ஒவ்வொரு நாளும் எத்தனையோ விதமான இணையப்ப்க்கங்கள வாசிக்கிறீர்கள். உங்களுக்கு பிடித்தமான இணைய முகவரியை IEல் favouirte பகுதியிலும் Firefoxல் bookmark பகுதியிலும் சேமிக்கிறீர்கள். நீங்கள் வீட்டில் உள்ள கணினியில் சேமித்த இணைய முகவரியை உங்கள் அலுவலகத்திலோ அல்லது உங்கள் நண்பர் வீட்டிலோ எடுக்க முடியாமல் திணறி இருக்கிறீர்களா? ஏகப்பட்ட இணைய முகவரியை பிடித்த பகுதியில் சேமித்துவிட்டு, அதைத் தேடுவதே மிகப்பெரிய வேலையாக இருந்திருக்கிறதா? உங்களுடையா சேமித்த இணைய முகவரி அனைதத்தையும் கணினி கோளாறால் இழந்து இருக்கிறீர்களா?

இங்குதான் உங்களுக்கு டெலீஸியஸ் (del.icio.us) உதவுகிறது. டெலீஸியஸ் உங்களுடைய இணைய முகவரியை கணினியில் சேமிக்காமல், இணையத்தில் சேமிக்கிறது. அதனால் உங்களுக்கு பிடித்தமான இணைய முகவரியை டெலீஸியஸ் மூலம் நீங்கள் எந்த கணினியிலும் கண்டு களிக்கலாம். உங்களுக்கு பிடித்தமான இணைய முகவரியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் சேமிப்பதும் மிக எளிது.




எவ்வாறு என்பதை எளிய தமிழில் அடுத்த பகுதியில் விளக்குகிறேன்.