Results 1 to 5 of 5

Thread: சுழற்சி

                  
   
   
  1. #1
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் நாகரா's Avatar
    Join Date
    23 Jan 2008
    Location
    தில்லைகங்கா நகர், சென்னை
    Age
    59
    Posts
    2,883
    Post Thanks / Like
    iCash Credits
    22,407
    Downloads
    2
    Uploads
    0

    சுழற்சி

    மௌனத்துள் ஆழப் புதைந்து
    ஜீவனுள்ள வார்த்தையாய்
    எழுகிறேன்

    எழுந்து
    இறுகிய எண்ணச் சுவர்களைப்
    பிளந்து
    குறுகிக் கிடந்த உணர்வைப்
    பரந்த என் அர்த்த ஆகாயத்தில்
    படர விடுகிறேன்

    படரும் உணர்வைப்
    பதிக்கும் மொழியாய்ப்
    பரவச முழக்கமிட்டு
    வரிகளாய் விழுகிறேன்

    விழுந்து எழுகிறேன்
    விழிகளுக்குள் பாய்கிறேன்
    செவிப்பறைகள் அதிர முழக்கமிட்டு
    மூளையின் மத்தியில்
    பெருந்தீயாய் மூள்கிறேன்

    மூண்டெழும் என்னில்
    பூக்கும் செஞ்சுடர்ப்பூ
    காய்த்துப் பின்
    கனிந்து விழ
    ஜீவனற்ற உடம்பு
    மெய்யாய் உயிர்த்தெழ
    மீண்டும்
    மௌனத்துள் ஆழப் புதைகிறேன்
    உங்களன்பன்
    நான் நாகரா(ந.நாகராஜன்)
    பராபர வெளியும் பராபரை ஒளியும்
    பரம்பர அளியும் வாசி
    மாயா மெய்ந்நிலை இற(ர)ங்கும் நவயுக உதயம் - வள்ளலாரின் புதிய ஏற்பாடு

  2. #2
    இனியவர் பண்பட்டவர்
    Join Date
    06 Jan 2008
    Location
    புதுக்கோட்டை
    Age
    62
    Posts
    540
    Post Thanks / Like
    iCash Credits
    17,042
    Downloads
    49
    Uploads
    0
    செயலுள்ள அனுபவ மகிமைகளைப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

  3. #3
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் ஜெயாஸ்தா's Avatar
    Join Date
    09 Mar 2007
    Posts
    1,073
    Post Thanks / Like
    iCash Credits
    20,010
    Downloads
    61
    Uploads
    0
    ஏதோ புரிஞ்ச மாதிரியும் இருக்கு. புரியாத மாதிரியும் இருக்கு...!
    அடிபட்டு துடிக்கும்
    நடைபாதையோர சிறுவனை
    கண்டும் காணாமல்
    அலறி துடித்து
    விரைகிறது ஆம்புலன்ஸ்....!
    உள்ளே உயிருக்குப்போராடும்
    பணக்கார நாய்...!
    (உண்மையிலே நாய்தாங்க)

  4. #4
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் நாகரா's Avatar
    Join Date
    23 Jan 2008
    Location
    தில்லைகங்கா நகர், சென்னை
    Age
    59
    Posts
    2,883
    Post Thanks / Like
    iCash Credits
    22,407
    Downloads
    2
    Uploads
    0
    உமது பின்னூட்டங்களுக்கு நன்றி, சாலை ஜெயராமன், ஜெயாஸ்தா.

    ஜெயாஸ்தா, பழகப் பழகப் புரியும். உணர்வுள்ள வார்த்தைகள் உண்டாக்கக்கூடிய அற்புதப் பரிமாற்றத்தைப் பற்றியதே இக்கவிதை. என் முதல் குரு நாதர் இயேசு கிறிஸ்து ஒரு மகாமந்திர வாக்கியத்தால் எண்ணச் சுவர்களில் குறுகிக் கிடந்த என் உணர்வை விசாலப்படுத்தினார்.

    நானே
    வழியும்
    சத்தியமும்
    ஜீவனுமாய்
    இருக்கிறேன்

    என்ற மகாமந்திரமே அது. இம்மகா மந்திரத்தின் மிகப் பரந்த ஜீவனுள்ள உணர்வில் ஆழ ஆழ, உமக்குப் புரியும் ஜீவனுள்ள வார்த்தை.

    கடவுளை நீங்கள் எப்படி உணர்கிறீர்கள்?என்ற சுட்டியில் என் ஆங்கிலப் பதிவைப் படியுங்கள்.

    இருப்பு
    எண்ணம்
    உணர்வு
    தகவல் தொடர்பு(பேச்சு அல்லது வேறெந்த முறையிலான வெளிப்பாடு)
    ஆக்கம்(செயல்பாடு)

    இவ்வைந்து நிலைகளின் சுழற்சியைப் பற்றியதே இக்கவிதை. அச்சுழற்சிப் படத்தை அச்சுட்டியில் கூர்ந்து கவனியுங்கள். உண்மை விளங்கும். நன்றி
    உங்களன்பன்
    நான் நாகரா(ந.நாகராஜன்)
    பராபர வெளியும் பராபரை ஒளியும்
    பரம்பர அளியும் வாசி
    மாயா மெய்ந்நிலை இற(ர)ங்கும் நவயுக உதயம் - வள்ளலாரின் புதிய ஏற்பாடு

  5. #5
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் நாகரா's Avatar
    Join Date
    23 Jan 2008
    Location
    தில்லைகங்கா நகர், சென்னை
    Age
    59
    Posts
    2,883
    Post Thanks / Like
    iCash Credits
    22,407
    Downloads
    2
    Uploads
    0
    ஜெயாஸ்தா, இன்னும் விளங்க இச்சுட்டியைச் சொடுக்குங்கள்
    உங்களன்பன்
    நான் நாகரா(ந.நாகராஜன்)
    பராபர வெளியும் பராபரை ஒளியும்
    பரம்பர அளியும் வாசி
    மாயா மெய்ந்நிலை இற(ர)ங்கும் நவயுக உதயம் - வள்ளலாரின் புதிய ஏற்பாடு

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •