ஆலமரமும் வெங்காயத்தாமரையும்


விழுதுகள் தாங்கிய ஆலமரம்
படர்ந்து படர்ந்து தன்
கிளைகளைப்பரப்பியது

வெயில்காலம் வந்தது...
தண்ணீர் ஆதாரம் தேடிச்சோர்ந்து
சுருங்கின விழுதுகள்

அடிமட்ட நீரையெல்லாம்
ஆணிவேர் மட்டுமே உறிஞ்ச
தண்டு மட்டும் பருத்தது

தொடர் ஓட்டத்திற்கும்
கிளைகள் பரப்பவும்
நீர் தேவையாய் இருந்தது

விழுதுகள் போராடித்தோற்றன
மறுக்கப்பட்ட நீரால்
சுருங்கி சூம்பிப்போய்
சல்லிவேர்களாய் நீந்தத்துவங்கின

தண்ணீர்த்தேடிய விழுதுகள்
வெங்காயத்தாமரைகளாகி
இடம்பெயர்ந்தன.