Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 24

Thread: சாப்ட்வேர் மாப்பிள்ளை தேடும் பெண்களுக்கு !!!

                  
   
   
  1. #1
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் கண்மணி's Avatar
    Join Date
    02 Sep 2006
    Posts
    1,493
    Post Thanks / Like
    iCash Credits
    9,014
    Downloads
    3
    Uploads
    0

    சாப்ட்வேர் மாப்பிள்ளை தேடும் பெண்களுக்கு !!!

    நன்றி - மின்னஞ்சல் அனுப்பிய தோழிக்கு!!! - இனி மேலப் படிங்க..

    -------------------------------------------------------------------------------



    ஏதோ நம்ம தங்கச்சி "டிப்ஸ்" திவ்யா ரேஞ்சுக்கு இல்லைனாலும் நம்ம ரேஞ்சுக்கு கொஞ்சம் சிப்ஸ்

    வித்யா : என்னடி திடீர்னு ஃபோன் பண்ணியிருக்க என்ன விஷயம்?

    நித்யா: வீட்ல மாப்பிளை பார்க்கலாம்னு நிறைய இடத்துல ரிஜிஸ்டர் பண்ணாங்க இல்லை? நிறைய ஜாதகமா வந்திருக்கு.. அதுல 4-5 ஒத்து வர மாதிரி இருக்கு. எதை செலக்ட் பண்ணலாம்னு தெரியலை. அதான் குழம்பி போய் இருக்கேன்.

    வித்யா : என்ன குழப்பம்?

    நித்யா : நிறைய சாப்ட்வேர் இஞ்சினியருங்க ஜாதகம் வந்திருக்கு. இப்ப எல்லாம் சாப்ட்வேர் இஞ்சினியருங்க வேற ஃபீல்ட்ல இருக்கற

    பொண்ணுங்களை தான் கல்யாணம் பண்ணிக்கனும் யோசிக்கறாங்களாம். அதான் இதுல யாரை செலக்ட் பண்றதுனு தெரியல. நீதான்

    சாப்ட்வேர் இஞ்சினியராச்சே. எனக்கு கொஞ்சம் சஜஷன் சொல்லு.

    வித்யா : சொல்லிட்டா போகுது. ஒவ்வொருத்தரும் என்ன பொசிஷனு சொல்லு.

    நித்யா: முதல் மாப்பிள்ளை மேனஜரா இருக்காரு.

    வித்யா : மேனஜரா? அப்படினா எப்பவுமே எதோ பிஸியா இருக்கற மாதிரி ஒரு பில்ட் அப் கொடுப்பாரு. ஆனா உருப்படியா ஒண்ணும் செய்ய மாட்டாரு. ஒரு கிலோ அரிசில ஊருக்கே சாப்பாடு செய்ய சொல்லுவாரு. ஆட்டுக்கறி வாங்கிட்டு வந்து கொடுத்துட்டு சிக்கன் 65 செய்ய சொல்லுவாரு. அது முடியாதுனு சொன்னாலும், ஒத்துக்க மாட்டாரு. எப்படியாவது ராத்திரி பகலா கஷ்டப்பட்டு உழைச்சாவது அதை செஞ்சி முடிக்கனும்னு சொல்லுவாரு. வேணும்னா நைட் கேப் (cab) அரெஞ்ச் பண்றனு சொல்லுவாரு. டேய் ராத்திரி பகல் முழிச்சா மட்டும் எப்படிடா செய்ய முடியும் கேட்டாலும் ஒத்துக்க மாட்டாரு.

    வித்யா: ஆஹா. அவ்வளவு ஆபாத்தானவரா? அப்ப நம்ம எஸ்கேப். அடுத்து இருக்கறவரு டெஸ்ட் இஞ்சினியரு.

    நித்யா: இவரு அவரை விட ஆபத்தானவரு. எது செஞ்சாலும் அதுல இருக்கற குறையை மட்டும் கரெக்டா சொல்லுவாரு. நீ பத்து வெரைட்டி சமைச்சு அவரை அசத்தனும்னு நினைச்சாலும் அதுல எதுல உப்பு கம்மியா இருக்குனு மட்டும் சொல்லுவாரு.. நல்லா இருக்குனு எதுவுமே சொல்ல மாட்டீங்களானு கேட்டா, நல்லா செய்ய வேண்டியது தான் உன் வேலை. அதனால அதை எதுக்கு சொல்லனும்னு கேட்பாரு. ரொம்ப நல்லவரு.

    வித்யா: அப்ப இவருக்கும் நோ சொல்லிடலாம். அடுத்து இருக்கறவரு பெர்ஃபார்மன்ஸ் டெஸ்ட் இஞ்சினியராம்.

    நித்யா : இது அதுக்கும் மேல. எல்லாமே நல்லா இருந்தாலும், இதை செய்ய இவ்வளவு நேரமானு கேட்பாரு. காபி போட 10 நிமிஷமாச்சுனா, காபி நல்லா இருக்கானு பார்க்க மாட்டாரு. 5 நிமிஷத்துல போட வேண்டிய காப்பியை 10 நிமிஷமா போட்டிருக்கனு சத்தம் போடுவாரு. நீங்க சொல்றது இன்ஸ்டண்ட் காபி, நான் செஞ்சது பில்டர் காபினு சொன்னாலும் கேட்க மாட்டாரு. அதே மாதிரி தான் எல்லா வேலைக்கும். அப்ப நீ மேக் அப் பண்ற நேரத்துக்கு நீ எல்லாம் இவரை யோசிக்கவே கூடாது.

    வித்யா: அப்ப சாப்ட்வேர் மாப்பிளையே வேண்டாம்னு சொல்றியா?

    நித்யா: யார் அப்படி சொன்னா? சாப்ட்வேர்லயே இளிச்ச வாய் கூட்டம் ஒண்ணு இருக்கு. அது தான் டெவலப்பர் கூட்டம். எவ்வளவு அடிச்சாலும் தாங்கிக்கும்.

    வித்யா: அவுங்களை பத்தி சொல்லேன்.

    நித்யா: நீ எதுவுமே செய்ய வேண்டாம். எல்லாமே இவுங்களே செஞ்சிடுவாங்க. நாம பின்னாடி இருந்து உற்சாகப்படுத்தினா போதும். ஆனா இவுங்க கிட்ட இருக்கற பிரச்சனை என்னனா எது கேட்டாலும் தெரியும்னு சொல்லிடுவாங்க. நம்ம "அறிவாளி" படம் தங்கவேல் பூரி சுட்ட கதை மாதிரி. அப்படினாலும் ஓ.கே தான். எவ்வளவு அடிச்சாலும் தாங்கிக்குவாங்க. ஆனா அடிச்சிட்டு அடிச்சிட்டு "நீ ரொம்ப நல்லவனு" சொல்லனும். அவ்வளவு தான்.

    வித்யா: இது சூப்பரா இருக்கே. அப்ப அந்த மாதிரி மாப்பிளையை தேடிடுவோம்...

  2. #2
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் மன்மதன்'s Avatar
    Join Date
    29 Nov 2003
    Posts
    11,633
    Post Thanks / Like
    iCash Credits
    30,747
    Downloads
    17
    Uploads
    0
    நல்லாவே யோசிக்கிறாங்க..!! சூப்பர்..

  3. #3
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் மதி's Avatar
    Join Date
    10 Aug 2005
    Location
    சென்னை
    Posts
    8,263
    Post Thanks / Like
    iCash Credits
    77,744
    Downloads
    78
    Uploads
    2
    இதை மின்னஞ்சலில் படிச்சிட்டு அப்பா சொன்னது.

    "மவனே..உனக்கு ரொம்ப கஷ்டம்டா.."

  4. #4
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் mukilan's Avatar
    Join Date
    27 Jul 2005
    Location
    கனடா
    Posts
    1,999
    Post Thanks / Like
    iCash Credits
    32,969
    Downloads
    53
    Uploads
    5
    சூப்பர்! அப்படியே மற்ற துறை சார்ந்தவங்களைப் பத்தியும் யோசிச்சு பதிவு போட்டாங்கன்னா இங்க வந்து சொல்லுங்க.

  5. #5
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் mukilan's Avatar
    Join Date
    27 Jul 2005
    Location
    கனடா
    Posts
    1,999
    Post Thanks / Like
    iCash Credits
    32,969
    Downloads
    53
    Uploads
    5
    Quote Originally Posted by மதி View Post
    இதை மின்னஞ்சலில் படிச்சிட்டு அப்பா சொன்னது.

    "மவனே..உனக்கு ரொம்ப கஷ்டம்டா.."
    இதில என்னங்க கஸ்டம்... உங்க துறையிலேயே நீங்களே தேடிக்கோங்க
    டிப்ஸ் வேணும்னா .....................................................................


    என்னைக் கேட்காதீங்கன்னு சொன்னேனப்பு

  6. #6
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    Quote Originally Posted by மதி View Post
    "மவனே..உனக்கு ரொம்ப கஷ்டம்டா.."
    மதி...!!

    உங்களுக்கு பொண்ணு பார்கிறது கஸ்ரம்னு அப்பா சொன்னாரா......????

    இல்லை, நீங்க ரொம்ப கஸ்ரப் படப் போறீங்கனு சொன்னாரா....??

    (அப்பாடா, அலுவலகத்தில் மதியோட பொசிசனைப் பற்றிக் கொஞ்சம் குழப்பி விட்டாச்சு..!!! )

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  7. #7
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    நம்ம மன்றத்தில் யாராவது டெவலப்பர் குழாம் இருக்கா????
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  8. #8
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    Quote Originally Posted by mukilan View Post
    சூப்பர்! அப்படியே மற்ற துறை சார்ந்தவங்களைப் பத்தியும் யோசிச்சு பதிவு போட்டாங்கன்னா இங்க வந்து சொல்லுங்க.
    முக்கியமாக ஒரு கையில் கரட்டுடன் இருப்பவங்களைப் பற்றி, இல்லையா முகில்ஸ்........!!!

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  9. #9
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் மதி's Avatar
    Join Date
    10 Aug 2005
    Location
    சென்னை
    Posts
    8,263
    Post Thanks / Like
    iCash Credits
    77,744
    Downloads
    78
    Uploads
    2
    Quote Originally Posted by mukilan View Post
    இதில என்னங்க கஸ்டம்... உங்க துறையிலேயே நீங்களே தேடிக்கோங்க
    டிப்ஸ் வேணும்னா .....................................................................


    என்னைக் கேட்காதீங்கன்னு சொன்னேனப்பு
    அந்த துறை எந்த துறைனு தெரியாம தானே முழிச்சிகிட்டு இருக்கோம்
    டிப்ஸ் வாங்கற வேலையெல்லாம் இன்னும் பார்க்க ஆரம்பிகல..

  10. #10
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    Quote Originally Posted by மதி View Post
    இதை மின்னஞ்சலில் படிச்சிட்டு அப்பா சொன்னது.

    "மவனே..உனக்கு ரொம்ப கஷ்டம்டா.."
    நிரூபணம் ஆகிவிட்டது. நீங்க அந்த டெவலப்பர் குறூப் தான். காரணம் உங்களுக்கு திருமணம் ஆவது கஷ்டம் என சொல்லவில்லை. மாறாக உங்களுக்குத்தான் ரொம்ப கஷ்டம் என்று சொல்லியிருக்காங்க....

    கண்மணி அக்கா... ஆனாலும் மதியாருக்கு ஏன் இன்னமும் திருமணம் ஆகல????? அவருதான் ரொம்ப நல்லவராச்சே..... நல்லவங்களத்தான் ரொம்ப கடவுள் சோதிப்பாரா,,,,????
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  11. #11
    இளம் புயல் பண்பட்டவர் செழியன்'s Avatar
    Join Date
    21 Jun 2008
    Location
    தமிழ் பேசும் மக்களிடையே
    Posts
    143
    Post Thanks / Like
    iCash Credits
    8,961
    Downloads
    19
    Uploads
    0
    ரொம்ப சந்தோசமாக இருக்கு , எங்கள கட்டிக்கவும் பொண்ணு இருக்கு மக்கா...........


    அப்படியே வெளிநாட்டு மாப்பிளைகளை பற்றியும் கொஞ்சம் சொல்லுங்க கண்மணி அக்கா
    துன்பமில்லை, சோர்வில்லை, தோற்பில்லை,
    அன்பு நெறியில் அறங்கள் வளர்ந்திட
    நல்லவை நாட்டிட, தீயவை ஓட்டிட
    நின்னைச் சரணடைந்தேன் - கண்ணம்மா
    நின்னைச் சரணடைந்தேன்.

  12. #12
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் mukilan's Avatar
    Join Date
    27 Jul 2005
    Location
    கனடா
    Posts
    1,999
    Post Thanks / Like
    iCash Credits
    32,969
    Downloads
    53
    Uploads
    5
    Quote Originally Posted by ஓவியன் View Post
    முக்கியமாக ஒரு கையில் கரட்டுடன் இருப்பவங்களைப் பற்றி, இல்லையா முகில்ஸ்........!!!
    அதே! அதே!! சபாபதே!!!

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •