ஆனால் பென்ஸ் அப்படிக் கேட்டிருந்தால் நாம் இங்கு விவாதிக்கவே தேவையில்லையே!
    நல்லாக் குழப்புறாரே!!!!
    விவாதிக்கத் தேவையில்லைன்னா? ஓ புரிஞ்சிடுத்து. பென்ஸ் இங்க இருந்தா உங்களை எப்படி இந்தியாவிற்கு வரூவீங்க எனக் கேட்பார் என யோசிக்கிறீங்களா? ஏன் பென்ஸ் இருந்தா வரமாட்டீங்களா?

    யோ(வ்) -- சிக்கறீங்க தானே!
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

Page 1 of 3 1 2 3 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •