Page 2 of 7 FirstFirst 1 2 3 4 5 6 ... LastLast
Results 13 to 24 of 83

Thread: இரவில் வந்தவள்-நிறைவடைந்தது

                  
   
   
  1. #13
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    நன்றி மதி, நன்றி மீரா. தொடர்ந்து போவோம்.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  2. #14
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் lolluvathiyar's Avatar
    Join Date
    27 Feb 2007
    Location
    Coimbatore
    Posts
    3,823
    Post Thanks / Like
    iCash Credits
    99,361
    Downloads
    10
    Uploads
    0
    ஐயோ சிவாஜி ஒரு சூப்பர் கதை எழுதி முடித்த கையோடு இப்ப எங்க ஒரு திரிலிங்க் கதை எழுத ஆரம்பிச்சுட்டீங்களே. ஆகா அது பென்னா மோகினியா வளையல் எல்லாம் போட சொல்லுதே. (ஹி ஹி பென்னாக இருந்தால் நான் அந்த வளையல் காரனாக மாறி விடுகிறேன்)
    லொள்ளுவாத்தியார் ஆனால் நல்லவாத்தியார்
    என் படைப்புகள்
    என் கவிதைகள்

  3. #15
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    Quote Originally Posted by lolluvathiyar View Post
    ஐயோ சிவாஜி ஒரு சூப்பர் கதை எழுதி முடித்த கையோடு இப்ப எங்க ஒரு திரிலிங்க் கதை எழுத ஆரம்பிச்சுட்டீங்களே. ஆகா அது பென்னா மோகினியா வளையல் எல்லாம் போட சொல்லுதே. (ஹி ஹி பென்னாக இருந்தால் நான் அந்த வளையல் காரனாக மாறி விடுகிறேன்)
    வளையல் போட்டுட்டு அந்தப் பொண்ணுக்கிட்ட கதாநாயகன் மாட்டிக்கிட்டு படற அவஸ்தையை இனி படிக்கப்போறீங்க. அப்புறமா சொல்லுங்க வளையல்காரனா மாறப்போறீங்களான்னு.

    நன்றி வாத்தியார்.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  4. #16
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் பூமகள்'s Avatar
    Join Date
    10 Aug 2007
    Location
    பூக்கள் நடுவில்
    Posts
    6,617
    Post Thanks / Like
    iCash Credits
    72,958
    Downloads
    89
    Uploads
    1
    சிவா அண்ண...!!
    என்ன மாதிரி பச்சப்புள்ளைகள் உலவுற இடத்துல இப்படி, "நடு நிசி.. காட்டுப்பாதை.. சர சரன்னு சருகு கத்துதுன்னு.." முதல் நாலு வரி படிச்சிட்டு பின்னாடி இருக்கும் ஒவ்வொரு பத்தியின் ஆரம்ப வார்த்தை பார்த்தே நடுக்கம் வந்துட்டது..!!

    நான் அப்புறமா மந்திரிச்சி தாயத்து கட்டிட்டு வந்து படிக்கிறேன் சிவா அண்ணா..!! (ஏற்கனவே... தாமரை அண்ணாவின் கோடாங்கி கதையை படிக்காம இருக்கேன்..!! இதுல இன்னொன்னா??!!
    )

    திகில் கதையா??
    அசத்துங்க அசத்துங்க..!! வாழ்த்துகள் சிவா அண்ணா..!!
    -- பூமகள்.

    "விண்தாண்டும் வேலையின் கடிது - உன்
    உளக்கண் தாண்டும் வேலை..!!"


    பூமகள் படைப்புகள்


  5. #17
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    Quote Originally Posted by பூமகள் View Post
    [COLOR=\"Navy\"]சிவா அண்ண...!!
    என்ன மாதிரி பச்சப்புள்ளைகள் உலவுற இடத்துல
    [/COLOR][COLOR=\"DarkGreen\"][/COLOR]
    என்னம்மா நீ இப்படிச் சொல்ற...நம்ம தங்காச்சி மல்ரு...பேய்க்கதை எழுதுங்க அண்ணான்னு சொல்லுது. எதுக்கும் மலரு மன்றத்துல இருக்கும்போது மட்டும் இந்தப்பக்கம் வாம்மா....அப்பதான் வேற எந்த பேயோட தொந்தரவும் இல்லாம இருக்கும்.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  6. #18
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    பாகம்-3

    வீட்டுக்கு வந்தும் அந்தப் பெண்ணின் முகம் அவனுக்குள் என்னவோ செய்துகொண்டிருந்தது. மற்ற எண்ணங்களை எல்லாம் ஜெயித்து அவளைப் பற்றிய எண்ணங்களே முன்னால் வந்துகொண்டிருந்தது. அவளுடையக் கையைத்தொட்டபோது உணர்ந்த சில்லிப்பு இன்னும் இருந்தது. வீட்டிலிருக்கும்போது, சந்தைக்குப் போகும்போது, வியாபாரத்திலிருக்கும்போது, சாப்பிடும்போது, உறங்கும்போது என்று எல்லா நேரங்களிலும் அவளது நினைவுகளாலேயே ஆக்ரமிக்கப்பட்டிருந்தான்.

    வெள்ளிவரை தாக்குப்பிடிக்கவே சிரமப்பட்டான். மனதுக்குள் இனம்புரியாத அச்சமிருந்தாலும் அவளைப் பார்க்கவேண்டுமென்ற ஆவல் மட்டும் குறையவே இல்லை. அந்த வெள்ளியன்றும் அதே நேரத்தில் அதே வழியாகத் திரும்பி வந்தான். எல்லா வளையல்களும் விற்றுவிட்டிருந்தாலும், அவளுக்கென கொஞ்சம் வளையல்களைத் தனியே எடுத்து வைத்திருந்தான்.

    அவன் எதிர்பார்ப்பை வீணாக்காமல் அவளும் அங்கே இருந்தாள்.

    என்ன நீ உங்க அத்தை வீட்டிலேயே தங்கிட்டியா...எப்பப்பாரு இங்கேயே இருக்கே....

    அவன் கேட்டதும் உடனே பதில் சொல்லாமல் முகத்தைத் திருப்பிக்கொண்டாள். அவளுடைய முதுகு அதிர்வில் அவள் அழுவதை உணர்ந்தான்.

    ஏய் என்ன ஆச்சு எதுக்கு இப்ப அழுவுற...நான் என்னா சொல்லிட்டேன்னு இப்படி அழுவுற...உங்க அத்தைக்கு ஏதானா ஆயிடிச்சா...

    மெல்லத்திரும்பியவளின் கண்களில் கண்ணீர் வழிந்துகொண்டிருந்தது. மூக்கு நன்றாக சிவந்து இருந்தது. அந்த சிவந்த மூக்கின் மேல் அவள் அணிந்திருந்த மூக்குத்தி ரோஜாப் பூவின் மேல் உட்கார்ந்திருக்கும் கருவண்டாய் தெரிந்தது.

    அத்தைக்கெல்லாம் ஒண்ணும் ஆவலய்யா....அவளுக்கென்னா குண்டுக்கல்லாட்டம் நல்லாத்தான் இருக்கா...எனக்குத்தான் ரோதனை...

    சொல்லிவிட்டு மீண்டும் அழுதாள். முந்தானையால் மூக்கு சிந்தினாள். ரங்கனால் தாங்க முடியவில்லை.

    அட மொதல்ல நீ அழுவறத நிறுத்து. என்னா உன் ரோதனைன்னு சொன்னாத்தான தெரியும்..

    எங்கம்மாளுக்கு வயசாவுதாம். கண்ணு வேற சரியாத் தெரியமாட்டேங்குதாம்..அவ செத்ததுக்கப்பறம் நான் தனியா இருந்து கஷ்டப்படுவேன்னு சொல்லி...

    சொல்லி.......

    என்னை என் மாமன்காரனுக்கு கல்யாணம் பண்ணி வெக்கிறதா சொல்றாங்க...

    சொல்லிவிட்டு அவனுடைய முகத்தைப் பார்த்தாள்.

    அவளுக்கு கல்யாணமான எனக்கென்ன என்று மனசு ஒரு பக்கம் சொன்னாலும், எதையோ இழப்பதைப்போல ஒரு வெறுமையையும் உணர்ந்தான். அவனுக்கே ஆச்சர்யமாக இருந்தது.

    அவங்க சொல்றதும் வாஸ்தவம்தானே? கல்யாணம் பண்ணிக்க வேண்டியதுதானே...

    என்று சொன்னவனை முறைத்துக்கொண்டே

    என் மாமனுக்கு 50 வயசாவுது ரெண்டாந்தாரமாக் கட்டி வெக்கப் போறாங்களாம்...என்று சொல்லும்போதே குரலில் கோபமும் இயலாமையும் தலைகாட்டத் தொடங்கியது.

    அடடா...அப்ப அதுக்குத்தான் அழுவுறியா?

    ஆமா...ஆனா நான் இப்ப நீ இந்தப்பக்கமா வருவேன்னுதான் உண்னைப் பாக்க வந்தேன்.

    என்னை எதுக்குப் பாக்கனும்..?

    யோவ் ஒண்ணும் தெரியாதமாறி பேசாதய்யா. நான் இப்பவே உன்கூட வந்துடறேன். என்னை உன் கூட கூட்டிகிட்டு போயிடுய்யா. நான் உன்கூடவே இருந்துடறேன்...

    இவனுக்குத் தூக்கிவாரிப்போட்டது. என்ன சொல்கிறாள் இவள். இரண்டு நாள்தான் பார்த்திருக்கிறோம் அதற்குள் என்னோடு வந்துவிடுகிறேன் என்று சொல்கிறாளே..என்று நினைத்தாலும், சந்தோஷமாகத்தான் இருந்தது. இந்த ஒருவாரத்தில் நான் அனுபவித்ததையே அவளும் அனுபவித்திருப்பாளோ என்ற எண்ணம் தோன்றியதும் அவளைக் கனிவுடன் பார்த்துக்கொண்டே..

    இப்படி திடுதிப்புன்னு கூட்டிட்டுப் போன்னு சொன்னா எப்படி...எங்க வூட்ல என்னா சொல்வாங்களோ..

    எங்கியாவது ஒரு குடிசையில வெச்சிடுய்யா. வூட்டுக்கு என்னாத்துக்கு கூட்டினு போற? நான் தனியா இருந்துக்கறேன். வூட்ல எல்லாம் சமாதானமாயிட்டாங்கன்னா அப்புறமா அங்க போய்க்கலாம்...

    நீ சொல்றதும் சரிதான். சரி கெளம்பு. என் சிநேகிதன் ஒருத்தன் இருக்கான். அவனுது கூட ஒரு வீடு காலியாத்தான் இருக்கு அங்க போயிடலாம்.

    துணிந்து முடிவெடுத்தான். இல்லை அவளுடைய அழகு அவனை அப்படி முடிவெடுக்க வைத்தது. விதி யாரை விட்டது. முருகேசன் வீட்டுக்கு அழைத்துப்போனான். அவளை ஒரு இடத்தில் நிறக வைத்து விட்டு அவன் மட்டும் போய் முருகேசனை அழைத்து வந்தான்.

    இவதான் நான் சொன்னனே அந்தப் பொண்ணு..

    முருகேசனிடம் காட்டினான்.

    இருட்டாய் இருந்ததால் அவளுடைய முகத்தைப் பார்க்க முடியவில்லை. அவர்களை அழைத்துக்கொண்டு காலியாய் இருந்த அந்த கூரைப் போட்ட வீட்டுக்கு வந்தான். சிறிய வீடு. உள்ளே நுழைந்து லாந்தர் விளக்கைக் கொளுத்தினான். அந்த விளக்கு வெளிச்சத்தில் அவள் தேவதையாகத் தெரிந்தாள். பய அதான் பொதுக்கடீர்ன்னு விழுந்துட்டான் என்று நினைத்துக்கொண்டே

    ரங்கா இங்கே தங்கிக்கங்க. பகல்ல யாராச்சும் பாத்துக்கேட்டாங்கன்னா என்ன சொல்லுவீங்க?

    எங்கடா அக்கம் பக்கத்துல வூடுங்களே இல்ல. யார் வந்து கேக்கப் போறாங்க...என்று ரங்கன் சொல்லிக்கொண்டிருக்கும்போதே....

    நான் பகல்ல வெளியவே வரமாட்டேன். யாரானா தெரிஞ்சவங்கப் பாத்துட்டு என் மாமன்காரன்கிட்ட சொல்லிட்டாங்கன்னா என்னா பண்றது?

    குரல்கூட அழகாய்த்தான் இருக்கிறது. ஆனாலும் அந்தக் குரலில் ஏதோ ஒன்றை உணர்ந்தான் முருகேசன். அடி வயிற்றில் ஒரு ஜில்லிப்பு.

    அந்த உணர்வுகளோடே அவளை மீண்டும் பார்த்தான். அவள் கண்களில் தெரிந்த ஏதோ ஒன்று அவனுக்கு அச்சத்தைக் கொடுத்தது.


    தொடரும்
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  7. #19
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    15 Nov 2007
    Location
    பாலைவனம்
    Posts
    2,785
    Post Thanks / Like
    iCash Credits
    55,551
    Downloads
    114
    Uploads
    0

    அண்ணா பாக்கட் நாவல் ஆரம்பிச்சுரலாமா....? நான் தான் மேனேஜர்.
    அன்புடன்...
    செல்வா

    பின்னூட்டங்களில் முன்னுரிமை, மன்றப் படைப்புகளுக்கே...!

  8. #20
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    பேஷா ஆரம்பிச்சுடலாமே. ஆனா நம்ம பாக்கெட் நிறையுமா....யோசிக்கனும் (அப்புறம் மேனேஜர் சாம்பளமில்லாம வேலை செய்ய வேண்டி வரும்...ஹா...ஹா...ஹா..)
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  9. #21
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் மதி's Avatar
    Join Date
    10 Aug 2005
    Location
    சென்னை
    Posts
    8,263
    Post Thanks / Like
    iCash Credits
    77,744
    Downloads
    78
    Uploads
    2
    படிக்கும் போதே அடிவயிறுல ஜிலீர்ங்குது..
    கலக்குங்க..

  10. #22
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    உரையாடல் யதார்த்தம், தெளிவான, திகிலான கதை நகர்வு...
    திகில் தொடரட்டும்...
    உறையக் காத்திருக்கின்றோம்...

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

  11. #23
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    Quote Originally Posted by மதி View Post
    படிக்கும் போதே அடிவயிறுல ஜிலீர்ங்குது..
    கலக்குங்க..
    ஆஹா..ஜிலீர் வந்துடுடிச்சா....தொடர்ந்து வாங்க...இன்னும் நிறைய பாக்கலாம்.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  12. #24
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    Quote Originally Posted by அக்னி View Post
    உரையாடல் யதார்த்தம், தெளிவான, திகிலான கதை நகர்வு...
    திகில் தொடரட்டும்...
    உறையக் காத்திருக்கின்றோம்...
    மிக்க நன்றி அக்னி. முடிந்தவரை எழுத முயற்சிக்கிறேன்.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

Page 2 of 7 FirstFirst 1 2 3 4 5 6 ... LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •