Page 2 of 2 FirstFirst 1 2
Results 13 to 22 of 22

Thread: மோட்சம் பெறும் முட்டைகள்...

                  
   
   
  1. #13
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    எழுத்து உங்களுக்கு வாய்த்த வரம் என்பதை
    செண்பகமரத்திலிருந்து தொடர்ந்து நிரூபித்து வருகிறீர்கள்..

    இயல்பான நிகழ்வுகளைச் சங்கிலியாக்கி
    இறுதியில் ஒரு ''டாலர்'' கோர்த்து
    அழகாய் அணிவிக்க உங்களால் இலகுவாய் முடிகிறது..

    அகலிகைக்காக எழுதப்பட்டதுண்டு...
    அகால மரணமுற்ற முட்டைகளுக்காக இது முதல் முறை..

    கவிமனம் மட்டுமே இவ்வகை விமோசனம் தேடிச் சிவக்கும்..

    வாழ்த்துகள் யவனிகா!
    Last edited by அமரன்; 17-03-2008 at 12:47 PM.
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  2. #14
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    பத்து வருடங்களுக்கு முன்.. கோழி வளர்த்தோம்... முட்டையிட்டது... ஒரு முட்டை பொரிந்து குஞ்சு வெளியே வருவதை நேரில் கண்டேன்... அடா... என்ன சுகம்.... பிறப்பின் போது அதன் பொலிவு, அழகு... சே!!! எதையும் மிஞ்ச முடியாதுங்க...

    முட்டை கிடச்சா ஆம்லெட் இல்லாட்டி ஆஃபாயில் போட்டு சாப்பிடுங்க.. அதைவிட்டுட்டு இப்படி கனவு கண்டீங்கன்னா அப்பறம் அவ்வளவுதான்... கீழ்பாக்கத்தில ஒரு பெட் ரெடியாயிடும்...

    ஹி ஹி ஹி.. கவிதை...
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  3. #15
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் யவனிகா's Avatar
    Join Date
    22 Sep 2007
    Location
    கோவை
    Posts
    2,233
    Post Thanks / Like
    iCash Credits
    35,848
    Downloads
    29
    Uploads
    0
    Quote Originally Posted by ஆதவா View Post
    அதைவிட்டுட்டு இப்படி கனவு கண்டீங்கன்னா அப்பறம் அவ்வளவுதான்... கீழ்பாக்கத்தில ஒரு பெட் ரெடியாயிடும்...

    ஹி ஹி ஹி.. கவிதை...
    என்ன ஆதவரே இன்னும் அந்தக்காலத்திலயே இருக்கீங்க...பைத்யம் புடிச்சா கீழ்ப்பாக்கம் தானா...என் ஹாஸ்பிட்டல்ல எப்பவுமே எனக்கு பெட்டு ரெடியா இருக்கும்....அட்மிட் ஆனவுடனேயே சொல்லி விடறேன்...

    திருப்பூர்ல என்ன சீசன் இது...ஆரஞ்சு ஆப்பிள் எல்லாம் வாங்கிட்டு வரக்கூடாது சொல்லிட்டேன்...எனக்குப் பலாப்பழம் தான் பிடிக்கும்...சுளை பிரிச்சுத் தர பூவையும் கூப்பிட்டுட்டு வாங்க...சரியா?

    என்ன பூவு அக்காவ கீழ்ப்பாக்கத்தில அட்மிட் பண்ணுவேன்னு சொல்றாங்க...கம்னு இருக்க...மலரு இருந்தா இந்நேரம் ஆட்டோ....ஆதவாக்கு ஆட்டோ எதுக்கு அவர் சைசுக்கு பேபி சைக்கிள் அனுப்பிருக்கும்.....

    சுகந்தா...மதி...செல்வா...அக்காக்கு ஒண்ணுன்னா இல்லாத மீசைய முறுக்கி விட்டு அறுவா எடுப்பேன்னு சொன்னீங்களே...இப்ப அக்காவ நட்டாத்தில விட்டிட்டீங்களே...

    ஆதவா...கொஞ்சம் பொறுங்க ...என் தம்பிக தங்கக் கம்பிக வந்து உங்க
    கண்ண நோண்டி காக்காக்கு போடுவாங்க பாருங்க....
    சாகும்வரை தமிழ் பயின்று சாக வேண்டும் − என்
    சாம்பலிலும் தமிழ் மணந்து வேக வேண்டும்.

  4. #16
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் மதி's Avatar
    Join Date
    10 Aug 2005
    Location
    சென்னை
    Posts
    8,263
    Post Thanks / Like
    iCash Credits
    77,744
    Downloads
    78
    Uploads
    2
    Quote Originally Posted by யவனிகா View Post

    சுகந்தா...மதி...செல்வா...அக்காக்கு ஒண்ணுன்னா இல்லாத மீசைய முறுக்கி விட்டு அறுவா எடுப்பேன்னு சொன்னீங்களே...இப்ப அக்காவ நட்டாத்தில விட்டிட்டீங்களே...
    ஹேஹே...யாரது...
    எங்கக்காவ வம்புக்கு இழுக்கறது....
    ஆதவரா...
    வேணாம்ம்ம்... ஆதவரே... கனவு காணுறது அவங்க உரிமை.. அவங்க கனவு கண்டுக்கிட்டே ஆம்லேட் போடட்டும்.. முட்டை அவிக்கட்டும்..

    இதுக்காக அவங்கள கீழ்பாக்கம் போக சொல்றது தப்பு... வேணாஞ் சொல்லிட்டேன்... ரொம்ப பண்ணீங்க.. ஓன்னு அழுதுடுவேன்...

    ஊரே தூங்க முடியாது.. யோசிச்சுக்கோங்க..

    அக்கா...
    ஆதவர நல்லா மிரட்டிட்டேன்.. இனி வம்பிழுக்க மாட்டார்.. கவலைப் படாதீங்க...
    இன்னொன்னு மீசையெல்லாம் இல்லாம இல்ல... முறுக்கு தானில்லை..

  5. #17
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    அக்காவும் தம்பியும் ஒண்ணு சேர்ந்துட்டா என்னை வீழ்திட முடியும்னு நினைக்கிறீங்களா??

    நான் ஆதவனுங்கோ? சுட்டு எரிச்சுடுவோம்ல....

    ஆம்லெட் போட்டு சாப்பிடுங்க அக்கானு சொன்னது ஒரு குத்தமா?

    என்ன கொடுமையப்பா இது?
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  6. #18
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஷீ-நிசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Location
    சென்னை
    Posts
    4,771
    Post Thanks / Like
    iCash Credits
    37,742
    Downloads
    26
    Uploads
    1
    Quote Originally Posted by யவனிகா View Post

    என்றாவது ஒருநாள்...
    ஏதாவது ஒருமுட்டையாவது,
    உடைக்கக் காத்திருக்கும்
    என் உள்ளங்கைக் கதகதப்பில்
    பொரிந்து வெண்மஞ்சள்
    குஞ்சாய் வெளி வருமா?

    வந்தால்...
    நான் உடைத்த முட்டைகள் அனைத்தும்,
    மோட்சம் பெறும் என்று நம்புகிறேன்...
    கவிதையின் இந்த வரிகள் கலக்கல் என்று பார்த்தால், அதை தொடர்ந்த பின்னூட்டங்கள் சில என்னை கவர்ந்தன.

    Quote Originally Posted by சிவா.ஜி View Post
    ஒரு கவிதாயினியின் கை பட்டு கவிதைக்குக் கருவாகிவிட்டதே.......
    முட்டை என்ற கருவை இந்த இடத்தில் கையாண்டது மிக அழகு.

    Quote Originally Posted by இளசு View Post

    இயல்பான நிகழ்வுகளைச் சங்கிலியாக்கி
    இறுதியில் ஒரு ''டாலர்'' கோர்த்து
    அழகாய் அணிவிக்க உங்களால் இலகுவாய் முடிகிறது..
    இதை நானும் பல கவிதைகளில் கண்டிருக்கிறேன். கவிதையின் ஆரம்பம் மிக சாதாரணமாகவும், பின் முடிவு அந்த கவிதையையே தூக்கி நிறுத்துவதுபோலவும் இருக்கும்.

    அதை வெகு எளிமையாக விளக்கிவிட்டார் நம்ம இளசு.

    வாழ்த்துக்கள் யவனி!
    Email: arpudam79@gmail.com
    Web: www.nisiyas.blogspot.com
    Web: www.shenisi.blogspot.com

    கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
    __________________________________________________

    என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி

  7. #19
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    03 Feb 2007
    Location
    அப்பிடீன்னா?
    Posts
    4,596
    Post Thanks / Like
    iCash Credits
    60,222
    Downloads
    84
    Uploads
    0
    மோட்சம் பெறும் முட்டைகள்.
    அதீத எதிர்பார்ப்பு மட்டும் இறுதியில் கொண்ட அழகான கவிதை.

    கோழி 18 நாட்கள் அடைகாத்துத்தான் குஞ்சே பொரிக்கிறது.
    அதேபோல் ஒரு முட்டை (உடைத்து ) பொரிக்க 18 நாட்கள் கையில் வைத்திருப்பீர்களா??? (வெப்பத்தின அளவை இப்போதைக்கு கைவிடுங்கள்)
    பாவம் உங்க ஆத்துக்காரர்!!!

  8. #20
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சுகந்தப்ரீதன்'s Avatar
    Join Date
    23 Jun 2007
    Posts
    3,869
    Post Thanks / Like
    iCash Credits
    237,295
    Downloads
    69
    Uploads
    1
    Quote Originally Posted by ஆதவா View Post
    நான் ஆதவனுங்கோ? சுட்டு எரிச்சுடுவோம்ல....?
    விராடன்(அண்ணா).. இருக்காருங்கோ...உங்க பாட்சா பளிக்காதுங்கோ..!!
    ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
    வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
    உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
    பழுதுண்டு வேறோர் பணிக்கு.
    -நல்வழி

  9. #21
    மன்ற ஆலோசகர் பண்பட்டவர் kavitha's Avatar
    Join Date
    09 Dec 2003
    Posts
    4,291
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    23
    Uploads
    0
    என்றாவது ஒருநாள்...
    ஏதாவது ஒருமுட்டையாவது,
    உடைக்கக் காத்திருக்கும்
    என் உள்ளங்கைக் கதகதப்பில்
    பொரிந்து வெண்மஞ்சள்
    குஞ்சாய் வெளி வருமா?
    வரிசையாக நினைவுத்தெளிப்புகளின் பின்னால் கவிதை+குழந்தைத்தனமாய் ஒரு பாவ மன்னிப்புக்கோரல்!

    நானும் அசைவ உண்ணி தான் யவனிகா...
    என்னதான்... கொன்னாபாவம் தின்னா போச்சு.. னு சொன்னாலும்
    மனசு ஒரு கணமாவது சங்கடப்படுவது இயல்பு...அதிலும் சமைப்பவர்களுக்குத் தான் அதன் கஷ்டம் தெரியும்.
    இதனாலேயே வீட்டில் எதையும் சுத்தம் செய்ய நான் அனுமதிப்பதில்லை. அதிலும் குழந்தைகள் முன்பு என்றால் முதல் கண்டனக்குரல் எனதாகத்தான் இருக்கும். (குலசாமிக்கு கடாவெட்டி பொங்கலிடுவது எனது முன் தலைமுறை வரை நடைமுறைவழக்கம். இப்போது நாங்களெல்லாம் குலசாமியவே பார்ப்பதில்லை.)

    சின்னவயசில் அதையெல்லாம் பார்த்தாலே மிரண்டுப்போய் நிற்பேன். இப்போது பூசாரி ஆட்டமும், உடுக்கை சத்தமும் நினைத்தாலே சிரிப்புத்தான் வருகிறது.
    கற்க கசடறக் கற்றவை கற்றபின்
    நிற்க அதற்குத் தக

    என்றும் நட்புடன்,
    கவிதா

  10. #22
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் Narathar's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    London / Sri Lanka
    Posts
    5,891
    Post Thanks / Like
    iCash Credits
    12,457
    Downloads
    11
    Uploads
    0
    என்ன ஒரு தெளிவான நடையில்
    எவ்வளவு எளிமையாக எழுதுகின்றீர்கள்??

    பாமரனுக்கும் படும் வகையில் இப்படி எழுத சிலருக்குத்தான் வரும்
    அதில் ஒருவர் நீங்கள், பாமரனில் ஒருவன் நான்

    வாழ்த்துக்கள்
    தமிழை வளர்க்க,
    தமிழரோடு தமிழில் பேசுங்கள்

Page 2 of 2 FirstFirst 1 2

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •