Page 2 of 2 FirstFirst 1 2
Results 13 to 20 of 20

Thread: ஆலமரமும் வெங்காயத்தாமரையும்

                  
   
   
  1. #13
    மன்ற ஆலோசகர் பண்பட்டவர் kavitha's Avatar
    Join Date
    09 Dec 2003
    Posts
    4,291
    Post Thanks / Like
    iCash Credits
    5,050
    Downloads
    23
    Uploads
    0
    ஆலமரத்திற்கு மட்டும் தமிழ் தெரிஞ்சா விழுதுகள் தண்டை நெறிச்சே கொன்னுடும்..
    உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதிலும்.... அந்தப்பரம்பரையில் வந்தவை விழுதுகள். விழுதுகள் விழுந்தாலும், மேலே எழுந்தாலும் மற்றவை வாழ தாங்கிப்பிடிக்குமே அன்றி வாரி விடாது.


    கவனிச்சிருக்கீங்களா? ஆலவிழுதுகள் தரையில் கையூன்றி அடிமரம் இத்துப் போனாலும் வேர்விட்டுத் தாங்கும். ஆனால் அதே விழுதை வெட்டி நட்டால் அது ஆலாய்த் தழைக்காது..
    ஆமாம் சகோதரரே. விழுதுகள் தன்னிச்சையாய் வாழ வழியற்றவைகள். அதனால் தான் வெங்காயத்தாமரையாய் உருமாறியதாக கவிதையில் சொல்லியிருக்கிறேன்.

    கிளைபரப்பிய காரணங்களால் ஆலமரத்துக்குப் பாவம் அவதூறு...
    கிளை பரப்பிய காரணம் அதற்குக்கிடைத்த பெரும் தீனி. அதை விழுதுகளோடு பங்கிட்டுக்கொள்ளாமை தான் அதன் தவறு. விழுதுகள் மண்ணைப்பிடிக்கவேண்டுமாயின் அது தானும் ஒரு தண்டாகும் வரை வளர வேண்டும். அதற்கு அவகாசமே தண்டு கொடுக்காமல் தன்னை மட்டுமே கவனிக்குமாயின் விழுதுகளின் நிலை சிறு சிறு கயிறாகி சல்லிவேர்களாக அற்றுப்போகும் நிலை தான்.

    கொஞ்சம் அப்படியே இயற்கையை மாற்றி ஒரு செய்தி சொல்லி இருக்கீங்க..

    இறகுதிர்க்கும் மயிலிருக்க விழுதுதிர்க்கும் ஆலமரம் என இல்பொருள் உவமையைக் கொடுத்திருக்கீங்க,,

    ஊசியிலக் காட்டு மரங்கள் இலையுதிர் காலத்தில் இலைகளை உதிர்த்து மொட்டையாகி வசந்தம் வந்ததும் புது இலைகளை பிரசவிக்கின்றன.. அதையெல்லாம் விட்டுட்டு தாயா புள்ளையா பழகிகிட்டு இருக்கிற ஆலமரத்தையும் விழுதுகளையும் இழுத்து போட்டு இருக்கீங்க..
    இங்கே கவிதை குறியீடு....
    ஆலமரம் என உபயோகிப்பதன் அவசியம், கிளை பரப்புதல்
    வெங்காயத்தாமரை என உபயோகிப்பதன் அவசியம், அதில் எந்த பலனும் சேமிக்கப்படுவதில்லை என்பது.

    இல்பொருள் உவமைக்கான காரணம், கொடுக்கப்படவேண்டிய முரண். இல்லையென்றால் இது ஆலமரத்தையும், வெங்காயத்தாமரையும் நேரடியாகக்குறிப்பிடுவது போல் ஆகிவிடும். கவிதையின் நோக்கம் அதுவன்று.


    ஆனாத் தண்டு பருக்கும் என்பது மட்டும் தான் இடிக்குது...
    இடிக்கணும். படிப்பவர்கள் மண்டையை அது இடிக்கணும் என்பது தான் நோக்கம். ஒரே இடத்தில் பணம் முடக்கப்படுகிறது என்பதே அதன் குறியீடு சகோதரரே.


    அந்த வெங்காயத் தாமரை எதையும் சேர்த்துவைக்காமல் இருக்கலாம், ஆனால் இப்போது தாமரை நிறையச் சொந்தங்களைச் சேர்த்து வச்சிருக்கக்கா!!
    ... இன்னும் நிறைய சேர்க்கணும். அது தான் என் ஆசையும். எனது கவிதையும் 'தாமரை'க்கு பரிந்துபேசியதாகத்தான் இருக்கிறது. மரத்திற்கு அல்லவே! புரிகிறதா?
    கற்க கசடறக் கற்றவை கற்றபின்
    நிற்க அதற்குத் தக

    என்றும் நட்புடன்,
    கவிதா

  2. #14
    மன்ற ஆலோசகர் பண்பட்டவர் kavitha's Avatar
    Join Date
    09 Dec 2003
    Posts
    4,291
    Post Thanks / Like
    iCash Credits
    5,050
    Downloads
    23
    Uploads
    0
    இந்தியாவில் முதல் 3 பணக்காரர்களின் வருமானம் =
    முப்பது கோடி இந்தியர்களின் வருமானம்.

    அப்படிப்பட்ட பெரிய மரங்கள்..
    சுற்றிலும் விழுதுகளை ஊன்றவிட்டால்தான்
    ''சூழல்'' தர்மம் கொஞ்சமாவது பிழைக்கும்..

    இல்லையென்றால் எல்லாம் வெறும் வெங்காயமாகிபோகும்!

    ஊதி வீங்கிவரும் இன்றைய வணிக/பொருளாதாரச் சந்தைவாழ்
    நமக்கு நேரத்துக்கேற்ற கவி...
    தங்கையின் மனமறிந்தவர் தாங்கள். நன்றி அண்ணா.
    கற்க கசடறக் கற்றவை கற்றபின்
    நிற்க அதற்குத் தக

    என்றும் நட்புடன்,
    கவிதா

  3. #15
    மன்ற ஆலோசகர் பண்பட்டவர் kavitha's Avatar
    Join Date
    09 Dec 2003
    Posts
    4,291
    Post Thanks / Like
    iCash Credits
    5,050
    Downloads
    23
    Uploads
    0
    ஆல மரத்துக்கு கீழே எதுவும் வளராதாம் இளசு!!!
    களைகள் வளராமல் தடுப்பது அவசியம் கண்மணி. கவிதை பற்றி உங்கள் கருத்து என்ன?
    கற்க கசடறக் கற்றவை கற்றபின்
    நிற்க அதற்குத் தக

    என்றும் நட்புடன்,
    கவிதா

  4. #16
    மன்ற ஆலோசகர் பண்பட்டவர் kavitha's Avatar
    Join Date
    09 Dec 2003
    Posts
    4,291
    Post Thanks / Like
    iCash Credits
    5,050
    Downloads
    23
    Uploads
    0
    இக்கவிதையை திண்ணை தளத்தில் நேற்று வெளியிட்டிருக்கிறார்கள் என்பதை உங்கள் அனைவரோடும் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்
    கற்க கசடறக் கற்றவை கற்றபின்
    நிற்க அதற்குத் தக

    என்றும் நட்புடன்,
    கவிதா

  5. #17
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    57,367
    Downloads
    4
    Uploads
    0
    ஆஹா! இந்த நாளை இன்னும் இனிப்பாக்கும் சேதி!

    அண்ணனின் சிறப்புப் பாராட்டுகள் கவீ!
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  6. #18
    மன்ற ஆலோசகர் பண்பட்டவர் kavitha's Avatar
    Join Date
    09 Dec 2003
    Posts
    4,291
    Post Thanks / Like
    iCash Credits
    5,050
    Downloads
    23
    Uploads
    0
    ஆஹா! இந்த நாளை இன்னும் இனிப்பாக்கும் சேதி!

    அண்ணனின் சிறப்புப் பாராட்டுகள் கவீ!
    __________________
    நேர் சென்ற பாதைவிட்டு - நாம் செல்லும்போது வந்து
    வா என்று அள்ளிக்கொள்ளும் மன்றம் இல்லையா?
    - இளசு
    உங்கள் பாராட்டை முதலாகப்பெற்றதில் மகிழ்ச்சி. நன்றிகள் அண்ணா.

    உங்கள் கையெழுத்து அருமையான உண்மை.
    கற்க கசடறக் கற்றவை கற்றபின்
    நிற்க அதற்குத் தக

    என்றும் நட்புடன்,
    கவிதா

  7. #19
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    173,626
    Downloads
    39
    Uploads
    0
    வாழ்த்துகள்ம்மா.

    ஆதவா சொன்னதைப் போல இந்தக்கவிதை பல்பார்வை பார்க்க வைக்கிறது.
    ஒரு தொழிற்சங்கத்துக்கும் இது பொருந்தும். தலைவன் ஆரம்பத்தில் தளர்வாய்த்தான் தொடங்குகிறான். தோழர்களெனும் விழுதுகளின் உதவியால் தண்டு பெருத்துவிடுகிறது. விழுதுகள்தான் வாழ்நாள் முழுதும் போராட்டம், போராட்டமென்று இருந்துவிட்டு பாவம் விழவேண்டியிருக்கிறது.

    எதையும் தனக்கென சேர்த்து வைக்காமல் வெங்காயத்தாமரைகளாக பரவ வேண்டியிருக்கிறது.

    திண்ணையில் மட்டுமல்ல எங்கேயும் அரங்கேற தகுதியுள்ள கவிதை. மீண்டும் வாழ்த்துகள் தங்கையே.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  8. #20
    மன்ற ஆலோசகர் பண்பட்டவர் kavitha's Avatar
    Join Date
    09 Dec 2003
    Posts
    4,291
    Post Thanks / Like
    iCash Credits
    5,050
    Downloads
    23
    Uploads
    0
    நன்றி சிவா அண்ணா.
    கற்க கசடறக் கற்றவை கற்றபின்
    நிற்க அதற்குத் தக

    என்றும் நட்புடன்,
    கவிதா

Page 2 of 2 FirstFirst 1 2

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •