Page 1 of 21 1 2 3 4 5 11 ... LastLast
Results 1 to 12 of 247

Thread: கோஹினூர் கொலைகள்!!(நிறைவடைந்தது)

                  
   
   
  1. #1
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0

    கோஹினூர் கொலைகள்!!(நிறைவடைந்தது)

    பாகம்-1

    ம்ஸ்டர்டாம் சிப்போல் விமான நிலையத்தில், ட்ரான்ஸிட்டில் அடுத்த பயணத்துக்கான போர்டிங் அட்டையை வாங்க வரிசையில் நின்று கொண்டிருந்தான் வெற்றிச் செல்வன். ஜியாலஜிஸ்ட்டாக ஒரு அமெரிக்க எண்ணை திருடும் மகா நிறுவனத்தினருக்காக மேற்கு ஆப்பிரிக்க நாடான கபான் என்ற நாட்டில் பணியிலிருந்தான். மூன்று மாதங்களுக்கு ஒருமுறை தாயகம் வந்துபோகும் வாய்ப்பிருந்தது. கபான் நாட்டிலிருந்து நேரடியாக இந்தியாவுக்கு விமானச்சேவை இல்லையென்பதால், கே.எல்.எம் விமான சேவையின் மூலம் சிப்போல் வந்து அங்கிருந்து சென்னை செல்வது அவன் வழக்கம். வழக்கமென்றால் இது மூன்றாவதுமுறை அவ்வளவுதான்.

    கபானின் தலைநகரம் லிப்ரெவெலியில் விமானம் ஏறும்போதே சிப்போல் விமான நிலைய வரிவிலக்கு கடைகளில் வாங்க வேண்டிய பொருட்களின் பட்டியலைத் தயாராக சட்டைப் பையில் வைத்திருந்தான். 5அடி 10 அங்குல உயரம். சாக்லேட்டு கலருக்காரா, சிலேட்டு முதுகுகாரா என்று பாடப்படக்கூடியவனாக நல்ல ஆரோக்கியத்தில் இருந்தான்.

    அடுத்த வரிசையில் ஒரு ஜெர்மேனியன், ஆத்தா உடம்புக்குள் புகுந்து மலையிறங்கியபின் நிற்பதைப் போல தலை தனியாக ஆட, நின்று கொள்ள முயற்சித்துக்கொண்டிருந்தான். மேசைக்கு அந்தப்புறமிருந்த பெண்ணிடம்

    'என்னை ஏன் இரண்டு நாளாக இந்த விமான நிலையத்தில் வைத்திருக்கிறீர்கள். என்னை என் வீட்டுக்கு அனுப்புங்கள்.என் ரஷ்ய மனைவி எனக்காக காத்துக்கொண்டிருப்பாள்.'....

    என்று சலம்பிக்கொண்டிருந்தான். அவன் சலம்பலைத் தாங்க முடியாதவனாக அவனருகே வந்த விமான நிலைய ஊழியர் ஒருவர் அவனை சமாதானப் படுத்தி அப்புறப்படுத்தினார். வெற்றிச்செல்வன் அந்த ஊழியரிடம் என்ன பிரச்சனை என்று கேட்டதற்கு,

    "மூன்று நாட்களுக்கு முன் இவனும் ஒரு ஆப்பிரிக்க நாட்டிலிருந்து வந்தான். அன்றே அவனது அடுத்த விமானமும் தயாராக இருந்தது. நன்றாக குடித்துவிட்டு நடக்க முடியாமல் இருந்தவனை விமானத்தில் ஏற நாங்கள் சம்மதிக்க வில்லை. நேற்றும் அதன் முன் தினமும் இதே தொல்லைதான். அதனால் இப்போதும் இங்கேயே இருக்க வேண்டியதாகிவிட்டது. எப்படியும் இன்று தண்ணீர்த் தொட்டியில் இரண்டுமணிநேரம் முக்கிவைத்தாவது அனுப்பிவிடுவோம்" என்று சொல்லிவிட்டு நகர்ந்துவிட்டார்.

    எல்லாவற்றையும் அறிந்துகொள்ளும் ஆர்வம் உள்ளவன் வெற்றி. அதே சமயம் தன்னால் முடிந்த உதவியையும் செய்யக்கூடியவன். கவிதை எழுதுவான். கராத்தே தெரிந்துவைத்திருக்கிறான். டிஸ்கொதேக்களுக்கும் போவான், சுகி சிவத்தின் உரை கேட்கவும் போவான். கையில் கிடைத்த போர்டிங் அட்டையை எடுத்துக்கொண்டு மெல்ல வரிசைவிட்டு வெளி வந்தான். அருகிலிருந்த திரையில் அவனது விமானம் புறப்படும் டெர்மினலைக் கண்டுபிடித்தான். மிகப்பெரிய விமானநிலையம். இவனது டெர்மினல் அங்கிருந்து சற்றேறக்குறைய அரை கிலோமீட்டர் இருந்தது. நடக்க ஆரம்பித்தான். இன்னும் இரண்டு மணி நேரம் இருக்கிறது. அதற்குள் வாங்க வேண்டிய பொருட்களை வாங்கிக்கொள்ளலாமென்ற எண்ணத்தில் எலக்ட்ரானிக்ஸ் கடை இருந்த பகுதிக்குப் போனான்.

    30, 50, 125 ஈரோ என்று விலைகள் போட்டிருந்த அட்டைகளைப் பார்த்ததும் வாங்கவேண்டுமென்று தோன்றிய எண்ணத்தை இந்தியத்தொகையில் மாற்றிப்பார்த்து கைவிட்டான். போனமுறை திரும்பி வரும்போது தங்கையும், நெருங்கிய நன்பனும் வாங்கிவரச் சொன்னதை மட்டும் வாங்கிக்கொண்டு கடையிலிருந்து வெளிவந்து நடை பாதையில் சங்கமமான நிமிடம் அந்தப் பெண் அவனை இடித்துக்கொண்டு போனாள். கோபமாய் அவளைத் திரும்பிப் பார்த்தவன், அதே நேரம் இவனை நோக்கித் திரும்பிய அவளது கலக்கமான முகம் பார்த்து கோபம் குறைந்து குழப்பமானான். துவாரப்பாலகர்களைப் போல, கோட் அணிந்த இரண்டுபேர் அவளை அரை அங்குல இடைவெளியில் கிட்டத்தட்ட தள்ளிக்கொண்டு போனார்கள்.

    எப்போதும் தலைதூக்கும் அவனது ஆர்வம் இப்போது எட்டிப் பார்த்தது. கைக்கடிகாரம் பார்த்து அந்த எண்ணத்தை மறந்து நடந்தான். நான்கு அடிகூட நடந்திருக்க மாட்டான்...ஒரு ஆள் இந்தியமுகம், மேற்கத்திய நாகரீகத்துடன் இருந்த அவன் இவனை நிறுத்தினான். கையில் வைத்திருந்த வெள்ளைக் காகிதத்தை அவனிடம் கொடுத்துக்கொண்டே ஆங்கிலத்தில்,

    'அதோ அங்கே போகிறாளே ஒரு பெண்..."என்று அவனை சற்றுமுன் இடித்துவிட்டுப் போனப் பெண்ணைக் காட்டி,

    "இதை என் கையில் திணித்துவிட்டுப் போனாள். இதில் என்ன எழுதியிருக்கிறதென்று என்னால் படிக்க முடியவில்லை. ஏதாவது இந்திய மொழியாக இருக்கும்...உங்களுக்குப் புரிகிறதா என்று பாருங்கள்' என்றான்.

    இவனுக்கே உள்ள குறும்பில்..அந்த மனிதனைப் பார்த்து "ஏன் நீங்களும் இந்தியர்தானே...உங்களால் படிக்க முடியாதா?" என்று கேட்டதும்,

    "ஹே மேன்...நான் இந்தியனாக இருந்தாலும் ஐரோப்பாவில் பிறந்து வளர்ந்தவன். எனக்கு இந்த குப்பைகளெல்லாம் தெரியாது...கீப் திஸ்' என்று அந்த கை துடைக்கும் தாளை வெற்றியின் கைகளில் திணித்துவிட்டு எனக்கென்ன என்பதைப்போல நகர்ந்து மறைந்தான்.

    சுரு சுருவென்று வந்த கோபத்தைக் கட்டுப்படுத்திக்கொண்டே அந்த தாளைப் பிரித்தான். அதில்

    "என்னைக் காப்பாத்துங்க...ஆபத்து"

    என்று தமிழில் எழுதியிருந்தது.

    தொடரும்
    Last edited by சிவா.ஜி; 01-08-2008 at 06:33 PM.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  2. #2
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    15 Nov 2007
    Location
    பாலைவனம்
    Posts
    2,785
    Post Thanks / Like
    iCash Credits
    55,551
    Downloads
    114
    Uploads
    0
    முதல்ல வந்து என்னைக் காப்பாத்துங்க... இப்புடி எல்லாம் சஸ்பென்ஸ் வச்சீங்க... அப்புறம் என்னைக் காப்பாத்துங்கணு அஞ்சல் அனுப்பும் படி ஆயிடும்.

    ஆரம்பித்து விட்டது சிவா அண்ணாவின் அடுத்த அட்டகாசம்...
    துவங்கி விட்டது துப்பறியும் தொடர்கதை
    கோஹினூருக்காக கொடூரக் கொலைகளுடன் குலைநடுங்க வைக்கும் காட்சிகள்...
    படிக்கத் தவறாதீர்கள்.....
    அட அட .அண்ணா... இப்டி எல்லாம் நான் விளம்பரம் செய்வேன் அதனால இந்தக் கதைய நான் தான் பாக்கட் நாவலாக்கப் போறேன்..
    அன்புடன்...
    செல்வா

    பின்னூட்டங்களில் முன்னுரிமை, மன்றப் படைப்புகளுக்கே...!

  3. #3
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் கண்மணி's Avatar
    Join Date
    02 Sep 2006
    Posts
    1,493
    Post Thanks / Like
    iCash Credits
    9,014
    Downloads
    3
    Uploads
    0
    Quote Originally Posted by செல்வா View Post
    அட அட .அண்ணா... இப்டி எல்லாம் நான் விளம்பரம் செய்வேன் அதனால இந்தக் கதைய நான் தான் பாக்கட் நாவலாக்கப் போறேன்..
    பாக்கெட்ல போட எப்படியெல்லாம் பிளான் பண்றாங்க பாருங்கண்ணா!

  4. #4
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் mukilan's Avatar
    Join Date
    27 Jul 2005
    Location
    கனடா
    Posts
    1,999
    Post Thanks / Like
    iCash Credits
    32,969
    Downloads
    53
    Uploads
    5
    தொடர் கதைக்குரிய இலக்கணங்களோடு அசத்தலான ஆரம்பம். இன்னமும் நீங்கள் தொடர்ந்து கொடுக்கப் போகும் வைரங்களுக்காகக் காத்திருக்கிறோம் அண்ணா.
    நன்றியும் எதிர்பார்ப்பும்..

  5. #5
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    Quote Originally Posted by செல்வா View Post
    முதல்ல வந்து என்னைக் காப்பாத்துங்க... இப்புடி எல்லாம் சஸ்பென்ஸ் வச்சீங்க... அப்புறம் என்னைக் காப்பாத்துங்கணு அஞ்சல் அனுப்பும் படி ஆயிடும்.

    ஆரம்பித்து விட்டது சிவா அண்ணாவின் அடுத்த அட்டகாசம்...
    துவங்கி விட்டது துப்பறியும் தொடர்கதை
    கோஹினூருக்காக கொடூரக் கொலைகளுடன் குலைநடுங்க வைக்கும் காட்சிகள்...
    படிக்கத் தவறாதீர்கள்.....
    அட அட .அண்ணா... இப்டி எல்லாம் நான் விளம்பரம் செய்வேன் அதனால இந்தக் கதைய நான் தான் பாக்கட் நாவலாக்கப் போறேன்..
    அட அட அட என்னா விளம்பரம்ப்பா....இப்படியெல்லாம் ஓவர் பில்டப் குடுத்து என்னைய கவுக்க எத்தினி நாளா திட்டம்....?

    ஏதோ நம்மால முடிஞ்ச அளவுக்கு எழுதலான்னு பாத்தா...வில்லங்கம் பண்ணுதாங்களே....
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  6. #6
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    Quote Originally Posted by mukilan View Post
    தொடர் கதைக்குரிய இலக்கணங்களோடு அசத்தலான ஆரம்பம். இன்னமும் நீங்கள் தொடர்ந்து கொடுக்கப் போகும் வைரங்களுக்காகக் காத்திருக்கிறோம் அண்ணா.
    நன்றியும் எதிர்பார்ப்பும்..
    நன்றி முகிலன். என் சின்ன மூளையில் தோன்றும் ஏதோ சில எண்னங்களை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். தட்டிக்கொடுத்தோ அல்லது குட்டிக் கொடுத்தோ என்னை ஆதரிக்க வேண்டியது நீங்கள்தான்.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  7. #7
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    15 Nov 2007
    Location
    பாலைவனம்
    Posts
    2,785
    Post Thanks / Like
    iCash Credits
    55,551
    Downloads
    114
    Uploads
    0
    Quote Originally Posted by கண்மணி View Post
    பாக்கெட்ல போட எப்படியெல்லாம் பிளான் பண்றாங்க பாருங்கண்ணா!
    ஸ்ஸ்ஸ்ஸ் சத்தம் போடாதீங்க... (உங்களையும் பார்ட்னராச் சேத்துக்கறேன்)
    அன்புடன்...
    செல்வா

    பின்னூட்டங்களில் முன்னுரிமை, மன்றப் படைப்புகளுக்கே...!

  8. #8
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    அடக்கடவுளே... இப்படி எல்லாம் பொறுமைகாக்க வைக்காதீங்க...

    மிக மிக சுவாரசியமாக போகிறது...
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  9. #9
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் மதி's Avatar
    Join Date
    10 Aug 2005
    Location
    சென்னை
    Posts
    8,263
    Post Thanks / Like
    iCash Credits
    77,744
    Downloads
    78
    Uploads
    2
    ஆரம்பிச்சாச்சா..உங்க அட்டகாசங்களை. இதற்கு தான் தயார் படுத்திக் கொண்டிருப்பதாக சொன்னீங்களா? உங்களைப் பார்த்தால் பொறாமையாக இருக்கிறது.

    கலக்கலான ஆரம்பம்.. சீக்கிரம் தொடருங்க..

  10. #10
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    நன்றி அன்பு. நன்றி மதி. சீக்கிரமே தொடர்ந்துடுவோம். நீங்கள்லாம் கூட வரும்போது எனக்கென்ன தயக்கம்.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  11. #11
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    Singapore
    Posts
    12,060
    Post Thanks / Like
    iCash Credits
    71,111
    Downloads
    18
    Uploads
    2
    அட்டகாசமான ஆரம்பம். இதைப் படித்தவுடனேயே அதற்குள் தொடரும் என்பதைப் பார்த்து கொஞ்சம் ஏமாற்றம் கொஞ்சம் எரிச்சல்.

    பரவாயில்லை. ஒரு நல்ல கதையைப் படிக்க நேரம் எடுத்துக்கொண்டால் பரவாயில்லை.

    தொடருங்கள்.

  12. #12
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    அடடா...ஆரெனை எரிச்சலடைய வைத்துவிட்டேனா....இனி வேகமாகப் போகலாம் ஆரென். அடுத்த பாகத்துக்கு கொஞ்சம் விவரங்கள் தேவைப்பட்டதால் உடனே போட முடியவில்லை. விவரங்கள் கிடைத்துவிட்டன. இனி வேகமாக பதிகிறேன். நன்றி ஆரென்.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

Page 1 of 21 1 2 3 4 5 11 ... LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •