Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 21

Thread: இதழியல் அனுபவங்கள்!

                  
   
   
  1. #1
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    46,277
    Downloads
    183
    Uploads
    12

    Thumbs up இதழியல் அனுபவங்கள்!

    மின்னிதழ் தயாரிப்பில் எத்தனையோ அனுபவங்கள்,, இனிய அனுபவங்கள், கற்றுக் கொண்ட பாடங்கள், இனம் புரியாத உணர்வுகளாய் இருந்து அனுபவமாய் பதிந்து விட்ட அந்தச் சில நிகழ்ச்சிகள்...

    பதியுங்கள், பகிர்ந்து கொள்ளுங்கள்..
    Last edited by தாமரை; 14-04-2008 at 05:48 AM.
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  2. #2
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    இதழியல்

    இதழைப் பொறுத்தமட்டில் இவ்விதழே எனக்கு முதல் இதழ். இப்படி சொல்வதற்கு முன் எனது அலுவல்களைத் தெரிந்துகொள்வது
    அவசியம். பொதுவாக டிசைன்களை மையமாகக் கொண்டே வேலை செய்த நான், இம்மாதிரி இதழ்கள் செய்வதும் எமக்குப்
    புதியதாகத் தெரியவில்லை.Tracing வேலைகள் அதாவது கொடுத்த Design களை அச்சு அசலாக வரைவதுதான் எமது வேலை..
    இதில் புதிய சிந்தனைகள் தோன்ற வாய்ப்பில்லை என்றாலும் ஒரு Design எவ்வளவு சீக்கிரம் முடிக்கவேண்டும் என்பது அதற்கான
    வழிமுறைகள் கண்டுபிடிப்பதுமே இங்கே சிந்தனைகள் பிறக்க வழி வகுக்கிறது. மேலும் Ads, Layout மற்றும் Creative Design கள்
    தான் எமது சிந்தனையைத் தூண்டும் மற்ற களம். வெறும் எழுத்து அலங்காரம் செய்பவர்கள் இங்குண்டு. அதையும் தாண்டி
    சிறப்பாக செய்பவர்களும் உண்டு.......... (யாம் இரண்டாம் வகை... ஆனால் வீணாகிப் போகும் கழுநீர் எமது திறமை. நேரம்
    அமைந்தால் நான் வடித்த சொந்த டிசைன்களைக் காட்டுகிறேன். )

    இச்சூழலில் இதழ் வடிவமைப்பு என்பதும் அதை நம் மன்றத்துச் செய்ய வேண்டும் என்ற ஆர்வமும் எழுந்தது உண்மையே!!! அது
    இப்பொழுதல்ல.. நான் மன்றத்தில் சேர்ந்த புதிதில்...... ஆனால் முடியவில்லை. காரணம் எனக்குத் தெரிந்த Corel DRAW , Unicode
    ஐ ஏற்றுக் கொள்ளாது......

    CorelDRAW என்ற மென்பொருள் மட்டுமல்ல photoshop, Illustrator என எந்த மென்பொருளும் யூனிகோடைக் காறித் துப்புகின்றன.
    ஆக, யுனிகோட் அல்லாத Font கள்தான் இந்த மென்பொருள்களுக்குத் தேவை.. (ASCII) மன்ற எழுத்துக்களோ அனைத்துமே
    யுனிகோட்..........

    சென்ற இதழுக்கு நானும் வடிவமைப்புக்கான Sample கொடுத்திருந்தேன். அது Word இல் அமைக்கப்பட்டிருந்தது.. corel இல்
    வேலை செய்தவர்கள் word ஐ அவ்வளவு கஷ்டமான மென்பொருளாகக் கருத மாட்டார்கள். ஆனால் Word இல் பல
    அசெளகரியங்கள் இருந்தன.

    தேடல்கள் தான் வாழ்வில் சிறப்பான இடத்தை அமைக்க வழிவகுக்கின்றன.. அப்படி ஒரு சந்தர்ப்பத்தில் நம் மன்றத்தின் ஒரு
    முக்கிய நபர் எனக்கு பாமினி எழுத்துருக்களை (Fonts) அனுப்பி வைத்தார்.. அது யூனிகோடிலிருந்து பாமினிக்கு மாற்றித் தர
    வல்லது. பாமினி உருக்கள் எந்த மென்பொருளுக்கும் ஏற்றதாக இருந்தது..... ஒருவகையில் கோரலில் தமிழைக்
    கொண்டுவந்துவிட்டேன். (சம்பந்தப்பட்ட அந்த நபருக்கு எனது நன்றி.)

    இதழைப் பொறுத்தவரையில் புதுமை என்று எதுவுமே சொல்ல முடியாது.. எல்லாமே நாம் ஏதாவது ஒரு இதழில் கண்டதாக
    இருக்கும். உதாரணத்திற்கு ஒரு படைப்பின் முதல் வார்த்தை அல்லது முதல் எழுத்து பெரியதாகக் காண்பிப்பது போன்றவை...
    ஆனால் Border என்பது எந்த அச்சு இதழுக்கும் கிடையாது.

    வடிவமைப்பைப் பொறுத்தவரையில் CorelDRAW போல சிறந்த மென்பொருள் நானறியேன். பக்கங்கள் கூட்டுவது எளிது, படங்களை
    Adjust செய்வது எளிது.. என எத்தனையோ எளிதுகள்" இருக்கின்றன. அவ்வளவு ஏன் ஒரு படத்தையே கூட edit செய்யலாம்.

    ஒரு பக்கத்திற்கான லே-அவுட் செய்து முடித்த பின் எல்லா பக்கத்திற்கும் காப்பி பேஸ்ட்.. கொடுத்த படைப்புகளை அப்படியே
    யுனிகோடிலிருந்து பாமினிக்கு மாற்றி காப்பி பேஸ்ட்... எழுத்துரு மாற்றம்.. அவ்வளவுதான்........... இதழ் தயார்.

    இவ்விதழுக்காக ஒரு Converter ஐ நான் தயாரிக்கவேண்டியிருந்தது........ அதோடு சில புதிய உருக்கள் கிடைக்கவும் வழி
    செய்தது................ தேனி உனி போன்ற முத்தான உருக்களை பயன்படுத்த முடியவில்லை.

    மேலும் இதழ் சம்பந்தமான எவ்வித சந்தேகமும் நீங்கள் கேட்கலாம். சொல்லத் தயாராக, கமலக் கண்ணனோடு நானும்
    இருக்கிறேன்.........

    அன்புடன் ஆதவன்.
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  3. #3
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் நாகரா's Avatar
    Join Date
    23 Jan 2008
    Location
    தில்லைகங்கா நகர், சென்னை
    Age
    63
    Posts
    2,883
    Post Thanks / Like
    iCash Credits
    31,357
    Downloads
    2
    Uploads
    0
    மின்னிதழ் சம்மந்தமான உம் அனுபவப் பகிர்வு பல பயனுள்ள தகவல்களைத் தந்தது, நன்றி ஆதவா.
    உங்களன்பன்
    நான் நாகரா(ந.நாகராஜன்)
    பராபர வெளியும் பராபரை ஒளியும்
    பரம்பர அளியும் வாசி
    மாயா மெய்ந்நிலை இற(ர)ங்கும் நவயுக உதயம் - வள்ளலாரின் புதிய ஏற்பாடு

  4. #4
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    46,277
    Downloads
    183
    Uploads
    12
    Execution Rigor - ஒரு பணியினைக் கையிலெடுத்து விட்டால் அதை சரியாய் முடிக்கும் தன்மை என்பது தலைமைப் பண்பின் முக்கிய பகுதியாகும். அதை அனைவரும் கைக்கொள்ள இயல்வதில்லை, இதைக் கற்றுக் கொடுக்க தமிழிலே எதாவது இடங்களுண்டா?

    எத்தனைப் பாடங்கள் படித்தாலும் நாம் அதை பயன்படுத்திப் பார்க்காமல் இது போன்ற திறமைகள் கை வருவதில்லை..

    அறிவுத் திறன், ஊக்கம், பொறுப்புணர்வு, வழி நடத்தல், கருத்துப் பகிர்வு, முடிவெடுத்தல், வாழ்ந்து காட்டுதல் என தலைமைப் பண்புகளில் எத்தனையோ குணங்கள் உண்டு.. நமது மக்கள் அனைவரும் இவற்றைக் கைக்கொள்ள வேண்டும் என்ற ஆசையில்தான் அனைத்து மக்களுக்கும் ஒவ்வொரு முறை வாய்ப்பளிப்பது என முடிவு செய்யப்பட்டது.

    சொல்லப் போனால் இன்னும் ஓரிரு வருடங்கள் இதைத் தொடர்ச்சியாகச் செய்து தொடர்ச்சியாய் இதழ் வருமானால், ஒரு சிறு அலுவலகத்தையே நடத்துவதற்குச் சமம். தொழில் முனைவோர் இதனை வெகு நன்றாக அறிவார்கள்.

    ஆக இங்கு இருநோக்கு கொண்டதாக இந்த இதழ் பணி இருக்கிறது.. ஒன்று வெளிப்படையானது.. அதிகம் பேருக்கு நல்ல படைப்புகளைக் கொண்டு சேர்ப்பது. இரண்டு தலைமைப் பண்புகளை மன்ற உறுப்பினர்களிடையே வளர்ப்பது...

    இதனால் மன்றம், மன்ற நிர்வாகிகள் அடையக் கூடிய பயன்??? உறுப்பினர்கள் பெறும் பயனை விட வேறு ஒன்றுமே இல்லை..

    அதனால்தான் இது உங்கள் இதழ்.. அதனால்தான் இதை பண்படுத்துவதில் பங்களித்தல் இன்றியமையாதது..

    சிந்தனையைத் தூண்டி மட்டுமே விட்டிருக்கிறேன்.

    கற்ற பாடங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.. பகிர்வதைக் கற்றுக் கொள்ளுங்கள்..
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  5. #5
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் க.கமலக்கண்ணன்'s Avatar
    Join Date
    20 Feb 2007
    Location
    சென்னை
    Age
    49
    Posts
    1,456
    Post Thanks / Like
    iCash Credits
    45,705
    Downloads
    101
    Uploads
    0
    நன்றி ஆதவா... எனக்கு முதல் பக்கத்தை பல வடிவங்களுக்கு பின் தான் தற்போது இருக்கும் வடிவம் உயிர் பெற்றது. பகலில் அலுவலகத்தில் எதுவும் செய்ய முடியாத போது இரவு வீட்டடில் இருந்து வடிவமைத்து பதித்திருக்கிறேன். நானும் கோரல் டிராவிலும் போட்டோ ஷாப்பிலும் உருவாக்கினேன்.

    அந்த சமயத்தில் சில மாற்றங்கள் நண்பர்கள் சொன்ன போது ஒரு அவசரம் வீட்டுக்கு சென்று வருகிறேன் என்று அலுவலகத்தில் அனுமதி வாங்கி கொண்டு ஓடோடி வீட்டுக்கு சென்று மாற்றத்தை செய்து பேனா வட்டில் நகல் எடுத்து பின் அலுவலகம் பதிவேற்றினேன். எல்லாம் முடித்து தற்போது வெளிவந்த போது மிக்க மகிழ்ச்சி அடைந்தேன் என்பது உண்மை.

    முன் அட்டையில் வடிவமைக்கு பல படங்களை இணைதளத்தில் இருந்து பெற்று கீழ் உள்ள தெய்வ கூடங்களின் படத்தை சில நண்பர்களிடம் இருந்து பெற்று சற்று திணறித்தான் போனேன் என்பது உண்மை.

    முதல் பக்கம் மட்டுமே நான். மற்ற உள்பக்கங்கள் சில மாற்றத்தை மட்டும் சொல்லி அதை தூண்டிய வேலை மட்டுமே என்னுடையது. மற்ற அனைத்தும் ஆதவா அவர்களின் கைவண்ணமே... மிக அருமையாக பல மணிநேரங்கள் அதற்காக ஒதுக்கி செவ்வனே செய்தமைக்கு மின்னிதழ் குழு சார்பாக மிக்க நன்றியை ஆதவா அவர்களுக்கு இந்த சமயத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இது 2வது படி மட்டுமே இன்னும் வான் தொடும் படிகள் காத்திருக்கிறது இன்னும் இன்னும் சிறப்பாக செய்ய வேண்டும் என்ற உத்வேகம் ஏற்படுகிறது. அதற்கு நிர்வாக பொறுப்பாளர்கள் மிகவும் நேசத்துடன் உதவியமைக்கு மிக்க நன்றி....

    வடிவமைப்பில் எதை பற்றி வேண்டுமாளாலும் கேளுங்கள். மின்னிதழின் வடிவமைக்குழு பதில் அளிக்க காத்திருக்கிறோம்...

    மின்னிதழ் நந்தவனம் வடிவமைப்பு குழு சார்பாக...

    கமலகண்ணன்...
    ஆதவா...
    உங்கள் அன்பன் - க.கமலக்கண்ணன்




  6. #6
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    ஒருகல்லில் பல மாங்காய் வோழ்தும் நோக்கம் கொண்டது நல்லதொரு திரி.. இதழில் பங்கெடுத்த அணிலாக எனக்கும் சில அனுபவங்கள். அனுபவங்களை விட சிறந்த கல்வி எது?

    பரிந்துரைக்கப்பட்ட ஆக்கங்களை தொகுப்பாளர்கள் வாசித்து அலசி தேர்வு செய்யும் போது, எனது எண்ண முகங்களுடன் முரண்பட்ட போக்கையும் கண்ணுற்றேன். அனைவரினதும் முகங்களை ஆராய்ந்தபோது எனது சிந்தனையின் இருப்பிடம் அறியக்கூடியதாக இருந்தது. சுய தேர்வினை செய்வதற்கு தகுந்த பணிகளில் மின்னிதழும் ஒன்றென்பது ஆணித்தரமான கூற்று.. அத்துடன் அன்பர்களை நாடிபிடித்து, அதன் படி தட்டி, கட்டி உறவை வலுப்படுத்த உதவியாகவும் உள்ளது.

    அடுத்த கட்டமான இறுதித் தேர்வு உருப்படிகளை தொகுத்து, வடிவமைப்பாளர்களுக்கு கொடுத்தலின் போது ஏற்பட்ட நடைமுறைச் சிக்கல். ஒருவர் செய்தார். தவிர்க்க முடியாத காரணத்தால் இரு நாட்கள் மன்றம் வர அவரால் இயலவில்லை. மின்னிதழ்ப்பணி ஸ்தம்பிதம் அடைந்து விட்டது. பணி எந்நிலையில் உள்ளது என்பதை யாராவது ஒருவருக்கு அந்நபர் பகிர்ந்திருந்தால் தடங்கல் இருந்திருக்காது. மேலான்மையின் போது பகிர்தலின் அவசியத்தை உணர, இச்சம்பவம் வழிவகுத்தது.

    இது எனக்கான பணி அல்ல என்று ஒதுங்கி இருக்காமல், நோக்கம் சரியானதாக இருந்தாலும், அதிகமாக மூக்கை நுழைத்து வேலை நேரத்தை நீட்டாமலும் வேலையின் நிலையை, சம்மந்தப்பட்டவர்கள் அறிந்து வைத்திருக்க வேண்டியதன் அவசியத்தை அறிய முடிந்தது. அவர்களுக்கு சொல்லாத பொறுப்பின்மையும் சுட்டது. கருத்து பரிமாற்றம் குறைவாக இருந்ததால் இருவர் ஒரு வேலையில் ஈடுபட்டு நேரம் விரயம் ஏற்பட்டது.

    -பேசும்.
    Last edited by அமரன்; 14-04-2008 at 06:21 PM.

  7. #7
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    46,277
    Downloads
    183
    Uploads
    12
    http://www.tamilmantram.com/vb/showp...8&postcount=28

    என்றோ எழுதியது.. இன்றும் பொருத்தமாய்.
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  8. #8
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் இதயம்'s Avatar
    Join Date
    20 Feb 2005
    Location
    தஞ்சவூதி
    Posts
    3,565
    Post Thanks / Like
    iCash Credits
    59,045
    Downloads
    72
    Uploads
    2
    எப்பொழுதும் அனுபவங்களுக்கு சிறிய, பெரிய என்று விலைகள் இருக்கிறது. இங்கே இதழியல் அனுபவங்களை தந்திருக்கும் நம் நண்பர்கள் அதை பெற அவர்கள் கொடுத்த விலை கடும் உழைப்பு, நேரமிழப்பு, தொந்தரவுகள்.! இவை எதையும் தன்னடக்கத்துடன் வெளியில் காட்டாமல் அவர்களின் அற்புத உழைப்பின் பலனான இதழை நம் கையில் அளித்து, அதுவும் போதாதென்று அதன் இலவச இணைப்பாய் தங்கள் அனுபவங்களையும் பகிர்ந்து கொள்கிறார்கள்..!! நற்பண்புகளை நம் நண்பர்களிடம் தான் மற்றவர்கள் கற்க வேண்டும்.

    அனுபவங்களை கற்கும் ஆவலுடன் நானும் காத்திருக்கிறேன்..! தொடருங்கள்..!!
    அன்புடன்,
    இதயம்

  9. #9
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் க.கமலக்கண்ணன்'s Avatar
    Join Date
    20 Feb 2007
    Location
    சென்னை
    Age
    49
    Posts
    1,456
    Post Thanks / Like
    iCash Credits
    45,705
    Downloads
    101
    Uploads
    0
    இரண்டாவது நந்தவனத்தை பிரிண்ட் செய்து பார்த்த பொழுது....

    உங்கள் அன்பன் - க.கமலக்கண்ணன்




  10. #10
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    Quote Originally Posted by கமலகண்ணன் View Post
    இரண்டாவது நந்தவனத்தை பிரிண்ட் செய்து பார்த்த பொழுது....
    வாவ்/// அருமை...
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  11. #11
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஷீ-நிசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Location
    சென்னை
    Posts
    4,771
    Post Thanks / Like
    iCash Credits
    37,742
    Downloads
    26
    Uploads
    1
    ஆதவா.. மற்றும் கமலக்கண்ணன் மற்றும் அமரனின் அனுபவங்களில் தெரிகிறது இவர்களின் இதழ்பணிகளுக்கான உழைப்பு..

    நன்றி உறவுகளே!
    Email: arpudam79@gmail.com
    Web: www.nisiyas.blogspot.com
    Web: www.shenisi.blogspot.com

    கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
    __________________________________________________

    என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி

  12. #12
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் மதி's Avatar
    Join Date
    10 Aug 2005
    Location
    சென்னை
    Posts
    8,263
    Post Thanks / Like
    iCash Credits
    77,744
    Downloads
    78
    Uploads
    2
    அருமையான அனுபவ பகிர்வுக்கு நன்றி தோழர்களே...

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •