Results 1 to 4 of 4

Thread: முதிர்ந்த காதல்

                  
   
   
  1. #1
    இனியவர் பண்பட்டவர்
    Join Date
    10 Jul 2006
    Location
    சென்னை
    Posts
    522
    Post Thanks / Like
    iCash Credits
    8,948
    Downloads
    8
    Uploads
    0

    முதிர்ந்த காதல்

    என் வயதிலும்
    காதல் உண்டு
    எந்த வயதிலும்
    காதல் உண்டு...

    தா தா என
    கேட்க்கும் பொழுது
    தேனாய் அல்லவா இனிக்கிறது

    என்னவளை கரம்பிடித்த
    பொழுது
    ஏற்ப்பட்ட ஆனந்தம்
    இரட்டிப்பாய்
    என் கரத்தை உன் சந்தன
    விரல்கள் பிடித்து நடக்கையில்...

    நான் பெற்ற மகளிடம்
    அன்னையை கண்டேன்
    மகனே
    உன் மகளிடம்
    என்னவளை காண்கிறேன்.

    வயது முதிர்ந்தாலும்
    என் காதல் உதிரவில்லை
    மீண்டும்
    என் பேத்தியுடன்....

  2. #2
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் நாகரா's Avatar
    Join Date
    23 Jan 2008
    Location
    தில்லைகங்கா நகர், சென்னை
    Age
    63
    Posts
    2,883
    Post Thanks / Like
    iCash Credits
    31,357
    Downloads
    2
    Uploads
    0

    அருமையிலும் அருமை
    காதலெனும்
    அன்பாம் ஒருமை
    அதை முழுமையாய்க் கவிதையில்
    நீவிர் படம் பிடித்திருக்கும் விதமும்
    தரும் உமக்கென்றும்
    மாளாத பெருமை.
    வாழ்த்துக்கள் நம்பிகோபாலன்.

    காதல் = க+ஆதல் = ஒன்றாதல் = ஒருமை = அன்பு
    ("" ஒன்றைக் குறிக்கும் நற்றமிழ் எழுத்து)
    எனவே தான் அமரகவி பாரதியும்
    "காதல் போயின் சாதல்" என்றானோ!
    ஆம், அன்பெனும் ஒருமையின்றி
    நடைப்பிணமாய் நாறும் இழி நிலை
    எப்படி வாழ்வாகும்?

    காதல் முதிர்ந்தாலும்
    நனி மிக நன்றாகவே வாழ்கிறது
    வாழவும் வைக்கிறது.

    நன்றி பல நல்லதோர் கவிக்கு நம்பி.
    உங்களன்பன்
    நான் நாகரா(ந.நாகராஜன்)
    பராபர வெளியும் பராபரை ஒளியும்
    பரம்பர அளியும் வாசி
    மாயா மெய்ந்நிலை இற(ர)ங்கும் நவயுக உதயம் - வள்ளலாரின் புதிய ஏற்பாடு

  3. #3
    இனியவர் பண்பட்டவர்
    Join Date
    10 Jul 2006
    Location
    சென்னை
    Posts
    522
    Post Thanks / Like
    iCash Credits
    8,948
    Downloads
    8
    Uploads
    0
    நன்றி நாகரா.

  4. #4
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் arun's Avatar
    Join Date
    20 Oct 2005
    Location
    சென்னை
    Posts
    1,217
    Post Thanks / Like
    iCash Credits
    11,978
    Downloads
    3
    Uploads
    0
    கவிதை அருமை பாராட்டுக்கள்

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •