Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 20

Thread: எலக்ட்ராவின் பிறப்பு

                  
   
   
 1. #1
  மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
  Join Date
  06 Oct 2006
  Location
  Pluto
  Posts
  11,714
  Post Thanks / Like
  iCash Credits
  130,816
  Downloads
  47
  Uploads
  0

  எலக்ட்ராவின் பிறப்பு

  நேற்று இரவு என் மகள் எலெக்ட்ரா பிறந்தாள். அலுவலக விடுப்பை வீடியோ கன்பெரன்ஸில் சொல்லிவிட்டு நேரே மருத்துவமனைக்குச் சென்றேன். ஜெஸி எனக்காகக் காத்திருந்தாள். எலக்ட்ரா பார்ப்பதற்கு ஜெஸியைப் போலவே இருந்தாள். அதே முல்லைக் கண்கள். குடைமிளகாயைப் போல மூக்கு. அழகான கழுத்து, செர்ரி பழத்தைப் போன்ற சிவப்பான உதடு... அடேயப்பா.. ஜெஸியைக் கூட இப்படித்தான் வருணிப்பேன். அந்த வர்ணிப்பே குழந்தையாகப் பிறந்ததில் சந்தோசம் எனக்கு...

  இருவரும் மருத்துவமனையை விட்டு காரில் ஏறினோம். ஜெஸி, தனக்கு தலைவலிப்பதாகச் சொன்னாள்... இரவு கண்முழித்துக் கிடந்ததில் தலைவலியாக இருக்கும்.. மாத்திரை விழுங்கினால் சரியாகிவிடும்... நேற்றுதானே குழந்தை பிறந்தது... டாக்டர்கள் அறிவுரைப்படி ஒருநாளாவது இருக்கவேண்டும். என்னைக் கேட்டால், குழந்தை பிறந்ததும் வீட்டுக்கு வந்திடலாம். இன்னும் டாக்டர்கள் பணம் கறப்பது போனபாடில்லை.

  சாலையில் ட்ராஃபிக் அதிகமில்லை. எப்போதாவது சில ரோபோட்டுகள் மட்டும் மண்டை குழம்பிப் போய் மோதிக்கொள்ளும்போது ட்ராஃபிக் நேர்வதுண்டு. சென்னையின் மத்திய சாலைகள் இப்படி ஹாயாக இருப்பதே தனி வித்தியாசம்தான். என் தாத்தா காலத்தில், ஒரே மனிதத் தலைகள் தான் தெரியுமாம். எப்போது பார்த்தாலும் அழுக்குகள், குப்பைகள் இத்யாதி இத்யாதி... ஒரே கலீஜ் என்றூ சொல்வார்.. நல்லவேளை நான் இந்த காலகட்டத்தில் பிறந்து தொலைத்தேன்...

  ஜெஸி, மின் காகிதத்தை தட்டச்சிக் கொண்டிருந்தாள். அவளிடம் . " என்ன ஜெஸி, குழந்தை பிறந்திருக்கா, ட்ரீட் இல்லையா? " என்று வினவினேன்.. " டார்லிங், எனக்கு ரெஸ்ட் எடுக்கணும். ப்ளீஸ் டோண்ட் டிஸ்டர்ப் மி. மெடிக்கல் செலவு எல்லாம் இந்த பேப்பர்ல இருக்கு. செக் பண்ணுங்க.. நான் தூங்கறேன்... " என்று மடமடவென சொல்லிவிட்டு காரின் பின்புறத் தொட்டிலில் குழந்தையைப் போட்டுவிட்டு, இருக்கையை இறக்கி தூங்க முயற்சித்தாள்... நான் புன்னகைத்தவாறே வண்டியைச் செலுத்தினேன்.

  எனக்கும் ஜெஸிக்கும் பெற்றோர்கள் நிச்சயித்தபடிதான் திருமணம் நடந்தது. ஜெஸி ஒரு எலக்ட்ரானிக்ஸ் அலுவலகத்தில் வரவேற்பாளினியாக இருந்தாள். பெரும்பாலும் அந்தக் கம்பனியின் க்ளைய்ண்டுகள் ரோபோக்களையோ அல்லது ப்ளேட் எனச் சொல்லப்படும் காமிரா பொருந்திய ரோபோக்களையோதான் அனுப்பி வைப்பார்கள். ஆதலால் மனித முகத்தைப் பார்ப்பதே அவளுக்கு அரிதாக இருக்கும். தற்செயலாக அவளது அலுவலகத்திற்கு நான் சென்றேன். எனது வருகையை அவள் உன்னிப்பாக கவனித்தாள். அந்த எலக்ட்ரோ கம்பனியில் ஒரு சின்ன வேலைக்காக வந்திருந்தேன். பொதுவாக நான் நானோ கம்பனிகளை மட்டுமே நாடுவது வழக்கம். எனது தொழில் அனைத்து நானோ டெக்னாலஜியை மட்டுமே சார்ந்திருந்தது. ஆனால் எனது நண்பன் ஒரு உதவிக்காக அழைத்திருந்ததால் அங்கே சென்றேன்.. அவள் என்னை வரவழைத்து இருக்கையில் அமர வைத்தாள்...

  ஜெஸியை கொஞ்ச நேரம் ரசித்துவிட்டு, நேரே நண்பன் ராமின் அலுவலகத்திற்குச் சென்றேன்.. என்னை வரவேற்று அமர வைத்தான். அவன் கேட்டது சிறு உதவிதான்.. மாரடைப்பில் இறந்து போனவர்களுக்கு தற்காலிக, அல்லது நிரந்தரமாக உயிர்கொடுக்கும் ஒரு சிறு எலக்ட்ரானிக் சம்பந்தமான முயற்சியில் இறங்கியிருந்தான். " அது ஒண்ணும் பெரிய விசயமில்லை ராம். ஜின்கில் நானோ கார்பன் கோட்டிங் கொடுத்து அதை முழுசா கவர்பண்ணி ஏர் ஹோல்ஸ் விட்டு, அந்த நானோ கார்பனை ஷேக் பண்ணா சார்ஜ் ஆகும்... அது ஜிங்க் மேல பட்டு டிஸ்சார்ஜ் ஆகி அதிலிருந்து ஒரு வயர் மூலமா கரண்ட் பாஸ் பண்ணலாம்.. ஜின்கிலிருந்து ஒரு கனெக்ஸன், கார்பனிலிருந்து ஒரு கனெக்ஸன், ரெண்டையும் மார்புல குத்தி சார்ஜ் ஏத்தினா உயிர் பிழைக்க வைக்கலாம்.... எல்லாம் பயோ பிஸிக்ஸ், பயோ டெக்னாலஜி... தட்ஸ் ஆல். " என்று சொல்லி முடித்தேன்...

  எனக்குப் பின்னே ஜெஸி வந்து நின்றாள். உங்க கார் மேல ஹெக்ஸ் கம்பனியோட ரோபோகார் மோதிட்டு குழம்பி நிக்குது. . நீங்க உடனே கான்ஃபிகர் பண்ணா, அந்த ரோபோவை நம்ம கட்டுப்பாட்டுக்குக் கொண்டுவரலாம்" என்றாள்..... எனக்கு அது ஏழாவது தடவை.. ஏதாவது ஒரு கார் வழுக்கிட்டு வந்திடும்.. நம்ம கார்ல மோதும்.. ஜெஸியைத் தொடர்ந்த வாறு எழுந்து செல்கையில், ராம் மீண்டும் கேட்டான்.. " கதிர், இது ஒத்துவருமா? "

  "ராம் நீ ரொம்ப லேட்பா.. இந்த டெக்னாலஜிதான் இப்போ சீப்.. இதுக்குப் பின்னாடி பல மேட்டர் வந்தாச்சி... ஏதோ உன் பட்ஜெட்ல அடங்கட்டுமேன்னு சொன்னேன்.. கவலை விடு, எல்லாம் நாம பார்த்துக்கலாம் "என்று சொல்லிவிட்டு ஜெஸியை நோக்கினேன்...

  ஜெஸிக்கு என்னைப் பற்றிக் கேட்கவேண்டுமென்ற ஆவல் பிறந்த தருணம் அது... " உண்மையிலேயே இப்படி பிழைக்கவைக்க முடியுமா சார் ?" என்று கேட்டாள்.. ஜெஸியின் குரல் அவ்வளவு இனிப்பாக இருந்தது.. எப்படி இந்த மாதிரி? ஒரு பொருளை நாக்கு சுவைத்தால் தானே இனிக்கும்?? இங்கே குரலைச் சுவைத்தாலே இனிக்கிறதே!!

  " ஹலோ மிஸ்.......?? '

  " ஐ ஆம் ஜெஸிகா "

  " ஜெஸிகா, இது பழைய மெதட். நீங்க கவலைப்படாதீங்க... இப்ப ஃபைபர் வெச்சு ஹார்ட்ட சார்ஜ் பண்றாங்க.. இன்னும் ஆராய்ச்சி நடக்குது. ஸ்பென்ஸர்ஸ் ஹாஸ்பி போனீங்கன்னா, மலிவு விலைக்கு இதயத்த விக்கிறாங்க... எல்லாம் ஏழைங்களுக்கு........ "

  " சார், எங்கப்பாக்கு ரெண்டுதடவ ஹார்ட் அட்டாக் வந்திட்டுது.. அவரை எப்படியாச்சும் நல்லபடியா கொண்டுவரமுடியுமா ?

  " வெரி சிம்பிள் ஜெஸி. ஆ.. ஐ ம் சாரி,. உங்களை ஜெஸின்னு கூப்பிட்டுட்டேன்.

  " இட்ஸ் ஓகே "

  " நீங்க அப்பாவைக் கூட்டிட்டு நேரா நான் சொல்ற ஆஸ்பிடல் போங்க, க்ளீன் செக்கப் பண்ணுவாங்க.. அதிக நேரம் ஆகாது. அப்பவே என்ன ஸ்பேர்ஸ் மாத்தணும்னு ஸ்க்ரிப்ட் எழுதிக் கொடுப்பாங்க. நீங்க அதை எடுத்துட்டு என்னோட செல்லுக்குக் கூப்பிடுங்க... நான் மீதியை அப்பறமா பாத்துக்கீறென்.. " சொல்லிவிட்டு செல் நம்பரைக் கொடுத்தேன்....

  " சார் நீங்க எப்படி வீட்டுக்குப் போவீங்க? "

  " கவலை வேண்டாம் ஜெஸி.. இதோ பாருங்க ஸ்பெக்ட்ரம். இது வழியா என் வீட்டுக்குள்ள இருக்கிற என் காருக்கு சிக்னல் கொடுத்திடுவேன்.. அது நேரே நான் இருக்கிற இடத்திற்கு வந்திடும்.. அப்படியும் இல்லைன்னா நடராஜாதான்.. எனக்கு நடக்கறதுன்னா ரொம்ப பிடிக்கும்... " சொல்லிவிட்டு சிரித்தேன்..

  " சார், நீங்க வேணும்னா என்னோட ஸ்கூட்டரை எடுத்துட்டு போங்களேன்... அப்பறம் நான் எப்படியும் சமாளிச்சுக்குவேன்... "

  அவளது இந்தக் கோரிக்கை எனக்குப் பிடித்திருந்தது.. மீண்டும் சந்திக்க ஒரு வாய்ப்பை அவளே வழங்குகிறாள் அல்லவா...

  எனக்கும் ஜெஸீக்குமான முதல் சந்திப்பு இப்படித்தான் நிகழ்ந்தது. அவளது அப்பாவுக்கு இருதயக் குழாய்களில் மட்டும் சின்ன அடைப்பாக இருந்தது... அதாவது அது வளரும் சூழ்நிலையில் இருந்தது. அரதப்பழசான ஆஞ்சியோவை விட்டுத்தான் பார்த்தார்கள்... சில டாப்லெட்ஸ், சில செக்கப்புகள், சில ஆலோசனைகள்.... அவ்வளவுதான், ஜெஸியின் அப்பாவுக்கு நல்ல ஆயுள் என்று முத்திரை குத்தி அனுப்பிவிட்டார்கள்.. எனது இந்த உதவிக்குக் கிடைத்த பலன்தான் ஜெஸி.... அம்மாவிடம் கலியாணம் செய்வதாகச் சொன்னேன். ஒத்துக் கொண்டார்கள். இருவரது வீட்டிலும் சம்மதத்திற்குப் பின்னர் ஒரு நல்ல நாளில் நால்வர் புடைசூழ கலியாணம் செய்துகொண்டோம்..

  எனது நினைவை கொஞ்சம் அதிக நேரம் சொல்லிவிட்டேன் என்று நினைக்கிறேன். இன்னும் கொஞ்சம்தான்... ஜெஸிக்கு எலக்ட்ரா முதல் குழந்தை... ஆஃப் கோர்ஸ், எனக்கும்தான். . சில மாதங்களுக்கு முன் இரண்டு பேருக்கும் பயங்கர போட்டி, எந்த பெயரைக் குழந்தைக்கு வைப்பது என்று.. நான் சொன்னது 'ப்ரோட்டினி' என்பது.. ஆனால் அவளுக்கோ எலக்ட்ரா என்ற பெயர் மீது காதல்.. சரி போனால் போகிறது என்று அவளுக்காக விட்டுக் கொடுத்துவிட்டேன்... என்னதான் சொல்லுங்கள் எலக்ட்ரானைவிட ப்ரோட்டானுக்குத்தானே இன்று அதிக மவுசு...

  எனது வீட்டை அடைந்ததும் ஜெஸியை எழுப்பி விட்டேன். குழந்தை இன்னும் தூக்கத்தில்தான் இருந்தது. வீட்டுக்கதவு என் கண்கள் பட்டதும் திறந்துகொண்டது, கதவில் ரெடார் போன்ற கருவி பொருத்தப்பட்டிருக்கும். அதனோடு ஐடெண்டிஃபை என்று ஒரு கருவியும் பொருத்தப்பட்டிருக்கும்.. என் மற்றும் ஜெஸியின் கண்களை இது தானாக ஸ்கேன் செய்து திறக்கும்.. அப்படியும் அதில் கோளாறு ஏற்பட்டால், இரண்டாம் வழியான சாவி உள்ளது...

  ஜெஸி நேரே குழந்தையைத் தூக்கிக் கொண்டுபோய் படுக்கையறையில் வாங்கப்பட்டிருந்த தொட்டிலில் கிடத்தினாள்.. அவளைப் பார்த்தவாறே நானும் எனது சட்டைகளைக் கழற்றிப் போட்டு படுத்துத் தூங்கினேன்.... என் வாழ்நாளில் எனக்கு இப்படி ஒரு குழந்தை கிடைக்கும் என்று நான் எதிர்பார்த்திருக்கவில்லை. எத்தனையோ டெக்னாலஜிகள் வந்து விட்டாலும் குழந்தை என்ற ஒரு பாசம் நம் மடியில் கிடந்தால்தானே நமக்கு நிம்மதி... அதற்கு முதலில் இந்த டெக்னாலஜிகளுக்கு நன்றி சொல்லவேண்டும்..பின்னே! மிகச் சிறு வயதிலேயே இடுப்புக்குக் கீழே கால் வரையிலும் ஒரு விபத்தில் பறிகொடுத்துவிட்டு இன்று செயற்கையாகவே எல்லாவற்றையும் பொறுத்தி வாழும் எனக்கு ஒரு குழந்தை, கிடைக்கிறது என்றால் சும்மாவா?
  இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

 2. #2
  நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
  Join Date
  23 May 2007
  Location
  வளைகுடா நாடுகள்
  Posts
  15,360
  Post Thanks / Like
  iCash Credits
  164,055
  Downloads
  39
  Uploads
  0
  ஷாக்...ஆதவா...ஷாக்......எலக்டரானும்,புரோட்டானும் மனசுக்குள்ல முட்டி முட்டி....இன்பமான ஷாக்.மிக அழகிய கற்பனை.கி.பி.இரண்டாயிரத்து சில்லறையில்....இதுவும் நடக்கும்...இதற்கு மேலேயும் நடக்கும்.
  மாத்திரைகளுக்குப் பதிலாக உறுப்புகள் பிரிஷ்கிரிப்ஷனில் இடம் பிடிக்கும் காலம் வரத்தான் போகிறது....பார்மஸிகளுக்குப் பதில் ஆர்கனஸிகள் அதிகமாகும்.
  உங்கள் நானோவில் மயங்கினேன் நானே...
  பிரமித்த பாராட்டுக்கள் ஆதவா.
  அன்புடன் சிவா
  என்றென்றும் மன்றத்துடன்
  கவலை என்பது கைக்குழந்தையல்ல
  எல்லா நேரமும் தோளில் சுமக்க
  கவலை ஒரு கட்டுச் சோறு
  தின்று தீர்க்க வேண்டும் அல்லது
  பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

 3. #3
  மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
  Join Date
  06 Oct 2006
  Location
  Pluto
  Posts
  11,714
  Post Thanks / Like
  iCash Credits
  130,816
  Downloads
  47
  Uploads
  0
  Quote Originally Posted by சிவா.ஜி View Post
  ஷாக்...ஆதவா...ஷாக்......எலக்டரானும்,புரோட்டானும் மனசுக்குள்ல முட்டி முட்டி....இன்பமான ஷாக்.மிக அழகிய கற்பனை.கி.பி.இரண்டாயிரத்து சில்லறையில்....இதுவும் நடக்கும்...இதற்கு மேலேயும் நடக்கும்.
  மாத்திரைகளுக்குப் பதிலாக உறுப்புகள் பிரிஷ்கிரிப்ஷனில் இடம் பிடிக்கும் காலம் வரத்தான் போகிறது....பார்மஸிகளுக்குப் பதில் ஆர்கனஸிகள் அதிகமாகும்.
  உங்கள் நானோவில் மயங்கினேன் நானே...
  பிரமித்த பாராட்டுக்கள் ஆதவா.
  வாவ்... மிக்க நன்றி அண்ணா.. கதையில் ஏகப்பட்ட கோளாறுகள் இருக்குமோ என்னவோ என்ற பயம் இருந்தது... உங்களின் பாராட்டு எனக்குப் பூரண திருப்தி....

  நன்றி அண்ணா
  இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

 4. #4
  நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
  Join Date
  23 May 2007
  Location
  வளைகுடா நாடுகள்
  Posts
  15,360
  Post Thanks / Like
  iCash Credits
  164,055
  Downloads
  39
  Uploads
  0
  டெக்னிகல்(நிறைய இருப்பதால்) குறைகளை நோண்ட எனக்கு அதில் எதுவும் தெரியாது.ஒரு வாசகனாக என் பிரமிப்பை வெளிப்படுத்தினேன்.
  உண்மையிலேயே நல்ல கற்பனை ஆதவா.
  அன்புடன் சிவா
  என்றென்றும் மன்றத்துடன்
  கவலை என்பது கைக்குழந்தையல்ல
  எல்லா நேரமும் தோளில் சுமக்க
  கவலை ஒரு கட்டுச் சோறு
  தின்று தீர்க்க வேண்டும் அல்லது
  பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

 5. #5
  மன்றத்தின் தூண் பண்பட்டவர் யவனிகா's Avatar
  Join Date
  22 Sep 2007
  Location
  கோவை
  Posts
  2,233
  Post Thanks / Like
  iCash Credits
  30,678
  Downloads
  29
  Uploads
  0
  அறிவியல் புனை கதைகள் எனக்கு மிகவு பிடிக்கும்.ஜோசியரின் முன் கையை நீட்டி விட்டு, ரேகை பார்த்து அவர் சொல்லும் எதிர்காலம் பற்றி...ஆவலுடன் கதை கேட்பது போல...நம்பிக்கை இரண்டாம் பட்சம். சொல்லும் விசயம் என்ன என்பதன் சுவாரஸியமும், சொல்லும் விதமும் தான் இங்கே கை நீட்டி அமர்ந்தவருக்கு திருப்தி தரும்.

  அந்த வகையில் அறிவியல் புனை கதை உங்களுக்கு மிக நன்றாக வருகிறது, தொய்வில்லாமல் ஒரு காதல், வர்ணனை உட்புகுத்த ஒரு குழந்தை என்று...சுவாரஸியமாக இருக்கிறது.

  நிறைய முயற்சிக்கலாம் நீங்கள்...வாழ்த்துக்கள்.
  சாகும்வரை தமிழ் பயின்று சாக வேண்டும் − என்
  சாம்பலிலும் தமிழ் மணந்து வேக வேண்டும்.

 6. #6
  மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
  Join Date
  06 Oct 2006
  Location
  Pluto
  Posts
  11,714
  Post Thanks / Like
  iCash Credits
  130,816
  Downloads
  47
  Uploads
  0
  Quote Originally Posted by யவனிகா View Post
  அறிவியல் புனை கதைகள் எனக்கு மிகவு பிடிக்கும்.ஜோசியரின் முன் கையை நீட்டி விட்டு, ரேகை பார்த்து அவர் சொல்லும் எதிர்காலம் பற்றி...ஆவலுடன் கதை கேட்பது போல...நம்பிக்கை இரண்டாம் பட்சம். சொல்லும் விசயம் என்ன என்பதன் சுவாரஸியமும், சொல்லும் விதமும் தான் இங்கே கை நீட்டி அமர்ந்தவருக்கு திருப்தி தரும்.

  அந்த வகையில் அறிவியல் புனை கதை உங்களுக்கு மிக நன்றாக வருகிறது, தொய்வில்லாமல் ஒரு காதல், வர்ணனை உட்புகுத்த ஒரு குழந்தை என்று...சுவாரஸியமாக இருக்கிறது.

  நிறைய முயற்சிக்கலாம் நீங்கள்...வாழ்த்துக்கள்.
  மிக்க நன்றி யவனிகா அவர்களே! ஒரு நல்ல கதாசிரியை நம்மைப் பாராட்டும்போது நமக்குள்ளும் இனம்புரியாத நெகிழ்ச்சி....

  இவ்வகை எதிர்காலக் கருத்துள்ள கவிதைகளும் புனைந்திருக்கிறேன்... ஏனோ நமக்கு அறிவியல் அறிவு அறவே இல்லை.. அதனால் அதிகம் எழுதுவதில்லை...

  நன்றி...
  இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

 7. #7
  இளையவர் பண்பட்டவர் SivaS's Avatar
  Join Date
  09 May 2007
  Location
  யாழ்ப்பாணம்
  Posts
  66
  Post Thanks / Like
  iCash Credits
  3,791
  Downloads
  32
  Uploads
  0
  அண்ணா இப்படி ஒரு வாழ்க்கை வருவதற்கு முன்னதாக நான் செத்து விட வேண்டும்.
  நவீனத்தினுள் தொலைக்கப்படும் மனிதம்

  சின்னவனின் சிறு பிள்ளை விமர்சனம்

 8. #8
  மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஆதி's Avatar
  Join Date
  31 Oct 2007
  Posts
  6,803
  Post Thanks / Like
  iCash Credits
  59,050
  Downloads
  57
  Uploads
  0
  அழகிய விஞ்ஞானப்புனைக்கதை ஆதவா..

  எனக்கு இதுபோன்ற விஞ்ஞான புனைப்படைப்புகளில் ஆர்வம் அதிகம், எதிர்காலங்களைப்பற்றி நமக்குள் இருக்கிறக் கற்பனைகளை வைத்தும் அறிவியல் என்கிற பேராழியைப் பற்றி அணு அளவுள்ள அறிந்து வைத்துக்கொண்டும் எழுத தகிக்கும் என் தகிப்பு கொஞ்சம் ஓவரானாலும்..

  அறிவியல் புனைப்படைப்புகள் எழுத அறிவியல் அறிவு தேவையில்லை என்பது என் கருத்து..

  இவ்வகைப்படைப்புகளை கொஞ்சம் வறட்சி இல்லாமல் எழுதிவிட்டாலே அது பெரும் வெற்றிதான் அந்த வெற்றையை நீங்கள் அடைந்துவிட்டீர்கள்.. இதுபோன்று இன்னும் நிறையப்புனைவுகள் நீங்கள் தரலாம்..

  இன்று நான் துவங்கிய புனைக்கவிதை என்னும் தொடர்கவிதைக்கூட இந்த வகைப்படைப்புதான்..

  பாராட்டுக்கள் ஆதவா..
  Last edited by ஆதி; 20-06-2008 at 03:44 PM.
  அன்புடன் ஆதி 9. #9
  மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
  Join Date
  06 Oct 2006
  Location
  Pluto
  Posts
  11,714
  Post Thanks / Like
  iCash Credits
  130,816
  Downloads
  47
  Uploads
  0
  Quote Originally Posted by SivaS View Post
  அண்ணா இப்படி ஒரு வாழ்க்கை வருவதற்கு முன்னதாக நான் செத்து விட வேண்டும்.
  நவீனத்தினுள் தொலைக்கப்படும் மனிதம்

  சின்னவனின் சிறு பிள்ளை விமர்சனம்
  ஏன் இவ்வாறு சொல்கிறீர்கள் சிவா..

  நவீனம் என்பது நம்மின் அடுத்த பரிணாம வளர்ச்சியே அன்றி வேறொன்றுமில்லை, அஃது உபயோகப்படுத்திலில் மாறிவிடுவது பற்றி பேசவே கூடாது... டைனமைட் கண்டுபிடிக்கும் போது அது மனித அழிவுக்காக கண்டுபிடிக்கவில்லையே..

  நவீனம் என்ற பெயரில் மொழியை, உணர்வை, காதலை, கலாச்சாரத்தைத் தொலைப்பதுதான் பெரும் தவறு...

  விஞ்ஞானப் புரட்சியை, விஞ்ஞான வளர்ச்சியை நம் தேடலின் வளர்ச்சியாகக் கொள்ளலாம். அதை வரவேற்கவும் செய்யணும்.

  நாம் இறப்பது நம் கையிலில்லை... நாம் நாமாக இறந்தால் அதைவிட கேவலம் வேறேதுமில்லை..

  தூங்கியிருந்த கதையைத் தட்டி எழுப்பியமைக்கு பெரும் நன்றி சிவா..
  இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

 10. #10
  மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
  Join Date
  06 Oct 2006
  Location
  Pluto
  Posts
  11,714
  Post Thanks / Like
  iCash Credits
  130,816
  Downloads
  47
  Uploads
  0
  Quote Originally Posted by ஆதி View Post
  அழகிய விஞ்ஞானப்புனைக்கதை ஆதவா..

  எனக்கு இதுபோன்ற விஞ்ஞான புனைப்படைப்புகளில் ஆர்வம் அதிகம், எதிர்காலங்களைப்பற்றி நமக்குள் இருக்கிறக் கற்பனைகளை வைத்தும் அறிவியல் என்கிற பேராழியைப் பற்றி அணு அளவுள்ள அறிந்து வைத்துக்கொண்டும் எழுத தகிக்கும் என் தகிப்பு கொஞ்சம் ஓவரானாலும்..

  அறிவியல் புனைப்படைப்புகள் எழுத அறிவியல் அறிவு தேவையில்லை என்பது என் கருத்து..

  இவ்வகைப்படைப்புகளை கொஞ்சம் வறட்சி இல்லாமல் எழுதிவிட்டாலே அது பெரும் வெற்றிதான் அந்த வெற்றையை நீங்கள் அடைந்துவிட்டீர்கள்.. இதுபோன்று இன்னும் நிறையப்புனைவுகள் நீங்கள் தரம்..

  இன்று நான் துவங்கிய புனைக்கவிதை என்னும் தொடர்கவிதைக்கூட இந்த வகைப்படைப்புதான்..

  பாராட்டுக்கள் ஆதவா..
  மிக்க நன்றி ஆதி... இது பல கோளாறுகளை முன் வைத்து முன்யோசனை இன்றி எழுதிய கதை. விஞ்ஞான ஆர்வக்கோளாறும் கலையார்வமும் கலந்த மண்பாண்டம்... உடைவது எளிதுதான்..

  உங்கள் ஊக்கம் எனது அடுத்த கதைக்கான அடிகோலாக அமையும்..

  நன்றியுடன்
  ஆதவன்
  இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

 11. #11
  மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
  Join Date
  28 Apr 2003
  Location
  அமெரிக்கா
  Posts
  16,348
  Post Thanks / Like
  iCash Credits
  34,827
  Downloads
  15
  Uploads
  4
  அருமையான கதை...
  ஆங்கிலக்கதையில் தங்கள் சரக்கும் சேர்ந்து... அமர்க்களமாக இருக்குது...
  நானோ டெக்னாலஜி எல்லாம் கதையில் புகுந்து விளையாடுது...

  மனித உறவுகளின் பிறப்பே தனி சுகம் தான்..

 12. #12
  மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
  Join Date
  06 Oct 2006
  Location
  Pluto
  Posts
  11,714
  Post Thanks / Like
  iCash Credits
  130,816
  Downloads
  47
  Uploads
  0
  Quote Originally Posted by அறிஞர் View Post
  அருமையான கதை...
  ஆங்கிலக்கதையில் தங்கள் சரக்கும் சேர்ந்து... அமர்க்களமாக இருக்குது...
  நானோ டெக்னாலஜி எல்லாம் கதையில் புகுந்து விளையாடுது...

  மனித உறவுகளின் பிறப்பே தனி சுகம் தான்..
  ஆஹா! அறிஞரே!!! மிக்க நன்றி,.....
  இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •