Results 1 to 7 of 7

Thread: புதுயுக விடியல்

                  
   
   
  1. #1
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் நாகரா's Avatar
    Join Date
    23 Jan 2008
    Location
    தில்லைகங்கா நகர், சென்னை
    Age
    63
    Posts
    2,883
    Post Thanks / Like
    iCash Credits
    31,357
    Downloads
    2
    Uploads
    0

    புதுயுக விடியல்

    அதோ
    தெரிகிறது
    புதுயுக விடியலின்
    வெளிச்சம்!

    மடியும்
    மடமையிருளின்
    குருதி பூசிச்
    சிவந்த
    புரட்சிப் பூக்களில்
    சிரிக்கும்
    புது வசந்தமே!

    பண
    மன
    வறுமைகள்
    நிற
    இனப்
    பிரிவுகள்
    சாதி
    மதப்
    பிளவுகள்
    இவற்றின்
    கல்லறைகளிலிருந்து
    மனிதன்
    கருவறையில்
    தொலைத்த
    தன் ஆறாவது அறிவை
    மீட்கிறான்.

    வேருங் கிளையும்
    இலையுங் காயும்
    மலருங் கனியும்
    தங்கள்
    சாயலும்
    செயலும்
    உறங்கச் செய்த
    மரவின
    ஒருமையுணர்வை
    ஞாபகங் கொள்ளும் நாள்
    அதோ
    தெரிகிறது
    புதுயுக விடியலின்
    வெளிச்சம்!
    உங்களன்பன்
    நான் நாகரா(ந.நாகராஜன்)
    பராபர வெளியும் பராபரை ஒளியும்
    பரம்பர அளியும் வாசி
    மாயா மெய்ந்நிலை இற(ர)ங்கும் நவயுக உதயம் - வள்ளலாரின் புதிய ஏற்பாடு

  2. #2
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    புரட்சிப் பூக்களாய் புது யுகம் ஒன்று பிறக்க வேண்டுமென்பது, நலன் விரும்பிகள் பலரது ஆழ் மனசுக் கனவுதான். ஆனால் இன்று புரட்சி என்ற வார்த்தையையே களங்கப்படுத்தி வருகிறோம், எங்கெங்கு இந்த வார்த்தையைப் பாவிக்க கூடாதோ அங்கு, அங்கெல்லாம் பாவித்து இந்த வார்த்தையின் புனிதத்தை எவ்வளவு முடியுமோ அத்துணை களங்கப்படுத்தி வருகிறோம்.
    ஆனால் எங்கு உண்மையான புரட்சி பிறக்கிறதோ, அங்கே புது யுகம் பிறக்கும்....!!

    _______________________________________________________________________

    தெள்ளிய நீரோடை போல சந்தத்துடன் சல சலத்து ஓடிய அழகிய கவி அருவிக்கு என் மனதார்ந்த வாழ்துகள்..!!

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  3. #3
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    03 Feb 2007
    Location
    அப்பிடீன்னா?
    Posts
    4,596
    Post Thanks / Like
    iCash Credits
    60,222
    Downloads
    84
    Uploads
    0
    கவிதை அழகாக இருக்கிறது.
    அதில் ஒரு பகுதியாய் இருக்கும்,
    Quote Originally Posted by நாகரா View Post

    பண
    மன
    வறுமைகள்
    நிற
    இனப்
    பிரிவுகள்
    சாதி
    மதப்
    பிளவுகள்
    இவற்றின்
    கல்லறைகளிலிருந்து
    என்பதிலிருந்து என்னத்தை சொல்ல விளைகிறீர்கள்ள்.
    மேற்படி சொல்லப்பட்ட வேறுபாடு காணும் இயல்பு மனித வர்க்கத்திலிருந்து அழிக்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டுவிட்டன... என்றா?
    இந்தப் பகுதியில் குழப்பம் இருப்பது போல எனக்கு தென்படுகிறது.

  4. #4
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் நாகரா's Avatar
    Join Date
    23 Jan 2008
    Location
    தில்லைகங்கா நகர், சென்னை
    Age
    63
    Posts
    2,883
    Post Thanks / Like
    iCash Credits
    31,357
    Downloads
    2
    Uploads
    0
    மேற்படி சொல்லப்பட்ட வேறுபாடு காணும் இயல்பு மனித வர்க்கத்திலிருந்து அழிக்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டுவிட்டன...

    அதுவே நான் சொல்ல விழைவது, விராடன். உம் பின்னூட்டத்துக்கு நன்றி.
    உங்களன்பன்
    நான் நாகரா(ந.நாகராஜன்)
    பராபர வெளியும் பராபரை ஒளியும்
    பரம்பர அளியும் வாசி
    மாயா மெய்ந்நிலை இற(ர)ங்கும் நவயுக உதயம் - வள்ளலாரின் புதிய ஏற்பாடு

  5. #5
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் நாகரா's Avatar
    Join Date
    23 Jan 2008
    Location
    தில்லைகங்கா நகர், சென்னை
    Age
    63
    Posts
    2,883
    Post Thanks / Like
    iCash Credits
    31,357
    Downloads
    2
    Uploads
    0
    உம் பின்னூட்டத்துக்கு நன்றி ஓவியன்
    உங்களன்பன்
    நான் நாகரா(ந.நாகராஜன்)
    பராபர வெளியும் பராபரை ஒளியும்
    பரம்பர அளியும் வாசி
    மாயா மெய்ந்நிலை இற(ர)ங்கும் நவயுக உதயம் - வள்ளலாரின் புதிய ஏற்பாடு

  6. #6
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    03 Feb 2007
    Location
    அப்பிடீன்னா?
    Posts
    4,596
    Post Thanks / Like
    iCash Credits
    60,222
    Downloads
    84
    Uploads
    0
    கவிதையிலும் அதுதான் தொனிக்கிறது. ஆனால் இது தற்காலத்தின் போக்கிற்கு முரணாக இருப்பதால்த்தான் கேட்டேன்.

  7. #7
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் நாகரா's Avatar
    Join Date
    23 Jan 2008
    Location
    தில்லைகங்கா நகர், சென்னை
    Age
    63
    Posts
    2,883
    Post Thanks / Like
    iCash Credits
    31,357
    Downloads
    2
    Uploads
    0
    தற்காலப் போக்கு மாறி
    "" என்னும் ஒருமையின் விதை
    ('க' ஒன்றைக் குறிக்கும் எழுத்து)
    வெளிச்சந் தரும் விருட்சமாய்
    மண்ணில் விடியும்
    இது நிச்சயம் விராடரே!
    நன்றி
    உங்களன்பன்
    நான் நாகரா(ந.நாகராஜன்)
    பராபர வெளியும் பராபரை ஒளியும்
    பரம்பர அளியும் வாசி
    மாயா மெய்ந்நிலை இற(ர)ங்கும் நவயுக உதயம் - வள்ளலாரின் புதிய ஏற்பாடு

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •