Page 1 of 3 1 2 3 LastLast
Results 1 to 12 of 30

Thread: வித்தியாச விருந்து

                  
   
   
 1. #1
  மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
  Join Date
  16 Feb 2007
  Location
  சுவாசம்
  Age
  40
  Posts
  21,007
  Post Thanks / Like
  iCash Credits
  308,765
  Downloads
  151
  Uploads
  9

  வித்தியாச விருந்து

  இந்த ஊருக்கு வந்து ஐந்து ஆண்டுகள் சென்றுவிட்டது. இது போல இதுவரை நடந்ததில்லை. கடந்த ஒருவாரமாகத்தான் இப்படி நடக்குது. யாராக இருக்கும்? அவனா? அவளா? அவர்களா? நிச்சயமாக அவளாக இராது. இந்த ஊர்ப்பெண்களுக்கு இருட்டுக் கட்டினாப்பிறகும் நடமாடும் தைரியம் இருந்தாலும், இப்படிச் செய்ய அவர்களால் இயலாது. அவன் அல்லது அவர்கள்தான் செய்கிறார்கள். இன்றைக்கு எப்படியாவது யாரென்று பார்த்துவிட வேண்டும். இந்த நினைப்பு நித்திரையை திருடியது. அவர்கள் இன்றைக்கு வருவார்களா என்ற சிந்தனை சோர்வை விரட்டியது.

  இரவு பதினொரு மணி இருக்கும். கேட்டைத் திறந்தேன். கேட்டின் இருமருங்கும் நின்ற போவன்வில்லா மரங்கள் கையசைத்தன. குளிரை முகத்திலறைந்த தென்றல் காகிதப்பூவொன்றை நெற்றியில் வைத்தது. பாதையின் மண்ணில் பாதங்களைப் பதித்தேன். மூன்று நிமிட நடையின் பின் வலப்பக்கம் திரும்பினேன். படுத்திருந்த நாய் உறுமியபடி தலை நிமிர்த்தியது. அடையாளம் உணர்ந்து காலைத் தொட்டது மட்டுமில்லாமம் தொடர்ந்து வந்தது. பகலில் மட்டும் மணிக்கொரு பஸ் போகும் ரோட்டைக் கடந்து ஒற்றையடிப் பாதையில் பயணித்தோம். அவர்கள் இன்றைக்கும் வருவார்களா என்ற யோசனை எனக்குள் ஓடியபடி இருந்தது.. .

  இரண்டு பக்கமும் பற்றைக்காடுகள்.. பற்றைக்காட்டுப்பூக்களின் கலவை வாசனை.. சில் வண்டுகளின் ரீங்கார சங்கீதம்.. சின்னப் பூச்சிகளின் இராகமாளிகை.. கறுப்பு வானில் மின்னும் நட்சத்திரங்களைப் போல ஆங்காங்கே பறக்கும் மின்மினிகள்.. ஆபத்தை அறிந்து அடக்கமாக வீரமுழக்கமிடும் நாய்.. எதுவுமே தொந்தரவு செய்யாத என்னை, மரவள்ளித் தோட்டம் தொட்டு உலுப்பியது.

  மரவள்ளி மரங்களை அடுத்தாற்போல மருதண்ணனின் தோட்டம். கடந்த மாதந்தான் காய்கறிப்போகம் முடித்து பசளைக்காக சனற்பயிர் பயிரிட்டிருந்தான். சும்மா சொல்லக் கூடாது. மருதண்ணனின் மனம் மாதிரி அமோகமாக வளர்ந்திருந்தன சனற்செடிகள். அடுத்தாப்போல மதர்த்து வளர்ந்த வாழைகள்.. பாதிக்கு மேல் குலைதள்ளி இருந்தன. இடைப்பழம் கண்டதும் வெட்டலாம் என்று நினைத்து விட்ட குலைகள் மகிழ்ச்சியில் ஆடின.. சனல்பயிர்கள் காற்றில் சுதிபிடித்துப் பாடின.. அவர்கள் வரவேண்டும் என்ற என் பிரார்த்தனையில் அவையும் பங்கெடுத்தது போல் தோன்றியது.

  வாழைச் சருகுகளை மிதித்தபடி நடந்து மறைவான வசதியான வரம்பில் அமர்ந்தேன். சூழ்ந்திருந்த இருட்டும் என்னை மறைக்க உதவியது. காத்திருந்தேன்... பாம்பூறும் வலி தாங்காமல் சருகுகள் முனகின. கூடவே முனகிய நாயை மென்மையாகத் தடவிக்கொடுத்தேன். நாயை வருடிக் கொடுப்பதை அடிக்கடி செய்யவேண்டி இருந்தது. அரை மணிநேரம் போயிருக்கும்.. குசு குசு குரல்கள் காதில் விழுந்தன. கூர்மையானேன்.. ஒன்று ஆணுடையது. மற்றது பெண்ணுடையது.. கூர்மையை அதிகரித்தேன்.. எனக்கும் அவர்களுக்கும் இடையிலான தூரமும் குறைந்தது.. சின்னபசங்க குரல்.. அடப்பாவிங்களா.. இந்தவசுல இந்தக் குணமா? உன்னிப்பாக காதுகொடுத்தேன்...

  "இந்தா சின்ராசு... அந்தியில நீ கேட்ட மரவள்ளிக்கிழங்கு அவியலும் அம்மியில் அரைத்த சம்பலும்"

  "எனக்கு வேண்டாம்.. எனக்குத் தந்ததுனாலதானே உங்க ஆத்தா உன்னை வெஞ்சுது. என்னையும் அடிச்சிச்சு"

  "ஆத்தா எப்பவும் அப்பிடித்தானே.. அதையெல்லாம் பெரிசா எடுத்துக்காதே.. இந்தா இதை தின்னு.... அட.. பிகு பண்ணாமல் தின்னு..."

  அமைதி நிலவியது...

  "எனக்கும் அப்பன் ஆத்தா இருந்திருந்தா உங்க தோட்டத்துல வேலைக்காரனா இருந்திருக்க மாட்டேன்ல.. தினப்படிக்கு வேண்டியதை சாப்பிட்டிருப்பேன்ல.. நீயும் ஆத்தாக்கிட்ட ஏச்சு வாங்கிருக்க மாட்டேல்லா.. ..... ..... ..... ..... ஏன் சின்னம்மா? எங்கப்பன் ஆத்தா எங்கேன்னு உனக்காச்சும் தெரியுமா?"

  "என்னைய விட ஒருவயசு கூடின உனக்கே தெரியாதபோது எனக்கெப்படிடா தெரியும்.. சை... அதை விடுடா.. உனக்கு எத்தனை தரம் சொல்லிருக்கேன்.. என்னைய சின்னம்மான்னு கூப்பிடாதன்னு. வித்யான்னு கூப்பிடுன்னு. இனிமே என்னைய சின்னம்மான்னு கூப்பிட்டா, உங்கூடப் பேசமாட்டேன்"

  எனக்கு எல்லாம் புரிந்தது.. சிறுதூரத்தில் இருந்த மரவள்ளித் தோட்டக்காரன் வீட்டுப்பொண்ணும் எடுபிடிவேலை செய்யும் சின்ராசுவும், அப்பழுக்கற்ற சினேகத்தைப் பரிமாறிக்கொள்ள ஒதுங்கி உள்ளார்கள்..

  சே... இந்தப் பாழாய்ப்போன உலகத்தில் பாசப்பிரிவினைக்குத்தான் எத்தனை காரணங்கள். பாசப்பறவைகளைக் கலைக்க எத்தனை ஆயுதங்கள்..

  இதுவரை, வாழைக்குலைக் கள்வர்கள் வரவேண்டும் என்று வேண்டியமனது, அவர்கள் வரக்கூடாதென்று வேண்டத் தொடங்கியது.

 2. #2
  மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் மன்மதன்'s Avatar
  Join Date
  29 Nov 2003
  Posts
  11,633
  Post Thanks / Like
  iCash Credits
  27,057
  Downloads
  17
  Uploads
  0
  சிறுகதையில் ஒரு நாவலையே அடங்கியிருக்கிறது..

  கதையுடனும், கதையின் நாயகனுடனும் நானும் பயணித்தேன்..

  ஏதோ கூடவே செல்வது போல...ஒரு அனுபவம்..

  ஒரு எழுத்தாளனுக்கு வேறென்ன வேண்டும்..

  கை தேர்ந்த எழுத்தாளர்கள் லிஸ்டில் அமரன் பெயரையும் சேர்த்து விடலாம்...


  கடைசி வரி தான் சற்று புரியாமல் இருக்கிறது..

 3. #3
  மன்றத்தின் தூண் பண்பட்டவர் மனோஜ்'s Avatar
  Join Date
  16 Jan 2007
  Location
  திருச்சி
  Posts
  4,192
  Post Thanks / Like
  iCash Credits
  8,966
  Downloads
  14
  Uploads
  0
  நல்ல கதை பாங்கு இயற்கையை அப்படியே கண்ணில் கொண்டு வந்துவிட்டிர்கள் அமரன் நன்றி
  உங்கள் அன்பு மனோஜ் அலெக்ஸ் எனது கவிதைகள் தமிழ்கணபுலி பட்டம் வெல்ல இங்கு சொடுக்கவும்
  இதுவரை 28தமிழ்கணப்புலிகள் அடுத்து அறிஞர் மற்றும் அமரரின் சிறப்பு பரிசுடன் கேள்வி

 4. #4
  மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
  Join Date
  16 Feb 2007
  Location
  சுவாசம்
  Age
  40
  Posts
  21,007
  Post Thanks / Like
  iCash Credits
  308,765
  Downloads
  151
  Uploads
  9
  Quote Originally Posted by மன்மதன் View Post
  கடைசி வரி தான் சற்று புரியாமல் இருக்கிறது..
  மறைந்திருந்து பார்ப்பத்தில்தான் எத்தனை சுகம்.. "அவர்கள்" வந்தால் சுகம் சோகமாகிடுமே..

  மன்றச்சாலையில் எழுதிப்பழகும் எனக்கு உங்கள் ஊக்கம் நம்பிக்கையைத் தருகிறது மன்மதரே... மிக்க நன்றி.

  மனோஜ்..
  காட்சியைக் காணச்செய்தது நான் செய்த பாக்கியம்.. வந்து இருந்து பார்த்துக் கைதட்டியமைக்கு நன்றியும் அன்பும்..

 5. #5
  மன்றத்தின் சுடர் பண்பட்டவர் பூமகள்'s Avatar
  Join Date
  10 Aug 2007
  Location
  பூக்கள் நடுவில்
  Posts
  6,617
  Post Thanks / Like
  iCash Credits
  68,868
  Downloads
  89
  Uploads
  1
  படித்து சில நிமிடங்கள் மௌனம்... அது சொன்ன செய்திகளை அடிக்க கைக்கு வேகம் போதவே இல்லை..

  கதைக் களம்.. அழகான சூழல்.. கதை சொல்பவரின் பெயர் கூட சொல்லாமல்.. அவரோடு கூடவே பயணித்து அவருக்கு பதில் நாய்க்குட்டியை தடவிக் கொடுத்தது என் கற்பனை...

  மெல்ல மெல்ல காற்றில் கலந்த பூக்களின் ரம்யமான நுகர்வையும்.. மின்மினிகளின் கண் சிமிட்டையும் ரசித்து பயணித்தேன்..

  ஒரு கதையெனில் இப்படித்தான் இருக்க வேண்டுமென்ற அழகிய தோற்பாட்டை என்னுள் ஏற்படுத்திவிட்டது..

  இந்த கதையை ஏன் உடனே படிக்கவில்லையென செல்லமாய் என்னை கடிந்து கொண்டேன்..

  கடைசி வரிகளில்... அழகான ஒரு உணர்வு தொட்டுச் செல்கிறது.. உங்களின் எழுத்துகளை ரொம்பவும் ரசிக்கிறேன்.. அமரன் அண்ணா

  இப்படியான ஒரு உணர்வை படிப்பவங்க மனத்தில் ஏற்படுத்தனும் என்பது தான் எனது லட்சியம்.. ஹூம்.......... அதுக்கு உங்க கிட்ட ட்ரைனிங் எடுத்தா தான் நடக்கும் போல இருக்கு..!!

  ரியலி ஹேட்ஸ் ஆஃப் டூ யூ அமர் ஜீ..!!
  -- பூமகள்.

  "விண்தாண்டும் வேலையின் கடிது - உன்
  உளக்கண் தாண்டும் வேலை..!!"


  பூமகள் படைப்புகள்


 6. #6
  மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் மன்மதன்'s Avatar
  Join Date
  29 Nov 2003
  Posts
  11,633
  Post Thanks / Like
  iCash Credits
  27,057
  Downloads
  17
  Uploads
  0
  Quote Originally Posted by அமரன் View Post
  மறைந்திருந்து பார்ப்பத்தில்தான் எத்தனை சுகம்.. "அவர்கள்" வந்தால் சுகம் சோகமாகிடுமே..

  மன்றச்சாலையில் எழுதிப்பழகும் எனக்கு உங்கள் ஊக்கம் நம்பிக்கையைத் தருகிறது மன்மதரே... மிக்க நன்றி.
  நன்றி அமரரே...

 7. #7
  மன்றத்தின் சுடர் பண்பட்டவர் Narathar's Avatar
  Join Date
  01 Apr 2003
  Location
  London / Sri Lanka
  Posts
  5,891
  Post Thanks / Like
  iCash Credits
  8,767
  Downloads
  11
  Uploads
  0
  அருமையான கதைக்களம்......
  யதார்த்தமான வர்ணனைகளால் கதைக்குள் சட்டென எங்களை உள்வாங்கிக்கொண்டீர்கள் அந்த திறமை சிலருக்குத்தான் வரும் அது உங்களிடமிருக்கிறது. வாழ்த்துக்கள்.

  இன்னும் எழுதுங்கள்.. வாசிக்க நாம் இருக்கின்றோம்.

  என்ன மன்மதா? கதை டிஸ்கஷனுக்கு நம்ம அமரனையும் அழைப்போமா?
  தமிழை வளர்க்க,
  தமிழரோடு தமிழில் பேசுங்கள்

 8. #8
  மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் மன்மதன்'s Avatar
  Join Date
  29 Nov 2003
  Posts
  11,633
  Post Thanks / Like
  iCash Credits
  27,057
  Downloads
  17
  Uploads
  0
  Quote Originally Posted by Narathar View Post
  என்ன மன்மதா? கதை டிஸ்கஷனுக்கு நம்ம அமரனையும் அழைப்போமா?
  கண்டிப்பா நாரதரே..

 9. #9
  மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
  Join Date
  28 Apr 2003
  Location
  அமெரிக்கா
  Posts
  16,348
  Post Thanks / Like
  iCash Credits
  36,307
  Downloads
  15
  Uploads
  4
  நன்றியுள்ள நாய்...

  இரவு சூழ்ந்த நேரத்தில் அழகிய பயணம்..

  நல்ல உள்ளம் படைத்த சிறுவர்கள்...

  அனைத்தும் உள்ளடக்கிய அருமையான கதை...
  வாழ்த்துக்கள் அமரா...

 10. #10
  மட்டுறுத்தினர் பண்பட்டவர் மதி's Avatar
  Join Date
  10 Aug 2005
  Location
  சென்னை
  Posts
  8,263
  Post Thanks / Like
  iCash Credits
  46,639
  Downloads
  78
  Uploads
  2
  அழகான கதை.. அமைதியான களம்.. நிறைந்த ஸ்நேகம்..
  தெளிந்த நடையில் சிக்கலின்றி கதையை கையாண்டுள்ளீர்கள்..

  வர்ணனைகள் அற்புதம்..

  வாழ்த்துகள் அமரரே..

 11. #11
  இளம் புயல் பண்பட்டவர் இராஜேஷ்'s Avatar
  Join Date
  21 Feb 2008
  Location
  CHENNAI
  Posts
  139
  Post Thanks / Like
  iCash Credits
  22,467
  Downloads
  42
  Uploads
  1
  கவிதை நடையில் உரைநடை, அருமை அண்ணா அருமை!!.
  அன்புடன்
  இராஜேஷ்
  எரிபொருள் மற்றும் நீரை சிக்கனமாக பயன்படுத்துதல் நம் பூமியை காக்கும், செய்வோமா!!

 12. #12
  இனியவர் பண்பட்டவர் SathyaThirunavukkarasu's Avatar
  Join Date
  15 Mar 2008
  Location
  Abudhabi
  Posts
  774
  Post Thanks / Like
  iCash Credits
  9,343
  Downloads
  81
  Uploads
  1
  நல்ல கதை, அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாள்

Page 1 of 3 1 2 3 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •