Results 1 to 5 of 5

Thread: தாய்மடி தூ(து)க்கத்தில்..

                  
   
   
 1. #1
  மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
  Join Date
  16 Feb 2007
  Location
  சுவாசம்
  Age
  39
  Posts
  21,007
  Post Thanks / Like
  iCash Credits
  281,990
  Downloads
  151
  Uploads
  9

  தாய்மடி தூ(து)க்கத்தில்..

  சாயுங்காலம் வரை-தினம்
  சாயுங்காலம் தொலை..
  சாய்ந்தே இருந்தால்-முடியுமா
  சாயங்காலக் கடை வேலை..!

  நினைவு வழங்கி
  அனுப்பியது ஊசிக்கேள்வி..
  இயங்க விரும்பி-வயிறு
  அழுதது தேம்பி தேம்பி..

  கட்டாந்தரை மடியில்
  சுருட்டி வைத்த துயில்
  கொண்டது சுகத்துயில்

  அயலார் அடுக்களை கரித்துகள்.
  அலுப்புத் தீர்க்கா காகக்குளியல்..
  அழுக்கோவியம் மறைந்த உடல்..
  அவசரவெளியில் பள்ளிப்பயணம்..

  அடுக்கடுக்காய் மதி போசனம்..
  அவந்தேவை மதிய போசனம்..
  வேளை வந்தது-வயிற்றுக்கு
  வேலை தந்து நிறைத்தது..

  பசிமயக்கம் தீர்ந்த மயக்கம்
  விழிகசக்கி ஓய்ந்தது இயக்கம்.
  நிரந்தரமின்றி தாய் மடியில்
  நிரந்தர தூக்கம் நிம்மதியில்..

  சுவரொட்டிய பல்லி-மனச்
  சுவற்றில் ஒட்டியிருக்கும்..
  தப்பித்தவறியுமினி-பள்ளிப்
  பக்கம் பார்க்கலாகா தெட்டி.
  Last edited by அமரன்; 26-02-2008 at 07:59 AM.

 2. #2
  மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
  Join Date
  31 Mar 2003
  Posts
  15,683
  Post Thanks / Like
  iCash Credits
  57,237
  Downloads
  4
  Uploads
  0
  இளமையில் கல்!

  கல்சுமக்கும் சிறுவனைக் கண்டு எழுதிய
  கபிலனின் கவிதை வரி!

  இரவு -மாலைகளில் பணி
  பள்ளி மதிய உணவுண்ட பின் அங்கேயே பள்ளி!

  மூளைக்கும் வயிற்றுக்கும் இடையே அல்லாடும்
  ஏழைச் சிறுவனின் கதை!

  அமரனின் முத்திரை! பாராட்டுகள் அமரா!
  எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
  எத்தனை உலகங்கள் இதயத்திலே...

 3. #3
  மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
  Join Date
  16 Feb 2007
  Location
  சுவாசம்
  Age
  39
  Posts
  21,007
  Post Thanks / Like
  iCash Credits
  281,990
  Downloads
  151
  Uploads
  9
  சமீபத்தில் பள்ளிச் சத்துணவுக்கூடத்து சுவர்ப்பல்லி விழுந்த நஞ்சான உணவுண்ட பிஞ்சுகள் செய்தி சாதனக்களில் காட்சிப்பொருளாக்கப்பட்டனர். எமது அஜாக்கிரதைக்கும் பல்லியை பலிக்கடாவாக்கும் முனைப்பில் நிர்வாக இயந்திரம். கதறி வைத்தியசாலை அமைதியைக் குலைக்க விரும்பாத சுமப்பவர்கள் விசும்பல் ஏற்படுத்த தாக்கம் கவிதையாக.. நன்றி அண்ணா... உங்கள் ஊக்கம்தான் பலரை ஆக்க வைக்கிறது என்றால் அது மிகையில்லை..

 4. #4
  நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
  Join Date
  23 May 2007
  Location
  வளைகுடா நாடுகள்
  Posts
  15,360
  Post Thanks / Like
  iCash Credits
  173,496
  Downloads
  39
  Uploads
  0
  படித்துக்களைக்கும் முன்பே
  உழைத்துக்களைத்த உடல்
  மதி கசக்கும் பாடங்கள்
  விதி சிரிக்கும் பள்ளியின்
  உணவுக்கூடங்கள்..
  பாசகம் செய்வோரின் அலட்சியம்
  பாதகம் செய்தது...பல்லியின் பெயரால்
  பாழும் வயிறின் பசிக்குண்டதால்
  வீழும் பாலகன் உயிர் கண்டு
  அழும் நெஞ்சு அரற்றுகிறது....

  அமரனின் துன்பியல் கவிதை...விதைத்தது நெஞ்சில் வலியை...
  அன்புடன் சிவா
  என்றென்றும் மன்றத்துடன்
  கவலை என்பது கைக்குழந்தையல்ல
  எல்லா நேரமும் தோளில் சுமக்க
  கவலை ஒரு கட்டுச் சோறு
  தின்று தீர்க்க வேண்டும் அல்லது
  பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

 5. #5
  மன்றத்தின் சுடர் பண்பட்டவர் பூமகள்'s Avatar
  Join Date
  10 Aug 2007
  Location
  பூக்கள் நடுவில்
  Posts
  6,617
  Post Thanks / Like
  iCash Credits
  64,027
  Downloads
  89
  Uploads
  1
  நெஞ்சம் கனத்து
  கண்டு துடித்த
  நிகழ்வு..!!

  நூறு தாண்டி
  கண்மணிகள்
  கட்டாந்தரையில்
  மருத்துவமனையில்
  படுத்திருக்க
  பார்த்த உள்ளம்
  துடித்து விம்மியது..!


  இங்கே பதிவாக்கி
  இமை கலங்க
  வைத்துவிட்டீர்...!!

  பாராட்டுகள் அமரன் அண்ணா.
  -- பூமகள்.

  "விண்தாண்டும் வேலையின் கடிது - உன்
  உளக்கண் தாண்டும் வேலை..!!"


  பூமகள் படைப்புகள்


Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •