உடலைத் தாங்கும் வலிமை
என் கால்களுக்கில்லாதிருக்கலாம்.....
எதையும் தாங்கும் வலிமை
இதயத்துக்கிருக்கிறது!!

சூம்பியக் கால்களிருந்தும்
சோம்பியதேயில்லை...
ஒருபோதும் தனிமையில்
தேம்பியதேயில்லை!!

தவழ்ந்து செல்லும் நிலையிலும்
தளர்ந்து விடாமல்
தொடர்ந்து செல்கிறேன்
எதிர்படும் இன்னல்களை
கடந்து வெல்கிறேன்!

வெற்றிக்கு வாழ்த்து சொல்ல
கை கொடுங்கள்....
எழ உதவும் எண்ணத்தைக்
கை விடுங்கள்...
என் தோள் சாரா சுயம்
என்றும் தரும் ஜெயம்!

தயைக் கூர்ந்து இதை
மமதையாய்க் கருதாமல்
தங்களோடென்னை
சமதையாய் கருதுங்கள்!