Results 1 to 6 of 6

Thread: தேவதைக்கு திருவிழா..!

                  
   
   
  1. #1
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் இதயம்'s Avatar
    Join Date
    20 Feb 2005
    Location
    தஞ்சவூதி
    Posts
    3,565
    Post Thanks / Like
    iCash Credits
    59,045
    Downloads
    72
    Uploads
    2

    தேவதைக்கு திருவிழா..!

    பெண்ணே..!
    கண்ணில் உனை நான்
    கண்ட நேரம் கனவானாய்.!
    உன்னை பிரிய மனமின்றி
    என்னில் உனை ஒளித்தேன்.!
    கனவாய் போன கன்னியின்
    கணவனானது காதலின் வரம்.!

    மண்ணில் நான் கண்ட
    மாணிக்க கல் உனக்கு
    என்னில் பிடிக்க சிறப்பாய்
    ஏதும் இருக்கிறதா..?

    பொன்னின் தரம் கொண்ட
    பெண்ணின் வடிவம் நீ.!
    விண்ணின் உயரமாய் காதலை
    உன்னில் க(கொ)ண்டேன்..!

    வரமளிக்கா கடவுளுக்கும்
    வருடா வருடம் திருவிழா..!
    அனுதினமும் அன்பு காட்டி எனை
    ஆளும் தேவதைக்கு எடுப்பேன்
    தினந்தோறும் திருவிழா..!!
    அன்புடன்,
    இதயம்

  2. #2
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    15 Nov 2007
    Location
    பாலைவனம்
    Posts
    2,785
    Post Thanks / Like
    iCash Credits
    55,551
    Downloads
    114
    Uploads
    0
    தினந்தோறும் திருவிழாவா.......? கொடுத்து வைத்தவர்கள் தான்...
    வாழ்த்துக்கள் அண்ணா........
    அன்புடன்...
    செல்வா

    பின்னூட்டங்களில் முன்னுரிமை, மன்றப் படைப்புகளுக்கே...!

  3. #3
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் மதி's Avatar
    Join Date
    10 Aug 2005
    Location
    சென்னை
    Posts
    8,263
    Post Thanks / Like
    iCash Credits
    77,744
    Downloads
    78
    Uploads
    2
    தேவதைக்கு திருவிழா
    எடுக்கத் தான் வேண்டும்
    தினம்தினம்.

    அழகான கவிதை இதயம்.

  4. #4
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    காதலாகிக் கசிந்துருகி கவிதை நல்கிய இதயத்துக்கு பாராட்டும் வாழ்த்தும். எதுகை மோனை சுவைக்க தந்தமைக்கு நன்றி.

    கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால் சந்தங்கள் சேர்ந்து சுவை அதிகமாகி இருக்கும்.

    மண்ணுக்குள் மாணிக்கம் அகழ்ந்தெடுப்பது வழக்கம். மண்மீது மாணிக்கம் நல்ல வளம்.

  5. #5
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அனுராகவன்'s Avatar
    Join Date
    24 Jan 2008
    Location
    சிங்கப்பூர்
    Posts
    5,009
    Post Thanks / Like
    iCash Credits
    34,753
    Downloads
    25
    Uploads
    3
    அடடே தம்பி!!
    நல்ல கவி படைந்த உனக்கு இந்த அக்காவின் நன்றி..
    காதல் இது எவ்வளவு நாளா நடக்குது..
    இன்னும் நல்லா யோசனையே கேட்டு காதல் பண்ணனு..
    அப்பதான் கை கூடும்..


    இதோ என் சில வரிகள்..:

    திருவிழா காணு
    பூக்கோளம் மகிழும்
    கனவுகள் காணு
    ஆசைகள் கடக்க
    தொந்தரவு கொடு
    காதல் கனியும்..

    -அனு
    என்றும் அன்புடன்
    அச்சலா

    ..................................................................................
    வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
    திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே

    ..................................................................................

  6. #6
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    அன்பினால் இணைந்த உறவுகளின் இல்லத்தில் தினந்தோறும் திருவிழா தானே.........

    பாராட்டுக்கள் இதயம், சந்தத்தோடு இழைத்த கவிதை காதலாய்க் கொஞ்சுகிறது....

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •