Results 1 to 5 of 5

Thread: விரல்

                  
   
   
  1. #1
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் நாகரா's Avatar
    Join Date
    23 Jan 2008
    Location
    தில்லைகங்கா நகர், சென்னை
    Age
    58
    Posts
    2,883
    Post Thanks / Like
    iCash Credits
    15,448
    Downloads
    2
    Uploads
    0

    விரல்

    ஐம்புலன்களின்
    கையடக்கப் பதிப்பு

    பகுத்தறிவின் கையில்
    இது ஒரு தீப்பந்தம்

    இந்த வாமனன் தான்
    "மெய்" என்ற
    விசுவரூபமெடுத்து
    விண்ணையும்
    மண்ணையும்
    அளக்கிறான்

    ஞானம் என்ற
    ஆலமரத்தின்
    ஆணி வேர்

    தொடுவதில் தொடங்கிய
    இதன் சின்ன தேடல்
    சந்திரனின் புழுதியைச்
    சந்தனமாகப் பூசிக் கொண்டு
    ஆன்மாவின் அடிமுடி தேடி
    இன்னும் தொடர்கிறது

    எந்த ஒரு கருத்தையும்
    அது
    எங்கிருந்து பிறந்தது என்று
    ஆய்வு நடத்தி
    அதன் ஆணி வேர் வரை
    சென்றால்
    அங்கு
    விரல் தான் கிட்டும்

    அடிப்படை உணர்ச்சிக் கூறுகளிலிருந்து
    பூரண மெய்ஞ்ஞானம் வரை
    கல்லிலிருந்து
    கடவுள் வரை
    மரத்திலிருந்து
    மனிதன் வரை
    பரிணாமம் என்பதே
    விரலின் வெவ்வேறு
    பரிமாணந் தான்

    விரல் தான்
    விரல் தான்
    எல்லாமே விரல் தான்
    அது
    இல்லாமல் போனால்
    விழல் தான்
    விழல் தான்
    எல்லாமே விழல் தான்

    விழியும் விரல் தான்
    பார்வை அதன் தொடல் தான்

    செவியும் விரல் தான்
    கேள்வி அதன் தொடல் தான்

    நாசியும் விரல் தான்
    மணமும் மூச்சும் அதன் தொடல் தான்

    நாவும் விரல் தான்
    சுவையும் பேச்சும் அதன் தொடல் தான்

    மனமும் விரல் தான்
    எண்ணமும் அறிவும் அதன் தொடல் தான்

    இருதயமும் விரல் தான்
    உணர்வும் அன்பும் அதன் தொடல் தான்

    மெய்யும் விரல் தான்
    உயிர் அதன் தொடல் தான்

    தொடல் தான் தொடல் தான்
    எல்லாமதன் தொடல் தான்
    விரல்
    இல்லாமல் போனால்
    கெடல் தான் கெடல் தான்
    உணர்வின்றிக் கெடல் தான்
    உங்களன்பன்
    நான் நாகரா(ந.நாகராஜன்)
    பராபர வெளியும் பராபரை ஒளியும்
    பரம்பர அளியும் வாசி
    மாயா மெய்ந்நிலை இற(ர)ங்கும் நவயுக உதயம் - வள்ளலாரின் புதிய ஏற்பாடு

  2. #2
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    30 Mar 2008
    Location
    இப்ப மும்பையில,
    Posts
    449
    Post Thanks / Like
    iCash Credits
    3,858
    Downloads
    96
    Uploads
    0
    விரலுக்கு இவ்வளவு விளக்கங்களா! மெய் சிலிக்க வைத்துவிட்டீர் நாகரா.
    பக்கத்து வீட்டுக்காரன் பசித்திருக்க இறைவனுக்கு படைக்கப்படும் உணவுகளை இறைவன் ஏற்பதில்லை.

  3. #3
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் நாகரா's Avatar
    Join Date
    23 Jan 2008
    Location
    தில்லைகங்கா நகர், சென்னை
    Age
    58
    Posts
    2,883
    Post Thanks / Like
    iCash Credits
    15,448
    Downloads
    2
    Uploads
    0
    மெய் சிலிர்த்த உமக்கு நன்றி பல, அன்புக்குரிய எஸ்.எம். சுனைத் ஹஸனீ அவர்களே!
    உங்களன்பன்
    நான் நாகரா(ந.நாகராஜன்)
    பராபர வெளியும் பராபரை ஒளியும்
    பரம்பர அளியும் வாசி
    மாயா மெய்ந்நிலை இற(ர)ங்கும் நவயுக உதயம் - வள்ளலாரின் புதிய ஏற்பாடு

  4. #4
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் தீபா's Avatar
    Join Date
    24 Apr 2007
    Location
    கோவை
    Posts
    1,033
    Post Thanks / Like
    iCash Credits
    15,453
    Downloads
    1
    Uploads
    0
    அருமை அருமை.... உணர்ந்து படித்தேன்.. விரல் பாடத்தை. தொடர்க ஞானியே!

  5. #5
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் நாகரா's Avatar
    Join Date
    23 Jan 2008
    Location
    தில்லைகங்கா நகர், சென்னை
    Age
    58
    Posts
    2,883
    Post Thanks / Like
    iCash Credits
    15,448
    Downloads
    2
    Uploads
    0
    விரலுந் தீண்டும்
    தென்றலுந் தீண்டும்
    நாகமுந் தீண்டும்

    இது எப்படி இருக்கு? தென்றலாரே!

    உம் உற்சாக வரிகளுக்கு நன்றி பல.
    உங்களன்பன்
    நான் நாகரா(ந.நாகராஜன்)
    பராபர வெளியும் பராபரை ஒளியும்
    பரம்பர அளியும் வாசி
    மாயா மெய்ந்நிலை இற(ர)ங்கும் நவயுக உதயம் - வள்ளலாரின் புதிய ஏற்பாடு

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •