நண்பர்களே,
உங்கள் அனைவரின் ஆசியுடனும் ஆதரவுடனும் முதன் முதலாய் நான் ஒரு விளையாட்டு தொடங்க எண்ணியுள்ளேன்!
இது அனைவரும் பங்கெடுக்க இயலும் எளிய விளையாட்டு!
அது என்ன?
நான் முதலில் ஒரு வரி எழுதுவேன்...அடுத்து எவர் வேண்டுமானாலும் அந்த வரியுடன் சேர்த்து அடுத்த வரியை எழுதவேண்டும்!
அடுத்து எவர்வேண்டுமானாலும் அந்த இரண்டு வரிகளுடன் சேர்த்து தனது மூன்றாவது வரியை எழுதலாம்....!
இவ்வாறு தொடர்ந்துகொண்டே போகும்!
யார் அந்த கவிதையை முடிக்க எண்ணினாலும் தம் முத்தாய்ப்பு வரியை இட்டு கவிதை முடிந்ததாய் அறிவித்து முழுக்கவிதையையும் வண்ணமிட்டு பதிவிடவேண்டும்!
அவரை அந்த ரவுண்டு வெற்றியாளராக அறிவிக்கலாம்!
அவர் அடுத்த கவிதைக்கான முதல் வரியைத்தொடங்குவார்!
சில நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் :
1. எழுதும் வரியில் ஆபாசம் துளியும் இருத்தல் கூடாது!
2. ஒருவர் ஒருமுறையில் ஒரே ஒரு வரிதான் எழுதலாம்! ஒருவர் விடுத்து மீண்டும் எழுதலாம் தடையில்லை!
3. கவிதை குறைந்த பட்சம் நான்குவரிகளில் முடியலாம்! அதிகபட்சம் எத்தனை வரிகள் வேண்டுமானாலும் இருக்கலாம்!
4. ஒரேசமயம் இருவர் பதியும் போது முதலில்விழுந்த பதிவையே கணக்கிலெடுக்கவேண்டும்! வெற்றியாளரும் அது போன்றே கணக்கிலெடுக்கப்படும்!
5.கவிதைத்தரம் என்று எந்த அளவுகோலும் கிடையாது! எவரும் எவர் வரியையும் விமரிசித்தல் அழகல்ல!
6. விதிமுறைகள் நண்பர்களின் ஆலோசனைப்படி மாற்றியமைக்க நேரிடலாம்!
சிறந்த கவிஞருக்கு கேடயம் மற்றும் பரிசினை வழங்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும்!
இந்த கவிதை விளையாட்டு திரியை என்னுடன் இணைந்து வெற்றிபெற வைக்க உங்கள் அனைவரது ஆதரவையும் பங்கெடுப்பையும் விழைகின்றேன்!
உதாரணத்துக்கு:
நான் தொடங்கும் வரி:
கவிஞன் வீட்டுப் பச்சைக் கிளியே
அடுத்த நண்பர் :
கவிஞன் வீட்டுப் பச்சைக் கிளியே
தவிப்பு போக்க கவி தரியா?
மூன்றாவது நண்பர்:
கவிஞன் வீட்டுப் பச்சைக் கிளியேதவிப்பு போக்க கவி தரியா?
செவியில் நானும் சொல்லித்தரவா?
நான்காவது நண்பர் : ( முடிக்க நினைக்கிறார்! )
கவிஞன் வீட்டுப் பச்சைக் கிளியே
தவிப்பு போக்க கவி தரியா?
செவியில் நானும் சொல்லித்தரவா?
கவியில் மருந்தை அள்ளித்தருவேன்!
(கவி முடிவு!)
என்ன நண்பர்களே தொடங்கலாமா?
இதோ என் முதல் கவிதை வரி :
உன்பாதக் கொலுசினில் என்பார்வை பிறழுது
Bookmarks