Results 1 to 9 of 9

Thread: அமிலமாய்...

                  
   
   
 1. #1
  மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
  Join Date
  01 Apr 2003
  Location
  பூந்தோட்டம்
  Posts
  6,697
  Post Thanks / Like
  iCash Credits
  15,295
  Downloads
  38
  Uploads
  0

  அமிலமாய்...

  அமிலமாய்...

  இயற்கைக்கும்
  செயற்கைக்கும் இடையே
  நடந்த போராட்டத்தில் ஜெயித்தது..
  ஸ்டிக்கர் பொட்டும் காகிதப் பூவும்!!..

  ஓரமாய் ஒதுங்கி நின்று
  வேடிக்கை பார்த்தது..
  நம் கலாச்சார குங்குமமும்
  மணக்கும் மல்லிகையும்!!!

  பொத்திவைத்த ஆயகலைகள்
  அறுபத்து நான்கும்
  அங்குல அங்குலமாய்
  பங்களாவில் படமெடுக்கப்பட்டு
  இண்டர்நெட்டில்-பல பிரகாஷ்களின்
  அபயத்தால்!!..

  கால் ஆடும் கட்டிலும்
  பித்தளை சொம்பும்
  பக்குவமாய் பூட்டிய வீட்டுக்குள்!!..

  உலக அகராதியில்
  தமிழ் அமிழ்து-கூட்டமேடையில்
  முழங்கிய சொல்லின் செல்வர்
  "செல்"லில் அழைப்பு..
  அருமை மனைவி- அவசரமாய்
  வாருங்கள் மகனின் "***"ஆங்கிலப்பள்ளியில்
  பெற்றோர் கூட்டமாம்!!

  அமிழ்தென அன்று மகிழ்ந்த
  விஷயங்கள் ..
  விஷமிகளின் விதைகளால்
  அமிலமென இன்று அரிக்கிறது -
  அடிமனதை!!...
  Last edited by பூமகள்; 17-07-2008 at 11:23 AM. Reason: யுனிகோடாக்கம் - பூமகள்

 2. #2
  அனைவரின் நண்பர் rambal's Avatar
  Join Date
  30 Mar 2003
  Location
  அன்பால் ஆன உலகம்
  Posts
  1,112
  Post Thanks / Like
  iCash Credits
  10,596
  Downloads
  0
  Uploads
  0
  உண்மை..உண்மை..உண்மை..
  உண்மை சுடும்...
  அமிலமாய் அறுக்கும்..
  பாராட்டுக்கள் சிட்டு..
  Last edited by பூமகள்; 17-07-2008 at 11:24 AM. Reason: யுனிகோடாக்கம் - பூமகள்

 3. #3
  மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
  Join Date
  31 Mar 2003
  Posts
  15,683
  Post Thanks / Like
  iCash Credits
  118,744
  Downloads
  4
  Uploads
  0
  அருமை சிட்டு, அருமை!
  ஹாக்கி ஸ்டிக்
  ஒலிம்பிக் பதக்கமும் தரும்
  உதயம் படமும் தரும்

  அமிழ்தமா அமிலமா
  நம்மவர் செயல்களில்...
  இனியும் தொடருமா...
  இல்லை திருந்துமா
  இயற்கையின் கையினில்.....
  Last edited by பூமகள்; 17-07-2008 at 11:25 AM. Reason: யுனிகோடாக்கம் - பூமகள்
  எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
  எத்தனை உலகங்கள் இதயத்திலே...

 4. #4
  இனியவர்
  Join Date
  24 Jan 2004
  Posts
  506
  Post Thanks / Like
  iCash Credits
  5,030
  Downloads
  0
  Uploads
  0
  இயற்கைக்கும்
  செயற்கைக்கும் நிகழும் போராட்டத்தினை அருமையாக கவி வடித்திருக்கிறீர்கள்.
  வாழ்த்துக்கள்....
  Last edited by பூமகள்; 17-07-2008 at 11:26 AM. Reason: யுனிகோடாக்கம் - பூமகள்

 5. #5
  மன்ற ஆலோசகர் பண்பட்டவர் kavitha's Avatar
  Join Date
  09 Dec 2003
  Posts
  4,291
  Post Thanks / Like
  iCash Credits
  5,050
  Downloads
  23
  Uploads
  0
  பழமையின் ஆழமும்
  புதுமையின் ஆடம்பரமும்
  வடித்த விதம் அருமை பூ.
  Last edited by பூமகள்; 17-07-2008 at 11:32 AM. Reason: யுனிக்கோடாக்கம் - பூமகள்
  கற்க கசடறக் கற்றவை கற்றபின்
  நிற்க அதற்குத் தக

  என்றும் நட்புடன்,
  கவிதா

 6. #6
  இளம் புயல்
  Join Date
  13 Jan 2004
  Posts
  334
  Post Thanks / Like
  iCash Credits
  5,054
  Downloads
  0
  Uploads
  0
  பவுடருடன் பகட்டும் சேர்ந்த பின்னே
  பழயது பறந்து தான் போச்சு...,

  சொன்ன விதம் அருமை பூ அவர்களே...
  Last edited by பூமகள்; 17-07-2008 at 11:33 AM. Reason: யுனிக்கோடாக்கம் - பூமகள்

 7. #7
  மன்றத்தின் சுடர் பண்பட்டவர் Narathar's Avatar
  Join Date
  01 Apr 2003
  Location
  London / Sri Lanka
  Posts
  5,891
  Post Thanks / Like
  iCash Credits
  8,547
  Downloads
  11
  Uploads
  0
  பூ எப்போதோ பதித்த கவிதை
  இப்போதுதான் நம்மவர் கண்ணிலும்
  என் கண்ணிலும் பட்டுள்ளது.
  வாழ்த்துக்கள் பூ இன்னும் தொடரட்டும் உங்கள்
  கவிப்பயணம்!
  Last edited by பூமகள்; 17-07-2008 at 11:34 AM. Reason: யுனிக்கோடாக்கம் - பூமகள்
  தமிழை வளர்க்க,
  தமிழரோடு தமிழில் பேசுங்கள்

 8. #8
  மன்றத்தின் சுடர் பண்பட்டவர் பூமகள்'s Avatar
  Join Date
  10 Aug 2007
  Location
  பூக்கள் நடுவில்
  Posts
  6,617
  Post Thanks / Like
  iCash Credits
  68,648
  Downloads
  89
  Uploads
  1
  Quote Originally Posted by poo View Post
  உலக அகராதியில்
  தமிழ் அமிழ்து-கூட்டமேடையில்
  முழங்கிய சொல்லின் செல்வர்
  "செல்"லில் அழைப்பு..
  அருமை மனைவி- அவசரமாய்
  வாருங்கள் மகனின் "***"ஆங்கிலப்பள்ளியில்
  பெற்றோர் கூட்டமாம்!!

  அமிழ்தென அன்று மகிழ்ந்த
  விஷயங்கள் ..
  விஷமிகளின் விதைகளால்
  அமிலமென இன்று அரிக்கிறது -
  அடிமனதை!!...[/COLOR]
  'நச்' கவிதை..!!

  தமிழ் தமிழென முழங்கும் பலர் தங்கள் வீட்டுக் குழந்தைகளுக்கு தமிழ் தெரியாததை பெருமிதத்தோடு சொல்வதைக் கண்டிருக்கிறோம்...

  அறிவியலில் பல கண்டுபிடிப்புகளையும்.. உற்பத்தியில் உலகையே வியக்க வைக்கும் நாடுகளும் தங்கள் தாய்மொழியில் படித்ததால் தான் கற்ற அறிவியல் விளங்கி பல சாதனைகளை எட்டியுள்ளதாகக் கூறுகின்றனர்...

  இன்னும் எத்தனை காலம் தான் ஆங்கில அரைவேக்காடுகளையே நம் குழந்தைகளுக்கு புகட்டிக் கொண்டிருக்க போகிறோமோ....??!!

  நிலை மாற வேண்டும்..

  தீர்க்கமான கவிதை வடித்த பூவண்ணாவுக்கு பூந்தங்கையின் பாராட்டுகளும் வாழ்த்துகளும்..!!

  மன்றத்தில் பூ பூக்கும் நாள் என்றோ??
  -- பூமகள்.

  "விண்தாண்டும் வேலையின் கடிது - உன்
  உளக்கண் தாண்டும் வேலை..!!"


  பூமகள் படைப்புகள்


 9. #9
  அனைவரின் நண்பர் பண்பட்டவர் shibly591's Avatar
  Join Date
  18 Aug 2006
  Location
  srilanka
  Posts
  1,432
  Post Thanks / Like
  iCash Credits
  18,185
  Downloads
  55
  Uploads
  0
  தெளிவான அழகான கவிதை..

  படித்தேன் ரசித்தேன் சிந்தித்தேன்.
  வாழ்க்கை என்பதும்
  ஒரு புதுக்கவிதைதான்..
  என்ன ஒரு புதுமை..
  நம்மால் விளங்கவே முடியாத
  புதிர்க்கவிதை


  www.shiblypoems.blogspot.com

  இங்கே சொடுக்கவும்..
  http://www.tamilmantram.com/vb/showt...172#post373172

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •